பதிவின் முதல் மற்றும்
இரண்டாவது தொடர்ச்சிக்கு சொடுக்குக...
ஐயா-2 http://killergee.blogspot.com/2019/07/2.html?m=1
உட்காருய்யா... இந்த சாமி
பேரென்ன ?
பிள்ளையாரு தாத்தா...
அதுதான்ய்யா இப்போ நீ
பிள்ளையாரை சாட்சியாக வச்சு தாத்தா தலையிலே சத்தியம் செய்யணும் செய்வியா ?
செய்யிறேன் தாத்தா
இப்படி நீ சத்தியம்
செய்தா எப்பவுமே சத்தியம் மீறக்கூடாது சரியா ?
சரி தாத்தா.
இந்த சத்தியத்தை நீ
உன்னோட அம்மா அப்பா கிட்டேயும் சொல்லக்கூடாது.
ம்.
அதாவது நீ படிச்சு
வளர்ந்து பெரிய ஆளா வந்ததும் வேலைக்கு போயி நிறைய சம்பளம் வாங்குவியா ?
ஆமா..
அப்போ உனக்கு கல்யாணம்
முடிஞ்சு உன்னை மாதிரியே உனக்கும் சின்ன மகன் வருவான்....
ம்..
அப்போ, உன்னோட அம்மாவும்,
அப்பாவும், என்னை மாதிரி கிழவனா வந்துடுவாங்க அப்போ நீ அவுங்களை இந்த மாதிரி
இடத்துல கொண்டு வந்து விடாமல் உன்கூடவே வச்சுக் கடைசிவரை பார்த்துக்கிறணும்
செய்வியா ?
அப்போ நீ எங்கே போவே
தாத்தா... ?
நான்... வந்து...
சாமிக்கிட்டே போயிடுவேன்.
அப்போ திரும்பி
வரமாட்டியா ?
நான்தான் உனக்கு குட்டி
மகனா வந்துடுவேனே... புரியுதா ?
ம்ம்.. இப்போ புரியுது.
நான் உனக்கு குட்டி மகனா
பிறந்ததும் என்னோட பேரை உன் மகனுக்கு வச்சுடு உன்னோட பேருகூட நான்தான் வச்சேன்
எங்க அப்பா பேரு அருணாசலம் அதைத்தான் எல்லோரும் அருண் அப்படினு கூப்பிடுறாங்க..
சரி தாத்தா உன் பேரையே
வைக்கிறேன், அப்போ டாடி எனக்கும் மரம் வேணும் காத்து வேணும்னு சொன்னா ?
அது வந்து... அவனுக்கு
காத்து புடிக்காது ஃபேன் காத்துதான் அவனுக்கு புடிக்கும் அதுனாலே நீ
வீட்டுக்குள்ளேயே வச்சுக்கிறணும்.
சரி தாத்தா.
எங்கே என் தலையிலே
கைவச்சு பிள்ளையாரப்பா, நான் கடைசி வரைக்கும் என்னோட அம்மாவையும், அப்பாவையும்
வீட்டுல வச்சு சோறு போடுவேன் இது எங்க தாத்தா மேல சத்தியம் அப்படினு
நினைச்சுக்கிட்டு என் தலைமேல கை வச்சு பிள்ளையாரு கிட்டே மனசுக்குள்ளேயே சொல்லு.
அருண் கையை தாத்தாவின்
தலையில் வைத்து கண்களை மூடி தாத்தா சொன்னது போல நினைத்துக் கொண்டான்.
செஞ்சிட்டேன் தாத்தா.
ம்.. இப்பத்தான் நீ
நல்லபுள்ள... நீ இந்த சத்தியத்தை கடைசிவரை மீறக்கூடாது சரியா ?
மீறினால் என்னாகும் ?
மீறினால் இந்த தாத்தாவோட
தலை வெடிச்சிரும்.
அய்யய்யோ...
வெடிக்கூடாதுனா... நீ
இதுபோல நடக்கணும்.
சரி தாத்தா நான் எங்க
அம்மா அப்பாவை கண்டிப்பா பார்த்துக்கிருவேன்.
ரொம்ப சந்தோஷம்ய்யா...
இதை நீ யாருக்கிட்டேயும் சொல்லக் கூடாது... அதோ உன் அப்பா வந்துட்டான் போயிட்டு
அடுத்த மாசமும் தாத்தாவை பார்க்க வரணும் நல்லா படிக்கணும்.
