தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 17, 2016

காட்மண்டு கடவுள்


யார் ? கொடுத்த சாபமோ ? அல்லது நான் செய்த பாவமோ ?
இறைவன் செய்யும் சோதனையில்...
நான் கிடந்து இங்கு வேதனையில்... 
படிக்காத காரணத்தால் வாழ்க்கை இந்நிலையில்....
காரணம் புரிந்ததோ எனக்கு வாழும் சூல்நிலையில்...
ஒரு நிமிடத்தில் இந்த வாழ்க்கையை உதறி விட்டு என்னால் போகமுடியும் எனது இனிய இந்தியாவுக்கு ஆனால் ? முடியவில்லை காரணம் படிக்காத காரணத்தால் நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கை நாளை நமது சந்ததியினருக்கு கிடைக்க கூடாது அவர்களாவது படிக்க வேண்டும் அதற்கு தேவை பொருளாதாரம் அந்தப் பொருளுக்காக எவ்வளவு விசயங்களை பொறுக்க வேண்டியிருக்கிறது இந்நிலை நிறைய சகோதரர்களுக்கு இருக்கிறது இந்த அரபு நாட்டில்...
இதில் வேதனையான விசயம் என்ன தெரியுமா ?
இதை அந்த சந்ததிகள் புரிந்து கொள்வதில்லை
இதற்கு எனக்கு மட்டுமென்ன விதி விலக்கா ?
அரபு பேசுபவர்களிடம் வேலை செய்வது,
முன்னால் போனால் முட்டும்
பின்னால் போனால் உதைக்கும்.
நிலையைப் போன்றது
ஆக இதை BALANCE செய்து போக வேண்டும்.
முட்டாளாய் வாழ்வது கஷ்டமல்ல
முட்டாளைப் போல் வாழ்வதுதான் கஷ்டம்
இவர்கள் வேண்டுமென்றே இப்படிச் செய்வதில்லை இவர்களின் அறியாமை காரணம் இவர்களுக்கு சரக்கு அவ்வளவுதான் மனதால் இவர்கள் நல்லவர்களே !
நான் செய்த தவறுக்கு கடவுள் எனக்கு இவர்கள் மூலம் தண்டனை கொடுக்கின்றான் (With Salary) எனக்கு இவர்கள் கொடுக்கும் (தேவையற்ற) கஷ்டத்திற்கு இவர்களுக்கு கடவுள் தண்டனையை கொடுப்பான் அது.
காட்மண்டு கடவுளானும் சரி,
காட்பாடி கடவுளானும் சரி.
என் மன வேதனையான நேரங்களில் யாரோ ஒரு ஆங்கில அறிஞர் எழுதிய இந்த வாசகங்கள் என் மன அமைதிக்கு அவ்வப்போது என்னுள் ஊடுருவி வெளியேறி போவதுண்டு.
Never explain yourself to anyone.
உன்னைப் பற்றிய விளக்கத்தை ஒரு போதும் யாருக்கும் அளிக்காதே.
Because the person who likes you, doesn’t need it,
உன்னை நேசிப்பவர்களுக்கு உன்னைப் பற்றிய விளக்கம் தேவை இல்லை
And the people who dislike you they never trust’
உன்னை விரும்பாதவர்கள் நீ அளிக்கும் விளக்கத்தை நம்ப மாட்டார்கள்.

சிவாதாமஸ்அலி-
நீர் செய்த பாவம் உம்மைத் தொடரும்.
யாம் செய்த பாவம் எம்மைத் தொடரும்.
நாம் செய்த பாவம் நம்மையே தொடரும். 

55 கருத்துகள்:

  1. அனுபவமான வரிகள். எனினும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுதான் யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  2. பொதுவாக வெளிநாடுகளில் வேலைப்பார்ப்பவர்கள் பெரும்பாலும் உள்ளுக்குள் ஆயிரம் வேதனைகளை வைத்துக்கொண்டு வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக் கொள்வார்கள். அந்தப் பட்டியலில் நீங்கள் இல்லை என்று இந்த நொடி வரை நினைத்திருந்தேன்.

