தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 11, 2016

இரும்புக்குதிரை

இந்தப் புகைப்படத்தை காணும்போது எனக்கு ஒரு மார்க்க கதை ஞாபகம் வருகிறது அதை எனது பாணியில் சிறிது சொதப்பி தருகிறேன்....

ஒருவர் தன்மகனை அழைத்துக் கொண்டு இந்த சமூகம் எப்படியென காட்டுகிறேன் வா என ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு தன்மகனை தன்னுடன் நடந்துவா, என்று வீதியில் போய்க்கொண்டு இருந்தார் வழியில் ஜவான் டீக்கடையில் நான்கு பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் இவர்களைக் கண்டதும் இவர்கள் காதுபட ஒருவன் சொன்னான் பார்த்தாயா ? சின்னப் பயலை நடக்கவிட்டு இந்த எருமை மாடு குதிரையில் போகுது...
மறுநாள் இவர் மகனை குதிரையில் ஏற்றிவிட்டு தான் நடந்து அதே டீக்கடை வழியாக போனார், அந்த நான்கு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள் அதிலொருவன் சொன்னான், பார்த்தாயா ? வயசான அப்பனை நடக்க விட்டு இந்த எருமை மாடு குதிரையில போகுது...
மறுநாள் மகனை குதிரையில் ஏற்றி விட்டு தானும் ஏறிக்கொண்டார் அதே டீக்கடை வழியாக போனார், அந்த நான்கு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள் அதிலொருவன் சொன்னான், பார்த்தாயா ? பாவம் அந்தக் குதிரை, இந்த ரெண்டு எருமை மாடும் ஏறிக்கிட்டு போகுது...
மறுநாள் மகனை அழைத்துக் கொண்டு தானும் நடந்து கொண்டே குதிரையை ஒட்டிக்கொண்டு அதே டீக்கடை வழியாக போனார், அந்த நான்கு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள் அதிலொருவன் சொன்னான், பார்த்தாயா ? கிறுக்குப்பயல்க குதிரை வாங்கிட்டு நடந்து போறாங்கே...
வீட்டுக்கு வந்தவுடன் குதிரையை விற்று விட்டார், மறுநாள் மகனை அழைத்துக் கொண்டு அதே டீக்கடை வழியாக நடந்து போனார், அந்த நான்கு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள் அதிலொருவன் கேட்டான்...
குதிரை எங்கேப்பா ?
குதிரையை விற்று விட்டேன்
ஏன் ?
இல்லே ஒவ்வொரு, ஆளும் ஒவ்வொரு மாதிரி பேசுறாங்க அதான் வித்துட்டேன்
ஊருனா நாலுபேரு நாலு விதமா பேசத்தான் செய்வான் அதுக்காக வித்துடுறதா ?
வீட்டுக்கு வந்தவுடன் மகனிடம் சொன்னார் பார்த்தாயா ? இதுதான் சமூகம் நாம என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் அதனால உன் மனசாட்சிக்கு எது நியாயமாகபடுதோ ! அதை செய்துட்டு போ அதே நேரம் நீ நினைப்பது நியாயமாக இருக்கட்டும்.
 
எதைச் செய்தாலும், குறை கண்டு, கில்லர்ஜி போன்றவர்கள் சொல்வதை நம்பும் இதயமில்லா குருட்டுச் சமூகமே... என்னை குதிரையாக்கி உங்களை சவாரி செய்யச் சொன்னேன், எனக்கு இதயம் உண்டு நானும் உண்டு வாழ்வதற்கு கொள்ளு வேண்டாமா ? என்னை இரும்புக் குதிரை என நினைத்தீரோ ஓ.... பாமர சமூகமே.... உன் வாழ்வின் இருளை நீக்கி ஒளியேற்றிட வேண்டி என் SUNமுகத்தை காட்டிட நினைக்கும் என்னை என்றுதான் நீ புரிந்து கொள்வாயோ !

-இளைஞர் கருணாகரன்

காணொளி
நட்பூக்களே... வணக்கம் தேர்தல் வருவதால் வலைப்பூ நண்பர்களுக்கு ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகளை கொடுப்போம் என்று சிந்தித்தால் அக்கபோரான சிந்தனைகளே வருகிறது ஆகவே அரசியலைப்பற்றி எழுதுவோமா ? வேண்டாமா ? என்று குழம்பிபோய் இருக்கின்றேன் காரணம் எனக்கு அரசியல் தெரியாது என்ன செய்யலாம் அரசியல் எழுதவா ? அல்லது வழக்கம் போலவே... எழுதவா ? சொல்லுங்கள் – கில்லர்ஜி

48 கருத்துகள்:

 1. அரசியலை எதுக்கு விடுவானேன்? அதையும் கொஞ்சம் சொதப்புங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் ஐயாவுக்காக முடிந்தவரை சொதப்புவேன்.

