தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 14, 2025

காத்திருந்து...

 

வள் மீது ஆசை கொண்டு

காதல் கடிதம் எழுதினேன்

கொடுப்பதற்கு தகுந்த நேரம்

பார்த்து காத்திருந்தபோது...

 

ர்தினம் தாயுடன் காய்கறி

கடைக்கு போனவளை கண்டு

வீட்டுக்கு ஓடிச்சென்று எழுதிய

கடிதத்தை எடுத்து வந்தேன்.

 

வந்து பார்த்தால் கடையை

மூடி விட்டனர் பந்த்தாம்

நமக்கு நேரம் சரியில்லை

ஆகவே திடீர் பந்த் வருகிறது

 

ற்றொரு முறை தேவகோட்டை

பேருந்தில் திருமணத்துக்கு

போனேன் முன் இருக்கையில்

அவள் ஆனால், அப்பாவோடு

 

ச்சே யாராவது கூடவே வருவது

என்ன பழக்கம் கோபம் வந்தது

என்னவளை கோபப்படலாமா...

ச்சே தவறு மாபெரும் தவறு

 

அன்று தியேட்டரில் பார்த்தேன்

சரியென்று கடிதத்தை எடுத்தால்

அவளது அண்ணன் குறுக்கே வர

குடும்பத்தோடு வந்து இருக்கிறாள்.

 

வீட்டில் எனக்கு பெண் பார்க்க

ஆரம்பித்தார்கள் புகைப்படம்

காட்டினார்கள் வேண்டாம்

என்றேன். காலம் ஓடியது

 

மற்றொரு நாள் ஸ்கூட்டியில்

வேறொரு புது ஆளுடன் வந்து

இறங்கினாள் கையில் கடிதம்

இருந்தது கொடுப்பதற்கு சூழல்

 

சரியில்லை யாராக இருக்கும்

இவர் புதிய நபராக இருக்கிறதே

யாரென்று கேட்போமா... கூடாது

உறவினராக கூட இருப்பாரோ ?

 

லுவலக வேலையாக மும்பை

வரை போன எனக்கு திடீரென்று

ரயில் விபத்தில் மயக்கமானேன்

கண் விழித்தபோது கோவாலு...

 

என்னை தெரியுதாப்பா... அம்மா

அழுது கொண்டு நின்றார்கள்

ஓஹோ சுய நினைவு மறந்து

இன்று விழித்து இருக்கிறேன்

 

சகஜ நிலைக்கு திரும்பி வேலை

செய்யும் அலுவலகம் சென்றேன்

மாலை திரும்பும்போது அவள்

ஆஹா கடிதம் எங்கே போனது

 

ரவாயில்லை புதிய கடிதம்

எழுதினேன் மீண்டும் மாலை

காத்திருந்தேன் அதோ அவள்

யாரது பையன் கொடுப்போமா

 

யோசிக்கும் போதே கடந்து

விட்டாள் ச்சே சந்தர்ப்பம்

போய் விட்டதே மறுநாள்

மாலை மீண்டும் காத்திருந்து

 

இதோ நெருங்கி விட்டேன்

இன்றும் சிறுவனோடு யார்

என்று கேட்போம் ஹலோ

காவியா... சௌக்கியமா... ?

 

நின்று ஏறெடுத்து பார்த்தவள்

நீங்கள் யாரென்று தெரியலை

என்ன விசயம் என்றாள் காவியா.

நான் கடிதத்தை கொடுப்போமா ?

 

என்று நினைத்து எடுத்தவன்

கொடுக்கும் முன்பு சிறுவனை

யாரென்றேன் ? எனது பெயரன்

என்றதுதான் தாமதம் மனதுள்

 

இடி விழுந்தது போன்று நெஞ்சை

பிடித்து உட்கார்ந்து விட்டேன்

ஐயா நீங்கள் யார் ? நான் பார்த்தது

இல்லையே... ஐயாவா ? அடிப்பாவி

 

யார் நீங்க.. உங்கள் பெயரென்ன

நான்... கி.... கி... கி... கி... கி...

கிருஷ்ணனா ? என்று கேட்டாள்

கிறுக்கனானு கேட்கவில்லையே...

 

அடிச்சிறுக்கி மகளே வருசம்

பூராம் உனக்கு பின்னாலேயே

வந்தவனை யாரென்று கேட்கிறே

உனக்கு கல்யாணம் ஆகிருச்சா ?

 

கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை

திறந்து அவளது பெயரன் எனக்கு

புகட்ட சற்றே ஆசுவாசமாகியது.

கூடி நின்றவர்கள் ஆட்டோவை

 

பிடித்து என்னை தூக்கி அமர்த்தி

விட்டார்கள் அறிந்த ஆட்டோதம்பி

வீட்டில் கொண்டு வந்து சாவியை

வாங்கி கதவைத் திறந்து விட

 

முகப்பின் மேலே அப்பா-அம்மா

மாலையோடு நின்று சிரித்தனர்

உள்ளே சென்று கண்ணாடி முன்

நின்று பார்த்தேன் தலை எல்லாம்

 

புதுமையாக தெரிகிறதே ஏன் ?

