தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 25, 2024

வடக்கோஸ்ரமா மடாலயம்

இடம் - வடக்கோஸ்ரமா தியான மடாலயம். அரவங்காடு.
 
வணக்கம் ஐயா வடக்கு நேசன் அவர்களே சமூக கட்டுக்காப்பாளரான தங்களை பேட்டி எடுக்க அனுமதி வழங்கியமைக்கு எங்களது காத்தாடி பத்திரிக்கையின் வாயிலாக முதற்கண் நன்றி. பேட்டியை துவங்கலாமா ?
வணக்கம் வடக்கின் வனவாசத்துடன் வரவேற்கும் உங்கள் வடக்கு நேசன்.

ஐயா உங்களுக்கு வடக்கு நேசன் என்று பெயர் வரக்காரணம் ?
நாங்கள் பரம்பரை, பரம்பரையாக சிவபக்தர்கள். எனது ஐயா சாம்பமூர்த்தி, சாம்பக்குளம் மடாதிபதியாக இருந்தார், எனது தந்தையார் சாம்பகிருஷ்ணன்,  சாம்பலூர் தேவஸ்தான அறங்கவலராக இருந்தவர், எனது இயற்பெயர் சாம்பசிவம். மரணத்தைக் குறித்து ஆராய்ந்து சிவனை தொழுது, அழுது எரிந்து சாம்பலாகி வடக்கே சிவனடி சேர்ந்து விட்ட காரணத்தால் வடக்கு நேசன் என்று எமக்கு நாமே நாமம் சூட்டிக் கொண்டோம்.
 
ஐயா புரிகிறது ஆனால் வடக்கே என்று சொல்கின்றீர்களே அப்படி என்றால் டெல்லியா ? அதாவது தாங்கள் பிஜேபி என்று சொல்கின்றீர்களா ?
அட ஞானசூன்யமே, நமீதாவுக்கும், சாமுத்திரிகா பட்டுப்புடவைக்கும் முடிச்சுப் போடும் உமக்கு என்ன மெய்ஞானம் இருக்கப் போகிறது ?
 
ஐயா வடக்கு என்பதின் அர்த்தம் என்னை அப்படி கேட்க வைத்தது ?
வடக்கு என்றால் திசையை குறிக்கும், நாளை நீ மரணித்து விட்டால் எந்த திசையை நோக்கி கொண்டு செல்லப்படுவாய் ?
 
அதாவது சுடுகாடு இருக்கும் திசையை நோக்கி...
அதேதான் சுடுகாடு வடக்கில்தானே இருக்கும், தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டி வைக்கப்படுவாய்.
 
ஐயா நீங்கள் சொல்வது பண்டைய காலத்தில் ஊரின் ஒதுக்குப்புறமாய் வடக்கு திசையில் இருந்து இருக்கும். இப்பொழுது சுடுகாட்டையும் தாண்டி கார்ப்பரேட் முதலாளிகள் வீட்டு மனைகளை போட்டு விற்கின்றார்களே அவர்கள் தெற்கு நோக்கிதானே வரவேண்டும் ?
அந்த அவல நிலையை உண்டாக்கியதுதான் காரணம் வீட்டின் பால்கனியில் இருந்து பிணம் எரிக்கப்படுவதை பார்க்கின்றனர். இதனால் இன்றைய மக்கள் நிம்மதி இழந்து வாழ்கிறார்கள். தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது என்று நமது முன்னோர் சொல்லி வைத்தார்கள்.
 
ஐயா இந்த வசனம் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுதானே ?
நீ என்னிடம் அரசியல் பேசி, எமக்கும் பிரதமருக்கும் பிரிவினையை உருவாக்க முயல்கிறாய்.
 
ஐயா நான் தங்களிடம் பேட்டி எடுக்கத்தான் வந்தேன்
பேட்டி எடுக்க வந்தாயா ? இல்லை தோ.மு.மை. கட்சியிடம் பெட்டி வாங்கி கொண்டு வந்தாயா ?
 
