தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 05, 2025

அகரம் எப்போ தகரமாச்சு ?

 

ணக்கம் சமீபத்தில் பொழுது போகாமல் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். அதாவது தமிழ் சினிமாவில் இவர்களில் எந்த ஹீரோ மக்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர் ? என்று கேட்டு இருந்தது. அதற்கு நாம் வாக்களித்தால் உடன் விடை வரும். அதன்படி நாமும் செய்யலாம் என்ற ஆசை.

மேலேயுள்ள நான்கு கூத்தாடன்களும் நான் டவுசர் போட்ட காலத்திலிருந்து நமக்கு பழக்கம் இல்லாதவர்கள். இருப்பினும் பொது அறிவின் மூலம் இவர்களை சற்றே அறிந்திருந்தேன். அதன்படி இவர்களில் இதற்கு தகுதி உடையவர் இவராகத்தான் இருக்கும் என்று நானும் கணித்து இவருக்கு வாக்களித்தேன். காரணம் இவருடைய அப்பா நெடுங்காலமாகவே ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருவது உலகறிந்த விடயமே...

இவர் தமிழச்சியை மணக்காமல் தமிழ்நாட்டுக்கு பை பை காட்டி மும்பைக்கு பறந்தாலும் செய்த நல்ல காரியத்தை மறத்தல் கூடாது. மேலும் இவரது தும்பி தமிழ் இஷ்டமா ? தெலுகு இஷ்டமா ? என்ற நிருபரின் கேள்விக்கு (நாக்கு தெலுகு காவாலி) எனக்கு தெலுகு பிடிக்கும் என்று சொன்னான் என்பதற்காக இந்த நல்ல செயல்களை மறத்தல் கூடாது அல்லவா... இந்த குடும்பம் அகரம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி பலநூறு மாணாக்கர்களின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளது.

இதன் காரணமாக எனது பொது அறிவு இவருக்கு வாக்களிக்க சொன்னது. அதன்படி நானும் பொத்தானை சொடுக்கி விட்டு விடையை அறிய காத்திருந்தேன் விடையும் வந்தது நான் சூர்யாவுக்கு வாக்களித்தேன். இதில் முதலிடம் விஜய் எதற்காக ? சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல் வழங்கியதற்காகவா ? அடப்பாவிகளா... இத்தனை ஆண்டுகளாக அகரம் செய்ததை மறந்து விட்டீர்களா ? அதாவது இவன் அவனுடைய ரசிகன் என்றால் அவன் என்ன செய்தாலும் பரவாயில்லை இவனுடைய வாக்கு அவனுக்குத்தான் இதுதான் எழுதப்படாத சட்டம்.

அடக்கூதரைகளா... இப்படித்தானடா அரசியல் தொண்டர்களும் சிக்கி வாழ்கின்றீர்கள். உங்களுக்கெல்லாம் சுயசிந்தனை கிடையாதா ? எனக்கு சூர்யா உறவினர் கிடையாது இங்கு எவனை வைத்தும் எனக்கு லாபமில்லை. விஜயை அரசியல் தலைவனாக போற்றுகின்றீர்கள், தாய்-தந்தையை விலக்கியாச்சு, மனைவி, குழந்தைகளை ஒதுக்கியாச்சு, எந்தெந்த நடிகையுடனோ ஒட்டுதலும், ஒரசுதலுமாக வாழ்க்கை. நாட்டை ஆள நினைக்கும் அரசியல் தலைவனுக்கு ஒழுக்கம் வேண்டாமா ? இதுவரையில் ஆண்டவர்களுக்கு உண்டா ? என்று எம்மிடம் கேட்கப்படாது.

அதே போல் மய்யம் தலைவருக்கும் நாட்டை ஆளும் தகுதியில்லை. காரணம் இவ்வளவு காலமும் துணையுடன் வாழும் இவருக்கு தனது மகள்களுக்கு வாழ்க்கைத்துணை வேண்டும் என்பதை அறியாத அப்பாவியாக இருக்கின்றாரே... இவரா தமிழ் நாட்டு சகோதரிகளின் வாழ்க்கைக்கு பாதுகாப்பாக இருப்பார். ஆனால் நல்லவேளை இங்கு அவரையும், திரு.சிவாஜி அவர்களையும் கேட்கவில்லை திரு.சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்நாளில் சுமார் முந்நூற்றி பதினைந்து கோடிக்கு மேல், மக்களுக்கு உதவிகள் செய்திருப்பதாக தற்போது நிறைய தகவல்கள் வருகிறது.

அவர் செய்த உதவிகள் தெரியாமலேயே இருந்திருக்கிறது, மேலும் அவரை கஞ்சன் என்றும் பலர் சொல்லிக் கொண்டு இருந்திருக்கின்றார்கள். அந்த மடமை வட்டத்தில் நானும் இருந்திருக்கின்றேன். சொன்னதற்காக வருந்துகிறேன். அவர் ஆன்மா மன்னிக்கட்டும். திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் செய்தது அப்பொழுதே விளம்பரமாகி கொண்டு வந்து இருக்கின்றது. நடிகர்களில் திரு.ராகவா லாரன்ஸ் மற்றும் சின்னத்திரை நடிகர் திரு.பாலா அவர்கள் நிறைய செய்கின்றார்கள். அவர்கள் நலம் பெற வாழ்த்துவோம்.