   நீக்கு
 2. இந்த குழப்பமான சூழ்னிலையில் உங்கள் அரசியல் கருத்தை அறிய விரும்புகின்றேன். எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பெரிதாக எதிர் பார்க்க வேண்டாம் சொதப்பல் சொதப்பலாகத்தான் இருக்கும்.

   நீக்கு
 3. இந்தக் கதை கேள்விப் பட்டிருக்கிறேன். "ஊர்ல நாலுபேர் நாலுவிதமா பேசறாங்கன்னா என்ன அர்த்தம்? அந்த நாலு பேருக்குள்ளேயே ஒத்துமை இல்லன்னு அர்த்தம்!" அரசியலைப்பற்றி வழக்கம்போலவே எழுதுங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நண்பரே கண்டிப்பாக எழுதுவேன் நன்றி

   நீக்கு
 4. நண்பரே குதிரை கதை
  முன்னாடி படித்திருக்கிறேன் ...
  வேறு உருவில்...
  நீங்கள் அதை அருமையாக
  சொதப்பி அழகான பதிவாய் தந்தீர்....
  நன்றி நண்பரே.....

  அரசியல் பதிவுகள் வேண்டாம் நண்பரே....
  அது புனிதமானது அதை சாக்கடையை
  விட கேவலமாக மாற்றி இருக்கிறார்கள்...
  நாம அரசியல் பேச துவங்கினால்
  நாமும் நாற வேண்டி வரலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சாக்கடை நாறுகின்றது உண்மைதான் அதையும் ஒரு மனிதர்தானே சுத்தம் செய்ய வேண்டியது இருக்கின்றது உண்மையில் எனக்கு சுத்தம் செய்ய வராது மேலும் களங்கப்படுத்தத்தான் முடியும்.

   நீக்கு
 5. கதை சூப்பர். உங்க பாணியில எத வேணும்னாலும் எழுதுங்க சுவாரசியமாத்தான் இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே முடிந்த அளவு முயல்கிறேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 6. பின்னூட்டங்கள் என் மெயில் பாக்ஸுக்கு வருகின்றன. ஆனால் என் பின்னூட்டத்தை மட்டும் காணோம்! நான் வரும்போது குமாரின் பின்னூட்டம் மட்டுமே இருந்தது.

  :(((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு செல்லில் கருத்துரையை பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது பக்கத்தில் இருந்த மலையாளி நண்பர் டச் செய்து விட்டார் அதில் தங்களது கருத்துரை Delete ஆகி விட்டது.
   நான் சரியாககூட படிக்கவில்லை ஏதோ ஒற்றுமை இல்லாத மனிதர்கள் என்பது போல் சொல்லி இருந்தீர்கள் மன்னிக்கவும் தவறுக்கு வருந்துகிறேன்

   நீக்கு
 7. அருமையான கதை நண்பரே
  உண்மைதான்
  வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
  உலகம் இதுதானே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 8. குதிரைப் படம் நன்றாய் இருக்கிறது,கதையும், கருத்து அருமை சகோ.தம 5

  பதிலளிநீக்கு
 9. சுயசிந்தனை வேண்டும் என்று சொல்கிறது நீதிபோத்னை கதை.
  உங்கள் பாணியில் கதை மாற்றம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 10. அன்பின் ஜி.. உங்களுக்காக - ஒரு சிறுகதை!..

  கொட்டகையிலிருந்த குதிரை ஓடி விட்டது..

  அருகிலிருந்தவர்கள் கேட்டார்கள் -
  என்னடா குதிரை ஓடிப் போயிற்றே!.. - என்று..

  இவன் சொன்னான் -

  அதான் கொட்டகையை பூட்டி விட்டேனே!..

  அடக் கிறுக்கா!.. கொட்டகை தான் காலியா கிடக்கே?..

  மறுபடியும் வேற ஒரு குதிரை வாங்குவோமே!..

  கேள்வி கேட்டவர்களும் தலை தெறிக்க ஓடிப் போனார்கள்..