குழப்பத்தோடு மீண்டும் பார்க்க

ஆஹா இதோ புரிந்து விட்டது

தலை முழுவதும் வெள்ளி முடி.

 

கில்லர்ஜி தேவகோட்டை

ChivasRegal சிவசம்போ-

சரியாப்போச்சு இப்பவாவது தைரியமா கடிதத்தை கொடுக்க நினைத்தாரே அப்புறம் கொள்ளுப் பெயரன் வந்து கொல்லப் போறான்.

 

சாம்பசிவம்-

கி... கி... கி... கி... கி... அடடே... இது எந்தப் பெயராக இருக்கும்னு தெரியலையே....

17 கருத்துகள்:

  1. அதுசரி, கண் விழிக்கும்போது அம்மா சொல்லவில்லையா?  ஆனாலும் என்ன முடிவு என்று யூகிக்க முடிந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அம்மா பழையதை கிளறவேண்டாம் என்று நினைத்து இருக்கலாம்.

      நீக்கு
  2. வயதோடு வந்தாலும் காதல்...  அது வயதாகி வந்தாலும் காதல்... 

    ஆனால் அவள் புருஷன் உதைக்க வராமல் இருக்கவேண்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதுதான் முக்கியம் ஜி

      நீக்கு
    2. நல்ல வேளை.. வயத்தோடு இருக்கறவள் மீது வந்தாலும் காதவ்னு ஸ்ரீராம் எழுதாம இருந்தது அப்பாடான்னு இருந்தது

      நீக்கு
  3. "காத்து இருந்து காத்து இருந்து காலங்கள் போனதம்மா" பாடல் நினைவுக்கு வந்தது.
    வெகு காலம் சுயநினைவு இல்லாமல் கோமாவில் இருந்தாரா கோவாலு, அடபாவமே!
    பாலசந்தர் ஒரு படம் எடுத்தார் சொல்லத்தான் நினைக்கிறேன் என்று கதாநாயகன் காதலை சொல்ல காத்து, காத்து, காத்து கொண்டே இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்லா எழுதியிருக்கீங்க. ஆனால் சந்தேகம் வருது. பிள்ளைகுட்டி பெத்தவளுக்கும் புதுப் பொண்ணுக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிடுமா?

    இருந்தாலும் தீவிர காதல்தான். அவங்க பெண்ணிடம் கடிதத்தை நீட்டாதவரை சரிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகத தமிழரே ஒருவேளை அந்த பெண்மணி நதியா"வைப் போல் இருக்குமோ ?

      நீக்கு
  5. கில்லர்ஜி நல்லாருக்கு.

    அந்தப் பெண்ணிற்கு வயசே ஆகலையோ...இல்லை டை அடிச்சிருக்கும் போல...

    காதல் மயக்கத்துல கண்ணு மறைச்சு அது கூடத் தெரியாம ....அவ எப்பவுமே சின்னப் பொண்ணு மாதிரி கண்ணுல பட்டிருக்கு பாருங்க!

    கடைசில இப்படிக் கை கூடாம போச்சே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் காதல் மோகம் கண்ணை மறைத்து மண்ணை அள்ளி போட்டு விட்டது போல....

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களின் கற்பனை காதல் (கற்பனையா? உண்மையா?) கதை நன்றாக உள்ளது. நேற்றுதான் எ. பியில் அதன் ஆசிரிய சகோதரர் "காதலில் விழுந்தேன்" என்றார். "சாம்பசிவம் கி... கி... கி... கி... கி... அடடே... இது எந்தப் பெயராக இருக்கும்னு தெரியலையே...." என்றதும் நீங்களுமா என கேட்கத் தோன்றுகிறது. ஹா ஹா ஹா.

    ரயில் விபத்தில் கோமாவில் விழுந்ததில், ஒருவேளை காலங்கள் கடந்தது தெரியவில்லையோ ? ஆனால் எழுந்ததும் ஆபீஸுக்கு சகஜமாக சென்று வந்திருக்கிறாரே. யாரும் அவர் வந்ததை கவனிக்கவில்லையோ.?
    எப்படியோ காலங்கள் கடந்தும் இன்னமும் காதல் நினைவுகளில் வாழும் அவரை வாழ்த்துவோம். பதிவு படிக்க நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      இந்த வம்பில் என்னை இணைக்க வேண்டாம். எனக்கு எதுவும் தெரியாது.

      நீக்கு
    2. /இந்த வம்பில் என்னை இணைக்க வேண்டாம். எனக்கு எதுவும் தெரியாது./

      :))))

      நீக்கு
    3. அவரை கி.. கி... கி...னு சொல்லாமல் நெ... நெ... நெ...னு சொல்ல வைத்து இருக்கலாமோ...

      நீக்கு