தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 26, 2016

காணிக்கை

தெய்வம் இருப்பது எங்கே ?

மனிதர்கள் பல தெய்வங்களை வகுத்து வைத்து கோவில்களை கட்டினார்கள் திருப்பதியில் இருக்கும் வெங்கடாசலபதியும் தெய்வம்தான், பழனியில் இருக்கும் முருகனும் தெய்வம்தான், சபரிமலையில் இருக்கும் ஐயப்பனும் தெய்வம்தான், முட்டுச்சந்தில் உட்கார வைத்த விநாயகரும் தெய்வம்தான் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் நிறுத்த முடியாது திருச்சியில் கட்டிய குஷ்பாம்பிகாள் கோயிலில் இருந்தது தெய்வமா ? 

(சமூகசேவகி, காங்கிரஸ் தியாகி திருமதி. குஷ்புவுக்கு கட்டியது பிறகு இடித்து விட்டார்கள்) 

இவர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரியான சக்தி இருக்கின்றதா ? அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கின்றதா ? ஏனெனில் திருப்பதிக்கு போனால் உண்டியலில் பெரிய அளவில் காணிக்கை இடுகின்றோம் ஏழையாக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த அளவில் அதாவது இதுவரை சென்ற மற்ற கோயிலுக்கு காணிக்கை செலுத்தியதைவிட கண்டிப்பாக கூடுதல்தான் திருப்பதியில் உண்டியலில் தங்கம், வெள்ளி என்று காணிக்கை செலுத்துபவர்கள் இதோ சென்னை கோடம்பாக்கம் ஆட்டோ நிறுத்தம் அருகில் இருக்கும் இந்த மரத்தடி தெய்வத்திடம் உள்ள உண்டியலில் வெறும் சில்லரை காசுகளை மட்டுமே இடுகின்றோமே ஏன் ?
சென்னை புலவர் திரு. நா. இராமாநுசம் ஐயா வீட்டின் அருகில் மரத்தடிசாமி

இந்த தெய்வங்களால் நமக்கு கூடுதல் பலனை கொடுக்க முடியாதா ? காணிக்கை என்பதே லஞ்சம்தானே லஞ்சம் கொடுக்காமல் நாம் தெய்வத்திடம் பலன் பெறமுடியாதா ? தேவகோட்டையில் வெள்ளையன் ஊரணி காய்கறி மார்க்கெட் அருகில் இரண்டு கோயில்கள் அடுத்தடுத்து இருக்கின்றன இரண்டுமே பெருமாள் கோயில்கள் பெயரில் ஒரு வித்தியாசமும் உண்டு ஒன்று பணக்கார பெருமாள் மற்றொன்று ஏழைப் பெருமாள் இதில் நாம் யாரை வணங்கினால் பலன் கிடைக்கும் நான் அந்த வழியில் போகும் போதெல்லாம் சற்று நேரம் நின்று யார் வணங்குகின்றார்கள் ? என்று பார்ப்பேன் இருவரையுமே பலரும் வணங்குவார்கள் நான் அவர்களை பார்ப்பேன் காரணம் யாரை வணங்கினால் நமக்கு உடனடி பலன் கிடைக்கும் என்று யாரிடமாவது கேட்போமா ? ‘’சட்டீர்’’ என்று விழுந்து விட்டால் ? இதை நினைத்து நானும் இன்றுவரை கேட்காமல் காலத்தை ஓட்டுகின்றேன். 

சமீபத்தில் நானும், எனது அன்பு மகளும் இந்தக் கோயிலின் வழியே நடந்து போகும் பொழுது எனது மகளுக்கு தேவகோட்டை கோயிலைப்பற்றி தெரியாததால் நான் விபரம் சொன்னேன் உடன் நான் சாமி கும்பிட்டு விட்டு வருகிறேன் என்று முதலில் ஏழைப் பெருமாள் கோயிலுக்கு சென்றது நானும் சரியென வெளியில் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தேன் மகள் வந்தவுடன் பணக்காரப் பெருமாளை கும்பிடவில்லையா ? என்று கேட்டேன் எல்லாம் கல்லில் வடித்த ஒரே தெய்வம்தானே ? நான் பதில் ஏதும் சொல்லாமல் வந்து விட்டேன்.