  எதற்கு எது தொடர்பு எனத் தெரியவில்லை.. ஆனாலும் -
  பூனைக்குட்டி வெளியே வந்துவிடும் போலிருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இந்தக்கதையும் நல்லாத்தான் இருக்கு வருகைக்கு நன்றி

   நீக்கு

 11. நானும் இந்த கதையை முல்லா கதைகளில் படித்திருக்கிறேன். இருப்பினும் திரும்பவும் படிக்க உதவியமைக்கு நன்றி! அரசியல் பற்றி எழுதலாம். ஆனால் பிறர் மனம் புண்படாதவாறு நகைச்சுவையாக (தங்கள் பாணியில்) எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனக்கு யார் மனதையும் துன்படுத்தும் நோக்கமில்லை நண்பரே முடிந்த அளவு நகைச்சுவைதான் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 12. அன்பின் ஜி..

  இப்போ தான் காணொளியைக் கண்டேன்..

  கிறுகிறு..ன்னு ஆயிடுச்சி..

  Night Shift - க்கு எப்படிப் போறதுன்னே தெரியலே..

  கட்டு மரம் கைக்குக் கிடைச்சாலும் -
  பாலைவனத்தில தண்ணி ஏது?...

  இருந்த குதிரையும் காலைல ஓடிப் போச்சு!?..

  (அந்தக் குதிரை.. யார் கையிலயும் கிடைக்காம இருக்கணும்.. காலுக்கு ஆபத்து காத்துக் கெடக்கு!?..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா இப்படியே சொல்லித்தான் காலத்தை ஓட்டிட்டாங்கே ஜி

   நீக்கு
 13. கலக்கல் பதிவு கில்லர்ஜி. ரொம்ப ரசித்தோம். அது சரி உங்களுக்கா அரசியல் தெரியாது?!! அப்ப இதுக்குப் பேரு என்னங்க??!!!

  அட! கருணாகரன் சைக்கிள் ஓட்டுறாரு??!!! பிள்ளைய வைச்சுக்கிட்டு!! தமிழ்நாடு முச்சோடும் இப்படி ஓட்டித்தான் ஓட்டு கேக்குறாரோ..பாவம்....
  யப்பா அந்தக் காணொளி ஹஹாஹஹ ஐயோ செம...ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல எடிட்டிங்க் பண்ணி.....எப்படி நினைவு வைத்து சரியா எடுத்து கட் பண்ணி போடுறாங்கப்பா...நேரம் நிறைய இருக்கு போல...ஆனா செம...

  இதே மாதிரி போடுங்க அரசியல் பதிவுனா...தேர்தலில் தேறுவாரா
  தேவைதை அம்மா, அன்புமணி கண்ணுமணி தேர்தல்மணி, கூட்டணி நாட்டணி நாக்கணி, தொல்மா தி(dh)ல்மா பல்மா இப்படிப் போடுங்க ஆனா... சடையாண்டி முனியாண்டி தேர்தல் ஆண்டி இப்படிக் கோக்குமாக்கா போடக் கூடாது சொல்லிப்புட்டோம்....ஹிஹிஹி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க முடிந்தவரை கலாய்ப்போம் அப்புறம் 5 வருசமாகுமே தேர்தல் வருவதற்கு தலைப்புகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு

   நீக்கு
 14. உங்கள் எழுத்துக்களை விட இந்தக் காணொளி என்னை ஈர்த்தது இதற்காக நிறையவே மெனக்கெட்டிருக்க வேண்டும் நானெல்லாம் அதில் ஒரு பெரிய பூஜ்யம் தான் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா காணொளியில் எனது வேலை ஒன்றுமில்லை நான் சித்து விளையாட்டு காட்டினால் எனது பெயரும் இடம் பெற்று விடும் வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 15. உங்க பாணியில் எல்லாமும் வெளுத்துக்கட்டுங்க. தாமதமாகவாவது படிச்சுட மாட்டோம்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடேங்கப்பா என்னாது இன்றைக்கு இம்பூட்டு பதிவு படிச்சுட்டீங்க வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 16. அக்கப் போரும் போரடிக்கவில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜி அப்படீனாக்கா.... ஆரம்பிச்சிட வேண்டியதுதான்...

