தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 25, 2016

கொரியா மாடல் 4 ½ சவரன்

இதன் முன் பகுதியை காண இதோ... ராஜபார்வை

மதுரை மீனாம்பாள்புரம் ஏரியாவில்...
ஹலோ கில்லர்ஜி நல்லாயிருக்கீங்களா ?
வாங்க பகவான்ஜி எப்படி ? இருக்கீங்க ? வீட்டில் எல்லோரும் நலமா ?
நல்லா இருக்காங்க, உங்க குழந்தைகள் எப்படி ?
பகவான் அருளால் நல்லா இருக்காங்க ஜி
என்ன ? திடீர்னு சேட்டுகள் கடைப்பக்கம் சொல்லவே இல்லை...
ஒரு திடீர் கல்யாணம் நகை வாங்க வந்தேன்.
அதுக்கு நகைக்கடைக்குத்தானே போகணும்...
அங்கே போனால் ? அவன் செய்கூலி போட்டு நம்மை சேதாரமாக்கிடுவான் அதான் இந்த மார்வாடி சேட்டுகள்ட்ட ஏதாவது மூழ்கிப்போனது இருக்கும்.
அதுவும் சரிதான், நான்கூட சங்கிலி விற்கத்தான் வந்தேன்.
அப்படியா ? எத்தனை சவரன் ?
இதோ பாருங்க கொரியா மாடல் 4 ½ சவரன் இருக்கும்.
இருக்குமா ?
இல்லை..... இருக்குனு சொல்ல வந்தேன்.
ஏன் ? விற்கிறீங்க ?
அது வந்து புதுசா நைஜீரியா மாடல் கம்ப்யூட்டர் வந்துருக்கு வாங்கலாம்னுதான்.
சரி பில்லைக் கொடுங்க ?
என்ன ஜி ? ''பில்லா, ரங்கா''னு கேட்டுக்கிட்டு என்னோட முதல் கல்யாணத்துக்கு போட்டது பில்லு கிடையாது.
சரி எடை போட தராசு ?
வாங்க அந்த முக்குல ஒரு விறகு கடை இருக்கு அங்கே போடுவோம்.
சரி வாங்க...
அண்ணே வணக்கம் ஒரு பொருளை எடை போடணும்....
போட்டுக்கங்க, ஆமா பொருள் எங்கே ?
இதோ இந்தா இருக்கு.
பகவான்ஜி பாக்கெட்டிலிருந்து வெளியே எடுக்க, கடைக்காரர் இருவரையும் மேலிருந்து கீழாக ஒரு மாதிரியாக பார்த்தார்.
நல்லாத்தானே இருக்கீங்க ? எங்கேயாவது பிட்பாக்கெட் அடிச்சிட்டு வர்றீங்களா ? டேய் முனியாண்டி, கருப்பையா, மாயாண்டி இங்கே வாங்கடா...
மறு நிமிடம் பகவான்ஜியும், கில்லர்ஜியும் ஓட்டம் பிடித்தவர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் வந்து நின்றார்கள்.
என்ன ? பகவான்ஜி இப்படிக்கொண்டு வந்து நிறுத்திட்டீங்க ?
என்ன செய்யிறது ? அப்பவே நீங்க வாங்கி இருந்தால் பிரச்சினை இல்லை என்மேல சந்தேகப்பட்டு பில் கேட்கிறீங்க...
சரி விலையை சொல்லுங்க ஜி ?
சந்தையில இப்ப சவரன் விலை என்ன ?
இப்ப சவரன் 6 வராகன்.
சரி 4 ½ சவரனுக்கு எவ்வளவு கணக்கு பாருங்க ?
நீங்களே, பாருங்க...
எனக்குத் தெரியாது நீங்கதான் 13 வது வரைக்கும் படிச்சு இருக்கீங்க, உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்.
சரி பகவான்ஜி 4 சவரனா போட்டுக்கிருவோமே.... நமக்குள்ளே என்னயிருக்குநான் உங்களுக்கு தினம் தமிழ் மணம் ஓட்டெல்லாம் போடுறேன்....
