தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, பிப்ரவரி 19, 2016

உண்மைகள் உறங்குவதில்லை


குழந்தைகளே ! நாம பேசும்போது, நல்ல வார்த்தைகளைத்தான் பேசணும் யாரையும் அசிங்கமான வார்த்தைகளை சொல்லி திட்டக்கூடாது அப்படி செய்தால் கடவுள் நம்மளை தண்டிப்பார்.
அப்படினா... எங்க அப்பா எங்க அம்மாவை தினம் அசிங்கமா திட்டுறாங்களே அவுங்களையுமா  கடவுள் தண்டிப்பாரு ?
**********************************01

மோகனா நான் எழுதி வைத்த கதை நோட்டு எல்லாம் எங்கே ?
தெரியலையே நல்லாப்பாருங்க அலமாரி உள்ளேதான் இருக்கும்.
காணோமே... வெளியாளுங்க யாரும் வந்தாங்களா ?
ஒருத்தரும் வரலை.
ஏம்மா அதைதானே நாம பேப்பர்காரங்கள்ட்ட போட்டு பேரீட்சம்பழம் வாங்கி தின்னோம்.
**********************************02

குழந்தைகளே ! நாம எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லக்கூடாது, நம்மிடமிருப்பதை இல்லாதவர்கள் கேட்டால் நம்மால் முடிந்ததை கொடுத்து உதவவேண்டும்.
ஸார் நேற்று பக்கத்து வீட்டு ஆண்ட்டி காபி பவுடர் கேட்டதுக்கு எங்க மம்மி இல்லைனு சொன்னாங்க என்னையும் காபி பவுடர் இருக்கிறதை யாருகிட்டேயும் சொல்லக்கூடாதுனு சொன்னாங்களே...
**********************************03

கோவிச்சுக்காதீங்க சித்தப்பா நானே நாளைக்கு கல்யாணத்துக்கு மதுரை நண்பர் பகவான்ஜி வீட்டுக்கு போகணும் பணம் இல்லாததாலே போகலை.
அப்படீனா நாளைக்கு அம்மாவும், நானும், நீங்களும் ஊட்டிக்கு டூர் போகலையாப்பா ?
**********************************04

அப்பா ஊருக்கு போகும்போது... சித்தி சொல்றதை கேட்டு நடக்கணும்னு சொன்னாங்கம்மா.
உனக்கு ஏதுடா கண்ணா சித்தி ரெண்டு மாமா மட்டும்தானே இருக்காங்க...
அப்படீனா கிச்சன்ல சமைக்கிறாங்களே அவுங்க சித்தி இல்லையா ?
யாரு சொன்னாங்க உனக்கு ?
அப்பாதான்.
**********************************05

மாணவர்களே ! வீட்டிலிருக்கிற பெரியவர்கள் தாத்தா-பாட்டி இவங்கள்ட்ட நாம அன்பா பாசமா இருக்கணும் அவர்களுடைய வாழ்த்துதான் நமது எதிர்கால வாழ்க்கையை செம்மை படுத்தும்.
ஸார் எங்க அம்மா சொன்னாங்க தாத்தா-பாட்டிக்கிட்ட போககூடாதுனு அப்புறம் நான் எப்படி அவங்கள்ட்ட பாசமா இருக்க முடியும் ?
**********************************06

காணொளி

48 கருத்துகள்:

 1. அன்புள்ள ஜி,

  பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்... கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும் கண்ணெதிரே
  காணுகின்ற தெய்வங்களானார்...!

  குழலினிதி யாழினிது என்பதம் மக்கள்
  மழலைச்சொல் கேளா தவர்.

  உண்மைகள் உறங்குவதில்லைதான்...!

  த.ம. 3

  பதிலளிநீக்கு
 2. உண்மைகள் உறங்குவதில்லை..

  சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும்!...

  ஆனால்,

  செயல்படுத்துவதற்கில்லை.. நாங்கள்.....லாம் யாரு!?...

  பதிலளிநீக்கு
 3. அன்பரே.......
  உண்மை எப்போதும் ஊமை
  ஆனதில்லை என்பதே இப்பதிவு....
  அருமையாக உணர்த்தி இருக்கீங்க.....
  உண்மையை மறைக்கும்
  பெரியவா எல்லாம்.....
  குழந்தைங்களால போட்டுக்கொடுக்கப்
  படுகிறார்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே குழந்தைகள் போட்டுக் கொடுப்பதில்லை யதார்த்த விடயங்களை பேசி விடுகின்றது 6 அறிவு முழுமை பெற்றதாக (?) நினைத்துக் கொண்ட மனிதனே போட்டுக் கொடுக்கின்றான்.

   நீக்கு
  2. குழந்தைகளால் போட்டுக்கொடுக்கப்
   படுகிறார்கள் என்று
   நகைச்சுவையாகத்தான் சொன்னேன்.....
   களங்கம் இல்லாத மழலைகள்
   உண்மை சொல்வது
   நம்மை போட்டுக் கொடுத்தாற் போலதானே....

   நீக்கு
  3. நானும் தவறாக குறிப்பிடவில்லை நண்பா குழந்தைகள் பொய் சொல்வதை பெற்றோர்களிடமிருந்தே படிக்கின்றார்கள்
   மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 4. நகைச்சுவையாக...சில உண்மைகள்:))...
  4

  பதிலளிநீக்கு
 5. சிரி க்கமட்டுமில்லை.
  சிந்தி க்கவும் செய்கிறதே !!