   நீக்கு
 17. எதையும் நீங்கள் எழுதலாம் இதுதான் அதுதான் என்று வரையறுக்காமல் எழுதுங்க. எழுதும் போது உங்கள் நண்பரிடம் பேசுவது போல கிண்டல் கேலிகள் செயவ்து போல எளிமையாக எழுதுங்கள். ஆனால் அறிவுரை சொல்வது போல எழுதாதீர்கள் காரணம் யாருக்கும் அறிவுரையை கேட்க பிடிக்காது. அறிவுறை என்பது விளக்கெண்ணை போல கொடுப்பவருக்கு எளிது குடிப்பவருக்குதான் கஷ்டம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் ஆலோசனையை ஏற்கிறேன் நன்றி

   நீக்கு
 18. அரசு இயலைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் அரசியல் நண்பரே...அரசியல் இல்லாமல் சமூகம் இல்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான வார்த்தை சொன்னீர்கள்

   நீக்கு
 19. இந்த கதையை நான் வேறுவகையில் படித்துள்ளேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் ஐயா நலமா ? நமது முன்னோர்கள் கதைகளை பலவகைகளில் சொல்லி வைத்ததுதானே ஐயா... இப்படித்தானே மதங்களும் பிறந்தது வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. உங்களுக்கு தெரியாத அரசியலா.. ஜி! அம்மாவுக்கும் அய்யாவுக்கும் தெரியப் போகிறது. கொஞ்சம் அரசியலையும்தான் சொல்லுங்களேன்.
  த ம 13

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இப்படியெல்லாம் ஏடாகூடமாக எதிர் பார்க்ககூடாது நான் எடக்கு மடக்காகத்தான் எழுதுவேன்.

   நீக்கு
 21. அரசியல் பதிவுகள் உங்கள் நடைக்கு நன்றாக மட்டுமல்ல வாசிக்கவும் சுவராசியமாகவும் இருக்கும் என நினைக்கிறேன் ஜி. அப்புறம் உங்க ஊருல காந்திய மக்கள் இயக்கம் போட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துல ஐம்பது பேர் கூட வரலையாமே! காந்தின்னதால காந்தி கணக்குல விட்டுட்டாங்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே காந்தி வந்து தங்கிய ஊர் தேவகோட்டை அதன் காரணமாகவே அந்த ரோட்டுக்கு காந்தி ரோடு என்று பெயரிட்டார்கள்
   அப்படி இருந்த ஊர் இன்று இப்படியாகி விட்டது

   நீக்கு
 22. அந்தக் கதை நான் சிறு பையனாக இருந்தபொழுது சிறுகதைத் தொகுப்பொன்றில் படித்தது. ஆங்காங்கே கொஞ்சம் மாற்றப்பட்டிருக்கிறது. நான் படித்த கதையின் தலைப்பு 'எல்லோருக்கும் நல்லவரானால்' என்பது.

  ஆனால், அந்தப் படமும் அதிலிருக்கும் வரிகளும் செம்மையோ செம்மை! நீங்களே உருவாக்கியதா?

  நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டது தெரிந்திருந்தால் நான் ஓடோடி வந்து பதிலளித்திருப்பேன், "கண்டிப்பாக அரசியல் பதிவு எழுதுங்கள்" என்று. காரணம், நான் ஏற்கெனவே உங்களிடம் அரட்டைப் பெட்டியில் தெரிவித்தது போல, சமூக வலைத்தளங்களின் தாக்கம் இந்தத் தேர்தலில் நூறு விழுக்காடு எதிரொலிக்கும் என அண்மையில் ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பில் முடிவு வெளியாகியிருந்ததால், அரசியல் மாற்றத்துக்கான வேலைகளில் பெரும்பாலான அரசியல்தலைவர்கள் இறங்கியுள்ள இந்தச் சூழலில் இப்படி சமூக வலைத்தளங்களின் தாக்கமும் அந்த மாற்றத்தை ஏற்படுத்திவதில் முதன்மையான பங்கு வகிக்கும் எனும்பொழுது அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டால் அரசியலாளர்கள் போல நாமும் இந்த சமூகத்துக்குத் தெரிந்தே தீங்கு செய்பவர்களாகி விடுவோம். அப்புறம் அரசியலாளர்களையோ ஆட்சியாளர்களையோ குறை சொல்லும் தகுதி கூட நமக்கு இல்லாது போய்விடும். எனவே, இணையத்தில் இருக்கிற, அரசியல் பார்வையுடைய அனைவரும் அரசியல் கருத்துக்களைக் கண்டிப்பாக எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே புகைப்படம் இணையத்தில் கிடைத்தது
   இப்படி கேள்வி கேட்டது தெரிந்திருந்தால் ஓடோடி வந்திருப்பேன்.
   தளத்துக்கு வந்தால்தானே தெரியும்

   அரசியல் பதிவு முடிந்தவரை சொதப்புகிறேன் நண்பரே வருகைக்கு நன்றி

   நீக்கு
 23. நல்ல சிந்தனைகளையே தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

   நீக்கு