    நம் வேதனையை நாம் அனுபவித்தேதான் ஆக வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது. அதனை தாங்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வதுதான். எப்போதுமே சிறந்தது. அதிகம் பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னைப் பற்றிய விடயங்களை நான் சொல்லவே இல்லை என்பதே உண்மை என்னவளின் மறைவைத் தவிற பேசியது நியாயமான வார்த்தைகளே... நன்றி

      நீக்கு
    2. சொல்லா விட்டாலும் வெளி நாட்டு வாழ்க்கையின் தனிமை தரும் சோர்வை எத்தனை பணம் கொண்டும் நிரப்ப முடியாது செந்தில்குமார்,
      ஊரிலிருப்போர் பணத்தை கொண்டு மகிழ்ச்சியை,சந்தோஷத்தை வாங்கலாம் என நினைத்து வெளி நாட்டிலிருப்போரெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் வாழ்கின்றார் என முடிவெடுக்கின்றார்கள், ஆனால் மனதில் மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் பணம் நகை பொருள் வீடு போன்ற சொத்துக்களுக்கும் சம்பந்தமில்லை,

      எத்தனை கோடி பணமிருந்தாலும், ஊருக்கு புறப்பட என ஆயத்தமாகி எயார் போட்டில் வந்திறங்கிய நொடி மனதில் வந்தமரும் விடுதலை, அமைதிக்கு நிகர் வேறு இல்லை.

      ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் உற்றம் சுற்றம் சூழ இருக்கும் நிம்மதி வெளி நாட்டு வாழ்வில் இல்லையே!

      காய்ச்சல் வந்து பத்து நாள் பட்டினியாய் இருக்கும் போது தனிமை தரும் வெறுமையை அனுபவித்தால் தான் பணத்தால் இழந்தது என்ன என ஒவ்வொருவருக்கும் புரியும்,

      நீக்கு
  3. எங்கிருந்தாலும் வாழ்க்கை இப்படித்தான், நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயாவின் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  4. என்ன விஷயம், என்ன கஷ்டம் என்று புரியாவிடினும், இந்தக் கஷ்டமான மனநிலை சீக்கிரம் சரியாகக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே..

      நீக்கு
  5. வீட்டுக்கு வீடு வாசற்படி! வெளிநாடு என புறப்பட்ட எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கும் வலி இது!வெளி நாட்டுக்கு புறப்படு போதே மானம்,மரியாதை,ரோசம்,சூடு,சொரணை,அன்பு,பாசம் என எல்லாவற்றையும் விட்டு விட்டு பணம் சம்பாதிக்க நாயாய் அலையணும் என முடிவெடுத்து கிளம்பினால் தான் பிழைப்போம்!

    இதையாருக்காக நாம் அத்தனையும் சகிக்கின்றோமே அவர்கள் புரிந்து கொள்வதில்லை,புரிந்து கொள்ளாமல் போகும் நிலை தரும் வலி எழுத்தில் அடக்கிய இயலாததே! ஆனாலும் நமக்கென மட்டும் சுய நலமாய் சிந்திக்க முடியவில்லை தானே?

    நம்மை நேசிப்பவர்களுக்கு நம்மை குறித்து சொல்ல தேவையில்லை தான், நேசிக்காதவர்களுக்கு சொல்லியும் பிரயோசனமில்லை,

    எனன் செய்வது?இப்படித்தான் முகம் பாராமல் யாரென அறியாமல் எழுத்தில் அறிமுகமான நாம் ஒருத்தருக்கொருதர் ஆறுதலாய் இருந்து கொள்ள முடிகின்றதை நினைத்து மகிழ்வோம்!

