தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 18, 2016

ஆசை100 வகை


ஆசை இது யாருக்குத்தான் இல்லை ? எல்லோரும் ஆசைப்படுகிறார்கள், எல்லாமே நடந்து விடுகிறதா ? நாமும் ஆசைப்படுவோமே என்று ஆசைப்பட்டேன்.

01. நாமும் டாக்டர் ஆகவேண்டுமென ஆசைப்பட்டேன் அதற்கு M.B.B.S. (Bachelor of Medicine and Bachelor of Surgery) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்.
02. சரி போகட்டும், வழக்கறிஞர் ஆவோம் நீதி மன்றத்தில் வண்டு முருகன் போல் வாதாடலாமென ஆசைப்பட்டேன் அதற்கு M.A.B.L. (Marine Atmospheric Boundary Layer) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்.
03. சரி போகட்டும் போலீஸ் அதிகாரி ஆவோம், ரவுடிகளை எல்லாம் தூக்கி ஜெயிலில் போடலாமென ஆசைப்பட்டேன் அதற்கு I.P.S (Indian Police Service) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்.
04. சரி போகட்டும் பேசாம நம்ம தேவகோட்டை மாவட்டத்துக்கு கலெக்ட்டரா வந்து விடுவோமென ஆசைப்பட்டேன், அதற்கு I.A.S. (Indian Administrative Service) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்.
05. சரி போகட்டும் பேங்க் மேனேஜராவோம் என்று ஆசைப்பட்டேன் அதற்கு M.B.A. (Master of Business Administration) படிக்க வேண்டுமென சொல்லி விட்டார்கள்
06. சரி நம்மலோட படிப்புக்கு இதெல்லாம் சரியாக வராது பேசாம முதல்வர் ஆயிடுவோம் இவ்வளவு படிச்சுருக்காங்களே ! இவங்கே பூராம் நமக்கு சல்யூட் அடிப்பாங்கே இந்த வேலைக்குத்தான் படிப்பு தேவையில்லையே...

அப்ப முதல் வேலையாக என்ன செய்யிறது ? கட்சி ஆரம்பிக்கனும் மக்களுக்கு நம்மளை அடையாளம் தெரியனும் அந்த நேரம் பார்த்து நமக்கு நல்ல நேரம் போல நம்ம தொகுதி M.L.A. ஏகாம்பரம் AIDS வந்து செத்துப் போயிட்டாரு, இடைத்தேர்தல் வந்துச்சு வீடு, வாசல், தோட்டம், தொறவுன்னு எல்லாத்தையும் வித்து செலவு செஞ்சு தேர்தல்ல சுயேட்சை வேட்பாளராக கடப்பாரை சின்னத்தில நின்னேன் அமர்க்களமா தேர்தல் நடந்து முடிந்தது மறுநாள் வாக்கு எண்ணிக்கை அறிவித்தார்கள் கேட்டதும் எனக்கு நெஞ்சுவலி (Heart attack) வந்து விட்டது காரணம் எனக்கு ஒரு ஓட்டுக்கூட விழவில்லை இது எப்படி ? எவ்வளவு பேருக்கு பணம் கொடுத்தோம் ஏன் ஒரு ஓட்டுகூட விழவில்லை ? எம் பொண்டாட்டி கூட போடலையா ? சரி நம்ம ஓட்டு எங்கே ? மறுபடியும் எண்ணச் சொன்னால் கேட்பாங்களா ? கோபத்துடன் வீட்டுக்குப் போனேன்.
ஏன்டி நீ கூட எனக்கு ஓட்டுப் போடலை''ல, கொளுத்திப்புடுவேன் உன்னை  நீ இந்த வீட்ல இருக்க கூடாது இப்பவே உன் ஆத்தா வீட்டுக்கு கிளம்பு.
தயாராக இருந்தவள் போல் உடனே
பஸ்ஸூக்கு பணம் கொடுங்க ?
என்றாள் நானும் தொலையட்டுமென சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்தால் ? கூடவே எனது ஓட்டுச்சீட்டு ''கடப்பாரை'' ச்சே ஓட்டுப் போட்ட கையோட மறந்து கொண்டு வந்துட்டேன் எனக்கு நானே கடப்பாரையாலே ஆப்பு அப்பத்தான் எனக்கு புதுசா ஒரு ஆசை வந்துச்சு அது ஆசையே படக்கூடாது அப்படின்னு ஒரு ஆசை.

சாம்பசிவம்-
சீ... இந்தப்பழம் புளிக்கும்.
CHIVAS REGAL சிவசம்போ-
உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா ?

 காணொளி

42 கருத்துகள்:

 1. அது சரி! உங்களுக்கும் இந்த ஆசை வந்துருச்சா! இதுக்குத்தான் நாங்க உங்கள முன்னாடியே பிரதமராகவே ஆக்கி போஸ்டர் எல்லாம் ஒட்டினோமே...முதல்வர் ஆகணும்னா முதல்ல அந்த ஜி இருக்கக் கூடாதே!

  ஏட்டுப் படிப்பு இல்லாத ஒருத்தர்தான் நல்லாட்சி கொடுத்தவர்...

  நல்ல முடிவு கடைசில...ஆசையேபடக் கூடாது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, அரசியலில் படிப்படியாக முன்னேற நினைத்தேன் அது காலை வாறி விட்டது.

   நீக்கு
 2. ஜி உங்களுக்கு ராசியானது கோடாலி தான்.. அதை விட்டுட்டு கடப்பாரை மேல ஏன் நின்னீங்க.. உருட்டி விட்டுடிச்சே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அடுத்த முறை கோடரியில்தான் நிற்க வேண்டும் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 3. ஹா,,,ஹா,,,
  கடப்பாரை கவித்திருச்சா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடப்பாரையால மக்கள் கவிழ்த்து விட்டார்கள் நண்பரே..

