தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 07, 2016

கல்யாணராமன், ஆல்பர்ட், ஜமாலுதீன்

பதிவு தொங்கி நிற்கின்றது என்று புரளியைக் கிளப்பி விட்ட ஐயா திரு. ஜியெம்பி அவர்களுக்கும்...... 

இந்தப்பதிவு உருவானதற்க்கு மூல காரணம் அறிய கீழே சொடுக்குக....

மலைக் கோயிலின் மேலே கல்யாணி பட்டுச் சேலையில் படபடப்புடன் நின்று கொண்டு இருக்க, ஜமாலுதீன் பக்கத்து திண்டில் உட்கார்ந்து இருந்தான் ஆல்பர்ட் மாலையுடன் வரவும் ஓடி வந்து ஜமாலுதீன் கேட்டான்.
கல்யாணராமன் எங்கே ?
கீழே காருக்கு டிக்கெட் வைக்க போயிருக்கான் இப்ப வந்துடுவான்.
சரி வாங்க கோயிலுக்கு பக்கத்துல போய் இருப்போம், கல்யாணி நீங்க அப்படி மறைவாக உட்காருங்க...
¼ மணி நேரம், ஆனது செல் லைன் போகவில்லை...
என்னடா ஆல்பர்ட் அவனைக் காணோம் ?
நீ கீழே போய் பார்த்துட்டு வாயேன் ?
சரி நான் போயிட்டு வாறேன்.
ஜமாலுதீன் வேகமாய் கீழே வந்து பார்த்தான் கார் நின்று கொண்டு இருந்தது காரையே சுற்றிக்கொண்டு வந்ததைக் கண்ட பூக்கடைக்கார பெரியவர் கேட்டார்.
தம்பி என்ன பார்க்கிறீங்க ?
இல்லை இது என்னோட நண்பன் காரு.....
யாரு... பட்டு வேஷ்டி சட்டையோட இருந்தவரா ?
ஆமாங்கய்யா....நீங்க பார்த்தீங்களா ?
ஐயோ பாவம் அவருக்கு தேங்காய் கண்ணுல அடிச்சு நாங்கதான் ஆம்புலன்ஸ்சுக்கு போண் செஞ்சு ஆஸ்பெட்டலுக்கு ஏற்றி விட்டோம்.
என்ன ஆஸ்பெட்டலுக்கா ?
ஆமா அவருக்கு இன்னைக்கு கல்யாணமா ?
ஆ..... இல்லை ஐயா இதோ வர்றேன்.
ஆல்பர்ட்டுக்கு கால் செய்தால் மலையில் நிற்பதால் டவர் கிடைக்கவில்லை வேக வேகமாக மலைக்கு ஓடி வந்தான் ஜமாலுதீன் அங்கு அவன் கண்ட காட்சி மேலும் பயமுறுத்தியது நான்கு பேர் ஆல்பர்ட்டை புரட்டிக் கொண்டு இருந்தார்கள் கூட்டம் அவர்களை விலக்கி விட்டது கொஞ்சம் தூரத்தில் கல்யாணியை இரண்டு பெண்கள் அறைந்து கொண்டு இருக்க.... பக்கத்தில் போகலாமா ? போனால் நாமும் இந்தக்கூட்டணி என்று தெரிந்து விடுமே.. நமக்கும் அடி விழுமே... சிறிது நேரத்தில் அவர்கள் கல்யாணியை தர தர வென்று இழுத்துக்கொண்டு மலையை விட்டு இறங்க.... வேகமாக ஆல்பர்ட்டிடம் ஓடினான் ஜமாலுதீன் முகமெல்லாம் வீக்கமாக இருந்தான் தலையில் சிறிது காயம் பட்டு ரத்தம் ஒழுகிக்கொண்டு இருந்தது.
டேய்..... ஆல்பர்ட் என்னடா ?
ஜமாலுதீன் கல்யாணியோட சொந்தக்கார பொம்பளை யாரோ கோயிலுக்கு வந்துருக்கு அது அவுங்க அப்பாவுக்கு போண் செஞ்சு சொல்லி வரவச்சுருச்சு அதோட எனக்கும் கல்யாணிக்கும்தான் கல்யாணம்னு நினைச்சு என்னைப் போட்டு அடிச்சிட்டாங்கடா... கல்யாணராமன் எங்கேடா ?
எந்திரிடா... வாடா முதல்ல உனக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கணும்.
அவன் எங்கேடா ?
வாடா சொல்றேன்.
வேகமாய் கீழே வந்து ஒரு டாக்ஸி பிடித்து கவர்மெண்ட் ஆஸ்பெட்டலுக்கு வந்தான் வழியில் நடந்ததை சொன்னான் கல்யாணராமனின் செல் ஸ்விட் ஆஃப்... தனது சொந்தக்கார டாக்டர் இப்ராஹிமிடம் மலையில் படியிலிருந்து உருண்டு விழுந்து விட்டான் என்று சொல்லி ட்ரீட்மெண்ட் எடுத்து பெட்டில் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் கட்டாயமாக சொன்னதால் மீற முடியாமல் வந்து பெட்டில் வந்து படுத்தான் பக்கத்தில் பார்த்தால் ? அடுத்த பெட்டில் கல்யாணராமன் தலையில் கட்டுப்போட்டு ஒரு கண்ணை மறைத்திருந்தார்கள் மயக்கத்தில் உறங்கி கொண்டு இருந்தான் இருவரும் அருகே போக நர்ஸ் ஒருத்தி கேட்டாள்.
இவரை உங்களுக்கு தெரியுமா ?
ஆமா எங்களோட ஃப்ரண்ட்தான்.
வாங்க ரிஷப்பசன்ல வந்து விபரம் சொல்லுங்க, இவரிடம் செல் போணும் இல்லை.
சரி ஆல்பர்ட்... நீ படுத்துக்கோ நான் போயிட்டு வாறேன்...
இவன் அப்பாவுக்கு என்னடா சொல்றது ?
இரு நான் வர்றேன்....
விபரம் சொல்லி விட்டு வந்தான்.
அவங்க அப்பாவுக்கு போண் செய்து சொல்லிட்டேன் நாங்க ஆஸ்பெட்டலுக்கு வந்தோம் கல்யாணராமன் பெட்ல இருந்தான் அப்படின்னு...
அவங்க வந்து இவன் பட்டு வேஷ்டியோட இருக்கிறதை கேட்டால் ?
வரட்டும் பார்ப்போம் இவன் நினைவு தெளிந்து சொல்லட்டும் அப்புறம் முடிவு செய்வோம் என்ன செய்ய முடியும் ? தவறு நடந்து போச்சு சந்திச்சுதான் ஆகணும் நடக்கிறதை பார்ப்போம்.
சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே... கல்யாணராமனின் அப்பாவும், அம்மாவும், தம்பியும் ஓடி வந்தார்கள்.
கல்யாணம்......
அவளது அம்மா அலற இருவரையும் தீர்க்கமாக பார்த்த கல்யாணராமனின் அப்பா
டேய் என்னடா இவன் பட்டு வேஷ்டி உடுத்தி இருக்கான் ?