    த.ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களின் விரிவான கருத்துரை உண்மையே யாருக்காக செய்தோம் என்பதை ‘’அவர்கள்’’ உணராத போதே வேதனை அதிகமாகின்றது
      சுயநலமாய் வாழ்பவனே இன்று ஓரளவு சந்தோசமாக வாழ்கிறான்

      நீக்கு
    2. இந்த சுயநலமாய் தனக்கு, தான் தன் குடும்பமென மட்டும் வாழ்பவர்கள் இம்மையில் சந்தோஷமாக வாழ்கின்ரார்கள் என்பது என்னமோ உண்மை தான், ஆனால் மறுமையில் நம் மேன்மையாய் இருப்போம் எனும் நிச்சயம் இருப்பதால் எனக்கு இதில் கவலை இல்லை சார், ஆனால் வருத்தங்கள் சோர்வுகள் வருவதுண்டு,அதற்காக கவலைப்படுவதில்லை.

      நீக்கு
    3. இறைபயம் இல்லாதவன் எப்படியும் வாழ்லாம் என்பதும் சிலரது கொள்கைதான்.

      நீக்கு
  6. உணர்வு ரீதியாக ஆகச்சிறந்த வருத்தம் பிரிவு தான் ... என்ன செய்ய வாழ்வின் ஒரு பகுதியை அதுவே எடுத்துக் கொண்டுவிடுகிறது... உண்மை சார்.. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்தும் உண்மையே.

      நீக்கு
  7. நாம் மற்றவர் சுகமாக இருக்கிறார்கள் என நினைத்துக்கொள்கிறோம்.அவர்கள் நாம் சுகமாக இருப்பதாக நினைத்துககொள்கின்றனர். எங்கும் உள்ளதுதான். இதுதான் வாழ்க்கை. எதிர்கொள்வோம். சமாளிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி

      நீக்கு
  8. முதலாளித்துவ கட்சிகள் ஆட்சி செய்யும் நாடுகளில் எல்லாமே ,உழைப்பவர்களுக்கு 'டார்சர் 'அதிகரித்து வருகிறது என்பதே உண்மை !உரிமைகள் மறுக்கப் பட்டு ,சலுகைகள் பறிக்கப் படும் காலம் இது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மிகச்சரியான கணிப்பு வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. மிகவும் யதார்த்தமாய் பதிவு அமைந்திருக்கின்றது...
    கற்பனைப் பதிவு அல்ல! உண்மையின் உரைகல்...
    நன்றி தோழரே!

    பதிலளிநீக்கு
  10. எனக்கு நிலைமை ஓரளவுக்குத் தெரியும் அதனால்தான் வளை குடா நாடுகளில் வசிப்போரின் யதார்த்த நிலையை எழுதுமாறு உங்களிடம் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் ஆனால் இந்தப் பதிவு சொந்த சோகமாய் இருக்கும் போலிருக்கிறதே ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இது சொந்த சோகமே இருப்பினும் பலருக்கும் இது பொருத்தமானதும்கூட தாங்கள் கேட்டதற்கிணங்க விரைவில் எழுதுகிறேன் ஐயா.

      நீக்கு
  11. எல்லா வரிகளும் அற்புதம் சகோ. இந்த பதிவு உங்கள் சொந்த சோகம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அப்படியும்தான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. வெளிநாட்டு வாழ் மறுபக்கத்தை சற்று திறந்து காட்டி இருக்கிறீர்கள். என்ன செய்வது நம் மக்கள் உணரமாட்டார்கள். உங்களை யாரு போகச் சொன்னா..? அப்படின்னு திருப்பி கேட்பார்கள். அவரவர் தலைவிதி என்பார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையானதை விடமாட்டார்கள். அவனவன் கஷ்டம் அவனவனுக்கே....தான் வெளிநாட்டைபொறுத்தவரை, ஏன் உள் நாட்டிலும் கூடத்தான்.

    பெரிதாக போகுது....+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சரியான கருத்தை முன் வைத்தீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. வெளிநாட்டு கஷ்டம் தன் சந்ததிக்கு வரக்கூடாதென்பதை
    உணர்த்தும் அருமையான பதிவு...................

