தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 22, 2016

யார் செயல் ?

மனிதனின் பிறப்பிடத்தையும், இறப்பிடத்தையும் இறைவன் நிர்ணயிக்கின்றான். இடைப்பட்ட தமது இருப்பிடத்தை அந்தந்த மனிதன் நிர்ணயித்துக் கொள்கிறான். அதனால்தான் உலகம் முழுவதும் மனிதன் வேலை தேடி பறந்து செல்கின்றான். மனைவி அமைவதையும் இறைவன் செயல் என்று சொல்வது சரியா ? நிச்சயமாக இது தவறென்றே நான் கருதுகின்றேன் நாம் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறோம் ? ஒருவன் எந்த நாடோ, எந்த மாநிலமோ, எந்த மொழியோ, எந்த மதமோ, அந்தந்த மதத்தில், அதே ஜாதியில், சொந்தத்தில், விருப்பப்பட்ட பெண்ணை ஆணும். ஆணை, பெண்ணும் மணக்கிறோம். பெரும்பான்மையாக இந்த வட்டத்தை விட்டு நாம் வெளியே வருவதில்லை ஆகவே இது எப்படி இறைவன் செயலாகும் ? 

ஏனெனில் ந்தியாவில் பிறந்த ராஜீவ் காந்தியும், த்தாலியில் பிறந்த சோனியாவும், ங்கிலாந்தில் படிக்கும்போது காதல் வயப்பட்டு தம்பதிகளானார்கள். அதைப் போலவே எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்தால் ? இது இறைவனின் செயல் எனசொல்லலாம். இந்தச் செயலுக்குகூட காரணம் என்னைக் கேட்டால் ? இறைவனைவிட இந்திய மக்களே காரணமென சொல்வேன் ஏனெனில், அன்னை இந்திரா காந்திக்கு ஓட்டுப் போட்டு அவரை நாம் பிரதமர் ஆக்கியதால்தான் பாதுகாப்பு கருதியும், கௌரவத்திற்காகவும், பொருளாதார உயர்வாலும் அவர் அங்கு படிக்க முடிந்தது. ஒருவேளை அவர்கள் நம்மைப் போல், சாதாரண குடும்பமாக இருந்திருந்தால் ? இங்கிலாந்தில் படித்திருக்க முடியுமா ? சோனியா அவர்களை சந்தித்துதான் இருக்க முடியுமா ? 

எல்லோருமே, நாடு, மாநிலம், மொழி, மதம், ஜாதி, சொந்தம் மறந்து திருமணம் செய்தால் ? அது நிச்சயமாக இறைவன் செயல்தான். இன்னும் சொல்லப் போனால் சிலநேரங்களில் திரைப்பட நடிகைகளை பெருங்கொண்ட தொழில் அதிபர்கள் மட்டுமே மணக்க முடிகிறது ஒரு சாதாரண கூலித்தொழிலாளி மணக்க முடிவதில்லையே ஏன் ? அப்படி ஏதாவது ஒரு திருமணம் நடந்திருந்தால் இது இறைவன் செயல் எனலாம் இந்த மாதிரியான தி()ருமணங்களின் பின்னணி என்ன ? பணம், பணம், பணமே. இது திருமணங்கள் அல்ல ! கருமங்கள், என்பது சாதாரண மனிதனான நமக்கே தெரியும் போது இறைவனுக்குத் தெரியாதா ? 

சிலநேரங்களில் தாலி கட்டும் நேரத்தில்கூட மாப்பிள்ளை மாறி விடுகிறது இதையும் இறைவன் செயல் என்கிறார்கள். இதற்கு உண்மையான காரணம் என்ன ? வரதட்சிணை மனசாட்சி இல்லாத மாப்பிள்ளையை பெற்றவர்கள் இரண்டு பவுன் நகை குறைகிறது என்பதற்காக கல்யாணத்தையே நிறுத்தி விடுகிறார்கள். இதற்கு ஆண்மையில்லாத மாப்பிள்ளையும் உடந்தை. மனிதன் தவறு செய்து விட்டு இறைவனின் மீது பழி போடுவது ஏன் ?