பணத்தை கோடி, கோடியாக வைத்திருக்கும் நடிகர், நடிகைகளே... இருப்பதில் சிறிய பகுதியை ஏழைகளுக்கு உதவுங்கள். நீங்கள் நேரடியாகவே சென்று விளம்பரம் தேடிக்கொண்டாலும் பரவாயில்லை. சென்னையிலேயே இருக்கும் சிவாநந்தா குருகுலம் மற்றும் ஸ்ரீ சாரதா சக்தி பீடத்துக்கு செல்லுங்கள். அள்ளி கொடுக்க வேண்டாம் கிள்ளிக் கொடுங்கள். உங்கள் சந்ததிகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் அல்லது நீடிக்கும். இமயமலையில் கிடைக்காத நிம்மதி காட்டாங்குளத்தூரில் கிடைக்கும்.


கில்லர்ஜி தேவகோட்டை

16 கருத்துகள்:

  1. உண்மையாக உதவுபவர்கள் வெளிச்சம் போட்டு காட்டாமல், உதவி கொண்டுதான் இருக்கிறார்கள். வெளியில் வருவதில்லை அவ்வளவுதான். இவர்கள் எல்லாம் விளம்பரத்துக்காக செய்பவர்கள். ஏதோ அப்படியே செய்யட்டும் என்றும் சில சமயம் தோன்றும்!

    பதிலளிநீக்கு
  2. இவனுவள்ல எவனுமே உதவி செய்ததில்லையே.. சூர்யாகூட தாவூத் போன்றவர்களின் பணத்தை வெள்ளையாக்க உதவியதாகத்தான் படித்தேன். இதில் ஜோதிகாவுக்கும் பங்கு உண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. கில்லர்ஜி, இவர்களில் யாரும் உதவுவதில்லை என்பதுதான் உண்மை. உதவுபவர்கள் தங்களை ரொம்ப வெளிச்ச வட்டத்துக்குள் போட்டுக் கொண்டு விளம்பரம் போட்டுச் செய்ய மாட்டார்கள் சத்தமில்லாமல் வலது கைகொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியாமல் தான் செய்கிறார்கள். செய்வார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  4. லாரன்ஸையும், பாலாவையும் சேர்க்கவே வேண்டாம் எந்த லிஸ்டிலும் அவங்க பாட்டுக்கு நல்லது செய்யட்டும். தொடரட்டும். இப்படி ஓட்டுச் சேகரிப்பு எல்லாம் தேவையே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்கிறார்கள்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. இந்த மாதிரி உதவிகள் செய்பவர்களைப்பற்றி நானும் யூடியூபில் படித்து தெரிந்து கொண்டுள்ளேன். இப்போது நீங்கள் தெரிவித்த பல தெரியாத செய்திகளைப் பற்றியும் படித்து தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு இருக்கும் வசதிகளுக்கு இம்மாதிரி அவர்கள் இவ்வாறு உதவிகள் செய்வது சிறந்தது என நினைக்கிறார்கள். செய்யட்டும்.அவரவர்களுக்கு முடிந்த நல்லதை செய்தால் நல்லதுதானே..! ஆனால், இதில் மக்கள் முழுமையாக ஏமாறாமல் கவனத்துடன் இருக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு


  6. நம்ம ஜீ மட்டும்தான் 100 கேமராமேன்களோட எந்த விளம்பரமும் இல்லாமல் சமுக சேவை செய்கிறார்.. சூர்யா மட்டும் விளம்பரத்திற்காக் அதுவும் தாவுத் கிட்ட இருந்து பணம் வாங்கி விளம்பரத்திறகாக் நடிக்கிறார்... எங்கே இருந்து இந்த வாட்ஸ்ப் நீயூஸை படிக்கிறாங்களோ. ஏய்யா அவன் தாவுத்த் இப்பராகிமிடமிருந்து பணம் வாங்கியிருந்தால் சூர்யாவை இந்நேரம் உள்ள வைச்சு நொங்கு எடுத்து இருக்கலாம்தானே அந்த லவைற்கு கையளாகத அரசா நாட்டை ஆள்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. உதவும் உள்ளங்கள் எப்போதும் உதவி கொண்டு இருப்பார்கள்.
    நடிகர், நடிகைகளும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களால் முடிந்த நல்ல காரியங்களை செய்து இறவா புகழ் அடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அஜித் ஒரு வருடத்திற்கு 15000 பேர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய ஆகும் செலவை ஏற்றுக் கொள்கிறாராம். அதைத் தவிரவும் உதவி இயக்குனர்களுக்கு தேவைப்பட்ட உதவியை செய்வதாகவும் செய்திகள் வருகிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

      அதேவேளை இது புரளி என்றும் சொல்கிறார்கள்.

      நீக்கு