தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 02, 2016

Software Engineer


சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நடந்து செல்லும் போது USB ஒன்றை கண்டெடுத்தேன் வீட்டில் உள்ள கணினியில் போடாததற்கு காரணம் ஒருக்கால் வைரஸ் இருக்கலாம் எப்பொழுதுமே ஊரான் வீட்டு பிள்ளையை கிணற்றில் இறக்கி விட்டு ஆழம் பார்ப்பது நமது பழக்கம்தானே... அலுவலகத்துக்கு வந்து எனது கணினியில் போட்டு பார்க்கும் போது கடவுச்சொல்  கேட்டது என்ன செய்வது ஓய்வு நேரங்களில் ஆயிரத்தில் இருந்து தொடங்கி அடித்துக் கொண்டே வந்தேன் எண்ணாக இல்லாமல் எழுத்தாக இருந்தால் என்ன செய்வது தட்டச்சு பலகையை சடச்சடவென அடித்து Enter செய்து கொண்டே வந்தேன் திடீரென OK ஆகி விட்டது என்ன அடித்தேன் என்பது எனக்கே தெரியவில்லை சரியென உள்ளே சென்றால் பத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் ஒரு ஆணும், பெண்ணும் நெருக்கமான நிலையில் ஆபாசம் என்று சொல்லி விட முடியாது எல்லா படங்களிலும் அதே நபர்கள் அடுத்து கோப்பு ஒன்று இருந்தது திறந்தேன் ஆச்சர்யம் எனக்கு காரணம் தமிழில் கவிதை போல சில வார்த்தைகள் அதன் கீழே ஆங்கிலத்தில் அவருடைய பெயர், முகவரி, தொலைபேசி எண் (படித்ததும் வேறு வழியின்றி உடன் அழைத்தேன்) ஓரிடத்தில் சந்தித்தோம் பரஸ்பரம் நலகுசலம் விசாரித்தல், பின்பு கேட்டார் கடவுச்சொல் எப்படி. ? சத்தியமாகத் தெரியாது குருட்டடியில் திறந்து விட்டது என்னை சந்தேகமாய் பார்த்து என்ன வேலை செய்கிறீர்கள் ? எனக்கேட்டார் அவரின் எண்ணம் எனக்கு புரிந்து விட்டது நீங்கள் நினைப்பது போல் நான் கணினி பொறியாளர் கிடையாது ஒரு அலுவலகத்தில் சாதாரண குமாஸ்தா என்றேன் பிறகு சொன்னேன் இந்த மாதிரி புகைப்படம் எடுப்பதே தவறு அதையும் USBயில் வைப்பது அதைவிட தவறு காரணம் உங்கள் மனைவி இதைப்பார்த்தால் உங்க வாழ்க்கைக்கும் பிரச்சினை என்றேன் அவர் சங்கடப்பட்டு என்னிடம் மன்னிப்பு கேட்டு இதை இப்பவே நீக்கம் செய்து விடுகிறேன் என்றார் பிறகு எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டது.

ஒருநாள் நான் Shopping Mall போகும்போது யதார்த்தமாய் அவரை குடும்ப சகிதமாய் சந்திக்க நேர்ந்தது மனைவி மக்களை எனக்கு அறிமுப்படுத்தி வைத்தார் அந்தப் பெண்மணி என்னிடம் சகஜமாக பேசினார் அவர் சங்கோஜப்பட்டு பேசினார் காரணம் நான் புகைப்படத்தில் பார்த்த பெண் அவருடைய மனைவி

நண்பா, நண்பி இந்த மாதிரியான புகைப்படங்களை எடுக்காதீர்கள் எனசொல்ல எனக்கு உரிமையில்லை இருப்பினும் USB யில் சேமிக்காதீர்கள் எனசொல்ல சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு சந்தோஷமே கவிதை போல சில வார்த்தைகள் என்ன தெரியுமா..?

நீ திருடன் இல்லையெனில்...
திருப்பிக் கொடுத்து விடு
நீ மடையன் எனில்...
இதை மறைத்துக் கெட்டு விடு.
இப்படிக்கு
நான்தான்டா நாதாரி

CHIVAS REGAL சிவசம்போ-
இவன் நாதாரின்னு தன்னைச் சொல்றானா  இல்லை எடுத்தவனை சொல்றானா ? தெலுகுபட டைட்டில் மாதிரி இருக்கு நமக்கு கெடச்சுருந்தா நாலு நாளுக்கு குவாட்டருக்காவது பிஸினஸ் பேசியிருக்கலாம்.

