தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 19, 2014

Dr. வடுகநாதன்.

இப்பொழுதெல்லாம், எதற்கெடுத்தாலும் பதவி கொடுக்கிறார்கள், பட்டமளிப்பு கொடுக்கிறார்கள் அதற்க்கு ஒருவிழா வேறு நடத்துகிறார்கள் அந்த பதவிகளுக்கும், பட்டங்களுக்கும் அவர்களுக்கு தகுதி உள்ளாதா ? என்பதைப்பற்றி யாருக்கும் அக்கறையில்லை, ராணுவ அதிகாரியாக நடித்ததற்காக ராணுவத்தில் கௌரவபதவி, கிரிக்கெட்டில் விளையாண்டதற்காக விஞ்ஞானிகளுக்கு கொடுக்ககூடிய விருது, போக்கிரியாக நடித்துக்காண்பித்து மக்களுக்கு நல்லவிசயத்தை சொல்லி கொடுத்தவருக்கு டாக்டர் பட்டம், இதெற்கெல்லாம் பிண்ணணி அரசியல்வாதிகள் ஒருபுறம் கொடுத்துவிட்டு மறுபுறம் வேறுவிதமான ஆதாயத்தை தேடும் தேடுதல் வேட்டை, இவையெல்லாம் பாமரப்பய மக்களுக்கு புரியாது, புரிந்தாலும் கேட்கமுடியாது, வாக்குரிமை பெற்று அதிகாரப்பூர்வமாய் ஓட்டளித்தவர்கள் கூட தங்களது சாலைவசதி, மின்சாரவசதி, மருத்துவவசதி, அடிப்படை வசதிகளைக்கூட கேட்க முடியாதபோது இதெல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாததுதான், ஒருகாலத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் மிகஉயரிய மனிதராக மதிக்கப்பட்டார், ஆனால் இன்று பணம் கொடுத்தால் கல்லூரிக்கு போகாமலே கிடைத்துவிடும் M.B.B.S டாக்டர் பட்டத்தைவிட, மலிவாக போனாலும் பரவாயில்லை, அதற்க்கும் கீழே சிறுவர்கள் நூலில்கட்டி பறக்கவிடும் பட்டம்போல் ஆகிவிட்டதுதான் வேதனை, டாக்டர் பட்டத்தால் அந்த மனிதர்களுக்கு மரியாதை வரலாம், மனிதர்களால் அந்த பட்டத்திற்க்கு இழுக்கு வரக்கூடாது. என்பதுதான் எமது வாதம், இனியெனும் கடுகு வியாபாரம் செய்ததற்காக வடுகநாதனுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்காலிருந்தால் சரிதான்.
வாழ்க ! ()னநாயகம்.
Video
(Please ask Audio Voice)


58 கருத்துகள்:

  1. வடுக நாதனுக்குப் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார்கள்..
    கடுகு வெடித்தாற்போல காரமாகத் தான் இருக்கின்றது!..

    பதிலளிநீக்கு
  2. நண்பரே... என்னையவே ஊமைக்குத்து குத்துறது போல இருக்கே...
    ( Sorry தமாஷுக்காக சொன்னேன்)

    பதிலளிநீக்கு
  3. சரியாக சொன்னீர்கள்! பதவியும் பட்டமும் இப்போதெல்லாம் மதிப்பிழந்துதான் போகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிய இடைவெளிக்குப் பிறகு தங்களின் வருகை சந்தோஷமாக இருக்கிறது நண்பரே,,,

      நீக்கு
  4. வணக்கம்
    சொல்வதுஉண்மைதான் ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை உண்மையென, ஒத்துக்கொண்ட உண்மையான நண்பருக்கு நன்றி.

      நீக்கு
  5. பாமரப் பய மக்களில் ஒருவனான எனக்கு புரிஞ்சு போச்சு.... கடுகு ஏன்? காரமா இருக்குதுன்னு...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களெல்லாம் பாமரனாக இருந்தால் ? வலைப்பதிவுல அரசியல்வாதிகளை இப்படிப்போட்டு தாழிக்க முடியாதே... நண்பா.

      நீக்கு
  6. ஆன்மீகத் தொண்டில் இவர் நூறு பேரில் ஒருத்தரா ...தப்பு ,தப்பு ...இவரைப் போல யாருமே இல்லை என்பதுதானே உண்மை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்ஜியே சொன்னதுக்கு அப்புறம் 100 % உண்மைதான்.

