தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 20, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன ?


நான் ஒரு தப்பும் செய்யலை... நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் ஏதோ முன்பகை காரணமோ, என்னவோ... என்னை இந்த கொக்கி சிக்கல்ல கோர்த்து விட்டுட்டாரு... நாம ஆஸ்ட்ரேலியாவுல இருக்கோம், அவரு அபுதாபியில இருக்காரு, தூரமா இருக்கிறதால ஒண்ணும் செய்ய முடியாதுனு நினைச்சிட்டாரு... அவரும் ஒருநாள் நமது இனிய இந்தியாவுக்கு வந்துதானே ஆகணும்.... இதுதான் அந்தச் சிக்கல் இந்த பத்து கேள்விக்கும் நான் பதில் சொல்லணுமாம்....


1. உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் ?

அன்றைய சூழ்நிலையில் எனக்கு இருக்குற வலைப்பூ நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து வித்தியாசமாக இருக்கட்டுமென ஆளுக்கு ஒரு பவுன் மோதிரம் மாட்டி விடுவேன்.


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ?

முடியாத காரியங்களும், தெரியாத விசயங்களும் என்னை அணுகவே கூடாதுனு ஒரு லட்சியத்தோட வாழுறவன் நான் ஆனால், முடியாத காரியங்கள் முக்கால்பாகம் பாக்கியிருக்கு... தெரியாத விசயங்கள் முழுசாவே பாக்கியிருக்கு ஆகவே அது எப்படியென ? கற்றுக்கொள்ள விரும்பி முயற்சிக்கிறேன்.


3. கடைசியாக சிரித்தது எப்போது எதற்காக ?

எனது கல்யாணத்திற்கு முதல் நாள். நாளை முதல் முடியாதோ ? என்ற ஐயத்தில்....


4.24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன ?

இனிமேல் பழங்கால வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு தாமஸ் ஆல்வா எடிசன் என்றொரு மனிதரை அனைவரும் உடனடியாக மறக்க வேண்டுமென கோரிக்கை வைப்பேன்.


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன ?

உங்கள் வாழ்க்கையின் கடைசி காலம்வரை ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்தே வாழுங்கள் EGO என்ற வார்த்தையை ஆங்கில அகராதியில் இல்லை என நினையுங்கள் என சொல்வேன்.


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியும் என்றால்

எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள் ?

வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியை நிறுத்த வைத்து பழங்கால வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வைத்து ஒவ்வொருவரும் பழையபடி 100 ஆண்டுகள் வாழ்வதற்கு வழிவகுப்பேன்.


7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள் ?

எப்பொழுமே எனது நண்பரிடம்தான் (அதாங்க என்மனசாட்சி) இது கடைசிவரை நீடிக்கும்.


8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?

கடைசிவரை அவரின் வாயாலேயே தகவல் தவறானது எனசொல்ல வைப்பேன் 90 சதவீதம் அன்பால் முடியாத பட்சத்துக்கு கடைசியாக செவுல் தெறிக்க ரெண்டு விட்டு.


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?

தனது அம்மா இறக்கவில்லை தந்தை உருவில் வாழ்கிறாள் என உனது குழந்தைகள் நினைக்கும்படி வாழ் என அறிவுருத்துவேன்.


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?

அன்று, மட்டுமல்ல... இன்று மட்டுமல்ல... என்றுமே எழுத்துதான். (கடைசிவரை)


-Killergee
கடைசியாக ஒரு பத்து நபர்களை இதுல கோர்த்தும் விடணும்னு கண்டிஷனும் போட்டுடாரு... வேற வழி.... நீங்கதான்...

திண்டுக்கல் தனபாலன் http://dindiguldhanabalan.blogspot.com/
Dr B. ஜம்புலிங்கம் http://drbjambulingam.blogspot.ae/
வே. நடனசபாபதி http://puthur-vns.blogspot.ae/
ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் http://paapunaya.blogspot.ae/
துரை செல்வராஜூ http://thanjavur14.blogspot.ae/
தி. தமிழ்இளங்கோ http://tthamizhelango.blogspot.com/


61 கருத்துகள்:

 1. சிறப்பான பதில்கள்! நம்மளையும் கோர்த்து விட்டுருக்காரு! இனிமேதான் பதிவு தேத்தனும்!

  பதிலளிநீக்கு
 2. நீங்க அவருட்ட மாட்டுனதாலதான் எங்கிட்டே தப்பிச்சீங்க....