சரி தாத்தா.
அருண் தாத்தாவுக்கு
முத்தம் கொடுத்து விட்டு டாடா காண்பித்துக் கொண்டே... போக தாத்தாவும் டாடா
காண்பித்துக் கொண்டே.... பிள்ளையாரின் காலடியில் உட்கார்ந்திருந்தார்...
தோளில் கை பட்டு
திடுக்கிட்டு திரும்பினான் அருண்.
ஏப்பா, பிள்ளையாரை
பார்த்துக்கிட்டே நிற்கிறே... முகம் வாடி இருக்கு.. ?.
பின்னால் சுந்தரம் – அர்ச்சனா தம்பதிகள் பேரன் வெங்கட்டுடன் நின்று கொண்டிருந்தார்கள் அருண் எப்படி
தனது அம்மா அப்பாவிடம் சொல்ல முடியும் ? முப்பது வருடங்களுக்கு முன்பு தனது தாத்தா வெங்கடாசலம் தன்னிடம் இதே
பிள்ளையாரின் முன்னிலையில் தனது தலையில் கை வைத்து சத்தியம் வாங்கியதை அவர்தான்
வெளியில் சொல்லக்கூடாது என்றும் சத்தியம் வாங்கி விட்டாரே...
ஒண்ணுமில்லைமா...
எங்களைப்பத்தி
கவலைப்படாதப்பா நாங்க நல்லாத்தான் இருக்கோம் இப்படி மாசத்துக்கு ஒரு தடவை பேரனை
கொண்டு வந்து காண்பிச்சாப் போதும்.
வெளியிலிருந்து பென்ஸின்
ஹாரன் சவுண்ட் கேட்டது அருணின் மனைவி ப்ரீத்தி கொடுத்திருந்த அரை மணி நேரம்
கால்ஷீட் முடிந்து விட்டதை உணர்ந்த சுந்தரம் – அர்ச்சனா தம்பதிகள் பேரன்
வெங்கட்டுக்கு அவசரம் அவசரமாக முத்தம் கொடுத்தார்கள் அந்த முத்தங்களில் உதடுகளின்
எச்சில்களைவிட விழிகளின் எச்சில்களே கூடுதலாக வெங்கட்டின் முகத்தை கழுவியது.
இவனின் தந்தையாவது அவரது
தந்தைக்கு காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணிவரை கால்ஷீட் கொடுத்தார் ஆனால் இவனோ
தனது தந்தைக்கு அரை மணி நேரம்தான் கொடுக்க முடிந்தது நாளை வெங்கட் எப்படி செய்வானோ ?
இதற்கெல்லாம் காரணம் யார் ? விதியா ?
இல்லை இவ்வளவு
பணமிருந்தும் தனது மகனுக்கு கோடீஸ்வரரின் மகளைத்தான் மணமுடிக்க வேண்டும் என்று
தனது தகுதிக்கு மீறி பேராசைப்பட்ட தனது பெற்றோர்களா ? அதன் விளைவுதானே இந்த பிள்ளையாரின் மரத்தடி.
அருண் பிள்ளையாரின்
முகத்தைப் பார்க்க அவர் இவனைப் பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் இருந்தது மீண்டும்
அழுத்தமான பென்ஸின் ஹாரன் ஒலியில் ப்ரீத்தியின் கோபம் புரிந்த அருண் வெங்கட்டை
கையில் பிடித்துக் கொண்டு வேகமாக வெளியில் நிற்கும் காரை நோக்கி நடக்க, வெங்கட் டாட்டா
காண்பித்துக் கொண்டே போய் காரில் ஏற டிரைவிங் ஸீட்டிலிருந்த ப்ரீத்தியால்...
சீறிப்பறக்கும் பென்ஸுக்கு சுந்தரம் – அர்ச்சனா தம்பதிகள் டாட்டா காண்பித்துக்
கொண்டு நின்றார்கள்.
நட்பூக்களே...
இந்த இழிவான வாழ்க்கையின் தொடக்கத்திற்கு காரணம் ஆண்களா... பெண்களா ?
கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി
కిల్లర్ జి Killergee كـــيللرجــــي
திருமதி. வல்லிசிம்ஹன் அம்மா அவர்கள் கதை கேட்டதற்காக...