சரி அவர்கள் தெய்வங்கள் அதில் நுழைந்து கணிப்பது நமது சிற்றறிவுக்கு எட்டாது விட்டு விடுவோம் இதோ கீழே பாருங்கள்
ஐயகோ ஸ்வாமி ஜி
பிரேமானந்தா ஸ்வாமி ஜி
ஸ்டைல் மன்னன் வாசுதேவானந் ஸ்வாமி ஜி
இது நம்ம ஆளு ஸ்வாமி ஜி
கிளியோ பாரட் ஸ்வாமி ஜி
கில்ஜியானந்தா ஸ்வாமி ஜி

ஹஸ்பெண்ட் அன்ட் வைஃப் சென்டர் ஸ்வாமி ஜி
போஸ்கோ ரிஷி குமார ஸ்வாமி ஜி
சங்கராச்சாரியார் ஸ்வாமி ஜி
ஹேண்ட்ஸ்-அப் ஸ்வாமிஜிகள்
லேடிஸ் அன்ட் ஜென்டில் மேன் ஸ்வாமி ஜி
பல்லக்கு ஸ்வாமி ஜி
ராமன் ஸ்வாமி ஜி
ராம நவமி ஸ்வாமி ஜி
குத்து வில'க்கு ஸ்வாமி ஜி
ஹி இஸ் லேடி ஸ்வாமி ஜி
ஸ்ரீ ஸ்வாமி ஜி
ராமச்சந்திர புராமுத் ஸ்வாமி ஜி
ஞான பூதா சதா ஸ்வாமி ஜி
பக்தி முக்தி சக்தி

இவர்கள் அனைவருமே சராசரி மனிதர்களைப் போல சோத்தை தின்று விட்டு மலத்தை கழிப்பவர்களே இவர்களையும் தெய்வத்தைப் போலவே வணங்கி காலில் விழுகின்றார்களே இவர்களுக்கும் தெய்வத்தைப் போல் சக்தி இருக்கின்றதா ? 

இந்தக் குழப்பமான கேள்விகளுக்கு விடை தெரியாமல் பெயரிலேயே தெய்வத்தை வைத்திருக்கும் இனிய நண்பர் திரு. பகவான்ஜி அவர்களிடமும், பக்திப்பழம் திரு. வலிப்போக்கன் அவர்களிடமும் கேட்கலாமா ? என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன் என்ன செய்வது ? நீங்களே சொல்லுங்கள் நட்பூக்களே...

44 கருத்துகள்:

 1. இவர்களைப் போன்ற மனிதர்களை தெய்வங்களாய் வணங்கும் மக்களின் மன நிலை மாற வேண்டும் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் அழகிய கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 2. கேள்விகள் எல்லாமே யோசிக்க வைக்கும் கேள்விகள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நமது வேலையே அதுதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 3. இவ்வளவு பேரையும் எங்கிருந்து ஐயா பிடித்தீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே இந்தியாவில் இன்னும் பல சாமியார்கள் இருக்கின்றார்கள் பதிவு நீள்கிறதே என்ற காரணத்தால் குறைத்து விட்டேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 4. உங்கள் கருத்தெல்லாம் சிந்திக்க வைக்கிறது. ஆனால் உங்கள் குழந்தையைப் போல் அல்லாமல் இத்தனை சாமியார்களையும், அதிலும் குறிப்பாக நித்யாவையும் உங்கள் லிஸ்டில் வைத்திருக்கிறீர்களே... ரொம்ப பக்திதான். அவங்களால கவரப்பட்டு உங்களுக்கும் அவர்கள் லிஸ்டில் இடம் கொடுத்திருக்கிறீர்கள். உண்டியல் வைக்காமல் இருந்தால் சரிதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே என்னையும் அடையாளம் கண்டு கொண்டீர்களே.... ஹாஹாஹா

   நீக்கு
 5. ஒண்ணுக்கு இருப்பதையும் அசிங்கம் பண்ணுவதையும் தடுக்க சிலைகளை வைச்சா ,அதில் போய் சக்தியைத் தேடுகிறீர்களே !
  கோவிலில் உள்ள சாமி , தன்னைக் காப்பாற்றிக்கவே முடியாதவர் என்பதால்தானே பூட்டே போடுகிறார்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் பெரியார் சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் ஜி

   நீக்கு
 6. கில்ஜியானந்தா ஆனபின்பு இந்த மா3 சந்தேகங்கள் வரக்கூடாது. உங்களுக்கே எல்லா பதிலும் தெரியும். பின் ஏன் இந்த கேள்வி?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை ஐயா மேலும் தெரிந்து கொள்ளவே கேள்விகள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. அன்பின் ஜி..

