தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 10, 2015

Meet 2 Abu Dhabi Mall

நாங்கள் சந்தித்த அபுதாபி மால் 07.03.2015
ஜியின் மருமகன், கில்லர்ஜி, ஜியின் மகன், குமார்ஜி.
எங்களுக்கு பின்னால் நிற்க்கும் இரண்டு ரோபோட்கள் எந்திரன் திரைப்படத்தில் உபயோகப்படுத்தியவை.
முன்குறிப்பு – எப்ப, யார் சந்தித்தாலும் நண்பர் ‘’மனசு’’ சே.குமார் அவர்கள் பதிவு போட்டு விடுகிறார் சரி நாமலும் ஒரு தடவை இப்படி பதிவு போடுவோமே என்ற ‘’கன்னி’’ முயற்சி இது – கில்லர்ஜி.

கடந்த வாரம் எனக்கு மின்னஞ்சல் வந்தது அன்பின் ஜி குவைத் மன்னன் திரு. துரை செல்வராஜூ அவர்களிடமிருந்து... அவருடைய துணைவியாரும், மகனும் U.A.E அபுதாபியிலிருக்கும் மகளின் வீட்டிற்க்கு வந்திருப்பதாகவும், முடிந்தால் தாங்களும், ‘’மனசு’’ சே. குமார் அவர்களும் சந்திக்கவேண்டும் என்று. நண்பருக்காக இதைக்கூட செய்ய வேண்டாமா ? உடன் எனது தொ(ல்)லைபேசி இலக்கத்தை கொடுத்தேன் மறுநாள் ஜியின் மகன் என்னை தொடர்பு கொண்டு பேசினார் நலகுசலம் விசாரித்து ஜியின் மருமகனிடம் பேசினேன் அவர்கள் இருப்பது வானூர்தி தளத்தின் அருகில் கோதண்டசாமி நகர் என்பதை கேட்டறிந்தேன் அதனால் என்ன ? அவர்கள் U.A.E.யின் கன்னியாகுமரி என்று அழைக்கப்படும் ராஸ் அல் ஹைமாஹ்வில் இருந்தாலும் சென்று காண்பது நமது கடமை அல்லவா ?

(கன்னியாகுமரியா ? அப்படி யாரும் அழைத்தது இல்லையே) 
யாருயா ? இடையிலே இதுவரை இல்லைனா இனிமேல் சரித்திரம் சொல்லட்டுமே... இடையிலே பேசாமல் கம்முனு படிமே... இதனிடையில் கைப்பேசியில் அழைத்து வருகிறேன் என்றேன் நாங்கள் அலைனில் அலைந்து கொண்டிருக்கிறோம் அபுதாபி வந்து அழைக்கிறோம் என்றார்கள், கடந்த சனிக்கிழமை அபுதாபி சிட்டிக்கு வருகிறோம் என்றார்கள் மாலை 05.30 க்கு அபுதாபி மாலுக்கு வருவதாக சொன்னார்கள், நானும் மாலை 04.00 மணிக்கே நண்பர் ‘’மனசு’’ சே. குமார் அவர்களை அழைத்து தயாராக இருக்கச் சொன்னேன் நானும் பேலஸிலிருந்து நண்பர் குமாரின் இடத்துக்கு புறப்பட்டேன் (பேலஸா ?) அதாவது நான் தங்கி இருப்பது ராம்நகர் வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் இருக்கும் ஒரு ஷேக்கோட பேலஸ் அருகில் அவர்களுடையை காம்பவுண்ட் சுவரும், எனது வில்லாவின் சுவரும் சிறிய அளவில் ‘’டச்சிங்’’கில் இருப்பதால் பேலஸிலிருந்து புறப்பட்டேன் என்று சொல்வது, எனது வழக்கம் விளக்கம் போதுமா ? உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சுடுவேன் போலயே, இப்படி குறுக்கு கேள்வி கேட்டால் நான் எப்படி பதிவு எழுதுறது ? அப்புறம் நான் மறந்துட்டேனா ? என்னமோவுல... ஆங்….. மாலை 05.18 க்கு சே. குமார் அவர்கள் தங்கி இருக்கும் சிவரக்கோட்டையார் வீதிக்குப்போய் அவரையும் அழைத்துக் கொண்டு சரியாக 05.32க்கு மாலின் உள்ளே நுழைந்தோம் தொ(ல்)லைபேசியில் அழைத்தேன் On the Way என்றார்கள் அத்துடன் நானும் நண்பரும் கோ-அப் உள்ளே போய் குடிப்பதற்க்கு ஏதாவது வாங்குவோம் என பதநீர் இருக்குமா ? என்று பார்த்தால் இல்லை, சரி பருத்திப்பால் இருக்கா ? என்று கௌண்டரில் இருக்கும் பிலிப்பைனியிடம் கேட்டேன், அப் & டௌன் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள், சரி நன்னாரி சர்பத் இருக்கா ? என்றேன் போடா நாதாரி என்றாள் இதென்ன  கூத்தா இருக்கு ? இவளுக்கு எவன் வேலை கொடுத்தான் ? என்று நினைத்து மேனேஜரிடம் கம்ப்ளைண்ட் கொடுப்போமென யாருடா இங்கே மேனேஜரு ? என்று கேட்டேன் நண்பர் சே. குமார்தான் விடுங்க அவயென்ன நமக்கு அயித்தெ மகளா ? வாங்க என சமாதானப்படுத்தி விட்டார். உடன் அருகில் இருந்த குளிப்பாட்டி SORRY குளிர்ப்பெட்டியில் ஒபாமாவின் தாய் மொழியான இங்கிலீஷுல எழுதியிருந்த ரெண்டு டின் எடுத்து படித்துப் பார்த்தேன் இங்கிலீஷ் படிச்சா எனக்கு முதுகுவலி வரும் அதனாலே படிக்கலை அப்படியே ஸ்லாவத்தா நடந்து குடித்துக் கொண்டே..... மாலின் வரவேற்பு ஹாலுக்கு வந்து எங்களுக்காகவே போட்டிருந்த இரண்டு சேரில் உட்கார்ந்து சுற்றி இருக்கும் கேமராக்கள் எங்களது பேச்சுகளை பதிவு செய்கிறதே என்பதை ஜாக்கெட் SORRY  சட்டை செய்யாமல் அவர்கள் வரும்வரை பொரணி பேசிக்கொண்டு இருப்போமே என்று....

அன்பின் ஜி திரு. துரை செல்வராஜூ அவர்கள் தொடங்கி, திரு. கரந்தையார், திரு. முனைவர் B. ஜம்புலிங்கம், ஐயா திரு. சீனா, திரு. திண்டுக்கல் தனபாலன், ஐயா திரு. GMB, வில்லங்க கோஷ்டிகள் திரு. துளசிதரன் & கீதா, ஐயா திரு. பழனி கந்தசாமி, பொய்யா... SORRY உண்மையானவர் திரு. சொக்கன் சுப்பிரமணியன், திரு. ரூபன், திரு. பகவான்ஜி, திரு. முத்து நிலவன், திரு. ஜோதிஜி திருப்பூர், திரு. ஊமைக்கனவுகள், திரு. சிபி செந்தில்குமார், திருமதி. தேனம்மை லக்ஷ்மணன், திரு. டி.என். முரளிதரன், திரு. வெங்கட் நாகராஜ், திரு. ஆவி, திரு. குடந்தை சரவணன், திரு. மணவையார், திரு. தி.தமிழ் இளங்கோ, திருமதி. குவைத் மஞ்சுபாஷிணி சம்பத்குமார் 

இவர்களைப்பற்றி பேசும்போது திடீரென எங்களது மனம் அடுத்து நூல் வெளியிடுவது குறித்து தாவியது நூல் வெளியிடுவது எப்படி ? (பிரிண்டிங் செய்து தான்) அது யாருயா ? இப்படியே போனது 06.43 க்கு எனது கைப்பேசி கதற நாங்கள் வந்து விட்டோம் முதல் தளத்தில் நிற்கிறோம் என்றார்கள் பிறகு பொறணியை நிறுத்தி விட்டு ஓடேணியில் (அதாங்க Escalator) ஏறி மேலே போனோம் நண்பரின், துணைவியார், மருமகன், மகள், மகன், பேத்தி நின்றிருந்தார்கள் நலகுசலம் விசாரித்து குடும்ப நிலவரங்கள், மகனின் வேலை தேடுதல், பயண அனுபவங்கள் குறித்து பேசினோம், நண்பரின் பேத்தி வர்ஷிதா என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தது மனசில் என்ன ? நினைத்ததோ... பிறகு சம்பிரதாயத்துக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டு விடை பெற்றோம் நண்பர் சே. குமாரின் இடம் வந்தவுடன் அவரிடம் விடை பெற்று வரும்போது நினைத்துக் கொண்டேன்.


இந்த வலையுலகம் நமக்கு எத்தனை நண்பர்களை உறவுகளாய் தந்திருக்கிறது இந்த உறவுகள்தானே ஆஸியில் இருக்கும் எமது நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்களை, நான் வேண்டாமென சொன்னாலும் ‘’ஆஸ்திரேலியா வாங்க கில்லர்ஜி’’ நான் விசிட் விசா அனுப்புகிறேன் என்று கெஞ்ச வைக்கிறது. இதற்க்கு காரணமான என் இனிய தமிழுக்கும், வலையுலகத்திற்கும் நன்றி சொல்லிக்கொண்டு வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் இருக்கும் எனது பேலஸை நோக்கி புறப்பட்டேன்.

தமிழ் வாழ   அந்தத் தமிழோடு நாமும் வாழ !

68 கருத்துகள்:

  1. இது என்ன அநியாயம்? துபாய் மாலில் உட்கார்ந்து கொண்டு பொறணி பேச நான்தான் கிடைத்தேனா? இருங்க, உங்களைக் கவனிக்க மாதிரியில கவனிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி ? ஐயா கவனிப்பீங்க, ட்ராப்ட் எடுத்து அனுப்புவீங்களா ?

      நீக்கு
  2. நண்பா!
    கலந்துரையாடலில் முன்னணி பதிவாளர்களை மட்டுமே நினைவு கூர்ந்தீர்களே!
    இந்த பக்கம் அருகில் இருந்த குளிர் பெட்டியில் 2 டின் எடுத்து பார்த்தீர்களே அந்த
    டின்னில் எழுதி இருந்த எழுத்துக்கள் ஓபாமாவின் தாய் மொழி இல்லை!
    பிரான்சுவா- ஹோலாண்டே (பிரஞ்சு அதிபர்) தாய் மொழி என்பது தெரிய வில்லையா?
    உமக்கு?
    அந்த டின் 1. சாம் என்கிற சாமாணியன்,
    டின் 2. புதுவை வேலு என்கிற யா. ந

    (நண்பா இதுக்கு பேரு என்னா சொல்லு பார்ப்போம்? டின்னு கட்டி அடிக்கிறது!
    ஹா- ஹா!)

    த ம (டின்னு) 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா, அனைவரைப்பற்றியுமே பேசிக்கொண்டே வரும்போது திடீரென கைப்பேசி அலறி விட்டதே காரணம் நண்பரே... இதில் சும்மாகூட தங்களது பெயரை எழுதலாம் எமக்கு பொய்யுரைக்கும் பழக்கமில்லை நண்பா, திருப்பூர் ஜோதிஜி எனக்குத்தெரியாதவர் இருப்பினும் பேசியது யார் என்னுடனிருக்கும் பிரமாண்டமான பதிவர்தான்.

      விடுங்க நண்பா நீங்களும் நானும் சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துல நண்பர் சாமானியனை நடுவராக நிறுத்தி கபடி விளையாண்டோமே அதை எழுதிட்டாப்போச்சு இதுக்குப்போயி அலட்டிகலாமா ?

      நீக்கு
  3. இனிமையான சந்திப்பு. சந்திப்பின் போது என்னைப் பற்றியும் நினைவு கூர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நடந்ததை விவரித்தேன் அவ்வளவுதான்.

      நீக்கு
  4. சந்திப்பு சுவாரஸ்யமாகவே இருந்திருக்கும். எல்லோரும் இணைந்த பிறகு ஒன்றும் சாப்பிடவில்லையா? (நம்ம கவலை நமக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே தமிழர்கள் சந்தித்தால் விருந்தோம்பல் இல்லாதிருக்குமா ? ஏதோ சிறிய அளவில் அதை எழுதுவது மறபன்றே...

      நீக்கு
  5. முதுகுவலி காரணம் இது தானா...? ஹா... ஹா...

    உறவுகள் தொடரட்டும்... சிறக்கட்டும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி முதுகுவலி எனக்கு இப்படித்தான் வருது.

      நீக்கு
  6. ஆகா
    மாலிலும் வலைப் பேச்சுத்தானா, தங்களின் நட்பு அத்தகையது
    அன்பர் திரு துரை செல்வராஜ் அவர்களுது மனனோடும், மருமகனோடும்
    தங்களின் சந்திப்பு மகிழ்வினை அளித்தது
    நன்றி நண்பரே
    இதுபோன்ற ச்ந்திப்புகள் தொடரட்டும்
    அது சரி ஆஸ்திரேலியப் பயணம் எப்பொழுது நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே, ஆஸ்திரேலியாவைப்பற்றி விரைவில் தருகிறேன்.

      நீக்கு
  7. சக நண்பர்களையும் உடன் நினைவு கூர்ந்து -
    தங்கள் மகிழ்ச்சியினை - குற்றால அருவி என -
    நல்லதொரு பதிவினில் கொட்டி விட்டீர்கள்..
    தங்கள் அன்பில் கடன் பட்டிருக்கின்றேன்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதில் கடன்பட என்ன இருக்கிறது ?

      நீக்கு
  8. சரி..

    பிலிப்பைனி கிட்டே - நன்னாரி சர்பத் வரைக்கும் கேட்டீங்களே..

    பிலிப்பைனியோட பேரு என்னா..ன்னு கேட்டீங்களா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரைக்கேட்கவில்லை ஜி அவளது நேம் பேட்ஜில் பார்த்தேன் அகிலாண்ட பரமேஸ்வரி முத்து லட்சுமி என்று கொரிய மொழியில் எழுதியிருந்தது.

      நீக்கு
  9. தங்களின் அனுபவப் பகிர்வு பிரமாதம்.அடுத்து ஆஸ்திரேலிய சென்று வந்து எழுதவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கவிஞரே நலம்தானே... கண்டிப்பாக எழுதுவேன் தொடர்ந்தால் நலம்.

      நீக்கு
  10. சந்திப்பு என்றாலே தித்திப்பு தானே ! அந்த தித்திப்பை முத்தாய்ப்பாக வழங்கியமைஅருமை அண்ணா ..

    தம+

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா, நீங்க கூடத்தான் ஹாலிவுட் விமர்சனம் எழுதுறீங்க... ஆனால் அது மா3 முடியாதே...

      நீக்கு
  11. நண்பர்கள் ஒன்றாக சந்தித்து பேசும் போது மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும் ? உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்த விதம் மிக அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சந்திப்பு என்றால் தித்திப்புதானே...

      நீக்கு
  12. பிரமாதமான சந்திப்பு தான். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ளம் திரு துரைசெல்வராஜு அவர்களின் குடும்ப உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்தது மகிழ்ச்சி, மாலில் வலை உறவா பேச்சில், நம்பிட்டேன். பிலிப்பைனி பேர் எனன? எப்படி கேட்கலாம் என்று தானே? அந்த பாப்பா ஏன் தெரியுமா உங்களைப் பார்த்து சிரித்தது? கனவில் வந்த பூச்சாண்டி போல் இருந்து இருக்கும் போல, முதுகுவலி நலமா? இங்கிலீஷ்? நம்பமுடியல அரபி,,,,,,,,, அப்புறம் பேலஸ் தூக்கம் எப்படி? சொக்கன் சார் தப்பிச்சுக்கோங்க,,,,,,,,,,,,,,,,,,, சார் எஸ்கேப்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிலிப்பைனியிடம் பெயர் கேட்க வேண்டுமென்றால் அனோ பகாலன் மோ ? அப்படினு கேட்டால் போதும்.
      வாங்க, நம்பிட்டோம் அப்படீனா ? இதெல்லாம் பொய்யா ?
      முதுகுவலி இப்பக்கொஞ்சம் தேவலை.
      பாப்பா கனவுல பூச்சாண்டியெல்லாம் வருமா ?
      பேலஸ் தூக்கம் வழக்கம் போல தூக்கல்தான்.
      அவரு தப்பிச்சு எங்கே போயிடுவாரு ?

      நீக்கு

    2. ஜீ,,,,,,,,,,,,,,,,, என் வலைத்தளத்தில் பீச்சாங் கை வரவேற்பு. அப்புறம் ற்க் இப்படி வரக்கூடாது எனக்கு தெரிந்த கொஞ்ச இலக்கணம்.





      நீக்கு
    3. இப்படித்தான் வரவேற்பதா ?

      நீக்கு
  14. வணக்கம்
    ஜி
    சந்திப்புஇனிதாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.. அதுதான் சம்பவம் எனக்கு புரைஏறியது.. நீங்கள்தான் நினைத்தீர்கள்.. போல... பதிவை பார்த்த போதுதான் புரிந்தது இதைப்போல பல சந்திப்புக்கள் நடைபெற எனது வாழ்த்துக்கள்... ஜித.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் உங்களுக்கு மட்டும் புரையேறியதற்க்கு காரணம் நிறைய (திட்டி) பேசிட்டோமோ ?

      நீக்கு
  15. பட்டியலில் என் பெயர் இல்லை! வன்மையாக கண்டிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா இதற்க்கு நாங்கள் பொருப்பாளி அல்ல வரிசையாக பேசிக்கொண்டே வரும்போது துரைஜியின் குடும்பத்தார்தான் கைப்பேசியில் என்னை அழைத்து பொறணியை நிறுத்தி விட்டார்கள்.
      பரவாயில்லை அடுத்த சந்திப்பில் பொறணியில் முதல் போணி நீங்கதான்.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே.!

    நல்ல இனிமையான சந்திப்பைப் பற்றிய பதிவு. மகிழ்ச்சியுடன் சந்தித்ததை அதே மகிழ்வுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க சந்தோஷம் சகோதரரே... இது போன்ற நட்பின் உறவுகள் என்றும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  17. பரவாயில்லை! மாலுக்கு சென்றாலும் அங்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பை நிகழ்த்தி விட்டீர்கள். புறணிக்கு அங்கு வேலை இல்லை. கலந்துரையாடல், விமர்சனக் கண்ணோட்டம் மட்டுமே இருந்திருக்கும். சகோதரர் துரை செல்வராஜூ அவர்களை படங்களில் காணோமே. என்ன காரணம்?
    த.ம.13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே துரைஜி இருப்பது குவைத் நாட்டில் அவருடைய மகளின் குடும்பமே அபுதாபியில் இருக்கிறது, துரைஜியின் மனைவி, மகள், மருமகன், மகன், பேத்தி இவர்களைத்தான் சந்தித்தோம். குவைத் நாட்டுக்கு நாங்கள் போகமுடியாது அது வேறு நாடு.

      நீக்கு
    2. நீங்க தான் கள்ளத்தோணியில போறவராச்சே!!!

      நீக்கு
    3. ஒருதடவை போகணும்னு முடிவு பண்ணிட்டா தோணி தேவையில்லை நீந்தியே போயிடுவோம்.

      நீக்கு
  18. துரைஜியைப் படத்தில் காணோமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, ஐயா துரைஜி இருப்பது குவைத் நாட்டில், மேலும் விபரம் நண்பர் தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு சொல்லியிருக்கின்றேன். உங்களுக்கு மேல் இருக்கிறது.

      நீக்கு
  19. எல்லோருக்கும் புரியாததை படிச்சா தலைவலி தான் வரும்னு சொல்லுவாங்க. உங்களுக்கு மட்டும் தான் முதுகு வலி வந்திருக்கு. அது சரி,
    எல்லோரும் யோசிக்கிற மாதிரி நீங்க யோசிச்சா தானே.

    அப்புறம் டோனி அப்பாட் அலைபேசியில் கூப்பிட்டு,இனிமே அபுதாபியில இருக்கிற தேவகோட்டை கில்லர்ஜிக்கு விசா கொடுங்கன்னு கேட்டு
    என்னைய தொல்லை பண்ணாதேன்னு கறாரா சொல்லிட்டாரு. நான் கூட ஏங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர்,போன தடவை நீ அவருக்காக
    விசா கேட்டு, நான் விசா கொடுத்தேன். ஆனா பாரு,அவரு இங்க வந்து உன்னைய கூட கண்டுக்காம போயிட்டாரு. அதனால அவருக்கு இனிமே விசா
    கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களெல்லாம் நாசமாப்போனவங்கள்லயே மோசமானவங்க.... எங்களுக்கு வித்தியாசமாகத்தான் சிந்தனை வரும்.
      தம்பி டோண் அப்பாட்டிடம் இன்று இரவே பேசுறேன், விசா கிடைக்கலை இன்னும் மூணே மாசத்துலே ஆட்சி கவுக்குறேன்.

      நீக்கு
  20. நாங்களும் சிறிது நாட்கள் முன் ,முன்பின் பார்க்காத நண்பரைப் போய் சந்திக்க முடியலே ,உங்களால் முடிந்ததே மகிழ்ச்சி :)
    த ம +1

    பதிலளிநீக்கு
  21. ஆஹா... கலக்கலாய் எழுதியிருக்கீங்க அண்ணா...
    சூப்பர்...
    ஆமா செல்வராஜ் ஐயாவின் திருமதியார் உங்களிடம் கேட்டதை மட்டும் சொல்லவில்லை... (அப்பா போட்டுக் கொடுத்தாச்சு... இனி மத்தவங்க பாத்துப்பாங்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நான் மறைச்சேன் போட்டு உடைச்சிட்டீங்களே.... தில்லைஅகத்து கோஷ்டி பார்த்தால் வில்லங்கமாயிடுமே....

      நீக்கு
    2. அட... இன்னும் யாருமே வரலையா... கேட்கலையா...
      பத்த வச்சிம் வேஸ்டாப் போச்சா...

      நீக்கு
    3. நல்லவேளை எல்லோரும் மறந்துட்டாங்....

      நீக்கு
  22. அருமையான சந்திப்பு அதைப் பற்றிய நகைச்சுவை இழையோடிய பதிவு.....

    அது சரி அது என்ன தில்லை அகத்து வில்லங்கங்கள்...கொடுவா மீசைக் காரருடைய வில்லங்கமும் கூடிப்போச்சு...அதுல பொரணி வேற.....

    அது என்ன வெற்றிக் கொடு கட்டுல பார்த்திபன் சொல்றாமாதிரி, விவேகானந்தர் தெரு...,...ம்ம்ம் குவைத்துக்குக் நம்ம பாண்டிய ராஜனும், எஸ் வி சேகரும் கள்ளத் தோணி ஏறி கொச்சின்லயே இறங்கறா மாதிரி உங்களையும் இங்கேயே எறக்கி விட்டுட்டாங்களோ.....ஹஹஹஹ்.. ரொம்பவே ரசிச்சோம் ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க ஆட்சிக்கு வந்தால் இந்தப்பெயரையெல்லாம் வச்சுடுவோமுள்ள... நாங்க ஃப்ளைட்டிலேதான் வந்தோம்.

      நீக்கு
  23. அட ஆமாம் ல? குமார் நண்பரே அது என்னனு நீங்கதான் சொல்லுங்களேன்.....ஹஹாஹ் நாங்க பார்த்தா வில்லங்கம்தான்.....அது சரி அப்படி என்னதான் அந்தம்மா கேட்டாங்க? நாங்க ஊகிக்கட்டுமா? அப்புறம் எங்க ஊகம் ரொம்ப வில்லங்கமாகிடும்....உண்மையச் சொல்லிப்புடுங்க...ஆமாம்

    (என்ன உங்கள ரொம்ப நல்லவன்னு ஊரே பேசிக்குதாமே...அப்படியா கில்லர்? நீங்க உங்க கொடுவா மீசைய வைச்சுக்கிட்டு ஊரெல்லாம் மிரட்டுரீங்களாமே அப்படிக்க கில்லர்?

    அது சரி போன பதிவுல இந்திய போலீஸ் நு போட்டுட்டு கார் மட்டும் ட்ரைவிங்க் மாத்திப் பக்கம் இருந்துச்சு...இங்க தானே கார் ஓட்டுனீங்க...இல்லையா கில்லர்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒண்ணும்மில்லை உங்களோட பெயர் இனிமையாக இருகுனு சொன்னாங்க, அதைத்தான் நண்பர் குமார் எழுதியிருக்காரு...

      நீக்கு
  24. பு துகை க்கு வருகை உறுதியாச்சா
    அப்ப கைது ம் (எம் அன்பால்) உறுதியாச்சு.