உறவுகள் தொடர்கதை என்பது
பொய்யாகி விடுகதை என்பது மெய்யாகி விடுமோ ? சுபம் இட எமக்கு மனமில்லை ஆகவே மு-டி-ந்-த-து.
இந்த இறுதிப்பகுதியின் தீர்வை பலரும் சரியாக கணித்து விட்டனர்.
பதிலளிநீக்குஒன்றேயொன்றை தவிர அதாவது இது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நினைவோட்டங்கள் என்பதை....
இருப்பினும் இதற்கு தங்கள் அனைவரின் விரிவான கருத்துரையை அல்ல! பதிலை எதிர் பார்க்கிறேன் - கில்லர்ஜி
கில்லர்ஜி இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஉங்கள் கேள்விக்கு...பெரும்பாலும் எல்லோரும் பெண்களையே காரணம் சொல்வார்கள். அதை நானும் சொன்னாலும் அதாவது பெண்களின் வளர்ப்பு என்று சொன்னாலும் அவர்கள் வீட்டவர்கள் டாமினேட் செய்வது என்று சொன்னாலும் இதில் ஒரு ஆணின் பங்கும் உள்ளது அதாவது கணவனின் பங்கும் உள்ளது என்பேன். பெண்களை மட்டும் சொல்வதை என் மனம் ஏற்பதில்லை இது என் தாழ்மையான கருத்து.
ஏனென்றால் முதுகெலும்பு உள்ள எந்த ஆணும் தன் மனைவியின் தவறான எண்ணங்களுக்கு உடந்தையாக இருக்கமாட்டான். அப்படி என்றால் ஆண்களுக்கு முதுகெலும்பே இல்லையா? சுயசிந்தனை இல்லையா?
இதில் ஆணின் வளர்ப்பும் சூழலும் அடங்கும். இதைப் பலரும் ஏற்க மாட்டார்களாக இருக்கலாம் ஏன் நீங்களுமே கூட. ஆனால் இதுதான் என் தாழ்மையான கருத்து.
பெண்களின் வளர்ப்பு முறையும் ஆண்களின் வளர்ப்பு முறையும் இதில் அடங்கும்.
நிறைய சொல்லல்லாம் இதற்கு. பல விஷயங்கள் இதில் அடங்கியிருக்கிறது. என் பதில் இதுதான் இருவருமே காரணம்.
கீதா
அழகான, விரிவான பதில் சற்றே காரம் என்று சொல்ல இயலாதபடி உரைக்கும்படி இருக்கிறது.
நீக்குவாழ்க்கைச்சூழல் ஒவ்வொருவருக்கும் ஒருநிலை இருப்பினும் ஆண்-பெண் இருவருக்குமே நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதில்லை என்பதைவிட வளர்க்கப்படுவதில்லை என்றே சொல்ல இயல்கிறது.
காரவடைக்கு மாவு அரைத்துக்கொண்டு இனிப்பு போண்டாவை சுடவதற்கு நினைக்கிறோம் நாம் அனைவருமே...
மாற்றம் இன்றிலிருந்து நம்மில் தொடங்குவோம்...
நாளை நமது கொள்ளுப் பெயரன், பெயர்த்திகளாவது முதியோர் இல்லம் செல்வதை தடுப்பதற்கு...
எதிர்பார்த்ததுதான். இனி இதுஒரு தொடர்கதை அந்தக் குடும்பத்தில்!
பதிலளிநீக்குசுருக்கமாய் கவிதை போன்ற பதில் அருமை ஜி
நீக்குபிள்ளையார் மேல் சத்தியம் வாங்காமல் உனக்கு வரப்போகும் மனைவி மேல் சத்தியம் செய் என்று வாங்கி விட்டால் ஒருவராவது பயப்பட.............................லாம்!
பதிலளிநீக்குஹா... ஹா... இறைவன் மீது மட்டுமல்ல மனைவியின் தலையில் அடித்து பொய்ச் சத்தியம் செய்பவர்கள் நாளை வருபவளின்(?) மனைவியையா மதித்து சத்தியம் செய்யப் போகின்றார்கள் ஜி
நீக்குஅன்பின் ஜி..
பதிலளிநீக்குநினைத்தவாறே கதை நிறைவடைந்தது..
இப்போதைக்கு இதுதான் சரி...