ஆகவே, மனைவி அமைவது இறைவன் செயல் என்பது ஐயத்துக்குறிய செயலாக தோன்றுகிறது.

52 கருத்துகள்:

 1. ம்ம்ம்ம்,யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் நாம் தான் தேர்ந்தெடுத்தாலும் இன்னாரைத் தேர்ந்தெடுக்கணும் என்று வருவது தான் இறைவன் செயல் என்கிறார்களோ! ஏனெனில் பல சமயங்களிலும் வேண்டாம் என்று விட்ட வரன்களே பல பெண்களுக்கும், ஆண்களுக்கும் அமைந்திருக்கிறது. அதோடு ஒருத்தன் மனைவியை இன்னொருவன் கட்ட முடியாது என்றும் சொல்வார்கள். ஆகவே கடைசி நிமிடத்தில் நின்று போய்க் கல்யாணம் வேறொருவரோடு நடக்கையில் இறைவன் போட்ட முடிச்சை மனிதன் மாற்ற நினைத்தான். முடியலைனு நினைச்சுக்கலாம் இல்லையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கின்றது

   நீக்கு
  2. ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் கட்ட முடியாது. இது எல்லோரும் சொல்லுவதே. அது போன்று இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று...என்றும் கவிஞன் எழுதிவைத்திருக்கிறான்... சரி எனக்கு அடிக்கடி தோன்றும் ஒரு சந்தேகம். திருமணம் முறியும் போது ஒருவனின் மனைவியாக இருந்தவளைத்தானே இன்னொருவன் கட்டுகிறான். அதுவும் அந்த ஆணிற்கு முதல் மணமாகக் கூட...இன்னொருவனின் மனைவிதானே அந்தப் பெண் அதுவரை. அப்படி என்றால் முதல் திருமணத்தில் அந்தப் பெண்ணிற்கு ஏன் அந்தக் கணவன் அமைந்தான். இரண்டாவதாக வந்த கணவன் தான் அவள் கணவன் என்றால் ஏன் அது முதலிலேயெ நடக்கவில்லை? இது ஆணுக்கும் பொருந்தும் தானே? இது குதர்க்கமாகக் கேட்கவில்லை. இது போன்ற பல வாசகங்கள் நம்மிடையே உலவி வருவதால் தோன்றுவதே.

   கீதா

   நீக்கு
  3. To, கீதா
   உங்களது கேள்வியும் சிந்திக்க வைக்கின்றது

   நீக்கு
 2. இப்போதைக்கு இது. மிச்சம் மத்தவங்க கருத்தைப் பார்த்துட்டு வரேன்!:)

  பதிலளிநீக்கு
 3. எல்லாம் விதி பாஸ், விதி. எது நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விதி என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு நண்பரே

   நீக்கு
 4. எந்தெந்த தேசம் சுற்றினாலும்,எங்கே தான் சென்று கல்வி கற்றாலும்,எத்தனை பணம் இருந்தாலும் ஒருமனிதன் பிறக்கும் போதே அவனுக்குரிய துணையும் இன்னார் தான் என நிச்சயித்துக்கொண்டே தான் பிறக்கின்றானாம்.

  எங்கள் பைபிளில் இருக்கும் கருத்துப்படி ஒரு ஆணுக்கு மனைவி என துணையாக வருபவள் அவனின் விலா எலும்புகளிலிருந்தே படைக்கப்படுகின்றாள் எனும் போது அவனுக்காத துணை உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்த துணை பணம்,பதவி,இனம் மொழி தாண்டி அவனைச்சேரும். ராஜிவ்காந்திக்கு சோனியாவும் அப்படித்தான்!

