நாட்டுப்பற்று
இல்லாத நாதாரிகளைவிட பிற நாட்டையும் மதிக்க தெரிந்த இந்த பாக்கிஸ்தான் பெரியவர்
உயர்ந்தவர் இல்லையா ? போடுவோம் இவருக்கு ஒரு சல்யூட் மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணம் உண்டு என்பது உண்மையே.
இந்தியாவிலேயே பிறந்து இந்திய கலாச்சாரத்தை வரலாற்றை படித்து வளர்ந்து இந்திய
குடியுரிமை பெற்று வாக்களித்து விட்டு ரேஷன் கார்டு பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கே
துரோகம் செய்பவர்களை துரோகம் நினைப்பவர்களை என்ன செய்யலாம் ? கிரிக்கெட் சாதாரண விளையாட்டு
விசயம் இதில்கூட தன்நாடு தோற்க வேண்டுமென பந்தயம் கட்டுகின்றனர் இதில்கூட மதவாதம்
பேசுகின்றனர் பிறகு குடியுரிமை, வாக்குரிமை, கடவுச்சீட்டு, ரேஷன்கார்டு ஏன் ? பெற்ற நாட்டிக்கே நீ துரோகம்
நினைத்தால் நீ உலகில் எங்கு வாழ உரிமையானவன் தகுதியானவன் ஒரு வேளை நீ வேற்று
கிரகவாசியா ? அரபு நாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் பலரும் இந்த மாதிரியான
சர்ச்சைகளில் வாக்கு வாதங்களில் ஈடுபட்டு மனஸ்தாபத்துக்கும் சண்டை
சச்சரவுகளுக்கும் ஆளாவது சர்வ சாதாரண விசயம்.
எனக்கும் இந்த மாதிரியான
அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது மற்றவனை நான் இது தவறான செயல் எனச் சொல்லும்போது அவன்
சொன்னான் கிரிக்கெட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாத நீ இந்தியா ஜெயிக்க வேண்டுமென
சொல்ல தகுதியில்லை என்றான் நான் சொன்னேன் கிரிக்கெட்டைப் பற்றி எனக்கு ஒன்றுமே
தெரியாது என்பது உண்மையே இருந்தாலும் கிரிக்கெட் காணாத. காண விரும்பாத நான்
இந்தியா ஜெயிக்க வேண்டுமென சொல்வதற்கு காரணம் எனது அப்பன் கணபதி ஒரு இந்தியன்
இந்தியனுக்கு பிறந்து விட்டேன் ஒருவேளை எனது அப்பன் ஜப்பான்காரனாக பிறந்திருந்தால் ? ஜப்பான்தான் ஜெயிக்க வேண்டுமென
சொல்லியிருப்பேன் என்றேன் இதன் அர்த்தம் அவன் மனதை சுட்டு இருக்கலாம் எங்களுக்குள்
சண்டையாகி பிறர் சமாதானப்படுத்தி வைத்தார்கள் நான் சொன்னது கடுமையான சுடும்
வார்த்தைதான் எனக்கே வேதனையாக இருந்தது காரணம் அவனது தாயும் எனக்கு தாய்போல்தானே..
இதற்காக தனிமையில் இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் அவனுக்கு மட்டுமல்ல தாய்
நாட்டுக்கு துரோகம் செய்பவனுக்கு உரைக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி சொன்னேன்
மதம் மறந்து மனிதம் வளர்க்க சபதம் எடுப்போம் மதம் அழிந்து மனிதம் தழைக்கட்டும்
நாடு செழிக்கட்டும்.
காணொளி
காணொளி அருமை ,அவர்கள் போதையில் அந்த காரியத்தை செய்திருந்தால் பரவாயில்லை !உண்மையில் செய்திருந்தால் மகா புத்திசாலிகள்தான் :)
பதிலளிநீக்குவணக்கம் ஜி பாக்கிஸ்தானியர்கள் பெரும்பாலும் நமது ஆட்களைப்போல குடிக்க மாட்டார்கள் இது அவர்களுக்கு சாதாரண விசயம் டிவியை உடைத்து விட்டால் மறுநாளே தோற்ற கிரிக்கெட் வீரர்கள் டி.வி. வாங்கி கொடுத்து விடுவார்களோ...