ஆனாலும் கடவுளே வந்தாலும் பதில் சொல்ல முடியாதபடிக்கு ஒரு கேள்வியை வைத்து விட்டீர்கள்...
வாங்க ஜி
நீக்குகடவுள்தான் "அன்பைக் கொடுத்து அன்பைப்பெறு" என்று போதித்து தீர்வைக் கொடுத்தாரே...
அதன் சூட்சுமம் புரிந்து கொள்ளாமல் மீண்டும் அவரிடமே வினாவை வைப்பதா ?
அன்பு தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குபரம்பரையாகத் தொடரும் வியாதியாகி விட்டதே.
அம்மா சொன்னதைக் கேட்க்கும் பிள்ளையாக நீங்களும் எழுதிவிட்டீர்கள்.
நன்றி மா.
வெங்கடாசலம் தாத்தா சொன்னதை அருணால் நிறைவேற்ற முடியவில்லையே.
மருமகள்கள் இப்ப்படி அமைந்தால் வாழ்க்கை
இவ்வாறுதான் போகும்.
அவரவர் விதிப்பயன்.
இது ஒரு வட்டமாகச் செயல் படுகிறது.
அருணின் மகன் என்னசெய்வானோ.
கசப்பாயிருந்தாலும் யதார்த்தத்தை சொல்லி இருக்கிறீர்கள்.
ஆமாம் அம்மா இது சுழன்று வரும் வியாதி போலவே தொடர்கிறது.
நீக்குஇது இன்னும் எவ்வளவு காலம் தொடருமோ... இறைவனே அறிவான்.
விரிவாக பதில் தந்தமைக்கு நன்றி அம்மா.
என்றும் எனக்கு தெய்வமாய் இருக்கும் எனது பாட்டனாரின் பெயரும் திரு . அருணாச்சலம் தான். அவரை நான் வணங்காத நாளில்லை .
பதிலளிநீக்குதங்கள் பதிவில் அருணாச்சலம் என்ற பெயரை படிக்கும் போது என் கண்கள் குளமாகவில்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை.
(மோசமான) விஞ்ஞான வளர்ச்சியே கூட்டு குடும்பத்தை பிரித்து பரந்த மனதை சுருக்கி விடுகிறது என்பதுவும் , அதன் காரணமாகவே அனாதை மற்றும் முதியோர் இல்லங்கள் தோன்றுகின்றன என்பதுவும் எனது கருத்து.
வருக நண்பரே தங்களது கருத்துரை கண்டு மனம் நெகிழ்ந்து விட்டது.
நீக்குஇது யதார்த்தமான ஒற்றுமையே... வருகைக்கும், விரிவான பதிலுக்கும் நன்றி.
கதை முடிவு எல்லோருக்கும் முன்பே தெரிந்தாலும் அந்த சத்தியத்தை தொடர் கதை ஆக்கியது உங்கள் திறமை.
பதிலளிநீக்குஇப்போது நீங்கள் சொல்வது போல் பெற்றோர்கள் மகன் மகளுடன் இருக்க விரும்புவது இல்லை.(பெரும்பாலும்)
அப்படி இருக்கவும் முடிவது இல்லை. அவர்கள் வேறு ஊரில், வேறு நாட்டில் இருக்கிறார்கள்.
சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தில் சொல்வது போல் ஒரு நாள் கிழமையில் கூடி கொள்ளலாம் அதுவே பெரிய விஷயம் அதற்கு கூட வர முடியாத நிலையில் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சேர்ந்து இருக்கும் பெற்றோற்கள் கொடுத்து வைத்தவர்கள்.
பெண்களை மட்டும் குறை சொல்லி குற்றம் இல்லை. ஆண்மகனும் எதை கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேட்க வேண்டும். உனக்கு உன் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமோ அப்படி முக்கியம் என்று சொல்லவேண்டும்.
மனைவியின் பெற்றோர்களையும் அன்பாய் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சில ஆண்மகன்கள் அன்பு ஒரு வழி பாதையாக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மனைவியின் சொந்தம் வரக்கூடாது வீட்டுக்கு ,மனைவி அங்கு போக கூடாது என்பார்கள். ஆனால் தன் சொந்தம், பந்தங்களை கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும், விருந்து உபசரிப்பு குறைந்தால் அடி தடி கலாட்டாவரை போவார்கள்.