    பொதுநலன் கருதி தங்கள் பதிவு தொடரட்டும் அன்பரே.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையே அடுத்த தேசத்தில் நமது இந்தியர்கள் எவ்வளவு வேதனைகளை சுந்து வாழ்கின்றார்கள் என்பதை முழுமையாக அறிந்தவன் நான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. நன்றி வேண்டாம் நம் நட்பிருக்க.....

      வெளிநாட்டு வேதனை வேண்டாம் என எண்ணிதான்
      வெளியூர் கூட போகாமல் சொந்த ஊரில்
      சொந்த தொழில் செய்கிறேன்.....
      கஷ்டம் என்றால் என் தாய்நாட்டில் போதும் ....
      கவலை என்றால் என் தாய் மடியில் போதும்....
      இவ்விரண்டை விட்டு உயிர் பிரிந்தாலும்
      அயல் நாடு வேண்டாம்....

      நீக்கு
    3. தங்களின் கொள்கை இறுதி காலம்வரை அப்படியெ செல்லட்டும் வெளிநாட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் இழந்தது என்ன என்பதை எழுதி வைத்து விட்டேன் நான் ரத்து செய்து வரும் தினம் விமானம் புறப்படும் நொடியில் வெளியிடுவேன் விரைவில்.....

      நீக்கு
    4. விரைவில் வெளியிடுங்கள் அன்பரே
      உங்கள் பதிவுகள் எதிர்பார்த்து இணைய நண்பர்கள் நாங்கள்...

      நீக்கு
    5. பதிவு தயாராகி 3 வருடங்களாகி விட்டது நண்பா நான் கேன்சலில் வருதவதின் தாமதமே பதிவின் தாமதம் விரைவில் நாள் நெருங்கி விட்டது

      நீக்கு
  14. வெளிநாட்டில் வசிக்கும் பலரின் நிலை இது தான் நண்பரே. வெளி மாநிலத்தில் வசிப்பவர்களில் நிலையும் கொஞ்சம் இப்படித்தான்.

    உங்கள் மனக் கஷ்டங்கள் விரைவில் விலகட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி உண்மையான கருத்தை தந்தீர்கள் நன்றி

      நீக்கு
  15. >>> முட்டாளாக வாழ்வது கஷ்டமல்ல..
    முட்டாளைப் போல வாழ்வதுதான் கஷ்டம்!.. <<<

    அன்பின் ஜி..

    நிதர்சனமான வார்த்தைகள்..
    மிகவும் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி எம்மைப்போன்ற அனுபவம் தங்களுக்கும் உண்டுதானே ஆகவே சரியாக கணித்தீர்கள்

      நீக்கு
  16. அன்புள்ள ஜி,

    ஆங்கில அறிஞரின் அருமையான சொற்கள் தமிழறிஞரை உருவாக்கிவிட்டது என்பதை எண்ணும் போது மகிழ்ச்சி...!

    த.ம. 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே பெரிய வார்த்தைகள் நன்றுதான் ஆனால் நன்றல்ல...

      நீக்கு
  17. என் அனுபவத்தில் பாவம் செய்தவர்களை கடவுள் தண்டித்ததாக வரலாறு இல்லை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் இனியாவது புவியியலின் ஈர்ப்பு சக்தி அவர்களை இழுத்துப் போகக்கடவது

      நீக்கு
  18. பதிவின் வடிவம் ஒரு குத்துவிளக்கைப் போல உள்ளதே!
    என்னா கவனம்...அழகு!
    அப்பறம் படிக்கல படிக்கலன்னு சொல்லிக்கிட்டே ஆங்கிலம், சமற்கிருதம் (தம்இழ்?) என்று போட்டுத் தாக்குறீங்க..! வாழ்க
    இந்தாப் புடிங்க த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், வடிவத்தை கவனித்து எழுதியமைக்கும் நன்றி படிக்கவில்லை 80 உண்மையான விடயம்தானே... இருந்தாலும் 2 வார்த்தை படிக்க ஆசைப்பட்டோம் அது தப்பா ?