நீக்குநல்ல கருத்து. தாய் நாட்டுப் பற்று இயற்கையாகவே எல்லோரிடமும் இருக்கும். இல்லாமல் போகாது. ஏதோ, வாதத்துக்கு அப்படிப்பேசி இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வோம். இந்தியக் கொடியை மரியாதை செய்யும்பாகிச்தானியர் - ஓவியம் போல இருக்கிறது! ஆமாம், இரண்டு நாட்களாய் சட் சட்டென விழுந்து கொண்டிருந்த தம வாக்கு இன்று சுற்றிக் கொண்டே இருக்கிறது! :)))
பதிலளிநீக்குவருக நண்பரே மாற்றுக்கருத்துக்கு மன்னிக்கவும்
நீக்குதேசப்பற்று இல்லாதவர்களும் இருக்கின்றார்கள் என்னை விடுங்கள் அயல்வாழ் தமிழர்கள் யாரையாவது சந்தித்தால் கேட்டுப்பாருங்கள் இன்னும் நிறைய விடயங்கள் கிடைக்கும்.
தமிழ் மணம், மனம் வைத்தால் ஓட்டு கிடைக்கும் நண்பரே
பெரியவருக்கு வணக்கம். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஉண்மையிலேயே சல்யூட் அடிக்கும் விஷயம்தான்!
பதிலளிநீக்குத ம +1
வருக நண்பரே தங்களின் வருகைக்கு ஒரு சல்யூட்
நீக்குபடம் போட்டோஷாப் செய்யப்பட்டது போல இருக்கிறது உண்மையான படம் அல்ல
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரைக்கு நன்றி இந்தப்படம் சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பை உண்டாக்கியது.
நீக்குக்ரிக்கெட் எனக்கு பிடிக்காததில் ஒன்று
பதிலளிநீக்குஇருந்தாலும் தோற்க வேண்டும் என்று
எப்போதும் நினைத்ததில்லை....
தோற்றால் கிரிக்கெட் வீரர்களை
திட்டாமல் இருந்ததுமில்லை....
வருக நண்பரே தோற்றவர்களை திட்டுவது எவ்வகையில் நியாயம் ? வெற்றி ஒருவனுக்கு, தோல்வி மற்றவனுக்கு இதில் திறமைசாலிக்கு வெற்றி அவ்வளவுதான் தோற்றவனை பழிப்பது தர்மம் இல்லையே உலகில் வெற்றியாளர்கள் சிறிய சதவீதமே தோல்வியானவர்களே அதிகம் காதலில் தோல்வியுற்றவர்கள், எவ்வளவு ? வியாபாரத்தில் தோல்வியுற்றவர்கள் எவ்வளவு ? வலைப்பூவில் தோல்வியுற்று வெறுத்து ஒதுங்கியவர்கள்கூட உண்டு
நீக்குநான் வலைப்பூ ஆரம்பித்து 7 வருடம் ஆகப்போகின்றது கடந்த இரண்டு வருடமாகத்தான் எனது ’’மொகரக்கட்டை’’ தெரிய ஆரம்பித்து இருக்கின்றது இது வெற்றியா ? தோல்விதானே....
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், தாம்பரம், மயிலாப்பூர், எக்மோர் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
பாகிஸ்தானியர் மது அருந்துவதில்லை..
பதிலளிநீக்குஆனாலும் என்னவோ மனக்கோளாறு!..
வாங்க ஜி உண்மைதான் சரியாக சொன்னீர்கள்.
நீக்குநல்ல கருத்துள்ள பதிவு சகோ.
பதிலளிநீக்குவருக சகோ பயணம் சிறப்பாக அமைந்து வந்தமைக்கு வாழ்த்துகள்.
நீக்குஉண்மையான மரியாதை இருந்தால் சரி தான்
பதிலளிநீக்குதம +1
வாங்க சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குஆகா...கணோளியில் நாட்டுப்பற்றை நிருபித்த காட்சியை.....கண்டேன் நண்பரே....
பதிலளிநீக்குஇந்த நாட்டுப்பற்றுதான் நாட்டை உலக அளவில் உயர்த்தும் நண்பரே....
நீக்குநல்ல கருத்து ஜி! அந்தப் பெரியவர் நிஜமாகவே செய்வதா இல்லை டெக்னிக்கல் வேலையா? ...இப்போதான் நிறைய இந்த மாதிரி நடக்குதே..
பதிலளிநீக்குஅது சரி அவர்கள் ஏன் அப்படி டிவியை அடித்து நொறுக்குகின்றார்கள்? என்ன காரணம்? பாகிஸ்தானியர்கள் என்பது புரிகிறது..ம்ம்ம்...ஏன் இந்த வெறி? இதுவா நாட்டுப்பற்று??
