தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

கிஸ்ஜி ப்ரமோதா முஷாபி நமீந்ராயணா யாஹூஜி


ஏண்டி மல்லிகா, நம்ம ஊரு மடத்துக்கு வந்து இருக்காரே... ஸ்வாமிஜி கிஸ்ஜியானந்தா அவரைப்போயி பார்த்துட்டு வருவோமா ?
நீ வேற எம்புருஷன் எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படுவாரு, அவரைப்போயி பார்த்துக்கிட்டு... ய்யேன் உனக்கு இப்ப என்ன பிரச்சனை ?

பிரச்சனை ஒன்னுமில்லை..... ரெண்டும் பசங்களாப் போயிட்டாங்கே... நாளைக்கு கல்யாணம் முடிச்சிட்டா அவளுக பின்னாலே போயிடுவாங்கே... ஒரு பொம்பளைப் புள்ளை இருந்தா... அமயம் சமயத்துக்கு உதவும்னு பார்த்தேன்... வேறென்ன ?
அதுக்கு உன் புருஷன்கிட்டே சொல்ல வேண்டியதுதானே...

அந்த மூதேவி நான் சொன்னா எதத்தான் கேட்குது ஸ்வாமிஜிகிட்டே நம்ம குறையை சொன்னால் புருஷனுக்கு நல்ல புத்திமதியை கொடுப்பாரு.
உன் புருஷனே மொடாக் குடிகாரரு, அவரு சந்தேகப்படுவாரே...

அதத்தான் நானும் சொல்றேன் சந்தேகப்படுற புருஷனைக்கூட குணப்படுத்தி விடுவாராம் மேலத்தெரு மேகலாதான் சொன்னாள்.
அப்படியா ? இதுக்கு எம்புருஷன் ஒத்து வரமாட்டாரே... மஞ்சுளா...

அவரைக் கூட்டிக்கிட்டு போகணும்னு அவசியமில்லை ஸ்வாமிஜி கொடுக்கிற லேகியத்தை சோத்துல கலந்து கொடுத்துட்டாப் போதுமாம் அவ புருஷனுக்கு கொடுத்து இருக்காளாம்.
அதனாலதான் அவ புருஷன் மந்திரிச்சு விட்ட மாதிரி திரியிறானோ ?

பின்னே அவருட்ட ஏதோ சக்தி இருக்கு இல்லாமலா ஊருல எல்லோரும் போயி பார்க்கிறாங்க... எவ்வளவு கூட்டம்.
போகலாம்னு சொல்றியா ய்யேன் மஞ்சுளா அவரு பேசுறது ஏதும் புரியமாட்டுதுனு எல்லோரும் பேசிக்கிறாங்களே... ?

எப்படிப் புரியும் ? அவரு அரபியில மந்திரிக்கிறாராம் இங்கே இருக்கிற ஆலீம் மூஷாக்களுக்கே புரியலையாம் அப்படினா எவ்வளோவ் பெரிய மந்திரம்... அரபு நாட்டுல படிச்சவராம்... துபாய்ல ரொம்ப பேமஸாம் ஷேக்குமார்கள் வீட்டுக்கெல்லாம் இவருதான் பார்ப்பாராம்.
அவரு பூஜை செய்யணும் அப்படி, இப்படினு செலவு வச்சுட்டாருனா ?

செலவெல்லாம் அதிகம் இல்லையாம் கொடுக்கணும்னு நினைக்கிறதை அங்கே இருக்கிற உண்டியல்ல போட்டுட்டு போயிடணுமாம். நாம மஞ்சத்துணியில் கட்டி முடிஞ்சு போட்டு வந்துருவோம் யாருக்குத் தெரியப் போகுது நமக்கா ஏமாத்த தெரியாது ?
புருஷனுக்கு தெரியாமல்தான் போகணும் அதான் யோசிக்கிறேன்...

ஸ்வாமிஜி வெள்ளி, செவ்வாய் மட்டும் ராத்திரியில் ஸ்பெஷல் பூஜை செய்வாராம் நாம அன்னைக்குத்தான் எங்களால வரமுடியும்னு எடுத்துச் சொல்வோம் அதெல்லாம் கேட்டுக்கிருவாரு எனக்கு நம்பிக்கை இருக்கு நம்பியவங்களை கை விடமாட்டாராம்.
நல்லாச் சொன்னே போ !.. பகல்ல போறதே கஷ்டம்னு சொல்றேன்...