48 கருத்துகள்:

 1. நாம் அழித்து விட்டதாக நினைக்கும் ஃபைல்களைக் கூட மீட்டு எடுத்து விட முடியும் என்னும் டெக். வளர்ச்சியில் இதெல்லாம் அபாய விளையாட்டுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான வார்த்தை இப்பொழுது செல்ஃபி என்ற வகையில் பலரும் நொடிக்கு நொடி எடுத்து விட்டு பிறகு மனம் வருந்துகின்றார்கள் காஞ்சிபுரம் இனிய நண்பர் திரு. தேவநாதன் இப்படித்தானே மாட்டிக்கொண்டார்.

   நீக்கு
  2. ஹாஸ்டலில் இருக்கும் பெண்கள் எடுத்துக் கொண்ட எக்குத் தப்பான ஃபோட்டோக்களை அழித்து விட்டதாக அவர்கள் நம்பியிருக்க, அடுத்து அவர்கள் எடுத்த சில நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை பிரிண்ட் எடுக்க ஏதோ ஒரு கடையில் கேமிராவின் மெமரி கார்டை கொடுத்திருக்கிறார்கள். அங்கிருந்து இந்த 'அழிக்கப்பட்ட' புகைப்படங்களையும் அவர்கள் மீட்டெடுத்து இணையத்திளிட்டதும் செய்தியானதே!

   நீக்கு
  3. உண்மை நண்பரே யூடூப்பிள் நிறைய இப்படித்தான் உலாவுகின்றது மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. எப்படியெல்லாம் உங்களுக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே எல்லோருக்குமே இப்படியான அனுபவங்கள் இருக்கலாம் நான் தங்களுக்கு காட்சியாக விவரிக்கின்றேன் அவ்வளவுதான்

   நீக்கு
 3. USB திறக்கப்பட்டதோ மேற்படி சமாச்சாரங்களோ கிடக்கட்டும்..

  கடைசி நாலு வரிக் கவிதை...

  அடடா..

  படித்ததில் இருந்தே சிரித்துக் கொண்டிருக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரித்துக்கொண்டேன் இருங்கள் ஜி விரைவில் அடுத்த நகைச்சுவை பதிவு தருகின்றேன்.

   நீக்கு
 4. டெக்னிகல் பதிவு தரப்போறீங்கன்னு நினைச்சேன்... படத்தை பார்த்தவுடன்...ஏமாற்றிட்டீங்க பாஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதம் முழுவதும் இப்படித்தான் நண்பரே.. அதற்காக வராமல் இருந்து விடவேண்டாம்

   நீக்கு
 5. நண்பரே நாதாரினு தன்னையே சொல்லியிருக்கிறார்...
  அதற்கு முந்தின வரிகளை எடுத்தவருக்காக தான் சொல்லப்பட்டிருக்கும் என்று
  என் வாயால சொல்லாமாட்டேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்காக எழுதியதால்தானே உடன் கொடுத்து விட்டேன் நண்பரே

   நீக்கு
  2. சரி நண்பரே
   கண்டெடுத்ததும்
   உரியவரிடம் கொடுத்ததும் நன்மைக்கே....
   அதை கணாமல் தாங்கள்
   போயிருந்தால் இப்படி ஒரு பதிவு
   எங்கள் கண்களுக்கு கிடைத்திருக்காது...
   அவரது நட்பும் உங்களுக்கு கிடைத்திருக்காது....

   ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்...

   நீக்கு
  3. இதில் அது திறந்து கொண்டதுதான் முதல் அதிசயம் நண்பரே

   நீக்கு
  4. குத்து மதிப்பாக திறந்ததால் தான் இப்படியொரு பதிவு....

   நீக்கு
 6. இதை படமெடுப்பவர்கள் உணர வேணும்...
  நாலுவரிக் கவிதை ரொம்ப நல்லாயிருக்கு... ஹி...ஹி...

  பதிலளிநீக்கு
 7. இது பரவாயில்லை....
  இன்னும் மோசமாய் கேள்விப்படுகிறேன்..

  அதுசரி ஜி..கண்களை விடவா கேமரா...
  இதயத்தைவிடவா யு.எஸ்.பி.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் கவிஞரே கண்களில் பார்ப்பது நெஞ்சினில் நின்று விடும் கேமரா எடுப்பது உலகுக்கு அளித்து விடும்.

