தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 09, 2016

தேவகோட்டை, தேவையறிந்த தேவதையம்மன்

பதிவின் முடிவுக்கு வழி வகுத்த அன்பின் ஜி திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கும்......

சற்று நேரத்தில் போலீஸ் ஜீப் வர... பின்னால் ஆட்டோவில் கல்யாணராமனின் அப்பாவும், அம்மாவும், குடும்ப நண்பரொருவரும் வந்து இறங்கினார்கள்.
நீங்கதான் கல்யாணராமனோட அப்பாவா ?
ஆமா ஸார்...
 உங்க மகன் எங்கே ?
கையிலிருந்த லட்டரைக் கொடுத்தார், பிரித்துப் படித்தார் இன்ஸ்பெக்டர்...

அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு என்னை மன்னிக்கவும் நான் கல்யாணியை திருமணம் செய்யச் சொல்லி எவ்வளவோ கேட்டும் மறுத்து விட்டீர்கள் என்னால் கல்யாணியை மறக்க முடியவில்லை ஆகவே நாங்கள் ஊரை விட்டே போகிறோம் எனது டிகிரியையும், பாஸ்போர்ட்டையும் எடுத்துச் செல்கிறேன் மன்னிக்கவும்.
இப்படிக்கு
கல்யாணராமன்.

இதுக்கு என்ன சொல்றீங்க ?
சொல்றதுக்கு என்ன ஸார் இருக்கு அதான் எல்லாம் தெளிவா எழுதி இருக்கானே நாங்க அவனை தலை முழுகிட்டோம் அவ்வளவுதான் சொல்ல முடியும் இதுக்கு மேலே எங்கள்ட்ட எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்.
எல்லாம் திட்டம் போட்டே செய்திருக்காங்க... ஸார்.
டேய்.... நான் நொந்து போயி இருக்கேன் எதாவது... பேசுனே.....

யோவ் முட்டாள்த்தனமா பேசாதேய்யா அவங்களுக்குதான் இந்த திருமணத்துல விருப்பம் இல்லையே எல்லாக் காதல் திருமணத்துலயும் பெற்றவங்களுக்கு சம்மதம் இருக்கிறது இல்லை கட்டிக்கிறப் போறவங்க மட்டும்தான் விரும்புறாங்க.... இப்போ என்ன சொல்றீங்க.... நாங்க சீக்கிரமே தேடிக்கண்டு பிடிக்கிறோம் ஆனால் அவங்க இந்நேரம் எங்கேயாவது தாலி கட்டி இருந்தால் என்ன செய்யிறது ?
அறுத்து வீசவேண்டியதுதான்... கூட்டத்தில் ஒருவன் கத்தினான்.
நாங்க கண்டு பிடிக்க ஒருமாதம் ஆனால் என்ன செய்யிறது ?
உடனே கண்டு பிடிங்க ஸார்.

ஆமாய்யா எங்களுக்கு இந்த ஒரு பிரச்சனை மட்டும்தானே இருக்கு இங்கே பாருங்க நாங்க தேடுறோம் எப்படியும் அவங்க திருமணம் ஆனவங்களாகத்தான் எங்களுக்கு கிடைப்பாங்க அவங்க மேஜர் சட்டப்படி அதை ஒண்ணும் செய்ய முடியாது ரெண்டு தரப்புலயும் சண்டை போட மாட்டோம்னு எழுதிக் கொடுத்துட்டு கிளம்புங்க அவ்வளவுதான் நான் சொல்லுவேன் எப்படிப் பார்த்தாலும் அடுத்த வருசம் ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்துக்கிட்டு குழந்தைக்கு எந்த குலசாமிக்கு முடி இறக்குறதுன்னு பேசிக்கிருவீங்க....
ஸார் நீங்க குழந்தை குட்டின்னு தேவையில்லாத பேச்சு பேசுறீங்க ?
அதுதானேய்யா... இப்ப நடந்துக்கிட்டு இருக்கு எங்களுக்கு இப்ப வேலையே காதலிக்கிறவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கிறதும் பிறகு அவங்க டைவர்சுக்கு வர்றவங்களை பஞ்சாயத்து பண்ணுறதும் இப்படித்தானே இருக்கு மிச்ச நேரத்துல அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்புக்கு போறோம் எட்வர்ட் ஸார் பொது ஆள் நீங்க சொல்லுங்க ?
ஆமா ஸார் நீங்க சொல்றதுதான் சரி சமாதானமாக போவோம் இனி சண்டை போட்டு என்ன ஆகப்போகுது எதையுமே பேசித்தீர்க்காமல் கத்தி, கம்பு எடுத்தால் உயிர்தான் போகும் வேறென்ன மிச்சம்.