  தங்கள் தளத்திற்கு வந்தாலே சிந்தனைக்கு விருந்து தான்!..

  ஆனாலும், இந்த இனிய காலைப் பொழுதில் (5.40 Am)இத்தனை ஆசாமிகளையும் பார்த்ததில் கடுப்பாகி விட்டது..

  மறுவேளை சோத்துக்கு வழியில்லாத பரதேசி பிச்சைக்கு வந்தா பழைய கஞ்சிய ஊத்துறவன் தான் -

  வேடதாரிகளுக்குக்கு கால் (!?) கழுவி விடறதுக்கு ஆயிரக் கணக்கில கொடுத்துட்டு மிதி வாங்கிகிட்டு வர்றான்....

  பணக்கார மச்சான் (பொண்டாட்டியோட ஒன்னு விட்ட தம்பி) வீட்டுக்குப் போனா வில்லிபுத்தூர் பால்கோவா!..

  கூடப் பொறந்த தங்கச்சி ரெண்டு புள்ளைங்களோட வீட்டுக்கு வந்தா பொண்டாட்டிக்கு வயித்துவலி.. வாந்திபேதி!..

  இதே புத்திதான் கோயில்களிலும்..

  இந்த சூழ்நிலையில இருக்கிறவன் தானே கோயிலுக்குப் போறான்!..

  அதெல்லாம் சரி.. நம்ம கிஸ்ஸியானந்தா ஸ்வாமிகளை ஏன் போடலை?..

  அப்புறம் தத்தியோட ஜோடியப் பிரிச்ச பாவம் சும்மா விடாது!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா வாங்க ஜி அருமையான உவமை சொன்னீர்கள் உண்மையே...

   கிஸ்ஸியானந்தாவும், கில்ஜியானந்தாவும் சகலைகள் ஆகவே ஒருவரை மட்டுமே போட்டேன் ஜி

   நீக்கு
 8. ஒரு மனிதன் தனக்கு எந்த சப்போர்ட்டும் இல்லை ,கண்ணுக்குத் தெரிந்தவரை தனது பிரச்னைக்குத் தீர்வு தெரியவில்லை என்னும்போது எதையும் நம்பத்
  தயாராகிவிடுகிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சரியாக சொன்னீர்கள் ஆதரவற்றவனுக்கு ஒரு வடிகாலாக அவர்கள் தெரிகின்றார்கள் இதுவே உண்மை.

   நீக்கு
 9. கேள்விகள் கேட்டால் மட்டும் போதாது ஜி. அது குறித்துசிந்திக்கவும் வேண்டும் விடை கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நான் பெறும்பாலான பதிவுகள் கேள்வி-பதில் போலவே அமைக்கிறேன் இவைகளுக்கு பதில் கிடைத்தால் அதிஷ்டமே.... வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 10. இம்புட்டு உம்மாச்சிங்களா?

  பதிலளிநீக்கு
 11. இவர்களில் கில்ஜியானந்தா சுவாமிஜி எங்கே இருக்கிறார் என்பதை தெரிவியுங்களேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவர் ஏதோ பிரச்சினையில் உகாண்டா போய் விட்டதாக செவிவழிச்செய்தி.

   நீக்கு
 12. இத்தனைபேர்களில் அந்த கில்ஜியானந்தா(??) சுவாமிஜியின் முகத்தில்தான் மெய்ஞ்ஞான தெய்வீக ஒளி கொஞ்சம் அளவிற்கு அதிகமாக வீசுகிறது.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே லண்டனில் இருந்தாலும் இவ்வகையான தெய்வீக விடயங்களை மிகச்சரியாக கணித்து வைத்து இருக்கின்றீர்கள்
   வாழ்த்துகள் கில்ஜியே நமஹ....