மல்லிகா இன்னும் ரெண்டு வாரத்துல வெள்ளிக்கிழமை சுடுகாட்டு காளிகோயில்ல சேவல் பூஜை நடக்கும், நம்ம ஆளுக ரெண்டுமே சேவல் கறி திங்கிறதுக்கு கண்டிப்பா பாட்டிலோட போகுங்க... காலையிலதான் தெளிஞ்சு வருவாங்க... நம்ம பசங்களை ஒரே வீட்ல தூங்கச் சொல்லிட்டு போயிட்டு வந்துறலாம். நாம இந்த வாரமே ஸ்வாமிஜியைப் பார்த்து விபரம் சொல்லுவோம் புருஷனுக்கு தெரியாமல் வர்றவங்களுக்கு ஸ்வாமிஜி அவங்க நிலைமை அறிஞ்சு வசதி பண்ணிக் கொடுப்பாராம் மேகலாதான் சொன்னா...
நல்லது கண்டிப்பா இவரைப் போயி பார்ப்போம் சாந்தமான முகம் இவரைப் பார்த்துக்கிட்டே இருந்தாலே கவலை எல்லாம் ம()றந்து போயிடும் போல...

சரி நாளைக்கு ஈவ்னிங் ஷோ போறோம்னு சொல்லிட்டு போவோம்.
மறுநாள் மாலை இருவரும் ஸ்வாமிஜி கிஸ்ஜியானந்தாவை பார்த்தார்கள் அவர் கண்களை மூடி தியானித்து ''கிஸ்ஜி ப்ரமோதா முஷாபி நமீந்ராயணா யாஹூஜி'' என்று மந்திரம் சொல்லி இருவர் நெற்றியிலும் K என்ற குறியிடும் போது பரவசப்பட்டார்கள் அதன் பிறகு அவர்கள் இருவரும் ஏதும் பேசவில்லை வரும் வெள்ளிக்கிழமை நிறைந்த பௌர்ணமி என்பதால் நீங்கள் இருவரும் மிகவும் அதிஷ்டசாலிகள் என்று ஆளுக்கொரு எலுமிச்சம்பழம் கொடுத்து அனுப்பினார் அத்துடன் ''அந்த'' வெள்ளிக்கிழமைக்காக காத்திருக்கத் தொடங்கினர்... மல்லிகாவும், மஞ்சுளாவும்.

தொடரும்....

 

சிவாதாமஸ்அலி-
இது சாந்தமான முகமா ?

38 கருத்துகள்:

  1. தொடர்கதை? தம வாக்கிட்டுவிட்டுக் கிளம்புகிறேன்.. வருவேன்.. திரும்பி வருவேன்.!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானும் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. ஹாஹா.... நல்ல ஐடியாவா இருக்கே... ஆரம்பிங்க! பக்த கோடி[கே]டிகள் உங்களைத் தேடி நிறையவே வருவாங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எமது பக்தைகளை இப்படி எல்லாம் இழிவு படுத்தி பேசாதீர்கள்.

      நீக்கு
  3. ‘அந்த’ வெள்ளிக்கிழமை என்ன நடந்தது என அறியக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே யாமறியேன் பராபரமே... காத்திருருப்போம்.

      நீக்கு
  4. இது நாம கொளுத்தி விட்ட ராக்கெட்டு..ல்ல!?..

    இருக்குற ஆனந்தா எல்லாம் போதாது..ன்னு
    புதுசா ஒரு ஆனந்தா கிளம்பிட்டானா?..

    நல்லது சொன்னா கேக்காத உலகம் -
    கிறுக்கானந்தா சுவாமிகள் சொன்னதும் உடனே கேக்குதே!..

    ஆச்சர்யந்தேங்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நீங்க கொளுத்'தீ'ப்போட்ட தீ''தான்.

      நீக்கு
  5. இதெல்லாம் கண்டிப்பா கெரகக் கோளாறுதான்..

    இல்லேன்னா - இப்படி ஒரு கிறுக்கன் கிஸ்மியானந்தா..கிட்ட போய் மாட்டுவாளுங்களா?..

    இதுல -- இவரைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே கவலையெல்லாம் ம(ப)றந்து போயிடும் போல... அப்படின்னு வசனம் வேற!?..

    அடக் கஷ்டமே!..

    கவலை பறக்கலேன்னாலும் பரவாயில்லை...

    வேற ஏதாவது பறந்து போயிடுச்சின்னா?...

    (காசு.. பணந்தான்!...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதானே... இந்த மூஞ்சியை பார்த்துக்கிட்டு இருந்தால் வேற ஜோலிக்கு போக வேண்டாமா ?

      நீக்கு
  6. ///கொடுக்கணும்னு நினைக்கறதை அங்கே இருக்கிற உண்டியல்ல போட்டுட்டு போயிடணுமாம். நாம மஞ்சத்துணியில் கட்டி முடிஞ்சு போட்டு வந்துருவோம். யாருக்குத் தெரியப்போகுது. நமக்கா ஏமாத்த தெரியாது..? ///

    கேடி சுவாமிஜி...கில்லாடி பக்தைகள்..!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாடிப்படி மாது நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி.
      உண்மை போலிச் சாமியார்களைவிட அவர்களையே ஏமாற்றும் பக்தர்கள் (?) கூட்டம் பெரியதுதான்.

