தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 29, 2016

கொடுத்துட்டு போங்க, அத்தான்

மச்சான் நான் தினமும் பார்க்கிறேன் இவள் என்னையே பார்க்கிறாள்டா...
அட மூதேவி இவ பேரு கண்ணம்மாள் மாறு கண் எவன் பார்த்தாலும் அவனைப் பார்க்கிற மாதிரித்தான் இருக்கும்.

மாப்ளே அதோ போறாளே.. அவ எங்கிட்டே ஏதோ சொல்லணும்னு நினைக்கிறாடா நானே நேரடியாகவே கேட்றவா.... ?
அட முண்டம் அவள் பிறவியிலேயே ஊமை உங்கிட்டே என்னத்தை சொல்லப் போறா ?

மாமு நான் இவள் பின்னால் மறைமுகமா பாடிக்கிட்டே என் காதலைச் சொல்றேன் திரும்பிக்கூட பார்க்க மாட்றாடா..
அட முடுமை இவளுக்கு சுத்தமாக காது கேட்காது இதுல நீ பின்னாலே வேற பாடுனியா ? வெளங்கிடும்.

மச்சி இந்த வீட்ல ஒரு ஸூப்பர் ஃபிகருடா நான் தினம் இந்த வழியாக போகும்போது ஜன்னல் வழியாக என்னைப் பார்த்து சிரிப்பாள் ப்ளைன் கிஸ் விட்டுப் பார்த்தேன் சிரிக்கிறாள் ஆனால், ஒருமுறைகூட பிடித்து எனக்கு ப்ளைன் கிஸ் விட மாட்றேளேடா....
அட முடுதாறு இவளுக்கு சின்ன வயசுலயே ஆக்ஸிடெண்டல இரண்டு கையும் போயிருச்சு பின்னே ப்ளைன் கிஸ் உனக்கு எப்படி ?

பாஸூ இந்த வீட்டு பால்கனியில் ஒருத்தி சேரில் உட்கார்ந்து சிரிக்கிறாள், டாடா காமிக்கிறாள் கீழே வா பேசுவோம்னு சைகையில் சொன்னால் வரமாட்றாடா..
அட கூதரை இவள் பிறவியிலயே இரண்டு காலும் ஊனம் பின்னே எப்படி கீழே வந்து உன்னிடம் பேசுவாள் ?

தல இந்த வீட்ல ஒருத்திக்கிட்டே லவ் லட்டர் கொடுத்தேன்டா அதுக்கு எதிர்த்த டெலிபோன் பூத் கடைகாரர்ட்ட கொடுத்துட்டு போங்க அத்தான் அப்படின்னு சொன்னாடா அத்தான்னு சொல்றாளே சம்மதம் போல அப்படின்னு போய் கொடுத்தேன் வாங்கி படிச்சு பார்த்தவன் எதுவுமே கேட்காமல் மாத்துல விட்டு நச்சு எடுத்துட்டான்டா இவளுக்கும், அவனுக்கும் என்னடா சம்பந்தம் ?
அட கூமுட்டை அவன்தான்டா இவளோட புருசன்.

எப்படிடா.... இவ்வளவு விபரமும் தெரிஞ்சு வச்சு இருக்கே ?
அட காமுட்டை நீ செஞ்சதைப் பூராம் நானும் ஒரு தடவை செய்து அனுபவப்’’பட்டு’’ வந்தவன்டா.

சிவாதாமஸ்அலி-
பூத் கடைகார அத்தான்’’னு சொன்னதை இவனைச் சொன்னதாக நினைச்சுட்டானோ ?
Chivas Regal சிவசம்போ-
ஒருவேளை இவனும் செவிடோ ?
சாம்பசிவம்-
இந்த திக்குவாய்க்காரன் தேடிப்போனது பூராம் இப்படித்தானா ?
இனிய தீபாவளி வாழ்த்துகள்.

34 கருத்துகள்:

 1. ஹா...ஹா.... வாசிச்சி சிரிக்கிட்டே வந்து கடைசி வரி படிச்சப்போ இந்த கூமுட்டையும் ஹா..ஹான்னு சிரிச்சிருகச்சு...

  அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சிரித்து மகிழந்தமைக்கு நன்றி

   நீக்கு
 2. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ypvnpubs.com
  seebooks4u.blogspot.com
  yarlsoft.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு
 3. கொடுத்துட்டு போங்க அத்தான் என்பதை கெடுத்துட்டு போங்க என்று படித்துவிட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே துணைக்கால் முக்கியம் பல பேருடைய வாழ்வைக் கெடுத்துரும் உடனே கால் போடுங்க..

   நீக்கு
 4. ஹா.... ஹா.... ஹா.. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

  தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 5. ஹாஹா....

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 6. தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 7. எல்லோருமே கூமுட்டைங்கதான் ,சொல்லப் போனா காமுட்டைங்கதானா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி அப்படித்தானே அவனது தோஸ்த் சொல்லி இருக்கான் தங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 8. தங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் சகோ

   நீக்கு
 9. தீபாவளி அன்று சிரிக்க வைத்து விட்டீர்கள் .தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சிரிக்கத்தானே தீபாவளி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 10. பதில்கள்
  1. நன்றி நண்பரே தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 11. >>> கொடுத்துட்டு போங்க அத்தான்!..<<<

  அதான் எல்லாத்தையும் இங்கேயே கொடுத்தாச்சே..
  வெறுங்கையோட வேற எங்கிட்டு போறது!?..

  அப்போ!?..

  இங்கேயே டேரா போட்டுற வேண்டியது தான்!..

  *** *** ***

  அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்துரைக்கு நன்றி தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

   நீக்கு
 12. நண்பருக்கு தீபாவளி வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பர் தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  தீபாவளியன்று சிரிப்பு வெடிகள்.ரசித்துப் படித்தேன்.நன்றி.

  தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இரசித்தமைக்கு நன்றி இனிய தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 14. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க நாலு கொடுமை ஆடிககிட்டு வந்த மாதிரியில...இ இருக்கு..சிவ சம்போ...சிவ சம்போ....சிவ சம்போ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதேதான் நண்பரே இவன் தொட்டதெல்லாம் இப்படியா இருக்கணும் ?

   நீக்கு
 15. ஆழம் தெரியாமல் காலை விட்டு அனுபவித்த நண்பர் இருந்திருக்காவிட்டால் விடைகள் தெரியாமலேயே போய் இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நல்லவேளை நண்பன் காப்பாற்றி விட்டான்.

   நீக்கு
 16. இதற்குத்தான் அனுபவம் உள்ளவரிடம் யோசனை கேட்கவேண்டும் போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே எல்லோருக்குமே அணுவத்தை வைத்துதான் வாழ்க்கை கடக்கின்றது வருகைக்கு நன்றி

   நீக்கு
 17. முன்பு இதைப்போல ஒரு பதிவு பார்த்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே புதிய பதிவுதான் வார்த்தைகள் வந்து இருக்கலாம் வருகைக்கு நன்றி

   நீக்கு