தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 28, 2016

42 Inch T.V


ராமன்-
எங்க மாமா துபாய்க்கு டூர் போயிட்டு வரும்போது 42 இஞ்ச் T.V. வாங்கிட்டு வந்தாருடா...
சோமன்-
ஹும் எங்க மாமா துபாயில 25 வருசமா வேலை செஞ்சுட்டு வரும்போது T.B வியாதியைத்தான் வாங்கிட்டு வந்தாரு...
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
பாபு-
என்னது நீ தினம் T.V. பார்க்கும்போது மட்டும்தான் சந்தோஷமா இருக்கியா ?
கோபு-
ஆமாடா சீரியல் பார்க்கும் போதுதானே என் மனைவி அழுதுக்கிட்டு இருக்கிறதை பார்க்க முடியுது.
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
தங்கமணி-
ஏன்டா... சாயங்காலம் வீட்டு வாசலில் உட்கார்ந்து பெண்கள் இப்ப பொறணி பேசுறது இல்லையே ?
ரங்கமணி-
எல்லோரையும் இப்ப T.V. சீரியல்காரன் வீட்டுக்குள்ளே சிறை வச்சுட்டான்டா...
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
மூர்த்தி-
எந்த T.V. வாங்கினால் தெளிவாக படம் பார்க்கலாம் ?
கீர்த்தி-
டாஸ்மாக் போகாமல் படம் பார்த்தால் ? எல்லா T.V.யும் தெளிவாக பார்க்கலாம்.
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
வருண்-
விளம்பரமே இல்லாமல் எந்த T.V. யில் படம் பார்க்கலாம் ?
அருண்-
D.V.D. போட்டால் எல்லா T.V.யும் பார்க்கலாம்.
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

குறிப்பு - என்னைப் பிடிக்காதவர்கள் யாரோ... நான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கும் பொழுது இந்த PHOTO வை சொருகி விட்டு போயிட்டாங்கன்னு நினைக்கிறேன் பின்னே எனக்கே தெரியாமல் எப்படி வரும் ?

49 கருத்துகள்:

 1. ஒரு வேளை அந்த படத்தை உங்களுக்கு தெரியாமல் சொருகிட்டு போனது மதுரைதமிழனாக இருக்க போறான்

  பதிலளிநீக்கு
 2. முரளிதரன் : கில்லர்ஜி வீட்டில் எதுக்கு 75 இஞ் பெரிய டிவி வைத்திருக்கிறார்?
  மதுரைத்தமிழன் :அவருக்கு சின்ன சின்ன செய்திகள் எல்லாம் பார்க்க பிடிக்காதாம் அதனால் பெரிய டிவி வாங்கி பார்த்தால் பெரிய பெரிய செய்திகளை பார்க்க முடியும் என்று பகவான் ஜீ ஐடியா சொன்னதால் கில்லர்ஜி 75 இஞ் டிவீ வாங்கி வைத்திருக்கிறாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைத் தமிழன்...

   ஹா.... ஹா.... ஹா...

   நீக்கு
  2. மதுரைத் தமிழா...ஹஹஹஹஹ்ஹஹ்ஹ் செமயா கில்லர கில்லி அடிச்சுட்டீங்க...

   நீக்கு
  3. கட்டிகிட்டவ கூட என் ஐடியாவைக் கேட்க மாட்டேங்கிறா,ஆனா ,கில்லர்ஜி கேட்டு இருக்கார் ..உங்களுக்கு அது பிடிக்கலையா :)

   நீக்கு
  4. மதுரைத் தமிழருக்கு எங்கள் வீட்டுக்கு வந்துருக்கீங்களோ... கரீக்கிட்டா சொல்லிட்டீங்களே...

   நீக்கு
  5. நண்பர் பகவான்ஜி அவர்களுக்கு... விடுங்க ஜி நாம ஒற்றுமையாக இருப்பது இவர்களுக்கு பிடிக்காது.