  சிலமனிதர்கள் தம் சிந்த சுய புத்தியினால் இழுப்புண்டு தம் வாழ்க்கையை பாழாக்கவதும் தம் செயல்களினால் தமக்கான தெரிவை தவறாக்குவதும் உண்டு.

  திருமண வயதுக்கு தயாரான ஆணும்,பெண்ணும் முழுமையான கடவுள் நம்பிக்கையோடு தமக்கான துணையை காட்டும்படி இறைவனிடம் வேண்டுவதும்,அதற்கென காத்திருப்பதும் அவர்களுக்கு நன்மையையேயன்றி தீமையைத்தராது.

  நாம் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது இறைவன் முன் குறித்தபடியே நடக்கின்றது என நம்பிக்கையோடிருந்தால் அது அப்படித்தான். நம்பிக்கை இல்லாமல் தான் தான், தன்னால் தான் என நினைக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் இறுதியில் எப்படி ஆகின்றார்கள் என்பதை நான் இங்கே சொல்லத்தேவையில்லை தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி
   விரிவாக அலசி இருக்கின்றீர்கள் முடிவில் சொன்ன வார்த்தைகள் நன்று தொடர்வதற்க்கு நன்றி

   நீக்கு
  2. நிஷா அவர்களின் கருத்தில் இரண்டாவதற்கு மேலே எனது கேள்வி அதே....

   கீதா

   நீக்கு
 5. மனைவி அமைவது இறைவன் செயல் என்பது ஐயத்துக்குரியது என்ற தங்களின் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். திருமணம் நின்றுபோனது இரண்டு பவுன் நகைக்காக என்றாலும், இறைவன் அந்த மணமகளுக்கு அந்த மணமகன் கணவன் ஆகக்கூடாது என்பதால் தான் அந்த நகைப் பிரச்சினையை உண்டாக்கியிருக்கிறார் என எடுத்துக்கொள்ளலாமே? அதுபோலத்தான் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு திருமதி சோனியா காந்தி தான் மனைவியாக வேண்டும் என்பதற்காக அவருக்கு இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பை உண்டாக்கியிருக்கலாமே?
  ‘இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் சொல்வதும் அதைத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நல்ல எடுத்துக்காட்டு தங்களது கருத்தை ஏற்கிறேன்.
   நடிகைகளை பெருங்கொண்ட தொழில் அதிபர்கள் மட்டுமே மணக்க முடிகிறதே அந்த இடத்தில்தான் ஐயம் ஏற்படுகின்றது விரிவான விளக்கவுரைக்கு நன்றி

   நீக்கு
 6. ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்ற சொல்லாடல் இருக்கிறது நண்பரே..!

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிகின்றது கவிஞரே எல்லாம் கடந்தே ஆகவேண்டும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. திருமணம் மட்டுமல்ல ,எந்த செயலுமே அவன் செயல் அல்ல :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பம்பரம் சுழல்வதற்கு சாட்டை வேண்டுமே ஜி

   நீக்கு
  2. சாட்டை இருக்கு ,பம்பரம் இருக்கு ..தானாக சுழலுமா :)

   நீக்கு
  3. அதை சுழற்றுவதுதான் அவா!

   நீக்கு
 8. A NOVEL THINKING.....
  YOUR INTERESTING ARTICLE NEED TO BE ANALYSED JI

  பதிலளிநீக்கு
 9. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பாடல் இருக்கிறது. அது இறைவன் கையில் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். யோசிக்க வைக்கும் பதிவு தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எனது மாறுபட்ட சிந்தனை ஐயப்பட வைத்தது மற்றபடி இறைவன் நம்மை ஆட்டுவிக்கின்றான் என்பது உண்மையே,,,,

