தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 30, 2016

லம்பா - பாக்கியம்

LAMBORGHINI 

LAMBORGHINI

இந்த வார்த்தையை அறியாதோர் உலகில் உண்டோ ? இதை சாமானியர்கள் வாங்க முடியாது (ஆனால் ? நான் நினைத்தால் இன்று இரவு 11.00 pm க்குமேல் வாங்கி அதிகாலை 05.30 am க்குள் விற்று விடுவேன் என்பது வேறு விடயம் புரிந்திருக்குமென நினைக்கிறேன்) நாம் வாங்க முடியவில்லை பெருங்கொண்ட நிறுவனங்களின் முதலாளிகள் வாங்குகிறார்கள் அதில் அவர்களுடைய உழைப்பும், முதலீடும் இருக்கிறது நியாயம். ஆனால் ? திரைப்பட நடிகர்களையும், அரசியல்வாதிகளையும், கிரிக்கெட் வீரர்(?)களையும் வாங்க வைப்பதற்க்கு வழிவகை செய்கிறோம் இவர்களின் உழைப்பு கடுமையானதா ? இவர்களின் பணமெல்லாம் வெட்டியாக ஸ்விஸ் வங்கிகளில் கிடந்து அந்த நாட்டுக்காரனுக்கு பிரயோசனப்படுகிறது வெளியுலகம் தெரியாமல் மறைந்து போனவைகளும் ஏராளம், தாராளம் இதையெல்லாம் நினைத்தால் எனக்கு முழங்கை வலிதான் வருகிறது சரி தொலையட்டும் அது ஒரு சாபக்கேடு. நம்ம விசயத்துக்கு வருவோம் இந்தக்காரை தொட்டுப்பார்க்காதவர்கள்கூட நிறையப்பேர் இருக்கிறார்கள் இதன் விலை விபரங்களும் கீழே கொடுத்து இருக்கிறேன் இப்படிப்பட்ட காரில் உட்கார்ந்து சிறிய அளவில் நகர்த்திப் பார்க்கும் பாக்கியம் சமீபத்தில் எமக்கு கிடைத்தது ஆம் நண்பர்களே... வாழ்வில் நாமும் ஒருநாள் இந்தக்கார் வாங்க வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு சத்தியமாக கிடையாது இன்று இதில் உட்காரும் சந்தர்ப்பத்தை இறைவன் கொடுத்திருக்கின்றானே இதுவே போதும் என்பது என் மனதிருப்தி ஒருக்கால் இதை நானும் வாங்கும் நிலை வந்தாலும்கூட வாங்க மாட்டேன் காரணம் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்வதைவிட ஓரளவு வாழ்ந்து கொண்டு இந்தப்பணத்தில் பல ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு வாழ்வளிக்கலாமே என்பது எமது திண்ணமான எண்ணம். ஏன் ? இப்பொழுது நீ செய்யக்கூடாதா ? எனக்கேட்கலாம் இன்றைய எனது தகுதிக்கு என்னால் முடிந்ததை செய்து 
கொண்டுதான் இருக்கிறேன்


இந்தக்கார் இந்த நாட்டின் முக்கியமானவர்களில் ஒருவருடையது இந்த சந்தர்ப்பத்தை எமக்கு கொடுத்த இனிய நண்பர் பரமக்குடி திரு. மு. சோலைராஜ் அவர்களுக்கு நன்றி

NEW DELHI — Italian luxury sports car maker Automobile Lamborghini Spa introduced the new Aventador LP 700-4 model in Indian, priced at 36.9 million rupees ($750,000) at showrooms in New Delhi, for which it has already received orders from 20 customers 
மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள 3 உருப்படிகளில் காருக்கு மட்டுமே விலை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் டெல்லி ஷோரூமில் கார் வாங்க விரும்புவோர் நமது நண்பர் வலைப்பதிவர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் பெயரைச் சொன்னால் டிஸ்கவுண்ட் உண்டு
இந்த ''தங்ககார்'' வாங்குவதற்கு சம்பாரிப்பதற்குள் நமது ''டங்குவார்'' அந்து போயிடுமோ ?

42 கருத்துகள்:

 1. நம்பரைப் பார்த்தாலே தெரியுது பெரிய இடத்துக்காருன்னு...

  ஓட்டிப் பார்த்தமைக்கு சந்தோஷம்...

  பகிர்வு நன்று...


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஷேக்குமார் கார்தான். (சே. குமார் கார் அல்ல)

   நீக்கு
 2. பெரிய இடத்து வாகணம் எல்லாம் வேண்டாம் கட்டவண்டியே மேல்))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே எல்லா மனிதரையுமே கடைசியில் எருமை வாகனன்தான் அழைத்துப் போகப்போறன்.

   நீக்கு
 3. மூன்று உருப்படியில் காரைவிட மற்றவை அழகு)))

  பதிலளிநீக்கு
 4. எத்தனை ஜென்ம ஆசையோ ?இந்த ஜென்மத்தில் ....:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜென்ம ஆசையெல்லாம் கிடையாது ஜி இதுவே போதுமடா சாமி என்றாகி விட்டது.