அப்படியானால் தங்களுக்கும், தோ.மு.மை-க்கும் தொடர்பு இருக்கிறதா ?
தம்பி தொடக்கம் முதலே சிண்டு முடியும் வேலை செய்கிறாய் நீ வாழவேண்டிய வயது நினைவு வைத்துக்கொள்.
 
ஐயா சமூகத்தை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதாக சொல்லப்படும் தாங்கள் இப்படி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுவது போல் பேசலாமா ?
தேளோட கொடுக்கிடம் விரலைக் கொண்டு போனால் கொட்டும்னு சொல்றேன் அது உனக்கு புரியலை.
 
இதுகூட தெரியாமலா நான் வளர்ந்துட்டேன்.
என்னோட அனுபவம்தான் உன்னோட வயசு.
 
ஐயா சமூக நலனை வேண்டி உங்களிடம் பயனுள்ள தகவல்களை தெரிஞ்சு எங்களோட காத்தாடி பத்திரிக்கையில வெளியிடுவதற்காகத்தான் நான் வந்து இருக்கேன். ஆனா நீங்க....
உன்னோட முதலாளி ஆத்தாடினு அலறப் போற சகுனம் உன்னால வந்துடுச்சு... போய் உங்க ஆசிரியர் காத்தமுத்துவிடம் சொல்லு காத்தாடி காத்தாடப் போகுதுனு உன்னோட பெயரென்ன ?
 
என் பெயர் காத்தவராயன், ஐயா கடைசியா ஒரு....
இதுவே கடைசி எழுந்து போகலாம்.
 
சொன்ன வடக்கு நேசன் எழுந்து கோபக்கனலோடு மடாலயத்தின் கிழக்கு திசையை நோக்கி நடந்தார், நிருபர் காத்தவராயன், ஒளிப்பதிவாளர் ஒண்டிப்புலி, உதவியாளர் உதயகுமாரோடு ஸ்டுடியோவுக்கு புறப்படத்தயாரானான்.
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
இடத்தோட பேரே அரவங்காடு அதனாலதான் அரைவேக்காடு மாதிரி பேசுறாங்கே...
 
சாம்பசிவம்-
காத்தவராயன் நட்டுவாக்கலி நாக்குலயே தேன் தடவுவான் போலயே...
 
Chivas Regal சிவசம்போ-
இந்த மடாலயத்துல ரமா யாருனு தெரியலையே... யாருட்டயாவது விசாரிக்கணுமே...

27 கருத்துகள்:

  1. படித்தேன், ரசித்தேன்,  இவர் யாரோட குறியீடு என்று புரியவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இது யாரையும் குறிக்காது.

      நீக்கு
  2. ஹா ஹா ஹா... நமீதாவுக்கும் சாமுத்ரிகா பட்டுக்கும்.... சுடு/இடுகாடு தாண்டியும் வீட்டு மனைகள்.... காலத்தினால் எத்தனையோ நடைமுறைகள் மாறிவிட்டன. பதிவு ரசித்துச் சிரிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நலமா ? தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பேட்டி என்று ஆரம்பித்ததுமே அங்கு வழக்கப்படியான பிரச்சனைகளும் துவங்கி விட்டனவே..! ஆகக் கூடி பேட்டி எடுப்பது என்பதின் மற்ற விபரங்கள் ஏதுமில்லாமலேயே பேட்டியை முடிக்க வேண்டிய நிலையையும் ரசித்தேன். பெரியவர்களின் பேட்டியெல்லாம் இப்படித்தான் போலும்....!:)) தங்களின் கற்பனை ரசனையை படித்து நானும் ரசித்தேன்.

    /சொன்ன வடக்கு நேசன் எழுந்து கோபக்கனலோடு மடாலயத்தின் கிழக்கு திசையை நோக்கி நடந்தார், /

    ஹா ஹா ஹா. வார்த்தை விளையாடல்களை ரசித்தேன்.