அது.... வந்துப்பா... தெரியலை நாங்க ரெண்டு பேரும் வந்தோம் இவனைப் பார்த்தோம் அதான் போண் செய்தேன்..
உனக்கு என்னாச்சு ? முகமெல்லாம் வீங்கி இருக்குதே ஏன் ?
அது வந்து படியிலருந்து உருண்டு விழுந்துட்டேன்..
எங்கே ?
வீட்டு மாடிப்படியிலருந்து....
உங்க அப்பா அம்மா எங்கே ?
அவங்க...... ஊருக்கு போயிட்டாங்க....
ரெண்டு பேரும் சேர்ந்து எதையோ மறைக்கிறீங்க... என் மகன் எந்திரிக்கட்டும்.
சிறிது நேரத்தில் கல்யாணராமன் அசைய....
கல்யாணம் தம்பி இங்கே பாரு.. அம்மாவைப் பாருப்பா...
மெதுவாக ஒரு கண்ணைத் திறக்க... டாக்டர் வந்தார்.
நீங்கள்லாம் யாரு ?
டாக்டர் என்னோட மகன்தான் எப்படி ?
ஆம்புலன்ஸ்ல கொண்டு வந்தாங்க கோயில்ல தேங்காய் உடைக்கும் பொழுது கண்ணுல அடிச்சுருச்சாம் மேல்பட்டையில மூணு தையல் போட்ருக்கோம் பயப்பட ஒண்ணுமில்லை ஒரு வாரத்துல சரியாகிடும் நர்ஸ் குளுகோஸ் பாட்டிலை இத்தோடு நிறுத்திட்டு வீட்டுக்கு அனுப்பிடுங்க....
ஓகே டாக்டர்.
கல்யாணம் சொல்லுப்பா.. எந்த கோயிலுக்கு போனே ?
தேவதையம்மன் கோயிலுக்கும்மா...
யாருக்கும் கல்யாணமா ?
ஆ.....ஆமா... ஃப்ரண்டுக்கு.
அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டு ஜமாலுதீன் தலையசைத்தான் ஒன்றும் சொல்லாதே.... என்று, புரிந்து கொண்ட கல்யாணம்...
கோயிலுக்கு வந்தவரு அடிச்ச தேங்காய் கண்ணாம்பட்டையில அடிச்சுருச்சும்மா....
ஒரு மணி நேரம் யாரும், யாருடனும் பேசாமல் இருந்தார்கள் பிறகு குளுகோஸ் எடுக்கப்பட கல்யாணத்தைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார்கள் அவனது அம்மாவும், அப்பாவும், தம்பியும் கல்யாணத்தின் அப்பா ஜமாலுதீனையும், ஆல்பர்ட்டையும் சந்தேகமாய்ப் பார்த்துக் கொண்டே போனார் அவர்கள் போனதும் ஜமாலுதீன் சொன்னான்.
ஆல்பர்ட் உனக்கு வேதனை இருக்கா ?
இப்ப பரவாயில்லை.
நர்ஸ்சிடம் நாங்கள் வீட்டுக்குப் போகிறோம் என்று கட்டாயமாக டிஸ்சார்ஜ் ஆகி கொண்டு வெளியேறி ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆல்பர்ட் வீட்டுக்கு விடச்சொல்ல தெரு முனையில் நுழையும் போதே தெரிந்தது அவனது வீட்டு முன் சுமார் 100 பேர்கள் நின்று கொண்டு இருப்பதை கண்டதும் ஜமாலுதீன் சொன்னான்.
ஆட்டோ நிறுத்துங்க....