   நீக்கு
 3. வியாதி TB பாஸ்!

  எல்லாவற்றையும் ரசித்தேன். விளம்பரமில்லா விட்டால் அவர்களுக்கு வருவாய் இல்லையாம்! நம்மிடம் காசும் வாங்கிக் கொண்டு விளம்பரத்தில் கொல்வது எப்போது நிற்குமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே திரு(ந்)த்தி விட்டேன் உண்மைதான் சில நேரங்களில் 75 Inch T.V-யைகூட உடைத்து விடுவோமா ? என்று தோன்றும்.

   நீக்கு
 4. உங்களுக்குத் தெரியாமல் பதிவானது நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஏனென்றால் நீங்கள் இதுபோல படத்தைப் போடமாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும் அல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக கணித்து வைத்த முனைவருக்கு நன்றி

   நீக்கு
 5. கில்லர்ஜி க்குத் தெரியாமல்
  ஒரு சொருகல்ஜி படத்தைச் சொருகிவிட்டுப் போயிருக்கிறார்
  நம்பி விட்டோம் நண்பரே
  அருமை
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் நம்பிக்கைக்கு நன்றி

   நீக்கு
 6. செம ஜி! படத்த நீங்க போடலியா..ஹஹஹஹ் ஹை நல்லாருக்கே!

  பதிலளிநீக்கு
 7. அப்ப இங்க வாங்கிட்டு வர்ரவரு ராமனுக்கு மட்டும்தான் மாமாவா..ஹை இது சும்மா...படத்த மட்டும் கில்லர்ஜிக்குத் தெரியாம யாராவது போட்டுருவாங்களாம்...அப்படி நீங்க மறைமுகமா ராமன் ந்னு சொன்னாலும் அது யாருன்னு எங்களுக்குத் தெரியாதாக்கும்..ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது எவ்வளவு கவனமாக இந்த சூட்சும விடயத்தை கணித்து இருக்கின்றீர்கள் யாருக்கும் தெரியாது என்றுதான் நினைத்தேன் இப்படிச் சொன்னதற்காக உங்களுக்கு 39’’ இஞ்ச் டி.வி. கொடுக்கலாம் ஆனால் இப்படி பப்ளிக்ல போட்டு உடைச்சிட்டீங்கள் அதனால் டி.வி. கேன்சல்...

   நீக்கு
  2. ஹஹஹஹஹ் ... அடப்பாவி! உண்மைய சொன்னா இதுதான் நடக்கும் போல

   நீக்கு
 8. ஜோக்ஸ் நல்லா இருக்கு...
  மோடிஜி துபாய் வந்தப்போ கில்லர்ஜி கொடுத்த கிப்டோ அந்த டிவி...
  எவனோ போட்டோ எடுத்துப் போட்டுட்டான் போல (நான் மதுரைத் தமிழனைச் சொல்லலை... அவரு இங்க இல்லையில்ல அப்புறம் எப்படி போட்டோ.... யோசிங்க அண்ணா)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே வெளியே சொல்லிட்டீங்களே டி.வி விடயத்தை அப்படின்னா ஃபோட்டோ எடுத்ததும், சொருகியதும் நீங்கதானா ?

   நீக்கு
 9. வீட்டுச் சிறைக்குள்
  நம்மாளுங்க - அதற்கு
  தொலைக்காட்சித் தொடர் தானுங்க...
  தொலைக்காட்சித் தொடரால
  நம்மாளுங்க - சிலர்
  தற்கொலையும் செய்வாங்க...
  இதற்கு
  42 Inch TV என்றாலும்
  84 Inch Curve TV என்றாலும்
  ஒன்று தான் அண்ணாச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இன்றைய பெண்களின் நிலை இதுதான். வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. 42 இஞ்ச் டிவியைவிட 56 இங்ச் டிவிய வாங்கினால்.... நாட்டுப்பற்று உள்ளவர் என்று மார்தட்டிக் கொள்ளலாம் . அதோடு 56 இஞச் டிவியில் உலக நாட்டையெல்லாம் ஒரு ரவுண்டு என்ன வல ரவுண்டு சலிக்காமல் சுற்றி வரலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் அவரால் வாங்குறது இவ்வளவுதான் பணமிருந்து இருக்கும் நண்பரே...