(ஆஹா இனிமேல் எந்த மாக்கானும் மாட்ட மாட்டான் நமக்கும் கீழே கிடந்ததுதானே ? எப்படியும் போலீஸ் விரட்டி வந்து நகையைப் புடிங்கிருவாங்கே... அதுக்குள்ளே கிடைச்சதுவரை தள்ளி விட்டுப்புட்டு நாம கழண்டுக்கிருவோம் ஒத்துக்கிறலைனா நாளைப் பின்னே தமிழ் மணம் ஓட்டு போடமாட்டாரு)
என்ன ? பகவான்ஜி யோசனை ?
சரி ஜி நமக்குள்ளே என்னயிருக்கு ? நீங்க கணக்கு பாருங்க...
நல்லது ஜி சவரனுக்கு 5 வராகனா போட்டுக்கிருவோமே...
என்ன ஜி நீங்க... ? சரி உங்களுக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்...
கோயில் உண்டியல்ல போட்டுருவோமா ?
ஐயய்யோ அப்படிச் சொல்லலை 5 ½ வராகனா போட்டு கணக்கை முடிங்க.
சரி ஜி 4 சவரனுக்கு 5 ½ வராகன் வீதம் நாலு இண்டு அஞ்சரை முப்பத்தி ஆறு முப்பத்தி ஆறே, பனிரெண்டாலே வகுத்தால் நூற்றி பதிமூணு வராகனை தொன்னூற்றி அஞ்சைக் கழிச்சு எட்டாலே பெருக்கி அறுபத்தி ஏழு அதுல ஒன்பதைக்கூட்டி நாற்பத்தி மூணு கழிச்சால் மொத்தம் பதினேழு வராகன் ஆமா ஜி மொத்தம்17 வராகன் வருது.
நல்லது ஜி வெட்டுங்க17 வராகனை.
ஜி ஒரு யோசனை...
...? ? ? சொல்லுங்க... ?
இந்த 17 வராகன்ல ஒரு வராகனுக்கு நல்ல கலப்புக் கடையாப்பார்த்து சாப்பிடுவோமே... 16 வராகனோட வீட்டுக்கு போனீங்கன்னா, பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்வீங்க திருப்தியாக போகலாம் திருப்பதி ஏழுமலையானோட ஆசியும் இருக்கும்.
சரி நமக்குள்ள கணக்கு எதுக்கு ? வாங்க சாப்பிடுவோம்.
இருவரும் பக்கத்தில் உள்ள அன்னக்கிளி ஆப்பக்கடையில் வயிறு முட்ட ஒரு வராகனுக்கு சாப்பிட்டவுடன் பெரியார் பேரூந்தில் ஏற பகவான்ஜி நான்தான் டிக்கெட் எடுப்பேன் என்று நாலனா கொடுத்து 2 டிக்கெட் எடுத்தார்.
கில்லர்ஜி நகை பத்திரம் பிட்பாக்கெட் அடிச்சுருவாங்கே...
இதோ சட்டைப் பாக்கெட் முன்புறத்துல வச்சு இருக்கேன் நம்மகிட்டே எவனும் கைவரிசை காட்டமுடியாது நீங்க பணத்தை பத்திரமா வச்சுக்கங்க ஜி
நான் உள்ளூர்க்காரன் நமக்குத் தெரியாதா ? இதோ ஜீன்ஸ் பாக்கெட் பின்னேலே வச்சு இருக்கேன்.
இருவரும் பெரியார் பேரூந்து நிலையத்தில் இறங்கினர்.
வாங்க கில்லர்ஜி டீ சாப்பிட்டு அப்புறமா தேவகோட்டை பஸ்ஸுல ஏறுங்க.
கில்லர்ஜியின் முன்புற சட்டைப் பாக்கெட்டும், பகவான்ஜியின் பின்புற ஜீன்ஸ் பாக்கெட்டும் கிழிந்து தொங்கியது தெரியாமல் இருவரும் நடந்தனர் டீ கடையை நோக்கி...
இந்த மாற்றம் உலக நியதியாகும்
நண்பர் திரு. பகவான்ஜி அவர்களுக்கு நன்றி எதற்கு ? 