      நீக்கு
  7. நண்பரே.. டாக்டர் பட்டம் என்பது கிலோ கணக்கில் வாங்கும் அளவிற்கு வந்து விட்டது. என்னத்த சொல்வோம். சென்ற மாதம் கூட, தமிழ் நகைசுவையாளர் ரோபோ சங்கர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் யாரோ கொடுத்ததாக கேள்வி பட்டேன். சரி, இவருக்கு ஏன் டாக்டர் பட்டம் என்று விசாரிக்கையில் தான் தெரிய வந்தது.
    ரோபோ சங்கர் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டிற்காக அவருக்கு கிடைத்த பட்டம் என்று.
    www.visuawesome.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப்பார்த்தால் ? நமது நகையை வித்தவர் SORRY ''நகைச்சுவை வித்தகர்'' பகவான்ஜிக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டுமே நண்பரே..

      நீக்கு
  8. பதவியில் இருக்கும் பொழுது கிடைக்கும் பட்டங்கள் பட்டங்களே அல்ல நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே தற்போது தங்களது பதிவில் சொல்லியிருக்கிறீர்களே ? ஆறு மனிதர்கள் அவர்களுக்கு கொடுப்பதுதான் நியாயம்.

      நீக்கு
  9. அண்ணா! செம பதிவு!!! யாருங்க அண்ணா அந்த வடுகநாதன்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது யாருமில்லை சகோதரி சுமார் 23 வருடங்களுக்கு முன் மணப்பாறை அருகே கடம்பூரில் பெரியமருது ஸூட்டிங் நடந்தது கூட்டத்தை கலைக்க நான் அவுத்து விட்டேன் ஒரு பொய் அதுதான் ''வடுகநாதன் வர்றாரு'' அது என்னவென்றால் ? மிகப்பெரிய சர்ச்சையாகி பிரட்சினை நடிகர் சங்கிலி முருகனையே பாதித்து விட்டது எல்லாரும் யாரு ? சொன்னது எனத்தேடும்போது நான் எஸ்கேப் கடுகு என எழுதும்போது அந்த ''வடுகநாதன்'' நினைவு வந்து விட்டது

      நீக்கு
  10. உண்மைதான்... இப்போது பட்டங்கள் மலிவாகிவிட்டன...

    தேனம்மை ஊரணிப் பக்கமெல்லாம் கல்லூரியில் படிக்கும் போது தாமரை, சுபமங்களா புத்தகங்கள் கொடுக்க நண்பனுடன் சுற்றியிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே.. நானும் தேனம்மை ஊரணி ஏரியாதான் தி.ராம.தி.வீதி

      நீக்கு
  11. அண்ணா!!!!!
    சரியா சொன்னா அது நடந்தது பதினெட்டு வருடங்களுக்கு முன்னால்!! அபடிசொல்லுறேனு பார்கிறீங்களா? அந்த ஷூட்டிங் சமயத்தில் சங்கிலிமுருகன் பெரியாப்பாவிர்க்கு அங்கு ஷூட்டிங் நடத்த வெகுவாய் உதவி, அதன் காரணமாக படம் தொடங்கும் முன் நன்றி கார்டில் இடம் பெற்றவர் என் செல்ல அப்பா திரு.சோலைராஜ் அவர்கள் தானே!! நீங்க நம்ம ஏரியாவா அண்ணா!!!?? ரொம்ப சந்தோசம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sorry சரியா கணக்கு தெரியலை அடுத்து படம் காணும்போது கவனிக்கிறேன் தங்களின் அப்பாபெயர் வந்தது குறித்து சந்தோஷம் அப்படியானால் ? தங்களுக்கு மிராசுதார் K.K. அவர்களை தெரிந்திருக்கணுமே... கல்யாணத்துக்கு போன இடத்தில்தான் இந்தக் கலாட்டா.

      நீக்கு
    2. ஆமாம் அண்ணா! அப்பா K.K அவர்களை கைப்பிள்ளை என்றே குறிப்பிடுவார்கள். அப்போ வடிவேலு கைப்பிள்ளை வராத காலகட்டம். நான் பள்ளியில் படித்துகொண்டிருந்தேன். அவர்கள் நம் குடும்ப நண்பர்கள். என் தம்பிக்குத்தான் இன்னும் நெருக்கமான நட்பில் இருக்கிறார்கள்!