அது போல் சில பெண்கள் தன் வீட்டாரை மட்டும் கவனிப்பார்கள். இரு பக்கமும் பரஸ்பர அன்பு பரிமாற்றம் இருந்தால் உறவுகள் நீடிக்கும்.
கோடிஸ்வரர் பெண்ணை மணம் முடித்தாலும், சொந்த உறவுகளை மணம் முடித்தாலும், ஏழை வீட்டு, நடுத்தரவர்க்கம் என்று யாரை மணமுடித்தாலும் அன்பு இல்லையென்றால் ஒன்றும் இல்லை.
வருக சகோ
நீக்கு//சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தில் சொல்வது போல் ஒரு நாள் கிழமையில் கூடி கொள்ளலாம் அதுவே பெரிய விஷயம் அதற்கு கூட வர முடியாத நிலையில் பிள்ளைகள் இருக்கிறார்கள்//
நானும் இந்தக்காட்சியை அடிக்கடி நினைத்துப்பார்த்து இருக்கினேன்.
மறக்க முடியாத கடைசி காட்சி அது
ஆண்-பெண் இருவரையும் சமநிலையில் குற்றம் சுமத்தி அழகாக விவரித்து கருத்துரை தந்து இருப்பது அருமை.
அன்பு ஒன்றே நிலையான மகிழ்ச்சியை தரும் என்பதே உண்மை.
கதை திறமையாக எழுத வருகிறது உங்களுக்கு.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள்.
முயல்கிறேன் சகோ
நீக்குதற்காலம் மனநிம்மதி இல்லாமையால் எழுதுவதில் மனம் இணையவில்லை.
எனினும் இறுதிவரை முயற்ச்சிப்பேன் எழுத்தே எனது உயிர் மூச்சு.
ஜி, ஆரம்பத்தில் உள்ள இரு இணைப்புகளை சிறிது கவனியுங்கள்... பிறகு வருகிறேன்...
பதிலளிநீக்குஆமாம் ஜி
நீக்குகணினிக்குள் போக வேண்டும்.
நேரம் வாய்க்கவில்லை சரி செய்கிறேன்.
கில்லர்ஜி... இந்த நிலைமைக்கு ஆண்கள்தான் காரணம். பெண்கள் காரணம் கிடையாது.
பதிலளிநீக்குயார் குடும்பத் தலைவன்? அவனிடம் சரியான கண்ட்ரோல் இல்லையென்றால் அது யார் தவறு?
தன் மனைவி, இன்னொருவனைப் பார்த்துப் பல்லிளித்து வேறு வகையான உறவுக்கு முயன்றால், 'ஆஹா. அருமை' என்று பாராட்டிக்கொண்டிருப்பானா? அப்போ இருக்கும் வீர்யம், மற்ற எல்லாச் சமயங்களிலும் இருக்கணுமா வேண்டாமா?
சரி...அப்படி ஒன்று நடந்து, உங்க அப்பா அம்மாவை நான் பார்த்துக்க முடியாது என்று சொல்லிவிட்டால் (அப்படிச் சொல்ல அவளுக்கு உரிமை இருக்கு, ஏன்னா இவன் பெற்றோர் அவளை எப்படி நடத்தினார்கள் என்று தெரியாதல்லவா), அதே சட்டம்தான் அவளுக்கும். இவன் அவளது பெற்றோர் வீட்டுக்குப் போகக்கூடாது, அவளையும் அங்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. இவனுக்கு என்ன ட்ரீட்மெண்டோ அதுவே அவளுக்குமான ட்ரீட்மெண்ட்.
யார் குடும்பத்தலைவன் ?
நீக்குநல்லதொரு கேள்வி நண்பரே...
ஒரு நல்ல கணவன் மனைவியை மகாராணியைப் போல் நடத்தினால் அவள் கணவனிடம் அடிமையைப் போல் வாழ்ந்து வருவாள்.
ஆனால் பலரும் மனைவியை மகாராணி போல் வாழவைக்கிறேன் என்ற பெயரில் அடி வருடிபோல் இருப்பதால் பல குடும்பங்களில் மன்னர் காலத்து மகாராணி போலவே தன்னை பாவித்துக் கொள்கிறார்கள் மனைவியர்கள் பலர்.
முடிவு ?
தலைவன் அடிமையாகின்றான்.
தலைவன் தாய்-தந்தையை மட்டுமல்ல, மாமன்-மாமியாரையும் தனது குடும்பத்தினர் என்ற மனப்பாங்கோடு வழி நடத்தி செல்லவேண்டும்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு கணவனின் பெற்றோர்கள், கணவன், மனைவி ஆகிய அனைவரும் காரணம்தான். கணவரின் பெற்றோர் மகனை நம்பியிருக்கக்கூடாது (பணத்தில்). அவனுடைய குடும்பத்துக்கு எல்லாவிதத்திலும் உதவியா இருக்கணும். மருமகள் வேலைக்குப் போனால், எல்லோர் துணிகளையும் வாஷிங் மெஷினில் போட்டு காயவைத்து எடுத்து வைப்பது உள்பட. சின்னச் சின்ன வேலைகளைப் பகிர்ந்துகொள்ளணும், அடுத்த நாள் கறிகாய் வெட்டிவைப்பது உள்பட. அவங்களுக்கு தனிமை தரணும், ரொம்ப நோண்டிக்கிட்டே இருக்கக்கூடாது. தன்னால் முடிந்தவைகளத் தாங்கள் செய்யணும். இப்படிலாம் இருந்தா கூட்டுக் குடும்பம் நல்லா இருக்கும்.
பதிலளிநீக்குதன் மாமியார் அப்படி இல்லை, கொடுமைப்படுத்தினாங்க. திரும்ப அவரைக் கொடுமைப்படுத்தும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலை. வந்துட்டா மருமகள். அவளை ஆட்டிவைப்போம் என்று நினைத்தான் தனிக்குடித்தனமும், கடைசி காலத்தில் தனிமையும் தவிர்க்க முடியாது.
ஆம் நண்பரே...
நீக்குஇன்று பல குடும்பங்களில் பெரியோர்களும் சரியான பாதையில் ஒத்துழைப்பு தருவதில்லை.
காரணம் அவர்களால் பழைய வாழ்க்கையிலிருந்து சட்டென (இயந்திரத்தனமான) புதிய பாதையில் நடக்க இயலாமை.
//வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்//
-வைரமுத்து (க்ரீன் தமிழன்)
நடக்கும் உண்மையை சொல்லி உள்ளீர்கள் ஜி...
பதிலளிநீக்குஆண்களா...? பெண்களா...? முடிவில் உள்ள கேள்விற்கு தான் சிந்திக்க வேண்டும்...
மறைந்துள்ள அந்த ஆண்கள் யார்...? பெண்கள் யார்...?
அவர்கள் அர்ச்சனா அல்லது ப்ரீத்தி அவர்களின் தாய் தந்தையர்கள்... அந்த பெற்றோர்களை நினைத்துப் பார்க்கிறேன்...!
முதலில் அவர்கள் தான் முதியோர் இல்லத்திற்கு செல்ல (வேண்டிய நிலை வர) வேண்டும்... அவர்கள் எந்த முதியோர் காப்பகத்தில் இருக்கிறார்கள் என்பதை விசாரித்து, அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் ஜி...
மேலும் விளக்கத்தை பிறகு சொல்கிறேன்...!
வாங்க ஜி
நீக்கு//அர்ச்சனா அல்லது ப்ரீத்தி அவர்களின் தாய் தந்தையர்கள்... அந்த பெற்றோர்களை நினைத்துப் பார்க்கிறேன்//
இதுதான் பிரச்சனைகளின் அடிநாதம்.
இதை உருக்கி விட்டார்களே அவர்களுக்கும் ஆண் மகன் உண்டு மருமகளும் வந்தாள், வந்து இருக்கிறாள், வருவாள்...
இதே வகையான ஆப்பு அவர்களும் வைப்பார்கள் இதுதான் வாழையடி வாழையாக நடக்கிறது.
இவர்களை தேடுவது கடினமான வேலையில்லை ஜி
எல்லா இடத்து முதியோர் இல்லங்களிலும் நீகமற நிறைந்து வாழ்கிறார்கள் ஜி
ஆணா... பெண்ணா... யார் காரணம் என்று நிற்பதைக் காட்டிலும் பெண்ணின் அதிகாரத்துக்கு அடிபணியும் ஆணும்... வளர்ப்பு முறை சரியில்லாத பெண்ணுமே அதீத காரணமாகிறார்கள். வாழையடி வாழையாய் தொடரும் இந்த நிகழ்வுகள் குடும்ப நிகழ்வின் பாதிப்பில்தான் தொடர்கின்றன.
பதிலளிநீக்குவருக நண்பரே...
நீக்கு//பெண்ணின் அதிகாரத்துக்கு அடிபணியும் ஆணும்... வளர்ப்பு முறை சரியில்லாத பெண்ணுமே அதீத காரணமாகிறார்கள்//
மிகவும் சரியான காரணத்தை சொன்னீர்கள்.
பெண் அதிகாரத்தினாலோ, அல்லது பெண் மோகத்தினாலோ பல ஆண்கள் மனைவிமார் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதில்லை. சிலர் எதற்கு வம்பு! அநாவசியச் சண்டை என்றும் பேசாமல் இருந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் இந்தப்பக்கமும் பேசாமல், அந்தப் பக்கமும் பேசாமல் நடுநிலை வகிக்கிறேன் பேர்வழினு வாயை மூடிக் கொள்வார்கள். தவறு இருக்கும் பக்கம் சுட்டிக்காட்ட மாட்டார்கள். பெண்களும் ஒத்துப் போவதை விடுத்து மாமியாரை ஜன்ம வைரியாகப் பார்ப்பதும், மாமியார் மருமகளைத் தன் பிள்ளையைத் தன்னிடமிருந்து பிரிக்க வந்தவள் என்று பார்ப்பதும் தொடர்கதை தான்! இருவருமே அவரவர் நிலையைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை சொர்க்கம்!
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குதங்களது பதில் இதுவாகத்தான் இருக்குமென்பது எனது கணிப்பு.
நான் நடுநிலை வகித்தவனும் இல்லை இருவருக்குமிடையே நியாயம் பேசி கிடைத்த சிறியகால வாழ்க்கையையும் இழந்தவன்.
அழகாக பதில் தந்தமைக்கு நன்றி
குழந்தைகளை பயமுறுத்தி சத்தியம் வாங்குவது சரியல்லஎன்றே நினைக்கிறேன்
பதிலளிநீக்குவாங்க ஐயா நல்ல செயலுக்காகத்தானே சத்தியம் கேட்கின்றார் அதுவும் தனக்காக அல்லவே...
நீக்குஅதன் பிறகு காலநேரம் தனக்கு அமையாது என்றும் அவர் நினைத்து இருக்கலாமே...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசற்று யூகித்து நினைத்த மாதிரி கதை முடிந்து விட்டதெனினும், ஒரு நப்பாசையில், பேரன் தாத்தாவிடம் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தை நினைவு வைத்துக் கொண்டு தன் தந்தையின் முந்தைய கால செயலை தவறென சுட்டிக்காட்டும்படி கதை நிறைவுறும் எனவும் எதிர்பார்த்தேன்.
ஆண்கள் ஒருகாலத்தில் பெண்களை மிகவும் அடக்கி வைத்தார்கள். அப்போதெல்லாம் அநேகமாக கூட்டு குடும்பங்கள்தான். "இல்லம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் பொதுவாக "வீடுகள்தான்".அந்த காலமும் தனக்கு ஒரு மாற்றம் அவசியமாக கருதியதால், இப்போது ஆண்கள் அதற்கும் இருமடங்காக அடங்கிப் போகிறார்கள்.இப்போது "இல்லம்" என்ற வார்த்தையின் அர்த்தங்கள் வேறுபட்டு விட்டன. (சில பல இடங்களில், அப்போதும். தற்போதும் இரு பாலாருமே வித்தியாசப்படலாம்.) மறுபடியும் காலம் மாறும் சூழ்நிலைகள் வரலாம். வரும்..
ஒரு வாழ்க்கைப்படகில் சேர்ந்து பயணபடும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனக்கு முன் படகில் அமர்ந்திருப்பவர்களை (பெற்ற.உற்ற உறவுகள்.) அவர்கள் இறங்கும் இடம் வரும் வரை பொறுமையுடன் இருக்குமாறு பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். மாறாக நடுக்கடலில் அவர்களை இறக்கி விட்டால் அதை விட கொடுமையான செயல் இல்லை எனலாம். இதற்கு மனித நேயங்கள் இருவரின் வளர்ப்பு முறையிலும் தொன்று தொட்டு வளர்ந்திருக்க வேண்டும். அன்பு பரிமாற்றம், பெண்களுக்கிடையே புரிந்துணர்வு, இவையெல்லாம் இளகிய மனதுடன் சாஸ்வதமாகி விட வேண்டும். இவையெல்லாம் நடந்தால் "இல்லங்கள்" பழையபடி "இல்லமாகும்." (ஆனால், இப்போது "பணம்" என்ற ஒன்றைத்தான் அனைவரும் தேடி நாடி ஓடுகிறார்கள்.இதில் அன்பை எங்கே தேடுவது? இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்.) யதார்த்தமான கதைப்பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குஉங்களது யூகமும் நன்றாகத்தான் இருக்கிறது.
தாங்கள் சொல்வது உண்மையே இன்றைய ஆண்வர்க்கம் மனைவிகளுக்கு பயந்து போவதின் அடிப்படை காரணம் அவர்களும் உழைக்கின்றார்கள், சம்பளம் பெறுகிறார்கள்.
சில வீடுகளில் மனைவியின் சம்பளம் அதிகமாகவும் இருக்கிறது பிறகு அவர்களின் நிலைப்பாடு ?
எல்லோருமே பணமே பிரதானம் என்ற ஓட்டத்தில் அன்பு, பந்தபாசத்துக்கு இடமில்லாமல் போய் விட்டது.
தங்களது விரிவான அலசலுக்கு நன்றி.
கூட்டுக் குடும்பச் சரிவு
பதிலளிநீக்குசுய நல செருக்கு
நம் இன்றைய நிலை
வருக நண்பரே
நீக்குசரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி.
இந்த அவலம் தொடர்வதற்கு ஆண் பெண் இருவருமே காரணம். எப்போது வயதானவர்களை சுமை என நினைத்து முதியோர் இல்லங்களில் விடும் மனப்பான்மை வந்ததோ அப்போதே கூட்டுக்குடும்பம் என்ற வாழ்க்கை முறை மறைந்தொழிந்துவிட்டது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.’ என்பார் பட்டுக்கோட்டையார். அதுபோல பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோரை சுமையாக எண்ணாமல் தங்களுடன் வைத்து கடைசிவரை காப்பாற்றும் எண்ணம் தானாக வரவேண்டும். அதுவரை இது போன்ற அவலங்கள் தொடரும்.
பதிலளிநீக்குவருக நண்பரே
நீக்குதங்களது விரிவான கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
கதை அருமை .... தற்கால அவலம் நிறைந்த வாழ்க்கை முறைக்கு ஒரு சாட்டையடி.... தாங்கள் கதை எழுதும் விதம் ... அதிலுள்ள கருத்தாழம் ... வியக்காமல் இருக்கமுடியவில்லை... !!!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குஇந்த நிலைமைக்கு காரணம் ஆணும் பெண்ணுமல்ல நிலவும் சமூகம்தான் காரணம்....இந்த சமூகக் காரணிகளை தீர்மானிக்கும் நாட்டை ஆளும் ஒரு வர்க்கம்தான் முழு முதற்காரணம்.
பதிலளிநீக்குவருக நண்பரே உங்களது கோணமும் சரியாகத்தான் இருக்கிறது வாழ்க்கையின் தொடக்க நிலையிலிருந்து பார்ப்பதாக...
நீக்குஆண்-பெண் என இருவருமே தான் காரணம். கூட்டுக் குடும்பத்தினை இப்போது விரும்புபவர்கள் மிகக் குறைவு. குஜராத் மாநிலப் பயணத்தில் நிறைய கூட்டுக் குடும்பங்களைப் பார்க்க நேர்ந்தது. ஏழு பெட்ரூம் ஃப்ளாட் பார்த்தபோது எதற்கு எனக் கேள்வி தோன்ற, குஜராத்தி ஓட்டுனர் பதில் சொன்னார் - இங்கே கூட்டுக்குடும்பமாக வாழ்வார்கள் என!
பதிலளிநீக்குசிறப்பான முறையில் உங்கள் பகிர்வு. பாராட்டுகள் கில்லர்ஜி!
வாங்க ஜி
நீக்குகூட்டுக் குடும்பவாழ்க்கை பல வகைகளிலும் நன்மையும், பெருமையும் தரும் ஜி.
தங்களது தகவலுக்கு நன்றி.