      நீக்கு
  19. அற்புதமான வரிகள் .....மனதை தொடும் உண்மைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுராதா ப்ரேம் அவர்களின் தொடர் வருகை மகிழ்ச்சியானது.

      நீக்கு
  20. அங்கிருக்கும் அரசு அலுவலகங்களில் அரபிக் மொழி ஒன்று மட்டுமே தெரிந்தவர் அதிகம் இருப்பதால்,
    அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா
      உண்மைதான் நானும் இவர்களுடன் 15 வருடங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கின்றேன்

      நீக்கு
  21. புரிகிறது சகோதரா.
    எல்லாம் கடந்து போகும்.
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  22. நேற்றே என் அலைபேசியிலிருந்து பின்னூட்டம் போட்டுவிட்டேன்....இன்று பார்த்தால் காணோம்...
    அது கண்டிப்பாய் என் தவறாய்த்தான் இருக்கும்..நிற்க..
    மிகக்குறைந்த ஆண்டுகள் வெளிநாட்டு அனுபவமே எனக்கு போதும் என்றானது..உடலின் கடைசி சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சிவிட்டு சக்கைக்கு ஒரு நொடியும் மரியாதை செய்யாதவர்கள் தான் வெளிநாட்டு முதலாளிகள் என்பது என் அனுபவம்...

    கனவுகளின் மட்டும் உள்ளூர் வாழ்க்கை நடத்தும் அந்நிய மண்ணில் சில நேரம் நள்ளிரவு வரும் அழுகை ...யாரும் அமர்த்தாமலே அடங்கும் அவலம்..ஒரு காய்ச்சலுக்கு முதலுதவிப்பெட்டியின் மாத்திரை முழுங்கும்போது வரும் சோகம்...சொந்தௌஉரில் ஒரு நெருங்கிய இழப்பின் போது வரும் கையாலாகாத நிலமை..
    புரிகிறது உங்கள் மனவழிகள்...ஆனாலும் எல்லாம் மாறும் நம்புவோம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் அனுபவ மொழியின் ஆழம் உணர்வுப் பூர்வமாய் அறிந்தேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. என்னாச்சு ஜி? ஏன் இத்தனை வருத்தம். சரி உங்கள் வருத்தம் இங்கு உள்நாட்டிலும் பலருக்கும் உண்டு ஜி. இக்கரைக்கு அக்கரை பச்சை. என்ன சொந்த நாட்டில் கொஞ்சம் சுதந்திரம் கூடுதல்தான் அதுவும் இந்தியாவைப் போன்ற சுதந்திர நாடு வேறு இல்லைதான். ஹஹஹ் இது கொஞ்சம் உள்குத்துடன் ...சரி அதை விடுங்கள். ஒவ்வொரு நாட்டிலும் நல்லதும் உண்டு தீயதும் உண்டுதான். என்ன செய்ய சில சமயம் வாழ்க்கை நம்முடன் கால்பந்து விளையாட்டை விளையாடுகின்றதுதான். அதில் கோல் அடித்தால் நல்லதே...

    இந்த வாழ்க்கை கூட இல்லாமல் எத்தனை பேர் இங்கு ஒருவேளைச் சாப்பாடு கூட இல்லாமல், படுக்க இடம் கூட இல்லாமல் இருக்கின்றார்கள்...கண்ணதாசனின் வரிகள்தான்...உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு....ஸோ மயக்கம் வேண்டாம் கலக்கம் வேண்டா.

    உங்கள் இறுதிவரிகள் அதான் அந்த ஆங்கில வாசகத்தை நானும் மகனும் அடிக்கடிச் சொல்லுவது...அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்
      உனக்கும் கீழே உள்ளவர் கோடி
      நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
      இந்தப் பாடலை நான் கேட்காத நாள் இல்லை.

      நீக்கு