   நீக்கு
 10. முடிவெடுக்க தயக்கம் அல்லது சந்தேகம் ஏற்படும்போது ஜோசியத்தை நாடுவதும், எதிர்பாராத செயல்கள் நடக்கும்போது விதி என்று சமாதானம் கொள்வதும், மனைவி என்பவள் இறைவன் கொடுத்த வரம் என்பதுவும் , தன்னைத் தானே திருப்தி கொள்ள உதவும் சாக்கு போக்குகள்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா மனிதன் மனிதனின் ஆறுதலுக்காகத்தானே அனைத்தையும் உருவாக்கி வைத்து இருக்கின்றான் அது காலப்பொழுதில் வியாபாரமாகி விட்டது,
   சோசியம், கோயில் எல்லாமே... வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 11. என்னதான் மாய்ந்து மாய்ந்து பெண்ணைக் காதலித்தாலும் அந்தப் பெண்ணை திருமணம் செய்யமுடியாமல் போகும்போது, என்னதான் இரு குடும்பங்கள் தங்கள் தகுதிக்கேற்ப திருமணம் பேசி முடித்தாலும் அதுவும் சில சமயம் முடியாமல் போகும்போது, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றே தோன்றுகிறது.
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஏற்க கூடியதே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 12. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து பேச வரவில்லை... அது அவர் அவர் விருப்பம்... விதியின் படியே எல்லாம் நடக்கிறது எனலாம்... நின்ற திருமணத்தில் எதிர்பாராத விதமாக மாப்பிள்ளை அமைவது எல்லாம் விதியின் செயலே....

  இங்கு சொல்லியிருக்கும் காங்கிரஸ் குடும்ப திருமணம் கூட விதியால் நிகழ்ந்ததாகத்தான் இருக்கும்...

  நல்ல பகிர்வு அண்ணா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நானும் கடவுனைக் குறித்து விவாதிக்க வரவில்லை வருகைக்கு நன்றி

   நீக்கு

 13. இன்னாருக்கு இன்னாரென்று
  எழுதிவைச்சான் இறைவன் - இதில்
  எப்படி வாழ்வு அமையுமென
  காலத்தையும் அமைவையும்
  அவனே படைத்தான் - அதற்கேற்ப
  தள்ளாடியபடி நகருகிறது - என்
  வாழ்வும் கூட....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாங்கள் மட்டுமல்ல அனைவரும் இவ்வழிதானே...

   நீக்கு
 14. மனைவி அமைவதெல்லாம் மனிதனின் செயல்தான் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்தை பதிந்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 15. எனக்குத் தெரிந்து எங்கள் உறவினப் பெண்களில் சிலருக்கும், பையர்கள் சிலருக்கும் ஜாதகம் பார்க்கையிலேயே ஜோசியர்கள் இவங்க ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்துக்க மாட்டாங்க. அவங்க விருப்பப்படி தான் கல்யாணம் அமையும் என்று சொல்லி இருந்தாங்க. ஆனாலும் நாங்க வரன் பார்ப்பதை நிறுத்தவில்லை. மும்முரமாகப் பார்க்க ஆரம்பித்துப் பெண், பிள்ளை பார்த்து நிச்சயம்னு வருகையில் அவங்க தங்கள் மனதில் இருப்பதைச் சொல்லிப் பின்னர் அந்தக் கல்யாணங்கள் தான் நடந்திருக்கின்றன. அதை மீறி நல்ல வார்த்தைகள் சொல்லி மனதை மாற்றி விட்டோம் என்று நம்பி ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்ததில் அந்தப் பெண் ஆறே மாதத்தில் விவாகரத்துப் பெற்று வந்துவிட்டார். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   01. தாங்கள் சொன்னதில் ஜோசியம் உண்மை என நிலை நிறுக்கிக்கொண்டது.
   02. காதலர்கள் பிரிக்கப்பட்டனர்.
   03. குடும்பம் அவமானப்படுவது காப்பாற்றப்பட்டது.
   04. பெரியவர்கள் தாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டனர்.
   05. காதல் தோற்று விக்கப்பட்டது.