      நீக்கு
    3. K.K. அவர்களையே கைப்பிள்ளை என்றால் ? தங்களது அப்பா எவ்வளவு பெரிய செல்வாக்கான நபர் என்பதை புரிந்து கொண்டேன் அப்படியானால் ? அந்த (அரண்மனைக்கிளி) அரண்மனைக்குள் பலமுறை போயிருப்பீர்களே.... நான் ஒருமுறைதான் போனேன்.

      நீக்கு
  12. பள்ளிக்கு போய்வந்தால்
    பட்டம் பெறலாம்... இங்கே
    கள்ளிச்செடிக்கும் பட்டமாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளிக்கு போகும்போதே தாய்-தந்தையர்
      சொல்லி அனுப்புகிறார்களாம்
      கில்லி மாதிரி வாத்தியாரை அடித்து
      அள்ளிக்கிட்டு வா என்று

      நீக்கு
    2. கடந்த சில வருடங்களாக பள்ளிகளில் நடக்கும் சம்பவங்கள் இப்படித்தான் இருக்கின்றன ...

      நீக்கு
    3. உண்மைதான் நண்பரே....

      நீக்கு
  13. சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. வடுக நாதன்? ஹூ இஸ் தாட் கில்லர் ஜி?!!! ஸ்ரீபூவு மாதிரி ஒருவரா?!!!!!! அப்பன்ன பரவாயில்லை டாக்டர் பட்டம்....

    ஆனா செம்ம காரம்ப்பா....உங்க பதிவு! உண்மையே! உண்மை கசக்கும் காரம்தான்! நீங்க எம்பிபிஎஸ் பத்தி சொல்றீங்க...சரிதான்....அவ்னவன் ஆராய்ச்சி பண்ணமலேயே, இன்னொருத்தர் எழுதின ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணி (ப்ள்க்கேரிசம் சாஃப்ட்வேர் அதக் கண்டுபிடிக்காதானு கேட்டீங்கனா....அதுக்கும் இவங்க தில்லு முல்லு வைச்சுருக்காங்க...அந்தக் கட்டுரைல உள்ள வார்த்தைகளை கொஞ்சம் அப்பயுடியும் இப்புடியுமா மாத்தி போட்டுருவாங்க) போட்டு பிஹெச்டி பண்ணினதா பட்டம் வாங்கிடுறாங்கப்பா...

    எல்லாம் சரி இப்ப நித்யானந்தாவுக்கு யாராவது டாக்டர் பட்டம்கொடுத்துருக்காங்களா? என்ன? அவரு வீடியோ? ஓ டுபாக்கூர்னு சொல்லவா!!! அதுவும் சரியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடுகநாதன் யாருனு கண்டு புடிச்சுட்டீங்களே... எல்லாமே மக்களுக்கு தெரிந்தும் மக்கு மாதிரி திரும்ப திரும்ப ஏமாறுறாங்களே ஏன் ? ஒருவேளை நண்பர் வே.நடனசபாபதி அவர்கள் சொல்வதுபோல் ஏமாறுவதும் ஒரு கலைதானோ ?

      நீக்கு

    2. நீங்கள் சொல்வது சரியே. இப்போது முனைவர் பட்டம் என்பது செல்லாக் காசாகிவிட்டது. இப்போது இது போன்று ‘துரித பட்டம்’ பெறுவோரால் உண்மையில் ஆய்வு செய்து பட்டம் பெறுவோர் முனைவர் என்று போட்டுக்கொள்ளவே தயங்குகிறார்கள். உண்மையாய் ஆய்வு செய்து அந்த ஆய்வின் பலன் மக்களுக்கு உபயோகம் இருப்பதாக தெரிந்தால் மட்டுமே முனைவர் பட்டம் தரலாம் என சட்டம் வரவேண்டும். அதுவரை இந்த இலவச பட்டங்கள் பெறுவோரை புறந்தள்ளுவதே மேல்.

      நான் ‘ஏமாற்றுவது ஒரு கலை’ என்று பதிவிட்டு வருகிறேன். தங்களின் பதிலைப் பார்த்ததும். ‘ஏமாறுவதும் ஒரு கலை’ என எழுதலாம் போல் உள்ளது.

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி நண்பரே... தங்களுக்கு தலைப்பு கிடைத்து விட்டதா ? தொடருங்கள் நண்பரே...

