புதன், பிப்ரவரி 10, 2016

லால்குடி, லொள்ளு லோகநாதன்


01. எவ்வளவுதான் பெரிய ஆளாயிருந்து, AK-47 துப்பாக்கியில சுட்டாலும் அதை வச்சு அவரால ஒரு சப்பாத்தி சுடமுடியுமா ? இதுதாங்க WORLD.

02. எங்க அப்பத்தா நான் 16 புள்ளயப் பெத்தேன்னு பீத்திக் கொண்டாலும் எங்க தாத்தா இல்லைனா பெத்துருக்க முடியுமா ? இதுதாங்க LIFE.

03. கொன்னுட்டாங்கன்னா கொலைனு சொல்றோம், தன்னால செத்துட்டான்னா தற்கொலைனு சொல்றோம் அதுக்காக இங்கிலீஷுல தற்கொலைக்கு தற்மர்டர்னு சொல்ல முடியுமா ? இதுதாங்க LANGUAGE.

04. பங்களாதேஷ்ல பங்களாவே சொந்தமாக இருந்தாலும் துபாய்க்கு வந்தா தூப்பாய் கழுவனும் சவுதிக்கு வந்தா சகதியில நிற்கணும் இதுதாங்க வெளிநாட்டு WORK.

05. கணக்கு வாத்தியார் மகளை கணக்கு பண்ணலாம் அதுக்காக விளையாட்டு வாத்தியார் மகளோட விளையாட முடியுமா ? இதுதாங்க REALITY.

06. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் எல்லா வேலைக்கும் ஆள் வச்சுக்கிறலாம் அதுக்காக முதலிரவுக்கு கூலிக்கு ஆளை விட முடியுமா ? இதுதாங்க TRUE.

07. எனக்கு பிடிச்சபடி நான் வாழுறேன் சமூகத்தைப் பத்தி கவலை இல்லை என்று ரோட்டுல நிர்வாணமா நடக்க முடியுமா ? இதுதாங்க SOCIETY.

08. புன்னகையே பெண்களுக்கு பொன் நகை அப்படினு சொல்றதுக்காக புன்னகையை அடகு கடையில வைக்க முடியுமா ? இதுதாங்க SITUATION.

09. அண்ணன் பொண்டாட்டியை அண்ணினு சொல்றோம் அதுக்காக தம்பி பொண்டாட்டியை தண்ணினு சொல்ல முடியுமா ? இதுதாங்க RELATIONSHIP.

10. தமிழன் எவ்வளவுதான் படிச்சு இங்கிலீஷுல பேசுனாலும் காலில் முள்ளு குத்தினா மம்மினு கத்த முடியுமா ? இதுதாங்க  MOTHER’ s LOVE.

11. முள்ளை முள்ளாலே எடுக்கணும் வைரத்தை வைரத்தாலே அறுக்கணும் என்பதற்க்காக மரத்தை மரத்தாலே அறுக்க முடியுமா ? இதுதாங்க NATURE.

12. எனக்கு அடுத்தவன் உதவி தேவையில்லை என்பதற்க்காக பாடையை தூக்க வேண்டாம் சுடுகாட்டுக்கு நடந்தே வர்றேனு சொல்ல முடியுமா ? இதுதாங்க DEATH.

13. அவரு100 ஆபரேஷனுக்கு மேலே செய்த டாக்டர்னுங்கிறதுக்காக அவருடைய கிட்னி ஆபரேஷனை அவரே செய்ய முடியுமா ? இதுதாங்க MEDICAL STUDIES.

14. மாணவன் தப்பு செய்தால் வாத்தியார் அடிக்கிறாரு வாத்தியார் தப்பு செய்தால் மாணவன் அடிக்க முடியுமா ? இதுதாங்க TEACHER.

15. மனுசன் அடிச்சான்னா திருப்பி அடிக்கிறோம் நாய் கடிச்சா திருப்பி கடிக்க முடியுமா ? இதுதாங்க நாய்க்கடி (Dog bite)

CHIVAS REGAL சிவசம்போ-
துப்பாக்கியை பார்த்தா, AK-47 மாதிரி இல்லையே குருவி சுடுறது மாதிரி இருக்கு.