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தாத்தா சிரிப்போடு சிந்தனையையும் கொடுப்பதுதானே... டூ இன் ஒன்

   நீக்கு
 6. கில்லர்ஜி :மதுரைத்தமிழா பொண்டாட்டியிடம் பொய் சொன்னால் கடவுள் தண்டிப்பார்.
  மதுரைத்தமிழன்: கில்லர்ஜி பொண்டாட்டியிடம் உண்மையை சொன்னால் பெண்டாட்டி என்னை உடனே பூரிக்கட்டையால் தண்டிப்பாரே? அப்ப நான் என்ன செய்ய?
  கில்லர்ஜி : ஙே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே இதற்காகத்தானே பாதுகாப்புக்கு ஹெல்மெட் தயாரித்தார்கள்.

   நீக்கு
 7. அருமையான நகைச்சுவையுடன் நிறைய உண்மைகளும் இருக்கு சகோ.

  பதிலளிநீக்கு
 8. உண்மைகள் ஊறங்குவதில்லை ....

  உண்மை ..!

  பதிலளிநீக்கு
 9. சிரிக்க, சிந்திக்க வைத்தீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரித்து சிந்தித்தமைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 10. ஆஹா..கில்லர்ஜி...பகவான் ஜீ ஆகிவிட்டார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே பகவானை பக்தன் நெருங்க முடியாது பூசாரியானால் சாத்தியம் உண்டு.

   நீக்கு
 11. உண்மையாகவே..தாங்கள் பதிவிட்ட உண்மைகள் எப்போதும் உறங்குவதேயில்லை...நண்பரே

  பதிலளிநீக்கு
 12. ''பக்கத்து வீட்டு ஆன்டி பேர் சித்ராதானேம்மா ?''
  ''ஆமா ,அதுக்கென்ன''
  ''அவங்களை சித்தின்னே அப்பா கூப்பிடச் சொல்றாரே !''

  இது முன்பே நான் போட்ட மொக்கை :)
  மதுரைன்னா என் நினைப்புதானா ,மீனாக்ஷி நினைப்பு உங்களுக்கு வராதா:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தங்களது தளத்தில் படித்த ஞாபகம் வருகின்றது இது சிறிது மாறுபட்டு இருக்கின்றது.

   மீனாட்சி பொதுவானது ஜி பதிவர்கள் என்றால் தாங்கள்தானே மதுரை வீரன்

   நீக்கு
 13. நகைச்சுவையாக சிந்திக்கவைத்திருக்கிறீங்க. அருமையா இருக்கு.
  காணொளியில் குழந்தையின் மழலை புரியவில்லையாவினும் அழகா,அருமையா இருக்கு.க்யூட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ குழந்தை பேசுவது மலையாள மொழி ஆகவே தாங்கள் சிறிது குழம்பியிருப்பீர்கள் வருகைக்கு நன்றி.

   வில்லங்கத்தார்களுக்கு விளங்கும் இப்பொழுது வருவார்கள் பாருங்கள்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. ஜி ,சேலை வியாபாரத்தில் பிசியாகி விட்டீர்கள் போலிருக்கே :)

   நீக்கு
  2. ஜியின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. சிந்திக்க வைத்த பகிர்வு..... குழந்தைகள் பெரியவர்களிடமிருந்தே பலவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி உண்மைதானே.... வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கருத்துப் பகிர்வுக்கு நன்றி

   நீக்கு
 17. அருமை ஐயா..உண்மை நிகழ்வை அழகாக கூறியுள்ளீர் ஐயா.இன்று பெருமளவில் இது தான் குழந்தைகள் மத்தியில் நடைப்பெறுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைசாலி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
   தங்களது தளம் இன்று காலை வந்தேன் அற்புதமான விடயங்கள் ஆனால் கருத்துரை பதிய முடியவில்லை ஏன் ?

   நீக்கு
  2. வணக்கம் ஐயா.இப்போது முயற்சித்து பாருங்கள்.நன்றி.

   நீக்கு
 18. குழந்தைகள் உண்மைதான் பேசுவார்கள்...
  கலக்கல் அண்ணா...

  பதிலளிநீக்கு
 19. அனைத்துமே உண்மைகள் தான்!

  பதிலளிநீக்கு
 20. குண்டக்கமண்டக்க ஆனால் கருத்துமிக்கப் பதிவு. பெரியவர்கள் செய்யும் தவறுகள்தான் குழந்தைகளிடம் எதிரொலிக்கும். குறிப்பாகப் பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிவிட்டு நாமே அவர்கள் முன் பொய் சொல்லுவதும் அதையும் விட

  பெரியோர்களிடம், தாத்தா பாட்டியிடம் அன்பு செலுத்த வேண்டும்..

  குழந்தை: தாத்தா பாட்டிதான் நம்ம கூட இல்லவே இல்லையே. அவங்க முதியோர் இல்லத்துல இருக்கும் போது எப்படி அவங்கள நான் கவனிச்சு அன்பு செலுத்த முடியும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் அதை மையப்படுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தேன் கடைசியில் மறந்து விட்டேன்.

   நீக்கு
 21. வணக்கம்
  ஜி
  அற்புதமான நகைச்சுவை.. இரசித்து மகிழ்ந்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு