தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 06, 2020

தமிழர்கள் அறிவாற்றலான பரம்பரையா ?


ண்ணே வணக்கம்ணே நல்லா இருக்கீங்களாண்ணே.. ?
வாடாத்தம்பி நல்லா இருக்கேன்டா... நீ எப்படிடா இருக்கே... ?

நல்லா இருக்கேண்ணே... சில சந்தேகங்கள் கேட்கணும்ணே ?
சரிடா தம்பி கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

ஏண்ணே தமிழர்கள் நாமெல்லாம் அறிவாற்றலான பரம்பரையாண்ணே ?
ஆமாடா இதிலே உனக்கென்ன சந்தேகம் ?

புள்ளை இல்லா விட்டாலும் கோடிக்கணக்கான பணத்தை சேர்த்து வைத்து வாழ்ந்த திரைப்படக் கூத்தாடி மலையாளி எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும், கணவனும் இல்லாமல், புள்ளையும் இல்லாமல் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்து சிறைக்கு சென்று வந்த திரைப்படக் கூத்தாடி கன்னடத்தி ஜெயலலிதாவுக்கும், தனது வருங்கால ஏழேழு தலைமுறைகளுக்கும் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்து சேர்த்து வைத்த தெலுங்கர் கருணாநிதிக்கும் சென்னை மெரினா கடற்கரையில் காற்று வாங்க நடந்து போகும் மக்கள் புழக்கமான இடத்தில் அரசு பணத்தில் இந்த மூன்று பேருடைய பொணத்தையும் சுடுகாட்டு இடம் போல பொதைச்சு வச்சு இருக்கிறதை தடுக்காமல், கண்டனம் தெரிவிக்காமல் அதைப்போயி கோயில் போல வணங்கி வர்றோமே... நம்மளை எப்படிணே அறிவாற்றலான தமிழர்கள்’’னு சொல்ல முடியும் ?
? ? ?

ஏண்ணே எளிமையான மனிதர்களுக்கு தேவையானது எதுணே ?
உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க இடம் இது போதுமேடா...

அப்படீனாக்கா... மூன்று மாதகாலம் ஸூட்டிங் போயி நடிச்சுக் கொடுத்ததுக்காக தமிழ்நாட்டில் நூறுகோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கி கர்நாடகாவில் பேக்டரி கட்டி விட்ட ரஜினியை எளிமையான மனிதர்’’னு சொல்றாங்களே சில தமிழர்கள் இவர்கள் அறிவாளிகளாண்ணே ?
? ? ?

ஏண்ணே தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சாவூரில் கோவிலின் நிழல் பூமியில் விழாத அளவுக்கு விஞ்ஞானப்பூர்வமாக சிந்தித்து கோவில் கட்டிய பாரம்பரியமானவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்தானே... ?
ஆமாடா இப்ப அதற்கென்ன ?

அப்படி பரம்பரையில் வந்த நாம இப்போது திரைப்பட கூத்தாடிகள் குஷ்புவுக்கு திருச்சியிலும், நமீதாவுக்கு திருநெல்வேலியிலும் கோவில் கட்டுனாங்களே இதைத் தடுக்காத நாமெல்லாம் அறிவாற்றலான தமிழர்களாண்ணே ?
? ? ?

ஏண்ணே அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கி கொள்ளையடித்தால் ஊழல்வாதிகள் என்று சொல்றோம்ல.... ?
ஆமாடா அதுதானே உண்மை.

அப்படீனாக்கா ஓட்டுப் போடுறதுக்கு மக்கள் லஞ்சம் வாங்குறது ஊழல் இல்லையாண்ணே ?
? ? ?

ஏண்ணே கிரிக்கெட்டில் விளையாண்டு தனது குடும்பத்துக்கு கோடிக்கணக்கில் பணம் சேர்த்த தோனியை தமிழகத்தில் தலைவா என்று அழைப்பதோடு மதுரையில் ஒரு வீதிக்கு தோனியின் பெயரை வைத்து இருக்கின்றார்களே இது நியாயமாண்ணே ?
ஏதோ வச்சுட்டாங்கே.... என்னடா தம்பி செய்யிறது ?

அப்படீனாக்கா... தோனி ஊருல நம்ம தமிழக கிரிக்கெட் வீரர்(?) கார்த்திக் பெயரை தெருவுக்கு வைப்பாங்களாண்ணே ?
? ? ?
ஏண்ணே திருமணத்துக்கு முன்பு பெண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’’னு கூத்தாடி குஷ்பு சொன்னது ஞாபகம் இருக்காண்ணே ?
ஆமாடா இப்ப எதுக்கு இதைச் சொல்றே ?

தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரான கருத்தை சொல்லி விட்டு குஷ்பு தமிழகத்துல தைரியமாக வாழ முடியுதே... நாமெல்லாம் உண்மையான தமிழர்களாண்ணே ?
? ? ?

ஏண்ணே திரைப்படத்துல கசா’’நாயகர்கள் வாயசைக்கிற வசனங்களை எழுதியது தமிழ் வசனகர்த்தாக்கள்தானே ?
ஆமாடா தம்பி நிச்சயமாக தமிழர்கள்தான்.

அப்ப எதுக்குணே... அர்த்தமே தெரியாத வேற்றுமொழி முடுமைகள் வாயசைத்ததை வைத்து என் தலைவன் சொன்னது’’னு ரசிக்குஞ்சுகள் சொல்றாங்க ?
? ? ?

ஏண்ணே சமீபத்துல பரமக்குடியில் நம்ம நெல்லைத்தமிழரோட நண்பர் கமல்ஹாசன் குடும்பத்து எல்லா உறுப்பினர்களோடு மாநாடு போல கூட்டம் போட்டு அவரோட அப்பா சிலையை திறந்து வச்சாங்கள்ல...
ஆமா நானும் செய்தியில் பார்த்தேன்...

அதுல அவரோட சின்னப் பொண்ணு தமிழ் பேசுறதுக்கு தள்ளாடுதே ஆனால் சேலை கட்டி தமிழ்ப் பொண்ணு போல வந்துச்சு இத்தனை வருசமாக பரமக்குடியை எட்டிப் பார்க்காக குடும்பம் இப்ப எதற்காக வர்றாங்கண்ணே ?
எல்லாம் தமிழகத்தை மீட்டு எடுக்கத்தான்டா...

அப்படீனாக்கா தமிழகம் இதுவரை அடகு’’ல இருந்துச்சாண்ணே ?
? ? ?

ஏண்ணே விரல் அசைவிலேயே ரஜினி ஆட்சி செய்வாருன்னு அவரோட ரசிக குஞ்சுகள் சொல்றாங்களே இது சாத்தியமாண்ணே ?
நம்பிக்கைதான் வாழ்க்கை ஓட்டுப் போடணும்’’னு முடிவு செய்த பிறகு நம்பித்தானே ஆகணும்.

அப்படீனாக்கா சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள கடைக்கு வாடகை பாக்கி கொடுக்க மறுக்கிற பொண்டாட்டியை கண்டிக்க வக்கில்லாத ரஜினிகாந்தை தமிழகத்தை ஆள வைக்கணும்’’னு கோஷம் போடுற தமிழர்களை அறிவாளிகள்’’னு சொல்லுறீங்களே... நீங்க சோத்துல உப்பு போட்டுத்தான் திங்கிறியலாண்ணே ?
ஏண்டா... நாதாரி நாயே எவெங்களோ... காவடி தூக்குறதுக்கு என்னை எதுக்குடா இப்படி கேட்கிறே... ?

கோபப்படாதீங்கண்ணே நீங்க தமிழ் உணர்வாளர்ங்கிறதால இப்படி கேட்டேன்.
நான் தமிழனே இல்லடா குஜராத்திடா... ஆளை விடுடா...

அடுத்த கேள்வி கேட்கவாண்ணே ?
வேண்டாம்டா ஓடிரு இல்லை வெறிநாய் போல கடிச்சுடுவேன்.


சிவாதாமஸ்அலி-
கேள்விகள் நல்லாத்தான் இருக்கு ஆனால் நல்லவனை ஏமாளினும், அயோக்கியனை அறிவாளினு சொல்லுற உலகத்துல வாழுறோமே என்ன செய்யிறது... ?

Chivas Regal சிவசம்போ-
கேள்வி கேட்ட முடுதாறு வில்லங்கமான ஆளா இருப்பாரு போலயே....

85 கருத்துகள்:


 1. தமிழர்கள் அறிவாளிகள் என்று யாரு சொன்னா?

  தமிழர்கள்தான்..

  அதுதானே பார்த்ததேன் தன்னையே தானேஅறிவாளின்னு சொல்லுற கூட்டம் இந்த தமிழர் கூட்டமாகத்தான் இருக்கும்..

  உலகத்தின் பார்வையில் தமிழர்கள் என்றால் அடிமைகள் என்பது இந்த அறிவாளி கூட்டத்திற்கு தெரியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஓஓ நோஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ..மீதான் 1ஸ்ட்டென ஓடி வந்தேன்ன்:)).. அம்பேரிக்காவில கொரொனா அதிகமாகியும், ட்றுத் ஓடி வருவதை நிறுத்தவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  2. வருக தமிழரே தங்களது முதல் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
  3. கொரோனா இருந்தா என்ன....அதிரா அவர் வான் வெளில ஒற்றை ஆளா பறந்து வந்திருப்பார்...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. எங்காத்து மாமி விட்ட உதையினால் நான் இங்கு முதலில் பறந்து வந்து கருத்துக்கள் போட்டுவிட்டேன் அவ்வளவுதான்

   நீக்கு
  5. இந்த சமயத்திலும் உதை விழுகிறதா ?

   நீக்கு
  6. அவருக்கு எல்லா சமயத்திலும் உதை இருக்கும்.

   நீக்கு
 2. ஆஆஆஆ நாட்டுக்குள் கொரொனா வந்தும், கில்லர்ஜி சினிமாவைத்திட்டுவதை நிறுத்தவே இல்லையே:)) ஹா ஹா ஹா... இப்போ சினிமாவின் நிலைமை மோசமாகியிருக்குமே கில்லர்ஜி?:))...

  அதுசரி இதில அண்ணே ஆரூஊஊஊஊ டம்பீஈஈஇ ஆரூஉ?:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இதோடு திரையுலகம் மாற்றம் பெறட்டும்.

   அண்ணன் அவருதான், தம்பி இவருதான்.

   நீக்கு
 3. ஆஆஆ டக்கு டக்கென வெளிவருதே கொமெண்ட்ஸ் எல்லாம்:)).. அப்போ கில்லர்ஜி நித்திரையா எழும்பி, உள்ளங்கையைப் பார்க்க முன், நன்கு திட்டிக் கொமெண்ட்ஸ் போட்டிட்டு ஓடிடலாம் ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் கொரோனாவால் வந்த மாற்றம்தான்.

   நீக்கு
 4. ஜி கொஞ்சம் பேரை தான் அடிச்சி துவைத்து காயப் போட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கிட்டியவர்களை பிடிப்போம் மற்றவர்களுக்கும் ஓர் தினம் வரும் ஜி.

   நீக்கு
 5. ஒரு விசயத்தை சொல்ல வேண்டும்...

  மகாத்மாவின் ஆடை அணியும் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் தமிழ் நாட்டின் சுற்றுப்பயணம் செய்த போது என்பது அனைவருக்கும் தெரியும்...

  எளிமை என்றால் இது தான்...

  ஆனால் இன்றோ...?

  கூத்தாடி மட்டும் காரணமில்லை... கூத்து அடிப்பவர்களும் காரணம் என்பதையும் சொல்லி விட்டீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   இந்த ஏலம் எடுக்கும் மோகமே தவறு அது எந்த பொருளோ இப்பொழுதும் அதேதான் இதில் உயர்வு, தாழ்வு ஏது ?

   சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிளை அன்று ஒரு லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்த முட்டாளும் உண்டு அதே ஆப்பிளை இரண்டு தினம் கழித்து எலிக்கு கொடுத்தால் அதுகூட தீண்டாது.

   அன்றே காமராஜர் சொன்னார் "கூத்தாடிக்கிட்டே ஆட்சியை கொடுத்தா அவன் கூத்தியாக்கிட்டே கொடுத்துட்டு போவான்" என்று மனிதர் தீர்க்கதரிசி.

   நீக்கு
  2. ஹாஆ ஹா கில்லர்ஜீ சகோ  அந்த எலி என்ன பாவம் பண்ணுச்சி :)))))))))))))எலிக்கு கொடுக்க வேணாம் 

   நீக்கு
  3. தமிழ்நாட்டு எலி ரோஷமுள்ளது நடிகை கடித்ததை தீண்டாது.

   நீக்கு
 6. கில்ல்ர்ஜி இனிய காலை வணக்கம்னு சொல்ல வந்து பின்வாங்க வைச்சுட்டீங்களே ஹா ஹா ஹா ஹா செம காண்டுல இருக்கீங்களோ?!!!!!!!!

  சொல்லுவதற்கு நிறைய இருக்கு. ஆனா சொல்லி ஒரு யூஸ் இல்ல. நம்ம ஆதங்கத்தை, தார்மீகக் கோபத்தை வெளியிடலாம் அவ்வளவே. நாம நம்ம மனசாட்சிப்படி நடந்துப்போம்..கூல் கில்லர்ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஆம் ஆதங்கப்படவே முடிகிறது. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. என்ன சொல்வது. பரிதாபம் தமிழர்கள் நிலை.
  அது அவர்களுக்கே தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 8. நம் மக்கள் இப்படித்தான்! இவர்களுக்குச் சொன்னாலும் புரியாது! புரிந்து கொள்ள தயாராக இல்லாதவர்களிடம் எப்படி புரிய வைப்பது கில்லர்ஜி.

  ஆதங்கம் மட்டுமே மிச்சம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொரோனா வந்துருக்கே தரையில கால் படாமல் இருபது நபர்களை பந்தாடுற நடிகர்கள் ஒன்றாக இணைந்து வந்தால் கொரோனாவை விரட்ட முடியாதா ஜி ?

   நீக்கு
 9. நெல்லைல நமீதாவுக்கு கோவில் என்றெல்லாம் சொல்லிப்புட்டு உங்க ஊர்க்கார்ர் கமலதாசனை இப்படி வார்றீங்களே...

  எல்லாக் கேள்விகளும் சரிதான். தமிழர்களுக்கு தனியே ஒரு குணம் உண்டு.... வேற என்ன... தற்பெருமை பேசிக்கிட்டு செய்யறதெல்லாம் அனர்த்தம்தான். இதுல மைனாரிட்டியா இருக்கற உண்மைத் தமிழர்களுக்கும் கெட்டபேர் வந்துடுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே அந்த மைனாரிட்டி கூண்டுக்குள்ளே நாம இரண்டு பேரும் சிக்கி கொண்டோமே...

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  கேள்விகளும், அதற்கு அவரே தரும் பதிலுமாக பதிவு நன்றாக உள்ளது. உலகமே மாறி வரும் இன்றைய சூழலில், தமிழர்களின் நிலையும் இனியேனும் மாறட்டும். தங்கள் ஆதங்கம் புரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இனிமேலாவது மாறும் என்று நம்புவோம். வாழ்க வையகம்.

   நீக்கு
 11. கேள்விகள் வலிமையானவை. பதில்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எளிமையாக கேட்டால் வழி கிடைக்குமோ ?

   நீக்கு
 12. ஆமா, ரஜினியை மட்டும் சொல்லியிருக்கீங்க, அப்ப நீங்க என்ன விஜய் ரசிகரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை இப்படி கேட்டதற்கு என்மீது கொரோனா எச்சியை துப்பி இருக்கலாம்.

   நீக்கு
 13. தமிழர்களுக்கு இப்படி கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும். (பதில் தெரிஞ்சிருந்தா இந்த மாதிரி கேள்விகளே வந்திருக்காதே)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தேவகோட்டை கல்லூரியில் படித்துச் சென்ற உங்களுக்கும் தெரியவில்லையா... ?

   நீக்கு
 14. நல்ல கேள்விகள். பதில் சொல்லத்தான் ஆளைக் காணோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் மேலே காரைக்குடி நபருக்கே தெரியலையாமே...

   நீக்கு
 15. அனைத்து கேள்விகளும் , உங்கள் ஆதங்கமும் புரிகிறது.ஆனால் நம்மால் புலம்ப மட்டுமே முடியும் போல

  கடைசியில் சிவா தாமஸ் அலி சொல்வதும் சரிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆதங்கமே வேறென்ன செய்வது ? வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. சினிமா மாயை என்பது இன்று இல்லை என்றுதான் நினைக்கிறேன்
  இன்று ஊடகங்களும், அலைபேசி வழிச் செய்திகளும், ஏதோ இவர்களுக்கு ஒரு பெரிய ஆதரவு இருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன
  இவர்கள் அரசியலில் இறங்கி, தாங்களே நேரடியாகப் போட்டியிட்டால்தான் இவர்களது உண்மையான செல்வாக்கு புரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே பாராளுமன்றத் தேர்தலில் கமலஹாசனுக்கு கிடைத்த மரியாதை ரஜினிகாந்தை பின் வாங்க வைத்து விட்டது உண்மையே...

   எல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகளின் அலப்பறைகளும் வேசித்தனமான ஊடகங்களும் இவர்களை கடவுளைப்போல் சித்தரிக்கின்றன... மற்றபடி இவர்கள் கொரோனாவின் கால் தூசுக்கு இணையானவர்கள்தான்.

   நீக்கு
 17. எவரும் எதையும் கேட்கலாம்
  எவருக்கும் பதிலளிக்க இலகுவில் வராது

  தமிழர் அறிவாற்றல் பரம்பரையே
  ஆனால்,
  மூத்தோர் சொற் கேளாமையாலே
  முட்டாளாகின்றனர்

  http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

  பதிலளிநீக்கு
 18. தமிழன் என்றொரு இனமுண்டு அவர்க்கே தனியே ஒரு குணம் உண்டு நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா பல பதிவுகளுக்கு பிறகு வருகிறீர்கள் நன்றி.

   நீக்கு
 19. திரைப்படத்துறை மீது உங்கள் கோபம் நியாயமானதே! கமலஹாசன் இரண்டாவது பெண் சேலை கட்டி வந்தது ஒண்ணும் ஆச்சரியம் இல்லை. இந்தியப் பெண்களின் தேசிய உடை சேலையும், ரவிக்கையும் தான். ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்கள் சேலை கட்டியே பணி செய்வதைப் பார்த்திருப்பீர்கள் தானே? தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல சேலை. அதோடு பாவாடை, தாவணியும் ராஜஸ்தான், குஜராத், உ.பி மற்றும் மத்யப்ரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இவர்கள் இப்பொழுது காரியத்துக்காக என்னமா நடிக்கின்றார்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும்...

   நீக்கு
 20. தமிழனைப் பற்றிய பதிவில் விக்ரமாதித்தனும், வேதாளமும் எங்கே இருந்து வந்தனர்? போகட்டும்! நீங்கள் மற்ற மொழிக்காரர்களை இங்கே அரசியலில் புகுந்து முதலமைச்சர் ஆகக் கூடாது எனவும் அப்படி ஆனவர்களைத் திட்டவும் செய்கிறீர்கள். ஆனால் இதே கன்னட அரசரான வீர வல்லாளரால் தான் நம்பெருமாளைத் தூக்கிச் சென்றவர்கள் தெற்கே தப்பிச் செல்ல முடிந்தது. அதோடு தன்னால் இயன்ற வரையிலும் வயதானபோதும் மதுரை சுல்தான்களுக்கு எதிராகப் போரிட்டு வஞ்சனையால் உயிருடன் தோல் உரிக்கப்பட்டுத் தொங்கவிடப்பட்டார் வீர வல்லாளர்.

  பதிலளிநீக்கு
 21. அதன் பின்னர் வந்த துளு பேசிய விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களால் தான் ஶ்ரீரங்கத்தில் அரங்கனால் திரும்பி வர முடிந்தது. அதற்குப் பின்னர் வந்த நாயக்கர் வம்சப் பேரரசர்கள் செய்த திருப்பணிகள் கணக்கில் அடங்காதவை. அதே போல் தஞ்சையையும் சுற்று வட்டாரங்களையும் ஆண்ட மராட்டி மன்னர்களும் எண்ணற்ற தெய்வத் திருப்பணி செய்திருக்கிறார்கள். மதுரைக் கோயிலில் சுமார் 30 வருடங்களுக்கும் மேல் மறைந்திருந்த மீனாக்ஷி வெளிப்பட்டது விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் போது. மீனாக்ஷி கோயிலை மேம்படுத்தித் திருவிழாக்களை ஒழுங்கு படுத்தியது திருமலை நாயக்கர். இவர்களெல்லாம் ஆண்டபோது அழியாத நம் தமிழ்மொழி இப்போது சம்ஸ்கிருதமும், ஹிந்தியும் கற்றால் அழிந்துவிடும் என்கிறார்கள், அதை நினைத்துச் சிரிப்புத் தான் வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் அழியாது ஆனால் செத்துக் கொண்டே..... போகும்.

   காரணம் குழந்தைகள் அம்மா, அப்பா கூட சொல்வதில்லை மம்மி, டாடிதான்.

   நீக்கு
  2. மம்மி, டாடி ஆங்கிலமாச்சே! அதைச் சொல்லலாம்! தப்பில்லை என்பார்கள்! :(

   நீக்கு
  3. எங்க மகள் எங்களை அப்பா அம்மா என்றே தமிழில் விளிக்கிறாள் :) என்பதனை இங்கே அறியத்தருகின்றேன் 

   நீக்கு
  4. வாழ்த்துகள் சகோ

   நீக்கு
 22. கருத்துகள் உடனுக்குடன் வெளியாவதால் மாடரேஷனை நீக்கி இருக்கிறீர்கள் போலும். இப்போத் தான் கவனிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் கொரோனாதான் இந்த முடிவை எடுக்க வைத்தது.

   காரணம் மே 30-ம் தேதிவரை பதிவுகள் செட்யூல்ட்.

   நீக்கு
 23. தமிழர்களில் ஒரு சிலர் செய்யும்/செய்த தவறுகளை வைத்து தமிழினத்தையே குறை சொல்லக்கூடாது என நினைக்கிறேன்.நம்மில் சிலர் அதிகமாக தனி நபருக்கு துதிபாடும் பணியை செய்துகொண்டிருக்கிறோம். அதனால் தான் தாங்கள் பதிவின் தலைப்பில் எழுப்பியுள்ள கேள்வி பிறந்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   அறிவாற்றலானவர்களின் சதவீதம் குறைந்து கொண்டே செல்கிறது இதுதான் எமது பொதுநலக் கவலை.

   நீக்கு
 24. லேட்டா வருவதில் ஒரு வசதி எல்லார் பின்னூட்டத்தையும் வாசிச்சு ரசிச்சி நமது கருத்தையும் சொல்லலாம்ம் .
  நாமெல்லாம் ஏமாளிகளாவே இருப்போம் அந்த கமல் அங்கிள் பரமக்குடி விசிட் வீடியோ நானும் பார்த்தேன் அந்த பொண்ணுக்காவது தாய் வேறு மொழி ஆனா அந்த மணிரத்தினம் பிள்ளை அளந்துவிட்டான் பாருங்க பீட்டர் இங்கிலாண்ட் ரேஞ்சுக்கு தாங்க முடில 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நானும் கேட்டேன் எனக்கு நெஞ்சுவலி வந்ததே மிச்சம்

   நீக்கு
  2. அட... நான் இதைக் கேட்கலையே.... மணிரத்னம் மகன், கம்யூனிஸ்ட் என்றெல்லாம் அளந்துவிடுகிறார்கள். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாராம். கொஞ்சம் வசதி இருந்தால், இவங்க வாய் மீட்டர் நீளத்துக்கு விரியுது...

   நீக்கு
  3. ஆமாம் தமிழை ஊறுகாய் போலத்தான் உங்கள் நண்பரது குடும்பம் உபயோகிக்கிறது.

   நீக்கு
  4. தமிழில் தான் பேசினார் அவர் பிள்ளை :) ஆனா அம்மாதான் ஆக்ஸ்போர்டில் இருந்து வந்திருக்கார் தமிழில் பொளந்து காட்டறார்னு பில்டப் கொடுத்தாங்க .அதைவிட கமல் பேச தடுமாறின பொண்ணுகிட்ட சொல்றாங்க //நான்கூட இப்படித்தான் இங்கிலீஷில் பேசினேன் இப்போ தமிழில் பிளந்து கட்டறேன்னு சொன்னபோதான் எனக்கும் நெஞ்சு வலிச்சது ..இந்தம்மா தமிழ்நாட்டில் தானே பிறந்ததாக :)) இவ்ளோ கோபமும் எரிச்சலும் நமக்கு வரக்காரணம் இவங்க காட்டும் பந்தா தான் .இல்லேன்னா நமெக்கென்ன இவங்க அரசியல் பிரவேசத்தை  பிள்ளைங்களை திட்டனும் என்று 

   நீக்கு
  5. ஆம் எல்லோருமே வேஷக்காரர்கள்தான்.

   நீக்கு
  6. ஆமாம், அவர் கம்யூனிசம் தான் படித்தார்.அளந்தெல்லாம் விடவில்லை நெல்லைத் தமிழரே, சுஹாசினியே இதைப் பெருமையாகச் சொல்லி இருக்கிறார்.அதோடு கிறித்துவம் சம்பந்தமான படிப்பும் படித்ததாகக் கேள்வி. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது.

   நீக்கு
  7. சுஹாசினி மதுரை வக்கீல் புதுத்தெருவில் இருக்கையில் மதுரை வெள்ளியம்பலம் ஆரம்பப் பள்ளியில் படித்ததை எல்லாம் மறந்து விட்டார் போலும். இந்தப் பள்ளியில் படித்ததையும் அவர் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
  8. தகுதி மாறும்போது சிலர் பழையதை மறந்து விட்டதுபோல் வாழ்வார்கள் இது மனிதஇயல்பு.

   நீக்கு
  9. ஆமாம் கீதாக்கா இப்போதான் கவனிச்சேன் நந்தன் ப்ரோபைலை (.btw சினித்துறை விஷயத்தில் நான் கொஞ்சம் வீக் ).ஆக்ஸ்போர்டில் டாக்டரேட்  படிக்கிது //human dignity and theological responses to it in the twentieth century.    ///    அந்த பிள்ளை அதைத்தான் சுஹாசினி அந்த மேடையில் பெருமையா  சொல்லியிருக்கார் :)  அடச்சே இவுங்க  காட்டுற பந்தாவால் உண்மையைக்கூட நம்பாம போகுது மனது ..

   நீக்கு
 25. அந்தகுஷ்பூ கோயிலை கட்டிய அவர்களே இடிச்சதாவும் கேள்விப்பட்டேன் அப்படின்னா கொஞ்சம் ரோஷம் இருக்குன்னே தோணுது .தவறை திருத்திக்க சான்ஸ் தருவோம் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இரண்டு வருடம் கடந்து இடித்து விட்டார்கள்.

   குஷ்பாம்பிகாளே போற்றி என்று சரணமும் சொல்லி தீபாராதனை காட்டினார்கள்.

   நீக்கு
 26. என்னது விரல் அசைவில் ஆட்சியா :))) கொரோனா ரணகளத்திலும் குசும்பு பாருங்க இவங்களுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதே விரலால் கொரோனாவை விரட்டலாமே...

   நீக்கு
 27. தமிழனுக்கு இவ்வளவு கேள்விகள் கேட்கத் தெரிஞ்சிருக்கு இல்லையா? அப்புறமும் அவனின் அறிவுத் திறனில் சந்தேகமா கில்லர்ஜி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஆனால் இதில் சதவீதம் குறைவாக இருக்கிறதே...

   நீக்கு
 28. ஆஹா !!! ... எங்கள் தானை தலைவன், தன்மான சிங்கம், பதிவுலக நாயகன், வீரத்தின் விளைநிலம் "கில்லர்ஜி" யின் நெஞ்சுக்குள் இவ்வளவு ஆக்ரோஷமா !!! .... பாரதி கண்ட வீரம் செறிந்த அந்த "புதுமை ஆண்" மகன் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் ... பலே வெள்ளையத்தேவா !!! https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா,
   இப்படி எல்லாம் திரைப்படக் கூத்தாடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பட்டம் கொடுத்ததால்தான் தமிழ்நாடு இந்த நிலைக்கு வந்து நிற்குது.

   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 29. அன்பின் ஜி...

  திருக்கை வாலை உப்புத் தண்ணியில நனைச்சு நனைச்சு அடிச்சிருக்கீங்க...

  ஆனாலும் முதுகுல அடிச்சா வலிச்சிருக்கும்...

  முறுக்காங்கல்லுல ..ல்ல அடிச்சிருக்கீங்க!...

  வலியாவது ..ஒன்னாவது!...
  சூடாவது... சொரணையாவது!...

  கரண்ட் காசும் ரத்தக் கொதிப்பும் ஏறுனது தான் மிச்சம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி
   நம்மால் இயன்றவரை குரல் கொடுப்போம் வாழ்ந்ததற்கு அடையாளமாக...

   நீக்கு
 30. கேள்விகளும் அதற்கான பதில்களும் பிரமாதம்! சம்பந்தப்பட்டவர்களுக்கு வலித்தால் சரி!

  பதிலளிநீக்கு
 31. நாளுக்கு நாள் உணர்வு குறைந்துகொண்டே அல்லவா போகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் முனைவரே அது மட்டுமல்ல இந்த கொரோனா நிறைய புத்தியை கொடுத்து விட்டது.

   இனி வாழ்ந்தால் ???
   பயன் பெறலாம்.

   நீக்கு
 32. பின்னூட்டங்களைக் கவனியுங்கள். உங்களுடன் இணைந்து எப்போதும் குரல் எழுப்புபவர்கள் இவர்கள். நானும்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே மயிலோடு சேரும் பறவைகள் பெயில் ஆவதில்லை என்றும்...

   நீக்கு
 33. என்ன நண்பரே . இந்த வாங்கு வாங்கி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தட்டச்சு செய்யும்போது விரல் வலித்தது ஆகவே இத்துடன் முடித்து விட்டேன்.

   நீக்கு