தொடரும்...

42 கருத்துகள்:

 1. கொஞ்சம் இல்லை நெறய தலை சுத்துது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா தமிழ் மணம் இப்பொழுது ஓட்டு அளித்தால் இப்படித்தான் இருக்கின்றது வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 2. பரபரப்பான கதை. படபடப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே விரைவில் படபடப்பு அடங்கும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 3. ஆக மொத்தம் கல்யாணம் நடக்கல....
  தொடருக்காக ஐ ம் வெயிட்டிங்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரு கண்டா ? எல்லாம் கணினியில் டைப்பியது போல்தான் நடக்கும் காத்திருப்புக்கு நன்றி நண்பரே

   நீக்கு
  2. பாவம் நண்பரே கல்யாணம்
   அவனுக்கு ஒரு கல்யாணத்த
   பண்ணி வைங்க....
   நாங்களும் வயிறார வாழ்த்துவோம்....

   நீக்கு
  3. வருக நண்பரே கல்யாணம் பண்ணி வைக்க நானென்ன ஐயரா ?

   நீக்கு
 4. GMB ஐயா கிளப்பி விட்ட புரளியால தான -
  ஆல்பர்ட் - அடி வாங்குன பார்ட் எல்லாம் வெளியே வருது!..

  இப்படியே ஊர் புறணி பேசினால் எங்களுக்கும் பொழுது போகுதே!..

  ஜமாலுதீன் Jam ஆகாம இருந்தா சரி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   ஆல்பர்ட் அடி வாங்குவதற்கு காரணம் நானல்ல, திரு. ஜியெம்பி ஐயாதான்.

   நீக்கு
 5. தொடர்கிறேன் நண்பரே!
  த ம 3

  பதிலளிநீக்கு
 6. மீண்டும் கதையை தொக்கி நிற்க வைச்சிட்டீங்களே:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இதற்கு காரணம் ஒரு சிலர் அவர்கள் யார் ? என்பது அடுத்தடுத்த பதிவுகளில் தெரியும்.

   நீக்கு
 7. கதை தொடரட்டும் இனிய வாழ்த்துகள்.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 8. விறு விறுப்பாய் போகிறது கதை.அடுத்து என்ன பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 9. அடுத்த ‘பூசை’ ஜமாலுதீனுக்கா? காத்திருக்கிறேன் நடந்ததை அறிய.

  பதிலளிநீக்கு
 10. கதையை தொடருங்கள் சகோ. நானும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையைத் தொடர்ந்து வருவதற்கு நன்றி சகோ

   நீக்கு
 11. சரி சரி யாரு வேணா அடி வாங்கட்டும் தமிழ்ப்படத்துல என்ன அடி வாங்கினாலும் ஹீரோ சாகாம கடைசில வில்லனை அடித்து விட்டு சுபம் போடுவது போல ஒரு சுபம் போட்டு முடிஞ்சுருங்க கில்லர்ஜி! ஹஹஹ்ஹ் தமிழ்ப்படம் பார்த்த எஃபெக்ட் ஹிஹிஹி....தொடர்கின்றோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா, ஆமா கசாநாயகன்தான் தமிழ்நாட்டில் சாக கூடாதே.... அப்புறம் படம் தியேட்டரை விட்டுத்தான் ஓடும்

   நீக்கு
 12. தொக்கி நிற்பது போல் தெரிகிறதே என்ற சந்தேகம் சொன்னால் அது புரளியா. புரளி என்பதற்கு என்ன அர்த்தம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா புரளிக்கு கிசுகிசு என்றும் சொல்லலாம் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 13. தொடர்கதையாகியாச்சா கல்யாணம் கதை.... சரி சுவாரசியமா இருக்கு...படிச்சுடுவோம்....

  பதிலளிநீக்கு
 14. கதை எதையோ ஞாபக படுத்துதே....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படினாக்கா... அதை உடனே சொல்லிடுங்க நண்பரே...

   நீக்கு
 15. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக எனக்கு தெரியும் நண்பரே வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. நல்லா இருக்கு நடை.
  கல்யாணத்துக்கு கல்யாணிகூட கல்யாணம் ஆகுமா?  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/03/13.html

  பதிலளிநீக்கு
 17. தொடரட்டும். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 18. ஆட்டோ நின்றதா? இல்லை நகர்ந்ததா? அதிலும் சஸ்பென்சா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் கேள்விக்கு பதில் இன்றைய பதிவில் கிடைக்கும்.

   நீக்கு
 19. அதை படித்து விட்டு இங்கு வந்தேன்..ஹிஹிஹி...கதை நல்லா இருக்கு...தம 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ இதை படித்து விட்டுதானே அங்கு போகணும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. பின்னாலிருந்து படிச்சாலும் கதை புரியுதே! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா காரணம் இதை மட்டும் சிலபேர் படிக்ககூடும் அதற்காகத்தான் இப்படி செய்தேன் நன்றி

   நீக்கு