30 கருத்துகள்:

 1. ஹா.... ஹா.... ஹா... அடப்பாவமே....

  அதென்ன வராகன் கணக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பழையகால சம்பவம் நடந்த உண்மைதான்...

   நீக்கு
 2. எவன் அடிச்சுக்கிட்டுப் போனானோ?...
  என்ன பாடு படப்போறானோ!..

  சும்மாவா சொன்னாங்க - அந்தக் காலத்தில!...

  அரே சதாசிவோம்!.. அது கெடக்கட்டும் கெரகம்!..

  கில்லர்ஜிக்கு முன்னாலயும் பகவான்ஜிக்கு பின்னாலயும் - பாக்கெட்டு கிழிஞ்சு போயி - நகையும் வராகனும் காணாமப் போயிடுச்சாமா!..

  இத நாங்க வேற நம்பணுமா?..

  இதுக்குள்ள மூணாவதா ஒரு மூக்கன் வந்திருக்கான்!..

  அந்த வில்லங்கத்தை முதல்ல கண்டுபிடிங்கப்பா?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நடந்தவைகளைத்தான் சொன்னேன்

   நகை களவு போனதும் நாட்டாமை நந்திவர்மனிடம் கண்டுபிடிக்க மனு கொடுக்க பகவான்ஜியை அழைத்தேன் அவர் வர மறுத்து விட்டார் காரணம் என்னவோ தெரியவில்லை.

   பிறகு நான் மட்டும் எனது வராகன் களவு போனதற்கு மனு கொடுத்து வந்தேன்.

   நீக்கு
 3. எனக்கொண்ணும் நட்டமில்லே,கொடுத்தவனே(ளே) எடுத்துக் கொண்டாண்டி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கென்ன கீழே கிடந்தது எனக்கு ஒரு வராகனாவது ஆப்பம் சாப்பிட்டோம் மீதி 16 வராகன் வராமல் போச்சே...

   நீக்கு
 4. ஹாஹா.... போச்சா! :)

  கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி! பாடல் தான் எனக்கும் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்குத்தான் உழைச்ச காசுதான் தங்கும் என்றார்களோ....

   நீக்கு
 5. ஹா...ஹா...
  பின்னால கிழிஞ்சது வேணா தெரியாம இருக்கலாம்.
  ஆனால் முன்னால கிழிஞ்சதுமா..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னால் திரிஷா மாதிரி ஒரு பெண்ணு நின்று சிரித்தது இப்பத்தானே புரிகின்றது.

   நீக்கு
 6. இப்போதெல்லாம் முன் பாக்கெட் பின் பாக்கெட் கிழித்துக் கொள்வது ஸ்டைலாக்கும் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா
   இருப்பவன் கிழித்துப் போட்டால் ஃபாஷன்.
   இல்லாதவன் கிழிந்ததைப் போட்டால் கிறுக்கன்.

   நீக்கு
 7. புதுசு புதுசா கலக்கறீங்க...நன்று

  பதிலளிநீக்கு
 8. தங்கம் விலை ஏறியபின் போட்ட பதிவா ? ஏறும் முன் போட்ட பதிவா ?

  பதிலளிநீக்கு
 9. ஏறுமுன் பார்வதி போட்டது, ஏறியபின் யாரோ 'போட்டுட்டு' போயிட்டாங்க.
  முந்தைய பதிவு ''ராஜபார்வை'' படித்தால் விளங்கும்.

  பதிலளிநீக்கு
 10. நகைச்சுவை அனைத்தும் கலக்கல் சகோ.

  பதிலளிநீக்கு
 11. நாலணா கொடுத்து டிக்கட் எடுத்தீர்கள் என்றவுடனே தெரிந்துகொண்டேன். பழைய கதை. ஆனால் முடிவு ஏமாற்றமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே முடிவில் உழைக்காத காசு தங்காது என்பதும், முறையற்ற வியாபாரம் நிலைக்காது என்பதும்தானே கருத்து வருகைக்கு நன்றி.

   நீக்கு
 12. ஹ்ராஹ்ன்ஹஹ் கைக்கு எட்டியது, வாய்க்கும் எட்டியது ஆனா வீடு வரை எத்தவில்லை!!! வராகன் நாலணா எல்லாம் முந்தையக்காலம் புரிந்தது...

  முன்பக்கம் பின் பக்கம் கிழிந்தது எல்லாம் அம்மை அப்பனின் திருவிளையாடல்!...பார்வதிக்கு ஏற்கனவே அதைத் திரும்ப எப்படியாவது எடுத்துரணும் இல்லைனா கல்யான் ஜ்வல்லர்ஸ்ல புதுசா வேணும்னு சிவன் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தாங்க. சிவன் யோசிச்சார் இப்ப தங்கம் விக்கிற விலைல...பார்வதி போன ஒரு நெக்லஸோடயா வருவாங்க....அதனால கீழ போட்டதையே திரும்ப அடிச்சுருவோம்...இப்ப ஒரு கல்லுல ரெண்டு மாங்கா நெக்லஸ் வித் மணி....அதான் கதை...சரியா ஜி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா பார்வதியோட கூட்டணி பினாமி மாதிரியே சொல்றீங்களே.... ஏதும் சம்திங் ராங் ?

   நீக்கு
 13. ஆகா....ஆகா. பகவான்ஜீயின் பதிவின் உள் குத்து புிந்துவிட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே அதென்ன உள்குத்து ? புரியவில்லையே...

   நீக்கு
 14. ஹாஹாஹா, ஒருத்தரையும் விடறதில்லை போல! வராகன் கணக்கு என்னைச் சரித்திர காலத்துக்கே கொண்டு போயிடுச்சு! :)

  பதிலளிநீக்கு
 15. நகைச்சுவையை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நண்பரே

   நீக்கு