சாம்பசிவம்-
லோகு கடிச்சது போதாதுன்னு ஓங்கடி வேற...

68 கருத்துகள்:

 1. ஆஹா அருமை சகோ,

  ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் சொல்லனும்,, ம்ம் நம்மாள் முடியாதுப்பா,,
  சுடுக்காட்டுக்கு நடந்தே போய் படுத்துக்கலாம்,,
  சிவசம்போ சொன்னது தான் எனக்கு படத்தைப் பார்தவுடன் நினைவிற்கு வந்தது, குருவி சுடும் துப்பாக்கி,, AK 47 ம்ம்,,

  தத்துவம் அனைத்தும் சூப்பர் சகோ, என்னமோ இருக்கு அந்த மூளைக்குள்,, ஒஒஒ அதான் 300 வருடங்களுக்கு முன்னே வாழ்ந்தவராயிற்றே,,,
  தொடர்கிறேன் சகோ,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே வாங்க சகோ முதல் வருகையாக இருக்கே...
   பாராட்டுகளுக்கு நன்றி ஆனாலும் காலை வாரி விடுவது மா......3 தெரியுதே....

   நீக்கு
 2. ஓட்டு போட முடியல சகோ,

  காணொளி அருமை,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க ஓட்டுப் போட நினைத்த நாள் இப்படியாகிப் போச்சே பரவாயில்லை அடுத்த பதிவு 'காட்மண்டு கடவுள்' அதுக்கு போடுங்கள் நன்றி

   நீக்கு
 3. என்னங்க ஜி!..

  நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது..

  எங்கேயிருந்து புடிச்சீங்க - லொள்ளு லோக நாதனை?..

  லொள்.. லொள்.. கிட்ட போயிடாம பார்த்துக் கொள்ளவும்..

  ஏனெனில் - அவற்றின் தேவை நாட்டுக்குத் தேவை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி லால்குடி பஸ் ஸ்டாண்ட்லதான் புடிச்சேன்
   ஆமா, ஆமா பைரவர் வைரம் போன்றவரே...

   நீக்கு
 4. லோகநாதன் கமடி அர்த்தமுள்ள ஆங்கில விபரிப்பு! ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நண்பரே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பவும் சொல்றதுதானே நண்பரே பொய் சொல்ல நான் என்ன அரசியல்வாதியா ?

   நீக்கு
 6. யார் உங்களை இப்படியெல்லாம் யோசிக்க சொல்வது? பிண்ணி எடுக்கிறீங்களே ஜி!
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே பிண்ணி எடுப்பதற்கு இதென்ன கூடையா ?

   நீக்கு
 7. 1) சப்பாத்தியை ஏன் சுட முடியாது.
  சுடலாமே!
  ஆனால் ஓட்டை விழும் பரவாயில்லையா?
  (டூமீல்! டூமீல் டுபாக்கூர்)

  2)முடியும்!
  பாட்டி தர்ம பத்தினி விரதத்தை விட்டொழுத்தால்
  (டன் டன் டன்)

  5)விளையாட்டு வாத்தியார் மகனோடு முதலில் விளையாட வேண்டும்
  பராவாயில்லையா?
  (எக்குதப்பு கணக்கு அப்பீட்)

  10)அம்மியை காலில் போட்டால்?

  மம்மியின்னு கத்துவான்
  (ரைமிங் Vs ரைமிங்).....

  முடியல நண்பா.....
  விளக்கம் கொடுக்க இன்னொருவரைத் தேடுகிறேன்!

  அதுவரை.....

  எதார்த்த விளக்கம்
  எவரெஸ்ட் ஏறி நிற்கிறது.