  பதிலளிநீக்கு
 3. ஆஹா, ஒரு பவுன் மோதிரம் குடுக்கப்போறிங்களா?
  அப்ப முதல் கேள்வி மட்டும் கொஞ்சம் மாத்திக்கலாம் - அடுத்த பிறந்த நாளை எப்படி கொண்டாடப்போகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் பொறுமையாக இருங்கள், பிப்ரவரி 30 ம்தேதி அழைப்பிதழ் அனுப்பத்தொடங்குவேன்.

   நீக்கு
 4. என்னுடைய அழைப்பை ஏற்று அருமையான பதில்களை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா6/20/2014 4:59 PM

  வணக்கம்
  ஐயா.

  நல்ல கேள்வியும் அதற்கான பதிலும் சூப்பர்.... நல்ல காலம் இதில் நான் பங்கு பெறவில்லை..
  பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே எனது 38 நபர்களின் குலுக்கல் சீட்டில் தங்களின் பெயர் வரவில்லை அதனால் இருப்பினும் வேறொருவரிடம் கண்டிப்பாக சிக்குவீர்.

   நீக்கு
  2. இப்போ கிரேஸ் கிட்ட சிக்கிட்டார்ல :))

   நீக்கு
 6. நான் எந்த ஒரு தப்பும் செய்யலகய்யா.........நண்பர் கில்லர்ஜீதான்..எதுக்கு வேல இல்லாம கனணிய தட்டிக்கிட்டு இருக்கீரு.... என்னுடன் வாங்க...ஒரு பவுன் மோதிரம் இலவசமாக வாங்கிட்டு வரலாம்னு சொன்னாரு.. தங்கத்துக்கு... ஆசைபட்டு ..... வந்தேன். அவரு...என்னய பத்து பேருல ஒருத்தரா கோர்த்து விட்டுட்டாருங்க அய்யா..!!!!

  பதிலளிநீக்கு
 7. ஃஆப்பர் போட்டாத்தானே, ஆப்புடுறீங்க....

  பதிலளிநீக்கு
 8. அதென்னங்க பிப்ரவரி 30. பிப்ரவரி மாசத்துக்கு31 இல்ல?

  பதிலளிநீக்கு
 9. ஹி,,, ஹி,,, அன்னைக்கு வெள்ளிக்கிழமை நல்லநாள் நவமி வேற அதுனாலதான்.....

  பதிலளிநீக்கு
 10. விரைவில் தொடர்கிறேன்... (லாம்...) ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ என்வேலை முடிஞ்சுருச்சு.

   நீக்கு
  2. புடிச்சு, படிச்சேன், நானும் ஒரு பாட்டு படிச்சேன்...
   படம் - கரகாட்டக்காரன்.

   நீக்கு
 11. actually நீங்க என்கிட்டே மாட்டிருக்கணும். எப்படியும் நம் ஆளுங்க கோர்த்திடுவாங்கனு நம்பினேன். சொக்கன் சகோ என் நம்பிக்கையை காப்பாத்திட்டார் :)) சகோ நெஜமாவே பதில்கள் சூப்பர் .அதிலும் ஒன்பதாம் விடை டச்சிங் சகோ:))

  பதிலளிநீக்கு
 12. நன்றி சகோதரி அந்த, ஒன்பதாம் விடையில் என்வாழ்வு பந்தப்பட்டது சகோதரியே.... ஆகவே இயல்பாய் வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுபவத்தில் பாடம் படிப்பவர் எத்தனை பேர்:(
   ஆனாலும் :(( நான் படித்ததிலேயே இந்த விடைதான் இந்த கேள்விக்கு மிக பொருத்தம்!!
   http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post_8.html

   நீக்கு
  2. நன்றி சகோதரி. என்இமைகள் ஒருநொடி பனித்தது.

   நீக்கு
 13. உங்களுடைய 100 வது பிறந்தநாளை நீங்கள் நிச்சயம் கொண்டாடுவீர்கள் ஆனால் அப்போது நான் இருப்பேனா என்பது சந்தேகம் அதனால் அப்போது தரும் மோதிரத்தை நீங்கள் இப்போது தந்தால் சந்தோஷமாக இருக்கும். அதனைச் செய்வீர்கள் என நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா நான் மோதிரம் கொடுப்பதே அடுத்த 200 வது வயதுவரை நான் வாழ்வதற்க்கு நீங்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்வற்க்குத்தான் இப்போதே கேட்டால் எப்படி ? நான் 100 வயதுவரை இருப்பேனு கியாரண்டி கார்டு வாங்கி ஸ்டேட்ஸ்ல இருக்கிற இந்தியன் எம்பஸி ஸ்டாம்ப் அடிச்சு எனக்கு அனுப்புங்க உடனே ரெண்டு மோதிரம் கூரியரில குதித்து வரும் உங்க முகவரிக்கு.