பல சலசலப்புகளுக்கு பின் இருதரப்பினரும் சம்மதம் சொல்லி எழுதி வாங்கிக் கொள்ள ஆல்பர்ட்டை அழைத்துக் கொண்டு அவனது குடும்பமும், ஜமாலுதீன் வெளியே வரவும் அவனது அத்தா செவிட்டில் ஒன்று விட்டு வீட்டுக்கு கூட்டிப் போனார் காலங்கள் போனது மூன்று மாதங்களாக கல்யாணியின் குடும்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கேட்டு ஒன்றும் கிடைக்கவில்லை ஆறு மாதங்களானது இரண்டு குடும்பமும் சேர்ந்து பேசி தேடினார்கள் வருடம் ஒன்று ஆனது இருவரது குடும்பமும் தேவகோட்டை தேவையறிந்த தேவதையம்மனுக்கு சேர்ந்தே வேண்டிக் கொண்டார்கள் எங்கள் பிள்ளைகளை கொண்டு வந்து சேர்த்து விட்டால் 1008 தேங்காய் உடைக்கின்றோம் என்று இரண்டாவது வருடம் ஆத்தாள் கண் திறந்தாள் ஆம் நல்ல செய்தி கிடைத்தது குவைத்திலிருந்து ஒன்றாகவே வந்த ஜமாலுதீனும், ஆல்பர்ட்டும் சொன்னார்கள்.

இரு குடும்பத்தையும் அழைத்து முதலில் இவர்கள் இருவருக்கும் கல்யாணராமனின் கம்பெனியில் விசா எடுத்து அனுப்பி வரவைத்தது முதல் கல்யாணராமனும், கல்யாணியும் கோயிலில் தாலி கட்டிக்கொண்டு மும்பைக்கு ஓடிப் போனார்களாம் அங்கு தங்கி வேலை தேடி இருவருமே ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்து மறு வருடமே கம்பெனி இருவரையுமே குவைத் நாட்டில் உள்ள அவர்களது பிராஞ்சுக்கு அனுப்பி வைத்ததாம் அங்கு போன பிறகு அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கின்றது வாழ்க்கையில் எல்லா வளமும், சந்தோசமும் பெற்று இருந்தாலும் பெற்றோர்களை நினைத்து இருவருமே வருந்துவதாகவும் இருவீட்டாரும் கோபம் தணிந்து ஒற்றுமையாக சொன்னால் உடன் பேரக்குழந்தைகள் கீர்த்தி-மூர்த்தி இருவரையும் அழைத்துக் கொண்டு வருவதாக சொல்ல, ஜமாலுதீனையும், ஆல்பர்ட்டையும் வெட்டுவோம் என்று சொன்னவர்கள் தூக்கி வைத்து ஆடினார்கள் அவர்கள் சம்மதிக்கவே உடன் கல்யாணராமனின் குவைத் நம்பருக்கு அழைத்து கொடுக்க, ஆல்பர்ட் கல்யாணியின் செல் நம்பருக்கு அழைத்து கொடுக்க, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கண்ணீரோடும், சந்தோசத்தோடும் செல்களின் சார்ஜர் தீரும்வரை பேரன்களோடு மாற்றி மாற்றி பேசினார்கள் பிறகு இரண்டு குடும்பத்து நபர்களையும் ஒன்றாக உட்கார வைத்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் ஜமாலுதீன் குவைத்துக்கு அனுப்ப இந்த மாதம் 18 ஆம் தேதி குடும்பத்துடன் இந்தியா வருவதால் சம்மந்திகள் இருவரும் தேங்காய் கடைக்கு சென்றார்கள் எதற்கு என்பது தங்களுக்கும் தெரியுமே.