      நீக்கு
  15. உண்மை தான் சார், பணத்திற்காக என்னல்லாமோ செய்கிறார்கள், இதோ கிரிக்கெட்டில் சாதித்த சச்சின் அவர்களை எம்.பி ஆக்கி இன்னும் அவர் தனக்கான தொகுதியை கூட தேர்ந்தெடுக்கவில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாளிகள் நிறைந்த நாட்டில் கோமாளிகளின் ஆட்டம் பார்வையாளர்கள் திரு. இறைவன்'ஸ்.

      நீக்கு
  16. இப்படியும்,அப்படியும் மாத்தி போட்டு பிஎச்டி பட்டமும் கடுகு வித்தவர்களுக்கேல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்கும்போது நாட்டையே கூறு போட்டு வித்தவர்களுக்கெல்லாம் என்ன பட்டம் கொடுப்பாங்க..நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ''டாடாகுட்டர்'' பட்டம் கொடுப்பதே சிறந்தது நண்பரே.....

      நீக்கு
  17. டாக்குடர் பட்டம் கேலிக்கூத்தாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி ஐயா டாக்டர் பட்டத்துக்கு நல்ல பெயர்தான் கொடுத்தீர்கள்.

      நீக்கு
  18. டாடா குட்டர் பட்டம் பிரபலமாகுமா? நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாடா சுமோவே ஆனபோது டாடா குட்டர் கண்டிப்பாக ஆகும் காரணம் குவாட்டர் போல வருவதால் ? ''குடிமகன்''களால் பிரபலமாகும் நண்பரே...

      நீக்கு
  19. வார இறுதி நாட்கள் என்றாலே, என்னால் வலைப்பக்கம் வருவது சிறிது சிரமமாக இருக்கிறது. அதனால் தான் தாமதமாக கருத்திடுகிறேன்.

    உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்கலைங்கிற ஆதங்கம் புரியுது சாமி. உங்களுக்கு கொடுப்பினை அவ்வளவு தான்.

    நீங்கள் நித்தியானந்தவின் சிஷ்யனாக மாறினால், உங்களின் இந்த கோபம்/ஆதங்கம் எல்லாம் போய்விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பத்தான் சகோதரிகள் எனது வலைப்பூ பக்கமாக வரஆரம்பித்து இருக்கிறார்கள் அதுவும் உங்களுக்கு பிடிக்க வில்லையா ?

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே!

    என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! எனக்கு கிடைத்த இந்த விருதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

    வணக்கத்துடன்,
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி வாங்கிய இரண்டு விருதுகளுக்கே எமக்கு தகுதி உண்டா ? என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் இதில் தாங்களும் ஒரு விருது கொடுத்தால் ? சுமைகள் தாங்கும் பக்குவம் எமக்கில்லை சகோதரி இருப்பினும் தங்களின் அன்புக்கு நன்றி.

      நீக்கு
  21. சொக்கர் உங்களை நித்தியின் சிஷ்யனாக மாறச் சொல்வதற்கு முன்பே உங்களை சாமின்னு அழைத்துவிட்டாரே .நண்பா....!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் நண்பா, நீங்க என்னை ''நல்லவரு''னு சொன்னீங்கள்ல அந்தப் பொறாமை.

      நீக்கு
  22. எனக்கும் யாராவது கொடுத்தால் சந்தோசபடுவேன் :-) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் எழுத்துதுறைக்கு கண்டிப்பாக கிடைக்க ஞானி ஸ்ரீபூவு ஆசி உண்டாக வாழ்த்துக்கள் நண்பரே...

      நீக்கு
  23. பட்டங்கள் மட்டுமல்ல சகோதரா பொன்னாடையும் கூடத்தான்

    பதிலளிநீக்கு
  24. ஊமைக்குத்து என்பது இதுதானோ...?
    நானும் இப்படிச் சிலபட்டங்களை வாங்கிவைத்திருப்பது கில்லர்ஜிக்குத் தெரிந்தது எப்படியோ...?
    அருமையாகச் சொல்லியிருக்கிங்க ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கெல்லாம் இப்படியொரு பட்டம் கிடைக்க சாத்தியமில்லையே நண்பரே...

      நீக்கு
  25. பெயரில்லா9/24/2014 1:45 PM

    பட்டுச் சால்வை, பட்டம், பதவி இன்று பணத்திற்குத் தானே.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  26. தமிழக ஆத்தாளுக்கும் ஒரு பட்டம் கொடுத்தாக........அந்த பட்டம் காலாவதியாகிவிட்டது என்று நிணைக்கிறேன்

    பதிலளிநீக்கு