   நீக்கு
 13. சிந்திக்க வைக்கும் பதிவு சகோ.

  பதிலளிநீக்கு
 14. ji nehru once said
  YOU CANNOT TALK OF GOD TO A STARVING PERSON
  YOU MUST GIVE HIM FOOD AT FIRST....SO IT ALL DEPENDS ON YOUR ATTITUDE....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஏற்கனவே திரு. நேரு சொன்னதாக சொன்னீர்கள் தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. தன் மேல் நம்பிக்கையை இழக்கும் மனிதன் போய் விழும் இடம் தான் இந்த சாமிகள்....இதில் ஒரு சில ஃபேமஸ் கார்ப்பரேட் ஆட்களை விட்டுவிட்டீர்கள். சங்கிலிக் கடைகள் - அதாங்க செயின் ஷாப்ஸ் விட்டுவிட்டீர்கள்.. சரி போனால் போகிறது. சாமியாராகிட்டீங்க. இங்க ஃபோட்டோ போட்டுருக்கிறீர்கள் இதனை ஏதேனும் பொதுவெளியில் போட்டீர்கள் என்றால் உங்கள் கல்லா நிரம்பும்!!! ஆசிரமம் கட்ட வேண்டிவரும்....சாமர்த்த்யம் இல்லை என்றால் கம்பியும் எண்ண வேண்டிவரும்!!!!ஹிஹிஹி

  உங்கள் கேள்விகள் சரிதான். ஆனால்

  இதெல்லாம் மூளை கெட்ட மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இதற்கும் சாமிக்கும் ஆன்மீகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தன்நம்பிக்கை அற்றவர்கள் சரியான வார்த்தை
   நல்ல யோசனை கொடுத்தீர்கள் சரி கடைசியில் உள்ளே போவதற்கும் சாத்தியம் உண்டு என்று சொல்கின்றீர்களே.....
   முடிவில் சொனது அற்புதமான விடயமே அருமை வாழ்த்துகள்

   நீக்கு
 16. படத்தில் உள்ள இதுகள் சாமிகள் இல்லை நண்பரே..ஆசாமிகள் --கல் நண்பரே....

  பதிலளிநீக்கு
 17. இந்த உலகம் எதே நோக்கி செல்கிறது என்று கணிக்க முடிவில்லை ஐயா.சிந்திக்க வைத்தது இப்பதிவு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மையே சரியாக சொன்னீர்கள்

   நீக்கு
 18. நீங்களும் சாமி,,,,யார் ஆகிட்டிங்களா ஆ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா அது யாரோ.... செய்த இடைச்செறுகள் ஐயா

   நீக்கு
 19. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நிலையில் உள்ள மக்கள் ஏதேனும் தீர்வு கிடைக்காதா என்று சாமியார்களிடம் படை எடுக்கிறார்கள்.சில நேரங்களில் தானாகவே தீர்ந்து விடும் ஆனால் பிரச்சனை அவர்கள் மூலம்தான் தீர்ந்தது என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் சில சாமியார்கள்.எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நிலையில் உள்ள மக்கள் ஏதேனும் தீர்வு கிடைக்காதா என்று சாமியார்களிடம் படை எடுக்கிறார்கள்.சில நேரங்களில் தானாகவே தீர்ந்து விடும் ஆனால் பிரச்சனை அவர்கள் மூலம்தான் தீர்ந்தது என்ற நம்பிக்கை ஏற்பட்டு விடுகிறது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் சில சாமியார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிகச்சரியாக அலசி கருத்துரை சொன்னீர்கள் நன்றி

   நீக்கு
 20. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 21. இம்மூடர்களுக்கு மனித வழிபாட்டில் அபார நம்பிக்கை!! போலியை வணங்குவதே இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது.

  சரி நண்பரே இதெல்லாம் இருக்கட்டும், கில்லர்ஜியானந்தாவின் ஆசிரமத் திறப்பு விழா எப்பொழுது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான விடயத்தை சொன்னீர்கள்
   விரைவில் அழைப்பிதழ் வரும் துபாய் ப்ராஞ்சிலிருந்து...

   நீக்கு