    இறுதியில் Chivas Regal சிவசம்போ அவரின் சந்தேக கணையை வீசி விட்டாரே.. :)) பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. இந்தப் பேட்டிக்குப் பின்னர் மாம்பழம் சாப்பிடுவது எப்படி போன்ற கேள்விகளுக்கே வடக்கு நேசன் பதில் அளித்துள்ளார் என்பது கொசுறு செய்தி.

    பதிலளிநீக்கு
  5. காத்தாடி பத்திரிக்கை நிருபர் காத்தவராயன் நேர்காணல் அருமை.
    மடலாயத்தில் ரமா என்றாரா? ராமா என்றாரா?
    அரவாங்காடு மக்கள் சிவ தாம்ஸ் அலியியிடம் சண்டைக்கு வர போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வடக்கோஸ்"ரமா" ஆகவே ரமா என்றுதான் சொல்கிறார்.

      நீக்கு
  6. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/register ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முன்பு முயற்சி செய்தேன் இணைய மறுக்கிறது நன்றி

      நீக்கு
  7. காலையில் நான் போட்ட கருத்து எங்கே?

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜி சிரித்துவிட்டேன்....நமீதா அண்ட் சாமுத்ரிகா பட்டு!!! பார்க்கறதை எல்லாம் சரியா பதிவுல கொண்டு வரீங்க!! பத்திரிகையின் பெயர் காத்தாடி அப்ப நான் சொல்றது எல்லாம் காத்தோட போயிடும்...எழுந்து நடைய கட்டுன்னு சொல்லாம அந்த ஐயா இம்புட்டு தூரம் பேட்டி கொடுத்ததே பெரிய விஷயம்தான் ஹாஹாஹாஹா

    அது சரி இதுல யாரையோ சொல்றீங்கன்னு தெரியுது யாருன்னுதான் பிடி கிடைக்கல. இப்ப ஏதாச்சும் செய்தி வந்துச்சா...உங்க கையில சிக்குறவர் கூட இப்ப தூர தேசத்துலல்லா இருக்காரு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவதாமஸ் அலிக்கும் ரீகலுல்லும் இருக்கு ஆப்பு...

      கீதா

      நீக்கு
    2. வாங்க படித்து ரசியுங்கள் சாமியார்களிடம் என்னை மாட்டி விடாதீர்கள்.

      நீக்கு
  9. எப்படியோ வக்கு நேசனிடமிருந்து தப்பித்து வந்ததே பெரிய காரியம். இனி ரமா எல்லாம் வேண்டாம் அவர் இவரை விட கொஞ்சம் தீவிரமானவராய் இருந்தால்? அப்படித்தான் தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. /// இப்பொழுது சுடுகாட்டையும் தாண்டி கார்ப்பரேட் முதலாளிகள் வீட்டு மனைகளை போட்டு விற்கின்றார்களே..///


    சுடுகாடே பிளாட்டுகளாகி.


    அதை விடுங்க...

    பத்து ஏக்கர் நிலத்தை வளைச்சிப் போட்டு அந்த நகர் இந்த நகர்.. ன்றான்..

    நகர்ன்னா கோயில் கொளம்.. அது இது எல்லாம் இருக்கணும் தானே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      //சுடுகாடே ப்ளாட்டு// ஆமாம் உண்மை கீழக்கரையில்....

      நீக்கு
  11. /// நட்டுவாக்கலி நாக்குலயே தேன் தடவுவான் போலயே...///

    அடடா... அருமை..

    பதிலளிநீக்கு
  12. கேள்விகளும் பதில்களும் - உங்கள் பாணியில் வெகு ஸ்வாரஸ்யம்! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. ஹா...ஹா....நல்ல பேட்டி சிரித்துக்கொண்டே படித்தேன்..உங்களுக்குத்தான் இப்படி யோசித்து எழுத வரும் .

    பதிலளிநீக்கு