   நீக்கு
 14. உங்கள் பதில்கள் அனைத்தும் அட்டகாசம் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி ஐயா நாரதரின் கலகம் நன்மையில் முடியட்டும்.

   நீக்கு
 15. அப்பாடா!..
  ஒருவழியாக - நானும் பரிட்சை எழுதி விட்டேன்..
  (சும்மா தானே இருக்கிறீங்க..) வந்து ஒரு தரம் பார்த்துடலாம் தானே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை மாட்டிவிட்டதே நான்தானே பார்க்காம இருப்பேனா.....( படிக்காமல்)

   நீக்கு
 16. பதில்கள் சுவையோ சுவை.

  பணிவான வேண்டுகோள். தவறாக நினக்காதீர்கள்.

  உண்மையிலேயே சில நாட்கள் மீண்டும் வெளியூர்ப் பயணம்.

  அன்புகொண்டு பொறுத்துக்கொள்ளுங்கள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா, அவசரமில்லை லேட்டா வந்தே கொடுத்தாலும் பதிலை லேட்டஸ்டா கொடுப்பீங்க எனக்கு தெரியும்.

   நீக்கு
 17. நல்ல கேள்விகள். அதற்கேற்ப நல்ல பதில்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரியே தங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்.

   நீக்கு
 18. பதில்கள் அனைத்தும் அருமை. நான்காவது பதிலைப் படித்து சிரித்துவிட்டேன், எடிசனை மறக்கவேண்டுமென்று சொன்னது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி, உலகிற்கே அற்புதமான விசயத்தை கொடுத்த ஒருமனிதரை மறக்கச்சொன்னது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதோ.... அதை எழுதும்போது நான் அழுது விட்டேன் தெரியுமா ? (காரணம் பக்கத்தில் ஒருவன் உள்ளியை உறித்துக்கொண்டு இருந்தான் ஹி...ஹி...)

   நீக்கு
 19. அசத்தலான பதில்கள். வாழ்த்துக்கள் சகோ....! ஆமா எப்போ உங்களுக்கு 100 வது பிறந்தநாள் வரும் என்னையும் கூபிடுவீங்க இல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக ? அழைப்பிதழ் அனுப்புவேன் சகோதரி.

   நீக்கு
 20. " நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கிறேன்... "

  அப்பாடா... மேட்டர்ங்கவும் ஏதோ மோகனாவின் மோகினியாட்டம், மோகனின் மோகமுள் மாதிரி சாமானியனின் சல்லாபங்கள் அப்படி இப்படின்னு காமெடி பண்ணிட்டீங்களோன்னு பயந்துடேன் ஜீ !! ஹீ.. ஹீ...

  மிக அருமையான பதில்கள் ! இன்னைக்கே நம்ம பேட்டியை கொடுத்துடறேன்....

  அப்புறம், அந்த ஒரு பவுன் மேட்டரை நான் கோர்த்துவிடற பத்து பேருல ஒவ்வொருத்தர் பதிவு எழதறப்பவும் எனக்கு ஒரு பவுன் கிடைக்கற மாதிரி திட்டம் எதுவும் கிடையாதுங்களா ?!!!!!!!!!!!!!!

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க யோசனை மஞ்சிவாடுதான்... போலயே
   எப்படியோ எனக்கு ஒரு தலைப்பு கெடைச்சுப்போச்சு, இதனால் அறிவிப்பது என்னவென்றால்? ''சாமானியனின் சல்லாபங்கள்'' தலைப்பு எனக்கே சொந்தம் தகிட... தகிட...

   நீக்கு
 21. பதில்கள் எல்லாம்.....சட சட என வந்திருக்கிறது அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கே ? 10 ந(ண்)பர்கள் கிடைக்க மாட்டார்களோ ? என்ற அவசரத்தில் அள்ளித்தெளித்தது... பாராட்டுக்கு நன்றி சகோதரியாரே...

   நீக்கு
 22. பேட்டி ஓகே ஜீ ! நம்ம வலைப்பக்கம் வாங்க !!!

  பதிலளிநீக்கு
 23. இதோ கிளம்பிட்டேன்யா.... கிளம்பிட்டேன்யா....

  பதிலளிநீக்கு
 24. முத்துக்கு முத்தாக
  பத்துக்குப் பத்தாக
  கேள்வி - பதில்
  நன்றாக இருக்கிறதே!