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா ஈபிள் டவர் உயரத்துக்கு கொடுத்து விட்டீர்களே ? கருத்தை நன்று நன்றி

   நீக்கு
 8. ரசித்தேன் நண்பரே! அந்த 12 ஆவது நையாண்டி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கருத்துரை. நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி

   நீக்கு
 9. எல்லா நகைச்வையும் ரசித்தேன் சகோ. காணொளியும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அது காணொளி அல்ல புகைப்படமே... நன்றி

   நீக்கு
 10. ஹாஹா எப்டி சகோ? நல்லா சிரிக்கிறேன், ஆனா நீங்க கேட்க முடியுமா? இதுதான் இணையம் ஹாஹாஹா
  படம் பிரமாதம் சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சிரித்தால் நலமே படமே இந்தப்பதிவுக்கு மூலகாரணம் நன்றி சகோ.

   நீக்கு
 11. ஒரு அப்பத்தாவுக்கு பதினாறு பிள்ளையா ,தாத்தாவுக்கு நாலு கல்யாணம் என்று கேள்விபட்டேனே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மையிலேயே எங்க அப்பத்தா 16 பிள்ளை பெற்றதே ஞானி ஸ்ரீபூவு துணைவியார் வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. அட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட அனைத்தையும் ரசித்தேன், அந்தத்துப்பாக்கியால் குருவி கூட சுட முடியுமா என்பது இப்போதைய கேள்வி?

  த.ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது 6 அறிவு மனுசனை சுட்ட துப்பாக்கிதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. குருவிக்கு ஐந்தறிவாச்சே!பறந்து விடும்!

   நீக்கு
  3. ஆமாமா... மனுஷனுக்கு பறக்க முடியாதே...

   நீக்கு
 13. வணக்கம்
  ஜி
  துப்பாக்கியுடன் நிற்பதை பார்த்தால் ஏதோ பயந்து நிற்பது போல தெரியுது.. ...நல்ல கருத்தை நகைச்சுவை வடிவில் அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள் ஜி த.ம10

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே பல்லியை சுடுவதற்குதான் குறி பார்த்தேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. போட்டுத் தாக்கிட்டீங்களே...

  :)))

  மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 15. எல்லாமே விவரமாகத்தானே சொல்கிறார் லொள்ளு லோகநாதன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நலம்தானே கடந்த பதிவின் நூல் விமர்சனம் படிக்கவில்லையே... தாங்கள்.

   நீக்கு
 16. அன்புள்ள ஜி,

  இதுதான் லொள்ளு...! லோகமே சுத்தி வந்தாச்சு போலத் தெரியுதே லோகநாதன்...!

  த.ம.12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 17. கொலை வெறி பிடிச்ச லொள்ளு லோகநாதன் இப்படி நாய்க்கடி கடிச்சா பதிலுக்கு லொள்ளு லோகநாதனை கடிக்க முடியுமா??!!! அவ்வ்வ்வ்வ்....

  12 சூப்பர்!!!

  கில்லர்ஜினு பேரு வைச்சுக்கிட்டது ஓகே அதுக்காக இப்படி லொள்ளு லோகநாதனை வைச்சு கில் பன்ணிட்டுத் தப்பிக்க பார்க்கறீங்க பாருங்க..லோகநாதனை மாட்டிவிட்டுட்டு....உங்கள...

  லொள்ளு லோகநாதன் இந்தக் கடி கடிச்சதுனால எல்லாருக்கும் ரேபிஸ் இஞ்ஜெக்ஷன் உங்க சார்புல இலவசம் அனுப்பி வையுங்க...

  3 ஆவது மட்டும் கொஞ்சம் இடிக்குதே! ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா பின்னே கில்லர்ஜியின் பெயர் கெட்டு விடக்கூடாதே ஆகவே லோகுவை அழைத்துக் கொண்டேன்.

   நீக்கு
 18. ரொம்ப யோசிக்கிறீங்க...
  ரசித்து வாசித்து... சிரித்தேன் அண்ணா...

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் ஜி !

  வாழ்க்கையை அதன் போக்கில் விட்டவங்க வாக்கும்
  இப்படித்தான் இருக்கும் ஜி அருமை அருமை

  தம்பி பொண்டாட்டி தண்ணி ஹா ஹா ஹா
  இடைக்கிடை குசும்பு எனக்கும் பிடிக்கும் நன்றி

  தொடர வாழ்த்துகள் ஜி வாழ்க வளமுடன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே நான் சித்தன் போக்கு 7 O'clock னு போறவன்தானே... வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. ஆகா
  தங்களால் மட்டுமே முடியும் நண்பரே
  வாழ்த்துக்கள்
  தம+1

  பதிலளிநீக்கு
 21. முடியல.....சிரிச்சு.
  தோழி கிரேஸ் சொன்ன மாதிரி நானும் நினைத்தேன் அண்ணா ஜி.ரசித்து சிரிக்க வைத்த பதிவு. 12 வது சான்ஸே இல்லை. செம..

  பதிலளிநீக்கு
 22. ஆ.... மர்மத்தொடர்ஆ..ரம்பமாஆ.!!!
  உங்க எழுத்தைப்பற்றி சொல்லத்தேவையில்லை. ஆவல் அதிகரிக்கறது வாசிக்க.விரைவில் ரிலீஸ் செய்யுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெருக்குரல் படித்து ஆதரவு தந்தமைக்கு நன்றி சகோ

   நீக்கு
 23. எங்கெ போயப்பா இதெல்லாம் தேடறீங்க..
  சூப்பர்
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ இதற்காக ஸூப்பர் மார்கெட்டுக்கா ? போக முடியும் மூளை ஒரு அட்சய பாத்திரம்தானே உங்களுக்கு தெரியாததா ?

   நீக்கு
 24. லொள்ளு சூப்பர்
  நண்பரே ரசித்தேன்...
  குடல் நோக சிரித்தேன்...

  பதிலளிநீக்கு
 25. உண்மை, கொலையை மர்டர் ன்னு சொல்லுறோம் தற்கொலையை - செல்பி மர்டர்னு சொல்லலாம். இஇஇஇ

  பதிலளிநீக்கு
 26. எல்லாத்துக்கும் வேலையாலை வைக்கலாம் ஆனால் சாப்பிடவும் படுக்கைக்கும் ஆள வைக்க முடியுமா ... அருமையான சிந்தனை

  பதிலளிநீக்கு
 27. அந்த தாத்தாவால குழந்தைப் பெற்ற ஒரு பாட்டியை தான் சொன்னீங்க இன்னும் அந்த தாத்தாவுக்கு வைப்பாட்டி இருந்த பல பாட்டி கதையை மறைச்சிட்டிங்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது தனிமனித வாழ்க்கை வெளியில் சொன்னால் அதற்கும் தண்டனை உண்டு என்று நீங்கள் பதிவு போடுவீர்களே... ஹிஹிஹி

   நீக்கு
 28. நாய்கடிச்ச கடிக்க முடியாது ஆனால் கீல்லர்ஜீ கடிச்ச திருப்ப கடிப்போம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்குத்தான் நான் வெளியில் போகும் பொழுது ஃபுல்லட் புரூப் ஜாக்கெட் போட்டு நடக்குறேன்

   நீக்கு
 29. அடடா..எடக்கு மடக்கா கேள்வி கேட்டுட்டு, அதற்கான ஆங்கில விளக்கம் வேற! ...சூப்பர்!

  பதிலளிநீக்கு
 30. ஆஹா...ஒன்னொன்னும் ஒன்னை மிஞ்சி நிற்கிறதே....எப்படி சகோ இப்படியெல்லாம் தோனுது....ஆனா எங்களுக்கு பதிவு கிடைக்கிறதே.. ஆரம்பம் முதல் கடைசி வரை கலகலப்பு தான்.

  18

  பதிலளிநீக்கு
 31. பெயருக்கு ஏற்றபடி லொள்ளு செய்துவிட்டார் திருத்தவத்துறை லோகநாதன். வாழ்த்துக்கள்! என்ன லால்குடியை திருத்தவத்துறை என்கிறேன் என எண்ணுகிறீர்களா? அது லால்குடியின் இன்னொரு பெயர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நண்பரால் புதிய விடயம் அறிந்தேன் வருகைக்கு நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...