சுபமங்கலம்.

 நண்பரே 108 க்கு 1008 போதுமா

சிவாதாமஸ்அலி-
கடைசியில் ஊடகழி சாதியும், மள்ளாங்கி சாதியும் உடல் வாங்கி கொண்டது போலயே....
Chivas Regal சிவசம்போ-
கடைசியில ரெண்டு பேரு உடலையும் பூமிதானே வாங்கப்போகுது...
சாம்சிவம்-
அடடே குடிகார மட்டைகூட தத்துவம் பேசுதே....

யோவ் பேனரை சுருக்கம் இல்லாமல் இழுத்துக்கட்டுய்யா....  

33 கருத்துகள்:

 1. அப்ப குவைத்துல நம்ம செல்வராஜூ ஐயா அவங்களுக்கு உதவலையா...

  ஒரு வழியா ஒண்ணு சேர்ந்துட்டானுங்க... இனி விருந்தும் ஆட்டமும் பாட்டமும்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அவரோட உதவியில்தான் அவங்களுக்கு நிறைய பலன் கிடைச்சுருக்கு இதை பதிவில் எழுதினால் ஊடகழிக்காரனும், மள்ளாங்கிகாரனும் மறுபடியும் முருங்கை மரத்துல ஏறினால் ? அன்பின் ஜிக்குதானே பிரச்சினை ஆகவே அதை எழுதவில்லை 18 ஆம் தேதி மூர்த்தியும், கீர்த்தியும் இந்தியா போய் விட்டு வந்த பிறகு எழுதுவோமே...

   நீக்கு
 2. ஒருவழியா பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது..

  உண்மை உங்கள் வாயால் வரட்டும் என்று தான் நானும் காத்திருந்தேன்..

  கல்யாணராமனும் கல்யாணியும் - பக்கத்து குடியிருப்பில் தான் தங்கிருக்கின்றார்கள்...

  ஒரு நாள் காற்றில் வற்றல் குழம்பு வாசம் வரவே - தேடிக் கொண்டு போனேன்..

  அறிமுகம் ஆனது.. முதலில் பயந்தார்கள்..
  அப்பன் வீட்டு உளவாளியோ?.. என்று..

  அப்புறம் தெரிந்து கொண்டு பாயாச வாளி உபசாரம் தான்!..

  பேரக்குழந்தைகள் கீர்த்தி - மூர்த்தியோடு ரெட்டை சந்தோஷந்தான்..

  அங்கே ஊரில் கிழடுகளும் துள்ளிக் கொண்டு இருக்கின்றார்களாம் - பேரப்பிள்ளைகளைப் பார்க்கணும் என்று..

  அப்புறம் என்ன.. தேவதையம்மன் கோயில் ஐந்தாம் திருவிழா அன்னைக்கு பிள்ளைகளுக்கு முடியிறக்கி காது குத்து விசேஷம்..

  எல்லாரும் கட்டாயம் வந்துடுங்க..
  (மொய்ப்பணத்தை மறந்துடாதீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தாங்கள் அவர்களது குடும்ப நண்பராக இருப்பது நான் அறிந்ததே இருப்பினும் அதை பகிரங்கப்படுத்துவது வேறு பிரச்சினையை கொடுத்து விடுமே ஆகவே மூடி மறைத்தேன் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 3. அடடே..... நிஜக்கதையா? வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிஜக்கதையா ? ஹிஹிஹி வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 4. போதும் நண்பரே....
  கல்யாணம் நல்லபடியா
  திருட்டுத்தனமாக முடிந்ததில்
  சந்தோஷம் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது சந்தோஷம் அறிந்து சந்தோசமே...

   நீக்கு
 5. கீர்த்தி,மூர்த்தியோட சுபமாக முடிந்து விட்டது.