   நீக்கு
 5. ஷேக் கார் ரொம்ப ஷோக்கு.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மையே... உலக சந்தோஷங்களை எல்லாம் அனுபவிப்பதற்கே பிறந்தவர்கள் அரேபியரக்ள் என்று தோன்றும் இன்னும் நிறைய சொல்லலாம் பதிவில் தருகிறேன்.

   நீக்கு
 6. நீங்க தொட்டுப் பாத்துட்டீங்க. நாங்க இன்னும் கண்ணாலயே பாக்கலியே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயா காண்பதற்காகவே கொடுக்கப்பட்டதே இப்பதிவு.

   நீக்கு
 7. காருக்கு மட்டுமே.... குறும்பு!

  ஆடம்பரக் கார் அசத்துகிறது. விலை தள்ளாட வைக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே விளம்பரம் உண்மையாக இருக்க வேண்டும் பிறகு கணக்கு தவறாகி விடக்கூடாதே...

   நீக்கு
 8. ஏதோ - உங்களால நாங்களும் பார்த்துக் கொள்ளும்படியானது!..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நான் பெர்ற இன்பம் வலையுலகமும் பெறட்டும்.

   நீக்கு
 9. உண்மை சகோ கடைசி வரிகள் மனதைத் தொட்டன,, மனிதன் வாழ்வதின் அர்த்தம்,,

  சரி சரி கார் மட்டும் தானே,,

  கார் அழகா இருக்கு சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ வருகைக்கு நன்றி
   கார் விளம்பரத்தை நகைச்சுவைக்காக நான் இடவில்லை அதாவது கார் விளம்பத்துக்கு இந்தப்பெண்களை இப்படி நிறுத்த வேண்டிய அவசியமென்ன ?

   இதுதான் சமூகசீர்கேடு இதை பெண்கள்தான் முதலில் உணரவேண்டும் எல்லாவற்றுக்கும் பெண்களை போகப்பொருளாக நிறுத்தி வைக்கின்றது ஆணாதிக்கம்.

   பெண்கள் எவ்வளவோ உரிமைப்போராட்டம் நடத்துகின்றார்கள் அடிப்படையான இந்த விடயங்களிலிருந்து தொடங்கவேண்டும் போராட்டம் அதுதான் உண்மையான பெண் சுதந்திரம்.

   நீக்கு
 10. முதல்முறையாக இந்தக் காரைக் குறித்துக் கேள்விப் படுகிறேன். நமக்கெல்லாம் வாடகைக் கார் தான்! படத்தில் பார்த்துத் திருப்திப் பட்டுக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்கலாம் நாளை நடப்பதை யாரறிவார் ?

   நீக்கு
 11. என்னால் இந்த மகிழுந்து (கார்) ஓட்ட முடியும்
  ஆனால், சொந்தமாக வேண்ட வசதியில்லை
  ஏனென்றால், வருவாய் போதாது.
  ஆயினும்,
  தங்கள் பதிவைப் படித்ததும்
  கற்பனையில் பயணிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.

   நீக்கு
 12. காரும் அழகு. அதில் நீங்கள் அமர்ந்திருக்கும் தோரணையும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 13. காரும் அதில் நீங்கள் இருப்பதும் ஃபோட்டோ ட்ரிக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா புகைப்படம் எடுத்த விதம் சரியில்லாத சில புகைப்படங்களை பேக்ரவுண்டு கலர் கொடுத்தேன்.

   காரில் உள்ளே உட்காரந்து இருப்பது போல் இவ்வளவு இயற்கையாக செய்ய முடியாது ஐயா படங்கள் அனைத்துமே உண்மைதான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 14. இந்தக் காரைப் பற்றி அறிந்து நாங்கள் சும்மானாலும் பேசிக் கொண்டதுண்டு.னெட்டில் பார்த்தது உண்டு நேரில் பார்த்தது இல்லை நீங்கள் பார்த்து ஓட்டியும் பார்த்திருக்கிறீர்களே.....ஜென்ம சாபல்யம் கிட்டினு சொல்லுங்க!! சரி இது அப்படியே ஒரே ஒரு ரவுன்ட் அடிக்க கிடைக்குமானு கேட்டுச் சொல்லுங்க்....ஹிஹிஹி (கீதா:ஐயையோ ஜி எனக்கு ஆக்சிலரேட்டர், ப்ரெக், க்ளச் (ஆட்டோமேட்டிக்காதான் இருக்கும்...எல்லாம் எட்டுமானு பார்த்துச் சொல்லுங்க. இங்க சின்ன வண்டிக்கே சீட்ல ஒண்ணு பின்னாடி ஒண்ணுனு போட்டாதான் கால் எட்டுது...ஹிஹிஹி)
  சரி இன்னும் கொஞ்சம் காருக்குள்ள எப்படினு கொஞ்சம் சொல்லிருக்கலாம்ல..
  ஹும் விலைதான்..அதனாலென்ன அன்பு நண்பர்/சகோ கில்லர்ஜி இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை!!! எதுக்கும் வெங்கட்ஜி கிட்ட சொல்லி மோடிஜி கிட்டயும் சொல்லி வைக்கலாம்னு...எங்களுக்கும் ஜென்ம சாபல்யம் கிட்டண்டே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் வெங்கட்ஜி மூலம் மோடிஜியை பாருங்கள் காரை ஃப்ரீயாககூட வாங்கித்தருவார்.

