வணக்கம்
நட்பூக்களே... மேலே இருக்கும்
புகைப்படத்தை பார்த்தீர்களா ? அரசியல் கட்சியின் பேரணிக்கு வாழ்க
கோஷம் போடுவதற்கு வடநாட்டு இளைஞர்கள். இவர்களுக்கு கட்சியின் கொள்கை ஏதாவது
தெரியுமா ? அல்லது
இக்கட்சியின் தலைவர் யாரென்று தெரியுமா ? இன்றைக்கு சம்பளம் கிடைத்தால்
போதும் வாழ்க கோஷம், பிறகு மறுதினம் எதிர்க்கட்சி அழைத்தால் அதே நபருக்கு ஒழிக
கோஷம்
நாட்டின் வருங்கால தூண்கள் என்று
சொல்லும் இளைஞர்களை இந்த அரசு எப்படி வைத்து இருக்கிறது ? இந்த
இழிநிலைக்கு பணத்துக்காக வாக்களித்த மக்கள்தானே காரணம் ? இப்படி
வாழ்க்கையை சீரழித்துக் கொண்ட இளைஞர் கூட்டம் வடநாட்டில் மட்டுமல்ல, நமது தமிழ்
நாட்டிலும்தான். இக்கூட்டத்தை நடத்தும் கட்சிகள் கொஞ்சமும் வெட்கமின்றி இந்த
இளைஞர்களை அழைத்து வந்து இருக்கிறது என்றால் மக்களைப்பற்றி இவர்களின் எண்ணம் என்ன ?
இந்த மக்கள் எதையும் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது நமது அரசியல்வாதிகளிடம் பரிபூரணமாக நிறைந்து விட்டது. எத்தனை விதமாக பொய் பேசுகின்றார்கள், தேர்தலில் வாக்குறுதி கொடுக்கின்றார்கள், பிறகு நான்கு வருடம் ஆனாலும் இதோ செய்கிறோம் என்று வாய் கூசாமல் சொல்கின்றார்கள். இதற்கு ஆமோதித்து பேசுவதற்கு இவர்களின் அடிவருடிகள் கூட்டம், இளைஞர்களை அழைத்து வருவதற்கு ஒரு கூட்டம்.
இந்த மாதிரி நாட்டை ஆள வேண்டிய இளைஞர் கூட்ட ராஜாக்கள் எத்தனை பேர் ? இன்னும் எத்தனை காலம்தாம் நாம் இவைகளை பார்த்துக் கொண்டு கடந்து செல்வது ? அரசியல்வாதிகளிடமும், திரைப்படக் கூத்தாடன்களிடமும், மட்டைப்பந்து மந்தையாளர்களிடமும் மதி மயங்கி வீழ்ந்து கிடந்தால் நாளை நமது சந்ததிகளின் நிலை ? நாம் விழித்தெழ வேண்டும் என்பது நமக்காக அல்ல நாளைய மக்களுக்காக...
கில்லர்ஜி துபாய்
இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள் –
https://www.facebook.com/reel/3490151094589844
சிவாதாமஸ்அலி-
இதற்கு மக்கள்தான் வெட்கப்படணும். அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை, விபச்சார ஊடகங்கள் இவர்களிடமும் மைக்கை நீட்டுகிறதே... அவர்களுக்கும் வெட்கமில்லை.
வாங்க கில்லர்ஜி... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு.
பதிலளிநீக்குநம்ம ஊர்ல நூறு நாள் வேலைத்திட்டம், அரசியல் கட்சிகளின் மாநாடு போன்றவைகளுக்கு ஏராளமான மக்கள் வருவாங்க. அதுல வடக்கன்ஸ் என்ன தெற்கன்ஸ் என்ன.. எல்லாப் பயலுவளுக்கும் வேலை செய்யாமல் 300 ரூபாய், இலவச உணவு, பிராந்தி. லக் இருந்தால் மாநாட்டுச் சேர் மற்றும் வாழை மரங்கள், தண்ணீர் கேன் போன்றவைகளை அடித்துக்கொண்டு செல்லலாம். எல்லாக் கட்சிகளுக்கும் இதுதான் நிலைமை.
வாங்க.. நீண்ட நாட்களுக்குப் பின் பதிவு. நிலைமை சாதகமாகி விட்டதா?
பதிலளிநீக்குஒவ்வொரு கட்சியின் பார்வையும் 2026 மே ஜூன் மாதத்தில் இருக்கின்றன. குட்டிக்கரணம் போடுகின்றன. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், எது பெரிய ஊழல் கட்சியோ, அதற்குதான் வாக்களிப்பது என்று!
பதிலளிநீக்குஜெயலலிதா மகளா? மேக்கப் ரொம்ப சுமார்.
பதிலளிநீக்குஆமாம், ஜெயலலிதாவுக்கு அப்படி குழந்தை பிறந்திருந்தால் பெண் குழந்தைதான் பிறந்திருக்க வேண்டுமா? ஏன் அப்படியே கிளெய்ம் செய்கிறார்கள்!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? நீண்ட நாட்கள் தங்களிடமிருந்து பதிவுகள் ஏதும் வரவில்லையே என நினைத்தேன். இன்று உங்கள் பதிவு கண்டதும் மகிழ்ச்சியடைந்தேன்.
மக்களின் மனநிலையை நன்றாக விவரித்திருக்கிறீர்கள். மக்கள்
உணர்ந்து திருந்தினால், நல்லது. அந்தக் காலமும் விரைவில் வரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கில்லர்ஜி. தங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி.....
பதிலளிநீக்குஅரசியல் மிக மிக மோசமாகத் தான் இருக்கிறது. எல்லாம் ஏமாற்றுமயம்!!!!
காணொளியும் கண்டேன். எத்தனை பேர் இப்படி கிளம்பி வரப்போறாங்க.... :(