      நீக்கு
  7. இதுக்கு அடி எடுத்துக்கொடுத்தவர் வேறயா?? கிரகம்,, ஆனாலும் சுவாமிஜி சொன்னால் சரியா தான் இருக்கும்.
    இதுக்கு தான் இந்த பக்தியே வேண்டாம் என்பது,,

    சகோ நீங்க தொடருங்க,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நான் சித்தன் போக்கு 7 O'clock என்றுதான் எழுதிக்கிட்டு இருந்தேன் குவைத் மன்னர்தான் இப்படி எழுத வச்சுட்டாரு...

      நீக்கு
  8. பக்தகேடிகளுக்கு சீ, கோடிகளுக்கு ஸ்வாமிஜி என்ன செய்யப் போறார் எப்படி அருள் புரியப் போகிறார்னு தெரிஞ்சுக்க ஆவலுடன் காத்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் பக்தைகளை கேலி செய்யாதீங்கோ... தெய்வ குற்றமாகி விடும்.

      நீக்கு
  9. பெயரில்லா8/01/2016 1:18 PM

    அடுத்தது என்ன?
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ யாருக்குத் தெரியும் எல்லாம் விதியின் வழி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    படித்துக்கொண்டே வரும் போது தொடரும் எனறு போட்டு விட்டீர்கள்.இந்த மாதிரி தொடர்ந்தவையெல்லாம் நல்லதாக முடிந்தாய்
    கேள்வி பட்டதில்லை.ம்,..இருந்தாலும் பார்ப்போம்! பாவம் மல்லிகா மஞ்சுளா கதி என்னவாகிறதென்று?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதை நினை நன்மை நடக்கும்
      தொண்டு செய் மேலான நிலை அடைவாய்
      -சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள்.

      வருகைக்கு நன்றி சகோ தொடருங்கள்.

      நீக்கு
  11. இருவர் நெற்றியிலும் K என்னும் குறி....? K என்றால் கில்லர்ஜியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா என்னை எதற்கு ஐயா இந்த வம்புல சேர்த்து விடுறீங்க ?

      நீக்கு
  12. ஆஹா! கே குறியீடு!!! கில்லர்ஜி இப்படிப் பேரை மாத்திக்கிட்டு சுவாமியாகிட்டாரா? நல்ல கூட்டம் மட்டுமில்ல துட்டும் பெருகும்.....ஆனா என்னவோ "அந்த" கொஞ்சம் உதைக்குதே...இந்த சுவாமிஜிகிட்ட ஏதோ விளையாட்டு இருக்குது....உஜால் குஜாலா?? !! ஹிஹிஹி தெரியாமயா போகப் போகுது...ஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எனக்கும், இந்த சாமியாருக்கும் பந்தம் இல்லை.

      நீக்கு
  13. இந்தக் கிஸ்ஜி யானந்தா பேரே சரியில்லை ஹிஹிஹிஹி ம்ம்ம் அந்தப் பொண்ணுங்க இவர்கிட்ட மாட்டுதா இல்லை இவரு விளக்குமாறால வாங்கப் போறாரானு பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  14. ரசனையான கதை.... தொடரும் என்ற கொக்கி இருக்கிறதே மீண்டும் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  15. வசதி அறிந்து சுவாமிஜி என்ன வசதி செய்யப் போறாரோ :)

    பதிலளிநீக்கு
  16. நேற்றிரவே வாசித்தேன்... நானும்'அந்த' நாளுக்காக காத்திருந்தேன்... இன்று வருமென... இன்னும் வரவில்லை என்பதால் கருத்திட்டு காத்திருக்கிறேன் அண்ணா...

    பதிலளிநீக்கு
  17. கே..என்றால் கேனச்சிறுக்கிகள் என்று அர்த்தம் கொள்ளலாமா...?சுவாமிஜீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா சரியாக சொன்னீர்கள் நண்பரே...

      நீக்கு
  18. இனி உலகில் பிறக்கும் குழந்தைகளுக்கு கில்லர்ஜி தான் பெயர் சூட்டவேண்டும் என்று அந்த கிஸ்ஜி அருள்புரிய வேண்டும். ஒவ்வொரு பதிவுக்கும் விதவிதமான பெயரை தருகிறீர்களே. அதைத்தான் சொல்கிறேன். இன்று மதுரையில் 1,200 குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அர்ஜெண்டாக 1,200 பெயர்களை அனுப்பி வையுங்கள். பெற்றவர்களுக்கு புண்ணியமாக போகும்.
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன நண்பரே பெயர் வைப்பதா கஷ்டம் தமிழில் 247 எழுத்துகள் இருக்கின்றதே.... கிலோவுக்கு 350 ரூபாய் வீதம் அனுப்பி வையுங்கள் எனது ஸ்விஸ் அக்கௌண்டுக்கு...

      நீக்கு