   ஆனால் முடிவில் விவாகரத்து வந்து விட்டது இதற்கு காரணம் பழைய காதல்தான்.
   ஆகமொத்தம் எல்லாம் விதி அல்லவா !
   மீள் வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
  2. ஆம், விதியை வெல்ல முடியாது என்பதே என் கருத்து. அதைத் தான் ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் கட்ட முடியாது என்கிறார்கள் போலும்! :)

   நீக்கு
  3. மிள் வருகைக்கு மீண்டும் நன்றி

   நீக்கு
 16. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்!..
  இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 17. அருமையான விவாதத்தைத் தொடங்கிவிட்டு அனைவரையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவருக்கு விவாதம் பல நல்ல கருத்துகளை தரும் என்று நம்புவோம் தங்களது கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 18. நமக்கு விளங்காத செயல்களுக்கு விதி என்றும் ஊழ்வினை என்றும் கூறி சமாதானம் அடைவதே இயல்பாகி விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி

   நீக்கு
 19. தாங்கள் சொல்லும் அந்த இறைவன் எனக்கு ஒரு பெண்ணைக்கூட காட்டவில்லையே தலைவா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் தரகர் மூலமாகத்தான் வருவார் நண்பரே

   நீக்கு
 20. பெயரில்லா10/23/2016 6:52 PM

  அந்தந்த நேரத்து மன நெருடல்கள் நீண்ட
  அலசல்களாகிறது.
  மிக்க நன்று சகோதரா.

  பதிலளிநீக்கு
 21. விதிதான் ஜி! எல்லாமே ஒரு கணக்குப்படிதான் நடக்கிறது.

  கீதா: ஜி எனக்குப் பல கேள்விகளுக்கு இதுவரை கன்வின்சிங்காகப் பதில் கிடைக்கவில்லை. விதி என்று சொல்வதைச் சில சமயங்களில் ஏற்க வேண்டிய நிலைக்கு அதாவது நம் வாழ்க்கையை பிரச்சனைகள் இல்லாமல் நம்மை நாமே தேற்றிக் கொள்ள, சமாதானப்படுத்திக் கொள்ள, தத்துவார்த்தமாக என்று சொல்லலாமோ ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை திரு. ஜியெம்பி ஐயாவும் இதையே வலியுறுத்தி இருக்கின்றார்

   நீக்கு
  2. அப்படிச் சொல்ல முடியாது. பல திருமணங்கள் கட்டாயமாய்ச் செய்யப்பட்டாலும் பின்னால் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் உண்டு! எல்லோருக்குமே அவரவர் மனப்படியோ இச்சைப்படியோ வாழ்க்கை அமைவதில்லை. ஆக இதை நம் விதி என்றே சொல்ல வேண்டும்.

   நீக்கு
  3. ஒரு சிலர் பல திருமணங்கள் செய்து கொள்வது விதி அல்ல. அவரவர் மனப்போக்கின்படி செய்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்! ஆனால் சில வருடங்கள் வாழ்ந்த பின்னர் பிரிந்து வேறொருத்தரைத் திருமணம் செய்வது என்பது தனக்கென நியமிக்கப்பட்டவனை அப்போது தான் கண்டதாகக் கொள்ளலாமோ? தெரியலை! ஆனால் விவாகரத்துக்கள் இப்போது அதிகமாகக் காணப்பட்டாலும் அந்தக் காலங்களில் பிடிக்காத மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஆண்கள் உண்டு. அதே போல் பால்ய விதவைகள் பலரும் மறுமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாமும் விதி என்று தான் சொல்ல வேண்டும்! இல்லையா!

   நீக்கு
  4. உண்மைதான் சகோ பல திருமணங்கள் செய்து கொள்வது கணக்கில் வராதவையே அது தனிப்பட்டவரின் சட்டம் எனறுகூடசொல்லலாம்தான் மீள் வருகைககு நன்றி

   நீக்கு