  வற்றல் குழம்பு வாசத்துல போய் ஐயா பார்த்துட்டு வந்துட்டாங்க...நம்மூர் சமையல் மணம் காட்டிக் கொடுத்துட்டது....

  எல்லோரும் நல்லா இருந்தா சரி தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ வற்றல் எல்லாம் தேவகோட்டை ஆல்பர்ட் வீட்டிலிருந்துதான் போயிருக்குமோ.... வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 6. மூர்த்தி கீர்த்திக்கு பாண்டி கோவில்லே காது குத்து விழா வச்சா சொல்லுங்க ,பிரியாணி சாப்பிட வருகிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அவங்க கொலைதெய்வத்துக்கு இடத்துலதானே வைப்பாங்க... உங்களுக்காக ஒரு இடத்துல வைக்க முடியுமா ?

   நீக்கு
 7. பரவாயில்லை ரெண்டு குடும்பமும் நாகரிகம் தெரிந்தவர்கள்.இருந்தாலும் ஒரு புல்லூருவி இருந்தாகனுமே.....??ஃஃ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே அதெல்லாம் தொடக்கத்துலதான் ஆறின கஞ்சி பழங்கஞ்சிதானே...

   நீக்கு
 8. இருவர் வீட்டாரையும் வாழ்த்துவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு 9. கல்யாணியும், கல்யாணராமனும் குழந்தைகள் கீர்த்தி மற்றும் மூர்த்தியோடு இந்த மாதம் 18 ஆம் நாள் இந்தியா வந்து பெற்றோர்களை சந்தித்து ஆசிபெற இருக்கிறார்கள் என சொல்லி கதையை சுபமாய் முடித்துவிட்டீர்கள்.
  ‘All's Well That Ends Well’ என்று சொல்வதுபோல் கதையின் முடிவும் இனிதாய் அமைந்தது அறிந்து மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்!

  எங்களுக்கு நன்றி தெரிவித்து விளம்பர அறிக்கை ஒட்டியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி

   நீக்கு
 10. ஒரு நூல் கொடுத்தால் போதும் அதைப்பிடித்துக் கொண்டு பதிவு எழுதி விடுகிறீர்கள் வாழ்த்துக்கள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வாழ்த்துகளுக்கு நன்றி தங்களது சந்தேகமே இந்த தொடருக்கு வித்து ஐயா.

   நீக்கு
 11. நேத்தே மொய் வைச்சோம் வாழ்த்துகளோடு ...மொய்யும் போகலை வாழ்த்தும் போல...இன்றுதான் போகுது...

  கில்லர்ஜியின் திரை(ரி)க்கதைக்கு உதவிய கதைக் குழுவினர் மூவருக்கும் வாழ்த்துகள்!! சுபம் முடிவு!!! அப்போ எப்போ டைரக்ஷன் ஜி??!!! வாழ்த்துகள் ஜி! அட்வான்சாக....ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க 18-ஆம் தேதி காது குத்துக்கும் வந்துருங்க மறக்காமல் மூர்த்திக்கும், கீர்த்திக்கும் நாலஞ்சு பவுனுல தோடு வாங்கிட்டு வந்துடுங்க....

   நீக்கு
 12. நவசரங்களுடன் கூடிய பதிவுத்தொடர் மூலம் அசத்திவிட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 13. கல்யாணம் நல்ல படியாக முடிந்தது குறித்து சந்தோஷம் சகோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோ காதுகுத்துக்கு வந்துருங்க...

   நீக்கு
 14. எல்லாக் காதல் திருமணங்களும் இப்படி முடிஞ்சுட்டா நல்லாத் தான் இருக்கும். :) எங்கே! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி வரும் காலங்களில் இது சாத்தியம்தான் சகோ வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. அருமையான முடிவு. கீதா சொல்வது போல் காதல் திருமணங்கள் எல்லாம் சுபமாய் முடிந்தால் நல்லது தான். பேரக்குழந்தைகள் வரவால் இரு குடும்பமும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் முடிவைக்காண வந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

   நீக்கு