   நீக்கு
 4. ஏனுங்க, அப்ப அபுதாபி இந்திய தூதர் பதவி வேண்டாமா? அப்ப அத வேற யாருக்காச்சும் குடுத்துடட்டுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா அது கண்டிப்பாக வேண்டும் அது கௌரவமான பதவி இதுல நின்றால் சில நேரங்களில் போஸ்டரில் சாணி அடிப்பார்கள்.

   நீக்கு
 5. ஆஹா.... நாமலேதப்பு செஞ்சா? நமக்கு வோட்டுப் போட்டவங்க என்னென்ன செஞ்சாங்களோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நாமதான் மறந்து விட்டோம் சரி மனைவிகூட ஓட்டுப் போடவில்லை என்றால் என்ன நியாயம் ?

   நீக்கு
 6. ஆசை நூறு வகைன்னு சொல்லிட்டு 6 ஆசையை மட்டும் சொல்லிட்டு மீதியை சென்சார் பண்ணிட்ட மாதிரி இருக்கே எங்க அந்த சென்சார் பண்ணிய ஆசைகளை சொல்லுங்களேன்.... இங்கே வருகிறவர்கள் எல்லாம் 18 பளஸ்தான் ஹீஹீஹீ.......கீல்லர்ஜியும் இனிமேல் என்னை பாரக்க வந்தால் பூரிக்கட்டையோடதான் வருவார்,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எல்லா நேரங்களும், எல்லா விடயத்தையும் எழுத முடியாதே சென்சார் கண்டிப்பாக வேண்டும் சென்சார் போர்டு என்ற பெயரில் ஒன்று இருந்துமே திரையுலகம் இந்த லட்சணத்துக்கு வந்து விட்டது இல்லையென்றால் ?

   நீக்கு
 7. ஆசையை கோடாலி வெட்டாம கடப்பாரை குத்திடுச்சு....போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ அடுத்து யாராவது செத்துப்போய் இடைத்தேர்தல் வரட்டும் கண்டிப்பாக கோடரிதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. ஆசையே படக்கூடாதுங்கற ஆசை....
  அருமையான ஆசை....
  இந்த ஆசை எனக்கும் உண்டு அன்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தராகி விடாமல் வாழுங்கள் நண்பரே

   நீக்கு
 9. எனக்கும் ஒரு ஆசை வந்து விட்டது ,MABL என்பதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம் சரிதானா என்று அறிந்து கொள்ள :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இணையத்தில் தேடியதில் கிடைத்தது ஜி

   நீக்கு
 10. ஒருநாள் நீங்கள் முதலமைச்சரா ஆவீர்! இது உறுதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஏற்கனவே தங்களது வாக்கு ஒரு விசயத்தில் பலித்து இருக்கின்றது தங்களது வாக்கு பலித்தால் நான் ஒரு மாறுபட்ட முதல்வராக இருப்பேன் காரணம் விபரம் அறிந்த நாள்முதல் எனக்கு பொதுநல சிந்தனையே... இது நான் இறக்கும் காலம்வரை இருக்கும் இது உறுதி.

   நீக்கு
 11. ஆசை ஆறுவகையும், பகிர்ந்த பாடல் காணொளியும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா காணொளியைப்பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி சகோ யாருமே சொல்லவில்லையே கிடைக்கவில்லையோ என்று நினைத்தேன் அந்த வேலையின் கஷ்டம் பறந்து விட்டது நன்றி

   நீக்கு
 12. அருமையான ஆசைதான் வந்திருக்கிறது நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே முடியாத பட்சத்தில் அதுதானே தோன்றுகின்றது வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. இனி ஒருக்காலமு்ம் அந்தப் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டிங்கன்னு நிணைக்கிறேன்... நிணைப்பது நடக்கவா போகுது .....நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு அது சரிப்படாது நண்பரே உள்ளதை வைத்து காலத்தை ஓட்டுவோம்.

   நீக்கு
 14. ஆசைப்படுவதில் தவறில்லை. பேராசை தான் கூடாது. நீங்கள் ஆசைப்பட்டது சரியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 15. உங்களுடைய ஆசைகள் அனைத்தும் அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 16. தேர்தல் ஜூரம் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல... பதிவர்களுக்கும் இருக்கும் போல...ம் என்ன செய்ய...ஆசை ஆசை பேராசை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேர்தல் வந்தாலே பதவி ஆசைதானே வருகின்றது நண்பரே...

   நீக்கு
 17. வணக்கம்
  ஜி
  ஆசை என்றாலும் அளவுக்கு அதிகம் இருக்க கூடாது. வித்தியாசமான சிந்தனையில் உதித்த வரிகள் நன்று த.ம 12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் ரூபனின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 18. நீங்களும் இந்த தேர்தலில் நில்லுங்க ஆசை வெல்லும்[[[[[[[[[[[[

  பதிலளிநீக்கு
 19. அரசியல் என்றால் என்னவென்று சொல்லிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 20. ஆசை இருக்கு தாசில் பண்ண! ஹிஹிஹி! எல்லாத்துக்கும் கருத்து கந்தசாமி போல இங்கே சாம்பசிவமா? ஹாஹாஹஹா! நம்ம ஆளு வாயை லேசிலே திறக்க மாட்டார்! அதனால் இது வேறே சாம்பசிவம்னு புரிஞ்சுது! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இவரு 2010-லிருந்து வந்து ஏதாவது எடக்கு மடக்கா சொல்லிக்கிட்டுதான் இருக்காரு.... வருகைக்கு நன்றி

   நீக்கு