   நீக்கு
 11. ஹாஹாஹா, மோதி வாங்கிட்டு வந்த டிவி நல்லாவே இருந்திருக்கும். நீங்க வாங்கிக் கொடுத்ததாய்த் தானே சொன்னாங்க! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதையெல்லாம் வெளியே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது சகோ.

   நீக்கு
 12. போட்டோ உங்களுக்கு தெரியாமலா?? ஹா ஹா மூர்த்தியும் கீர்த்தியும் அருமை சகோ,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தூங்கிட்டேன் அந்த நேரத்துல யாரோட வேலைன்னு தெரியலை சகோ.

   நீக்கு
 13. அப்ப ஜீ நாடு திரும்பும் போது 42 இஞ்டீவி அன்பளிப்பு கிடைக்குமா))) ரசித்தேன் டிவி ஜோக்ஸ்)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 42 inch only for adani. U all are normal person (AAM BANTHA)

   நீக்கு
  2. கண்டிப்பாக பார்சல் அனுப்பி வைக்கவா ? நண்பா

   நீக்கு
  3. செந்தில் அவர்களி்ன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. ஹாஹாஹா! ரசித்தேன் நண்பரே!

  பதிலளிநீக்கு
 15. TV யை வைத்து இவ்வளவு அக்கப்போரா? இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இவ்வளவு சாதாரணமாக சொல்லிட்டீங்களே.... ஒரு நாட்டின் பிரதமர் சுங்கத்துறையின் மீது நம்பிக்கை வைக்காமல் டி.வி-யின் கூடவே வருகின்றாரே இது தவறில்லையா ? நானும்தான் 1999-ல் டி.வி. கொண்டு வந்தேன் இப்படியா ? ஜென்டிலாக வந்து இறங்கினேன் சுங்க சோதனை முடிந்ததும் பெல்டில் டி.வி வந்தது எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

   நீக்கு
 16. அவ்ளோ பெரிய்ய்ய்ய டீவியை --
  பாவம் தோள் சுமையா தூக்கிக்கிட்டு வர்றான்..

  அவனுக்குக் கொஞ்சம் ஒத்தாசை பண்ணாம சிரிக்கிறியளே!...
  இந்தப் பாவம் எல்லாம் சும்மா விடாது!..

  (ஆனா - டிப்ஸ் கொடுத்தா சரியாயிடும்!....)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி டிப்ஸ் கொடுத்தாலும் அந்த ஆளு வாங்க மாட்டார் கொடுப்பதுபோல் கொடுத்து லஞ்சத்துறையை வைத்து கைது செய்து விட்டால் ?

   நீக்கு
 17. ஒருமுறை மதுரைத் தமிழன் விஜய் டிவியும் சன் டிவியும் வாங்க அலைந்தது பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 18. மதுரைத் தமிழன் பதில் அருமை வழிமொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
 19. படத்தை சொருகியது மள்ளாங்கி
  சாதி தலைவரா இருக்குமோ ஜி
  அவருதான் உங்க மேல செம்ம
  கடுப்புல இருக்காருனு சொன்னாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இருக்கலாம் எனக்கும் அந்த சந்தேகம் உண்டு

   நீக்கு
 20. டி வியை வைத்து எத்தனை கருத்துகள். அருமை

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் ஜி !

  ஹா ஹா ஹா மோடிக்கு டிவி பரிசு கொடுத்தது யாரு ஜி துபாயில் வைத்து நீங்கதான் கொடுத்து அனுப்பினீங்களோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோடி மீது சத்தியமாக நானில்லை கவிஞரே...

   நீக்கு