   நீக்கு
 8. தேவையில்லாத வேலை. இதனால் பிரச்சனை வரும் என்பதை புரிந்து கொள்வதில்லை பலரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஜி இன்றைய காலத்தில் பெண்கள் எங்கு சென்றாலும் உடை விசயத்தில் கவனம் தேவை காரணம் எங்கும் கேரமா டாய்லெட்டை நம்புவதுகூட முடியாத காலமாகி விட்டது.

   நீக்கு

 9. இது போன்ற படங்களை எடுப்பவர்களை ஒரு வித உள இயல்பு பிறழ்வாளர் (Pervert) என்பார்கள். நல்ல வேளை உங்கள் கையில் அந்த USB கிடைத்தது. எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அறிந்து மகிழ்ச்சி.தங்களுக்கு பாராட்டுக்கள்! தங்களின் கவிதைக்கும் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 10. எவ்வளவு அக்கறையாக அடுத்தவர் விபரங்களை அறிந்திருக்கின்றீர்கள். கூடாதுதான். ஆயினும் அவர் நட்புக்கிடைத்தது. அவரின் உடமையை அவரிடம் சேகரித்து விட்டீர்கள். அதை எமக்கும் அறியத் தந்திருக்கின்றீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இதில் அக்கறை என்பதில்லை அவருடைய தொலைபேசி எண் இருந்ததால் கொடுத்தேன் இல்லையெனில் ?

   நீக்கு
 11. சகோதரா விழுந்து விழுநது சிரித்தேன்
  வேறு எதைக் கூறுவது....
  உலகம் பல விதம்.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மனிதர்களும் பலவிதமே வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. இது முழுக்க முழுக்க கற்பனைதானே ?என்னால் நம்ப முடியவில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி இவர் பெயர் ஊர் எதுவும் நான் சொல்லவில்லை காரணம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ஒருக்கால் அது திறக்காமல் போயிருந்தால் அதை தூக்கி வீசிவிட்டு போயிருப்பேன் இன்னும் சொல்லப்போனால் இவருடன் பழக்கம் நெருக்கமானதற்கு காரணமும் உண்டு பணியின் காரணமாக இவரது அலுவலகத்துக்கு போனேன் அங்கு இவரை மீண்டும் கண்டேன் என்னால் இவருக்கு எனது அலுவலகத்தில் இரண்டுமுறை ட்ரான்ஸ்போர்ட் காண்ட்ராக்ட் கிடைத்தது பின்நாளில் அவரது அலுவலக ஆண்டு விழா பார்ட்டியில் நானும் கலந்து கொண்டு இருக்கின்றேன் அப்பொழுது இவருடன் எடுத்த புகைப்படமும் இருக்கின்றது.

   இவர் அதிகம் படித்தவரே தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று விட்டார் குடும்பம் தமிழ்நாட்டில் இருக்கின்றதாக கேள்விப்பட்டேன் அவரது புகைப்படத்தை இட்டு அது அவருக்கு தெரிந்தால் மனக்கஷ்டம் வரலாம் ஆகவே இடவில்லை.

   ஜி உண்மையிலேயே இந்நாட்டுக்குள் வந்த பல இந்தியர்கள் நேர்மையை கடைப்பிடிக்கின்றார்கள் அதற்கு காரணம் இந்த நாட்டு சட்டம் அவர்கள் இந்தியாவுக்கு கேன்சலில் திரும்பிய பிறகும் இந்த நேர்மை தொடர்கின்றது

   கற்பனை சுவாரஸ்யத்துக்காக அந்தக்கவிதை மாதிரி எழுதினேன் அவர் கொடுத்திருந்த குறிப்பு இதோ கீழே இதுதான்.
   Dear
   Friend please contact to me
   My mobile No: 00971..…………….00

   நீக்கு
 13. இப்படித்தான் பலரும் சிக்கிக் கொள்கின்றார்கள் ஜி. இப்போது கேட்கவே வேண்டாம்...அழிக்கப்பட்டவை எல்லாம் மீண்டும் ஜீபும்ம்பா கிணற்றுப் பூதம் போல் மீண்டும் வந்துவிடுகிறது டெக் அதற்கும் வந்துவிட்டதே..ஹும் கில்லாடிகளின் மூளை எதற்கெல்லாம் பாருங்கள்.. பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் புகைப்படங்கள் வெளியிடுவதிலும்.

