தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 12, 2016

ஏமாளியா ? கோமாளியா ?


ரசிப்புத்தன்மை என்பது அவசியம் வேண்டும் அப்பொழுதுதான் அவன் மற்ற பிறவிகளிடமிருந்து வேறு படுகிறான் அதற்காக இப்படி கோமாளி வேஷம் போடவேண்டிய அவசியமென்ன ? எத்தனை சந்தோஷம் உன்முகத்தில் ? செலவு செய்து பார்க்கிறாய் பார்த்துரசி முடிந்தவுடன் அடுத்த உனது வேலையைப்பார் ஆசையாய் ஒரு லட்சியத்தோடு இதில் களம் இறங்கிவர்கள்தான் இந்த வீரர்கள் முழுப்பலனும் பெறும் எந்த வீரர்களாவது இப்படிச் செய்கிறார்களா ? இல்லையே ஏன் ? அவர்கள் அறிவாளிகள் உன்னைப்போல் கோமாளிகள் அல்ல ! மானிடா ! இந்த உலகமே உன்னைப் பார்க்கிறதே ! மறந்து விட்டாயா ? இல்லை, பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்கிறாயா ? நீ ஒருவன் இப்படிச் செய்வதால் ஒட்டு மொத்த தமிழனுக்கும் கோமாளி என்ற பெயர் கிடைக்கிறதே அதைப்பற்றி கொஞ்சம் நினைத்து பார்த்தாயா ? சரி மற்றவர்கள் கிடக்கட்டும் உனது வாழ்க்கை துணைவியை பெற்று வைத்திருக்கும் மாமியார் என்ற பெயரில் வருகிறாரே ஒருதாய் அவர் உன்னைப் பெருமைப்பட பேசமுடியுமா ? சிந்தி மானிடா சிந்தி உனது நேரத்தையும் பணத்தையும் இழந்து ஏமாளியாய் மட்டுமல்ல கோமாளியாகவும் ஆகிறாயே !
காணொளி

40 கருத்துகள்:

 1. இப்போது பெண்களும் இப்படி தங்களை அலங்கோலம் செய்து கொள்கின்றனர்.. நல்லவேளை நம் ஊரில் இன்னும் B... Painting அறிமுகம் ஆகவில்லை.. அதற்கும் நாலு பேர் கிளம்பி விடுவார்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி வர சாத்தியம் உண்டுதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. வணக்கம்.

  ஜி.வாலிப வயது....இது...ஹீ...ஹீ..ஹீ..
  தாங்கள் சொல்வது சரிதான்.பல இடங்களில் பார்த்திருக்கேன்... பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே வாலிப வயது முடிந்தாவது திருந்தினால் நலம்.

   நீக்கு
 3. இது ஒரு ஜாலி மூடில் செய்வது அவ்வளவே பதிவு போட்டுத் திட்டும் விசயம் அல்ல இது..

  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தோழரே இதே ஜாலி பலன் பெறும் விளையாட்டு வீரர்களுக்கு வரவில்லையே காரணம் இது கோமாளித்தனம் என்பதை அறிந்தவர்கள்தானே... வருகைக்கு நன்றி

   நீக்கு
 4. பதில்கள்
  1. ஆம் நண்பரே ரசிகர்’’கல்’’தான் நன்றி

   நீக்கு
 5. மன இறுக்கங்களை போக்கக் கூடியது,கோமாளித்தனங்கள்.அவையும் சில சமயங்களில் தேவைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே மாறுபட்ட கருத்துரை தந்து இருக்கின்றீர்கள் நன்றி

   நீக்கு
 6. பல முறை நகைச்சுவை என்னும் பெயரில் நடக்கும் கோமாளித்தனங்களை ஏனோ ரசிக்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மைதான் நான் சொல்ல வந்ததை அழகாக விளக்கி விட்டீர்கள் நன்றி

   நீக்கு
 7. இது என்னமோ புது நாகரிகம் போல! எனக்கும் அவ்வளவாப் பிடிக்கலை தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அறியா மடந்தைகள் வேறென்ன... ?

   நீக்கு
 8. வெறித்தனமான ரசிகர்கள்! இந்த மனோபாவம் குறைவது நல்லதுதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே குறைந்தால் சந்தோஷம்தான் வீட்டுக்கும், நாட்டுக்கும்.

   நீக்கு
 9. இதெல்லாம் சகஜம்தான்.யாரும் கவலைப்பட மாட்டார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா யாருக்கும் வெட்கமில்லை.

   நீக்கு
 10. இப்படியும் சிலர்.... இதுவும் ஒரு வகை மோகம்.

  பதிலளிநீக்கு
 11. அவர்களுக்கு அதில் ஒரு சந்தோஷம் என்றால் செய்து கொள்ளட்டுமே ,நாம எழுதி சொறிந்து கொள்வதைப் போல :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி நமக்கும்கூட இது ஒருவகையான சொறிதல்தான்.

   நீக்கு
 12. இது ஒரு வகை மோகம்... அதுதான் ரசிகன்...
  எஞ்சாய் பண்ணட்டும் விடுங்க... :)

  பதிலளிநீக்கு
 13. சொன்னா கேட்கிற வயசா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே ஏழு குதிரை வயசை, ஏழரைக் கழுதை வயசு சரி செய்ய முடியுமா ?

   நீக்கு
 14. ஏதாவது சொல்லப்போனால் நம்மை கோமாளியாக்கிவிடுவார்கள். ஜாக்கிரதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை.

   நீக்கு
 15. கிரிகெட்டு கோமாளிகளைவிட..சினிமா கோமாளிகள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். நண்பரே.. தமிழ்நாட்டை ஒரு ஆம்பளை கோமாளிதான் ஆண்டதோடு, அதன் தொடர்ச்சியாக இப்போ பொம்பள கோமாலி ஆளுது நண்பரே.........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே இனிமேல் எல்லாம் கூத்தாடிகளின் கையில்தான் அமிதாப்பச்சனை ஜனாதிபதியாக்க முயல்கின்றார்கள் உயர்ந்த மனிதராயிற்றே...

   நீக்கு
  2. உண்மைதான் நண்பரே... மற்றவர்களை விட அமிதாப்பச்சன் உயரமானவர்தான்..

   நீக்கு
  3. சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 16. ஆதங்கம் மிகச் சரி
  பதிவிற்கேற்ற்ற காணொளி மிகவும் இரசித்தேன்
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 17. உங்கள் ஆதங்கம், கோபம் எல்லாம் சரிதான்...ஆனால் ஜி இது தற்காலிகமான ஜாலிக்காக செய்வதுதான். விடுங்கள். இதையே இன்னும் கொஞ்சம் வயது ஏறும் போது பொறுப்புணர்வு வரும் போது செய்வது குறையும். நாமும் கொஞ்சம் இளைஞர்கள் வழியில் அவர்களது சிந்தனைகளின் வழி சென்றால்தான் கொஞ்சமேனும் அவர்களை நல்வழிப்படுத்த முடியும். நம் வயதில் இருந்து அதை யோசிக்க வேண்டாமோ என்று தோன்றுகின்றது. இதுவும் ஒரு வகை மனச் சோர்விலிருந்து விடுபட நினைக்கும் நிகழ்வே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தும் ஏற்க கூடியதே....

   நீக்கு
 18. அவர்கள் வேஷத்தைப் போட்டு மற்றவர்களையாவது சிரிக்க வைக்கிறார்களே. அதற்காக பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா இப்படியும் ஒரு வழி இருக்கின்றதே... அருமை.

   நீக்கு