   நீக்கு
 15. காரின் உங்கள் விளம்பரத்தை ரசித்தோம்..அதாங்க விலை. நல்லகாலம் கார் வாங்கினால்......அப்படினு இல்லை....ஹஹாஹ்

  பதிலளிநீக்கு
 16. லம்போர்கினி "லம்பா"தான் சைசிலும் விலையிலும்!!!ஹும்...

  பதிலளிநீக்கு
 17. சரி சரி எங்களுக்காகப் புக் செய்யும் போது நீலம் என்றால் நல்லது...அப்படி இல்லை என்றால் சாம்பல்நிறம் ஓகேயா...சிவப்பு வேண்டவே வேண்டாம் நெருப்பு!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை சிவப்பு கலர் கார் வாங்கினால் மாடு குத்தும்னு சொல்லாமல் போனீர்கள்.

   நீக்கு
 18. ஆஹா உட்கார்ந்து பார்த்துட்டீங்களா? கார் பற்றி படித்திருக்கிறேன்.

  தில்லி ஷோரூம் பற்றி படித்தேன். என் மூலம் டிஸ்கவுண்ட்! ஹாஹா... நல்ல கற்பனை! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி காரை வெளியிலிருந்து உள்ளே கொண்டு வந்து நிறுத்தினேன்

   நீக்கு
 19. கார் ஆடம்பரத்தின் அடையாளம்.
  தங்க கார் எதுக்கு வீடு போதும் ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தங்குவதற்கு வீடு போதும் தங்ககார் எதற்கு ?

   நீக்கு
 20. இந்தக் காரை நேரில் கூட நான் பார்த்தது இல்லை நண்பரே....

  பதிலளிநீக்கு
 21. விரைவில் ஒரு லம்பார்க்கினி உரிமையாளராக இறைவன் அருள்வானாக..
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இது நடந்தால் பலரும் பலன் பெறுவார்கள் நிச்சயமாக நான் அல்ல.

   நீக்கு
 22. மனிதனின் ஆசைக்கு அளவேது. கார் கண்டுபிடித்தது ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்துக்கு விரைவாகச் செல்ல. வெறும்ன போனா போரடிக்கும்னு, ரேடியோ கேட்கும் facility, டேப், சிடின்னு அது ஒருபக்கம் முன்னேற்றம். வெக்கையா இருக்குன்னு ஏசி. இன்னும் வேகம் இன்னும் வேகம்னு, எஞ்சின் கெப்பாசிட்டி அதிகரிப்பு. சுலப டிரைவுக்கு, டயரில் முன்னேற்றம். அப்புறம் பிராண்டு நேம். அடையாரில், கையேந்தி பவனுக்குப் பக்கத்தில் ஒருவர் (பெயர் வேண்டாம்) பி.எம்.டபிள்யூவை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள கடைக்கோ, டாக்டர் இல்லத்துக்கோ செல்வதைப் பார்த்தேன். இடத்துகுச் சம்பந்தமேயில்லாத கார். 'நம்ம ஊரில், என்னைக்கேட்டால் improvement செய்யப்பட்ட ஆட்டோவே உபயோகமானது. (ஏசி, கண்ணாடிக் கதவு. உடனே நானோவுக்கு ஆதரவு தராதீர்கள்.. தந்தாலும் தப்பில்லை) இப்படிச் செலவழித்து வாங்கும் காரை ஓட்டி மகிழ்பவர் அனேகமாக டிரைவராகத்தான் இருக்கும். இதுக்கும், சதாம் உசேன் தங்க டாய்லட் பாட் வைத்துக்கொண்டதற்கும் எனக்கு வித்யாசம் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகான விரிவாக்கமான கருத்து.
   உண்மையே இவர்களெல்லாம் புளிசேப்பக்காரர்கள் இவர்களுக்கு இளம்பசிக்காரனின் வேதனை தெரியாது காரணம் இவர்களுக்கு இறைவன் அந்த அனுபவத்தை உணர்த்தவே இல்லை.

   மனிதனின் மனம் மாறுபட்ட எண்ணங்கள் உடையது அமிஞ்சிக்கரைக் காரியானாலும், ஐஸ்வர்யாராயானாலும் இறைவன் இருவரையும் பெண்ணாகத்தான் படைத்தான் மனிதன்தான் வித்தியாசமாக நினைக்கின்றான்.

   உண்மையில் எனக்கு ஆடம்பர வாழ்க்கை மீது ஆசை கிடையாது காரணம் இருக்கும் சாதாரண வாழ்க்கையையே உதறி விட்டவன் நானும் ஜின்ஸ், போட்ட சன்யாசிதான்.
   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு