பசுமை படர்ந்த பச்சை கம்பளமே
பத்து மணிக்கு வந்தது சம்பளமே
கூடுலாக கிடைத்தது கிம்பளமே
ஜாலியாக வந்தது மகிழ்ச்சிக்கா
ஜூலியும் தந்தது நெகிழ்ச்சிக்கா
கேலியாக பேசியது இகழ்ச்சிக்கா
கிளியழகி என்றது புகழ்ச்சிக்கா
மாலைவரை இருப்பது சட்டமா
மாலாவோடு வந்தது திட்டமா
மஞ்சுளா இவளுக்கு மட்டமா
மஞ்சக்கிழங்கு என்பது பட்டமா
வீணா வடிவம் வெண்ணையா
வீட்டில் சீம்பால் பண்ணையா
வீராயி தருவது பெண்ணையா
வீரன் நான்தான் கண்ணையா
பத்மினிக்கு இது பத்து மாசமா
புஷ்பம் போல் இவளது வாசமா
புதுமைப்பெண் என்றாள் வேசமா
பத்தரை மாற்று தங்கம் பாசமா
வேணி கிராமத்து தேவதையா
வேலை மறந்து போவதையா
வேதாஸ்ரீ நீரில் பாய்வதையா
வேணு ஆடு மேய்வதையா
இளவரசி அழகிய மொட்டையா
இன்று போட்டது புது சட்டையா
இருநூறு அடித்ததும் மட்டையா
இவனது ஊர் புதுக்கோட்டையா
கில்லர்ஜி அபுதாபி
புகைப்படத்தின் பசுமை இடம் கேரளம்
இது மாற்றியமைத்த சினிமாப்பாட்டா
பதிலளிநீக்குஇல்லை சும்மா எழுதிய புதுமெட்டா
ஆதரவு வோட்டு எல்லோரும் போட்டா
தடை செய்ய இதென்னா நீட்டா?
வாங்க ஜி அடடே கவிதை நன்று.
நீக்குபதிவை நானும் ரசித்தேன்
பதிலளிநீக்குபின்னூட்டப்பெட்டியை விரித்தேன்
எழுத்துகளை கயிறாய் திரித்தேன்
பின்னூட்டமிட்டு சிரித்தேன்.
நானும் தங்களது கருத்தை ரசித்தேன்.
நீக்குகாலைலயே சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு. ஸ்ரீராம் செம ஃபார்ம் ல இருக்கிறார்!! கவிதை மழை கொட்டுது! மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம்.
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கவிதை எதுகை மோனையாக அருமை. பசுமை நிறைந்த புகைப்படம் நன்றாக உள்ளது. கவிதை வரிகளும் அருமை. ரசித்தேன்.
புகைப்படத்தில் உள்ளவர்களுக்கு ஏற்ப உங்கள் மனதில் வந்த கவிதையா? கடைசி நாலு வரிகளுக்கு பொருத்தமாக ஒருவர் கீழே படுத்திருப்பதால் இதைக் கேட்டு விட்டேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ படத்தை பார்த்து எழுதிய கவிதைதான்...
நீக்குசம்பளம் வந்ததும் (கிம்பளமும் சேர்த்துதாங்க!!!) பசுமைக் கம்பளத்துல போய் - இப்படி ஹாங்க்...இப்படியான சிலர் உண்டு. இது சிவதாமஸ் அலியா அல்லது சிவாஸானு பச்சைக்கம்பளத்தில் தேடுகிறேன்! கீழே விழுந்துவேற கிடக்கிறார். சாம்பசிவம் எங்க போனாரோ இந்த ரெண்டையும் மேய்க்காம!!
பதிலளிநீக்குகீதா
வருக சிவாஸ் ரீகலாகத்தான் இருக்கணும் .
நீக்குதானா வந்த சந்தனமே ! பாடல் வரிகளைமாற்றி எழுதி இருக்கிறீர்களா ஜி?
பதிலளிநீக்குபாவம் புதுகோட்டை மக்கள். பச்சை கம்பளம் புதுக்கோட்டையில் இல்லையே ! அதனால் பச்சை கம்பளத்தை பார்த்தவுடன் மயங்கி சரிந்து விட்டாரோ . படக்கவிதை நன்றாக இருக்கிறது.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குபார்த்டுக் கொண்டிருந்தால் பாட்டு வரும் என்பது போல் உங்கள் கவிதை வாசித்த ஸ்ரீராம் அவர்களுக்கு கவிதை வந்தது போல் எனக்கும் வந்தது. ஆனால் இரண்டு வரிகளுக்கு மேல் நகரவில்லை. ஏதோ ஒரு ஆவேச மந்திரம் உங்கள் கவிதையில் ஒளிந்திருக்கிறது!
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகவிதை ரசனை.பச்சை கம்பள படமும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஉங்கள் புதுக்கவிதை நன்று. ஸ்ரீராம் அவர்களின் பதில் பாட்டுகளும் நன்று. ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்கு