    பதிலளிநீக்கு
  25. உங்களுடைய எழுத்திலும் சிந்தனையிலும் எப்பொழுதும் நாங்கள் இருப்பதறிந்து மகிழ்ச்சி. நண்பர்களையும், குடுமபத்தினையும் தாங்கள் அறிமுகப்படுத்தும் விதமும், உரையாடும் முறையும், ஒன்றுவிடாமல் அனைத்து செய்திகளையும் பரிமாறிக்கொள்ளும் நிலையும் நீங்கள் எங்கள் மீது கொண்டுள்ள அன்பையும், தாய்மண்ணின்மீதும், தாய்மொழியின்மீதும், பணிபுரியும் மண்ணின்மீதும் கொண்டுள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது. உங்களது இந்த அனுபவங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளும்போது நாங்கள் மிகவும் நெகிழ்ச்சியடைகின்றோம். உங்களது இப்பதிவுகள் மிக அண்மையில் நீங்கள் இருப்பதைப்போல உணர்த்துகின்றது. உங்களின் அன்பிற்கு நன்றி என்ற ஒரு சொல் கூறி தப்பித்துக்கொள்ளமுடியாது. அதற்கெல்லாம் மேலது உங்களது அன்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கும், விளக்கமான கருத்துரைக்கும் என்றென்றும் நன்றி

      நீக்கு
  26. அட..அங்கேயும் ஒரு கோதாண்ட சாமி நகர் இருக்கா..????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெதுவா பேசுங்க நண்பா, அரபிக்காரன் கேட்டான் நாம கண்டமாயிடுவோம்.

      நீக்கு
  27. நல்லாயிருக்கு ஜீ, அப்படியே டைம் இருந்தா இங்க வாங்க

    http://vriddhachalamonline.blogspot.in/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டைம் இல்லாவிட்டாலும் வருவேன் நண்பா...

      நீக்கு
  28. துரை செல்வராஜ் ஐயாவின் குடும்பத்தாரை கண்டு அளவலாவி மகிழ்ந்து இருக்கிறீர்கள்....மாலில் இரண்டு சகோக்களும் சேர்ந்து பொறணி வேற....ஹாயா...?
    ஆனா ...இது அநியாயமா இருக்கே....?
    இல்லையா பின்ன..? நம்மவூரு...சகோதரியை விட்டு பேசிய உங்கள் இருவரையும்....என்ன செய்வது...ம்...
    பதிவர்களின்...அன்பின் சந்திப்பும், அதை சுவையாய் நடைபோட்டு,,சாரி அசை போட்டு எழுதியமைக்கும்....அபுதாபியா...இல்லை...இந்தியாவில் சந்திப்பா...? என
    நம்ம பெயர் வைத்து இடம் சுட்டியமைக்கும்...சபாஷ்...!!!

    தம 19

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க புலவர் இராமாநுசம் ஐயா அவர்களுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  29. இனிய சந்திப்பின் அழகிய தொகுப்பு!

    பதிலளிநீக்கு
  30. நீங்க வீர காளி அம்மன் பேலசில் இருப்பது அரபிகாரர்களுக்கு எப்படி தெரியாம மறைச்சிங்க... அந்த ரகசியத்த எனக்கு மட்டும் சொல்லுங்க...ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க அரபிக்காரங்கே வீட்டுல சொல்லிட்டிங்கள்னா.....

      நீக்கு
  31. ஆம்சகோ மதுரைக்கு வந்திருந்தேன் தங்களையும்பார்த்தேன்,
    கீதாவின் ஒருகோப்பை மனிதம்நூல் வெளியிடும்போது
    (அவர்கல்பிலாகில்பச்சைபுடவை கையில் ஒரு பையுடன் பின்னாடிகுனிந்துகொண்டு நிற்பதுநாந்தான் அடையாளத்திற்காக)வந்திருந்தேன்சகோ.

    பதிலளிநீக்கு
  32. 14 மணி நேரமா ஒக்காந்தே இருந்துட்டான்களே, ஒரு ஒரு மணி நேரம் காலாற எறங்கி ஏறுங்கன்னு சொல்லி சியோள்ளே, அதாங்க கொரியாவில எறக்கி உட்டானுகளா, அப்ப தான் அகிலாண்ட பரமேஸ்வரி முத்து லச்சுமி, " மீசைதாடி சேர்ந்து இறக்கிற ஆளா " பாத்து தமிழ்லே, பேட்ஜை பாத்தியளா ? என்று கேக்கிறதை பாத்தேன்

    பதிலளிநீக்கு