  நாளைக்கே என் பதிலைத் தருகின்றேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா கண்ணை கணினியில் வைத்து காத்திருக்கிறேன்.

   நீக்கு
 25. எப்படியோ என்னை இதில் மாட்டிவிட்டீர்கள். தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். தங்களின் பதில்களை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் முயற்சிக்கிறேன் என்பதெல்லாம் பொய்யான வார்த்தை ஐயா, காத்திருக்கிறேன்.... சீக்கிரம் சீசன் 2 ஆரம்பித்து விடப்போகிறார்கள்.

   நீக்கு
 26. பாருங்க என் பதிலைப் பாருங்க
  இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?
  http://eluththugal.blogspot.com/2014/06/blog-post_8953.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னூட்டம் இட்டுதான் வருகிறேன், அருமையான பதில்கள்.

   நீக்கு
 27. முதலில்..தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பரே! எல்லாம் இந்த டெக்னாலஜினாலதாங்க.... நெட்டு அப்பப்ப போயிடுது நம்மகிட்ட கோச்சுகிட்டு.....கணினி மெமரி பிரச்சினை வேற....அதனால...நீங்க கொல்லியிருக்கிற பதில்கள்ல அந்த பழைய கால வாழ்க்கை சூப்பர் ங்க.....4, 6, 7, 9 மிகவும் சூப்பர்.......மாட்டிக்கிடாலும்.....நல்லாவே முடிச்சை அவிழ்த்துவிட்டிருக்கீங்க நண்பரே! எல்லாரும் இப்படி நல்ல அழகா அவுத்து விட்டிருக்கீங்களே!

  பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 28. தாங்கள் இலக்கத்தை குறித்து கருத்துரை இட்டது, மனதுக்கு நிறைவாக இருக்கிறது நண்பரே... அந்த அளவுக்கு வார்த்தைகளை நேசித்தது எமக்கு சந்தோசமே.

  பதிலளிநீக்கு
 29. எனக்கும் அந்த ஒரு பவுன் மோதிரம் உண்டு தானே? ;-)

  பதிலளிநீக்கு
 30. இன்விடேசன்ல தங்களுடைய பேரை எழுதிட்டேன்.

  பதிலளிநீக்கு
 31. 1,3,4 போன்ற ஒரு சில கேள்விகளுக்கு நகைச்சுவையாய் பதில் சொல்லியிருந்தாலும் பெரும்பாலான கேள்விகளுக்கு வெகு சிரத்தையாய் நேர்மையாய் பதில் சொல்லி மனம் தொட்டுவிட்டீர்கள். பாராட்டுகள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 32. தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி சகோதரியாரே....

  பதிலளிநீக்கு
 33. அதெப்படி கில்லர்ஜி,மூன்றாவது பதில் என் பதில் போலவே இருக்கிறதே !

  பதிலளிநீக்கு
 34. பகவான்ஜீயும். கில்லர்ஜீயும், சகோதரர்கள் என்பதால்கூட இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 35. அந்த பத்தில் தாங்களும் சேர்ந்துவிட்டீர்களா? தங்களின் பதில்கள் ரசிக்கும்படியாக இருந்தன. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி ஐயா, தங்களின் 10 பதில்களை எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
 36. வணக்கம் சகோதரரே!
  உறவின் வீட்டு விஷேடங்களுக்காக, இரு வாரங்கள் வெளியூர் பயணம் முடிந்து வந்திறங்கியவுடன், அறிந்த ஒவ்வொரு வலை தளத்திற்கும் வந்து பார்த்ததில், உங்கள் தளத்திற்கு வந்ததும், சற்று அதிர்ச்சி! நட்பு வட்டத்தில் “என்னையும்” மதித்து கெளரவித்தது சந்தோசமாக இருந்தது. ஆனால், ஒரு கேள்விக்கே பதிலளிக்க தெரியாத என்னிடம் பத்து கேள்விகளா? இனி முயன்று பதிலளித்தாலும், “ஏப்ரல் பொது தேர்வை கோட்டை விட்டு விட்டு அக்டோபரில் முயலும் மாணவியின் நிலைதான்.” என் நிலை.

  பத்து கேள்விகளுக்கும் பக்குவமான பதிலாக தந்திருக்கிறீர்கள். அருமையாக இருந்தது. தாமதமாக வந்து படித்து வாழ்த்தியமைக்கு, வருத்தப்படுகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்...

  பதிலளிநீக்கு
 37. தாமதமாக, வந்தாலும் தரமாய் வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி.

  பதிலளிநீக்கு