  வித்தியாசமான அனுபவம்தான் தங்களுக்கு ஜி! அது சரி நீங்கள் பல்பு வாங்கலியா அவரது குடும்பத்தாரைச் சந்தித்த போது? அவரது மனைவியே புகைப்படத்திப் பார்த்தது என்பதால்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நான் எதற்கு ? பல்பு வாங்கணும் என்மீது தவறு இல்லையே அவர் என்னை வீட்டுக்கு அழைக்கும் அளவுக்கு பழக்கம் இல்லை சந்திப்பு எதிர் பாராமல் நடந்து விட்டது சந்திப்பின் போது அவர் நெளிந்ததைக் கண்டு எனக்குத்தான் சங்கடமாக இருந்தது அதிகம் பேசாமல் விலகி கொண்டேன் ஒருமுறைதான் அவரது மனைவியை பார்த்தேன் அதன் பிறகு குழந்தைகளை சிலமுறை பார்த்து இருக்கின்றேன் மேலும் விபரம் நண்பர் பகவான்ஜியின் மறுமொழியில் காண்க...

   நீக்கு
 14. எச்சரிக்கை அவசியம் . படங்களை டெலிட் செய்துவிட்டோமே என்று நம்பி கடையில் கொடுத்தால் அவர்கள் டெலிட் செய்யப்பட்ட படங்களைத்தான் தேடி எடுப்பபார்கள். இதற்கென்று சில மென்பொருள்கள உள்ளன, பார்மெட் செய்யப்பட்ட நினைவகத்தில் சம்பந்தமில்லாத தகவல்களை பலமுறை எழுதி அழித்துவிடும். எனினும் அந்தரங்க படங்கள சேமித்து வைக்காமல் இருப்பது நல்லது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே முதலில் இப்படி புகைப்படம் எடுப்பதே தவறுதானே... அதுவும் மனைவியுடன் ? வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. யூ எஸ்பில.. சேமிப்பது சுட்டு பொட்டாலும் எனக்கு அப்படிபட்ட வாய்ப்பே கிடையாது நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களைப்பற்றி எனக்கு தெரியும் நண்பரே

   நீக்கு
 16. எதேச்சையாகக் கடவுச் சொல் கண்டு பிடிக்க முடியுமா சாஃப்ட் எஞ்சினீயர் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா அந்த U.S.B எனது அலுவக கணினியில் சொருகி வைத்து விட்டேன் சுமார் ஒரு வாரம்வரை ஃப்ரீயான நேரங்களில் விளையாட்டைப் போல் தட்டினேன் திறந்தது கடைசிவரை எனக்கு கடவுச்சொல் தெரியாது வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 17. சேகரித்து வைக்கும் அளவுக்கு விசய ஞானம் தெரிந்தவர்கள் தான் எதை, எங்கு சேமித்து வைக்க வேண்டும்? என்று தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். தவிர, என்ன தான் இதனுள் இருக்கிறது என்பதை திறந்து பார்க்க நீங்கள் செய்த முயற்சிகளை எழுதி இருக்கும் விதம் தான் இன்னும் என்னுள் ரிவைண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சும்மா தட்டிக்கொண்டு இருந்தேன் அது திறக்கவில்லை எனில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் இது இணையத்தில் என்றாவது வந்து விடுமோ என்று எண்ணியே வாழ்ந்திருப்பார் இனி வராது ஒருக்கால் வந்தால் அது எனது வேலையே என்று அவர் நினைக்க்கூடும் ஆனால் கண்டிப்பாக அப்படி நடக்காது காரணம் நான் அதை சேமிக்கவில்லை.

   நீக்கு
 18. வணக்கம்
  ஜி
  வித்தியாசமான நட்பு அதுவும் USB4 வழி..கிடைத்தது நல்லது ஜி.த.ம12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 19. கத்தி மீது நடக்கிற மாதிரியான பதிவு
  சாமர்த்தியமாக நடந்துவிட்டீர்கள்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. பதில்கள்
  1. வருக தோழரே தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 21. வித்தியாசமான அனுபவம். பலருக்கும் எச்சரிக்கை அனுபவமும் கூட!
  த ம வாக்கு போட்டாச்சு. சுற்றிக்கொண்டே இருக்கிறது. விழுந்தால் நீங்கள் அடுத்த தேவகோட்டை எம்எல்எ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எம். எல். ஏவா.....? நான் நல்லா இருக்க வேண்டாமா ?

   நீக்கு
 22. நல்ல அறிவுரை தான். நலல்வேளையாக உங்க கையிலே கிடைச்சது. அவரும், அவரு மனைவியும் பிழைத்தார்கள். வேறு எவராவது தவறான நபர் கைகளில் கிடைச்சிருந்தால்! நினைச்சே பார்க்க முடியலை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மைதான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அதை நினைத்து வருந்துவார்

   நீக்கு