வாங்க இந்தியாவிடம் பாக்கிஸ்தான் தோற்பதை இந்த டி.வி காட்டினால் அதை நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா ? அதான் ரெண்டு போடு இப்ப அடங்கிப் போச்சுல.... ஹாஹாஹா
நீக்குகிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. திறமை வாய்ந்த அணிஜெயிக்கும் நல்ல அணி வெற்றி பெற்றால் சரிதானே . இதில் நாடும் நாட்டுப் பற்றும் எங்கே இருந்து வருகிறதுநாம் இந்தியனாக இருப்பதாலேயே நம் அணி சொதப்பினாலும் வெற்றி பெற வாழ்த்த வேண்டுமா. திறமைக்கேமுன்னுரிமை காணொளி இப்போது திறக்கவில்லை. வேறொரு உலவியில் வந்து காண வேண்டும்
பதிலளிநீக்குவாங்க ஐயா எனது கருத்தும் இதுவே திறமைசாலிதான் வெற்றி பெறமுடியும் நாங்கள் சொல்வது போல் சொதப்பி விளையாடுபவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பது நியாயமாகாது இதில் தன்நாடு தோற்க வேண்டும் என்று பந்தயம் கட்டுவது சரியில்லை என்பதே எனது கருத்து
நீக்குகடைசி நொடியில் கூட சில வெற்றிகள் கைமாறிப்போனது உண்டுதானே எல்லா நாடுகளுக்குமே....
காணொளி காணுங்கள் ஐயா
ஐயாவுக்கு நாங்கள் என்பதை தாங்கள் என்று படிக்கவும்
நீக்குவிளையாட்டை விளையாட்டாய் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குவருக சகோ உண்மையான வார்த்தை சொன்னீர்கள்.
நீக்குவணக்கம்ஜீ...
பதிலளிநீக்குகிரிக்கெட் என்ற இந்த ஒரே ஒரு விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதே தேவையில்லாத ஒன்று என நினைப்பவன் நான்.
மற்றப்படி எந்த விளையாட்டுக்கும் இப்படி வெறியான ஆதரவு தேவையில்லை... நாடு ஜெயிக்காததால் தொலைக்காட்சி பெட்டியை உடைப்பவர்களுக்கும் தான் ரசிக்கும் நடிகனின் படம் ஓடாவிட்டால் தீக்குளிப்பவர்களுக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை !
இவை அனைத்துமே கண்மூடித்தனமான தனிமனித வழிபாட்டு குணத்தின் வெவ்வேறு வெளிப்பாடுதான் !
நன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
வருக நண்பரே என்னை ஞாபகம் உள்ளதா ? வருகைக்கு நன்றி
நீக்குஅழகாக விமர்சித்து கருத்துரை தந்தீர்கள் நண்பரே இருவருமே ஒரே குட்டையில் ஊறிய (கிரிக்கெட்) மட்டைகளே...
இதோ ஃப்ளைட் ஏறி விட்டேன்.
நல்ல பகிர்வு. விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் வெறி கொண்டு பார்க்கும் சிலரைப் பார்க்கும்போதே பரிதாப உணர்வு தான் தோன்றுகிறது....
பதிலளிநீக்குவருக ஜி தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
நீக்குகிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடுகிறதா நண்பரே????
பதிலளிநீக்குBCCI அல்லவா விளையாடுகிறது, உங்களுடைய அதீத (தேவையற்ற emotional) நாட்டுபற்று பணமாக அறுவடை செய்யபடுகிறது.
வருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி
நீக்குகிரிக்கெட் நாட்டுக்கு அவசியமானது நான் சொல்ல வரவில்லை நான் அதைப் பார்க்காதவன் மட்டுமல்ல அதைப்பற்றி அதிகம் தெரியாதவனும்கூட
இதற்காக நாட்டை தோற்பதாக பந்தயம் கட்டுவது தவறு என்பதே எமது கருத்து மேலும் திறமைசாலிக்கே வெற்றி அது எந்த நாட்டவனாக இருந்தாலும் ஒன்றே..
விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும்.இருப்பினும் நமது நாட்டை சேர்ந்த அணி வெற்றி பெறவேண்டும் என நினைப்பதில் தவறேதும் இல்லை என்பது என் கருத்து.
பதிலளிநீக்குவருக நண்பரே எமது கருத்தும் இதுவே வருகைக்கு நன்றி
நீக்குநல்ல பதிவு! உங்கள் பதிவுகளுக்கு என்னுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துச் சந்தாக் கட்டி விட்டேன். இனி தொடர்ந்து வரும்னு நினைக்கிறேன். :)
பதிலளிநீக்குஆஹா மிக்க மகிழ்ச்சி சகோ பணத்தை ட்ராப்ட் அனுப்பிடுங்க...
நீக்குஆஹா! :)))))
நீக்குபயப்படாதீங்கோ டிஸ்கவுண்ட் உண்டு
நீக்கு