தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 28, 2016

காவாலி

புகைப்படத்தை சொடுக்கி படிக்கவும்.

அம்மா நான் காலேஜ் போகும்போது கபாலி என் தாவணியை புடிச்சு இழுக்கிறான்.
அந்தக் காவாலிப்பயல்ட்ட எதுக்கு வம்பு ? இழுத்தா இந்தாடா நீதானா கட்டிக்கோனு கொடுத்துட்டு வரவேண்டியதானே.... ?
* * * * * 01 * * * * *

டீக்கடைக்காரர் எதுக்கு கபாலி மேலே நெருப்பை அள்ளி வீசுனாரு ?
பழைய பாக்கியை கேட்டதுக்கு நான் நெருப்புடானு சொல்லி இருக்கான் கடைகாரர் வெறுப்புல நெருப்பை அள்ளி வீசிட்டாரு...
* * * * * 02 * * * * *

இலவுகார வீட்ல கபாலியை எல்லோரும் அடிச்சிட்டாங்களாமே... ஏன் ?
கேதம் கேட்கும்போது செத்தவருடைய மகன் கிட்டேபோய் மகிழ்ச்சி அப்படினு சொல்லி இருக்கான்.
* * * * * 03 * * * * *

மளிகைக்கடை மன்சூர் கபாலியை படிக்கல்லை வச்சு அடிச்சிட்டாராமே எதுக்கு ?
துவரம் பருப்பு வாங்கிட்டு காசு கேட்டதுக்கு நான் நெருப்புடானு சொல்லி இருக்கான் நானே துயரத்துல இருக்கேன் எங்கிட்டேயே லந்தானு சொல்லி படிக்கல்லை தூக்கி அடிச்சுட்டாரு.
* * * * * 04* * * * *

நம்ம கபாலி எதுக்கு தாய்லாந்து நாட்டுக்கு போறானாம் ?
இவங்கிட்டே 45 ரூபாய் கடன் வாங்கிட்டு ஓடின மொக்கைராசு தாய்லாந்துல பெரிய கோடீஸ்வரன் ஆகிட்டானாம் அதை வட்டியும், முதலுமா வசூல் செய்யத்தான்.
* * * * * 05 * * * * *

நம்ம கபாலி பிட்பாக்கெட் அடிச்ச பணத்தை எல்லாம் திருப்பி கொடுக்க போறானாமே... ?
ஆமா பர்ஸுல இருந்த பணமெல்லாம் கள்ள நோட்டாம்.
* * * * * 06 * * * * *

நரிக்குறவர்கள் எல்லாம் காக்கைகளை உயிரோட பிடிச்சுக்கிட்டு சென்னைக்கு போறாங்களே.... ஏன் ?
புதுசா வந்துருக்கிற டைரக்டரு தன்னோட படத்தை காக்காவுக்கு வெள்ளையடிச்சி மேலே பச்சைகுத்தி விளம்பரம் செய்யப் போறாராம் ஒரு காக்காவுக்கு 1000 ரூபாயாம்.
* * * * * 07* * * * *

நம்ம கபாலி சினிமாவுல நடிக்கப் போறானாமே இவனுக்கெல்லாம் யாரு சான்ஸ் கொடுப்பாங்க ?
படம் வெற்றியடைந்தால் மட்டுமே சம்பளம் வாங்குவேன்னு அறிக்கை விட்ருக்கான் உடனே தயாரிப்பாளர் கூட்டம் கூடிருச்சு.
* * * * * 08 * * * * *

நம்ம டைரக்டரு ரௌடிகளோட வாழ்க்கையைப்பற்றி படம் எடுக்கப் போறாராமே படத்தோட பெயர் என்ன ?
காவாலி.
* * * * * 09 * * * * *

ஏண்டி... இருளாயி கபாலி வீட்ல என்னடீ கூட்டமா இருக்கு ?
தெரியாதா உனக்கு பங்கஜம் புருசன்தான் கபாலியை புரட்டி எடுக்கிறான்.
எதுக்கு ?
பங்கஜம் குளிச்சிக்கிட்டு இருந்திருக்கா தட்டியை நீக்கி செல்போன்ல படம் எடுத்துருக்கான் கபாலி
காவாலிப்பயல் மனுஷனா அவன் ?
* * * * * 10 * * * * *

44 கருத்துகள்:

 1. கபாலி நகைச்சுவை கல்லாக்கட்டுதே...
  எங்கும் கபாலி.. எதிலும் கபாலியின்னு இருக்கும் போது
  இங்கும் கபாலியா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு சினிமாவைப்பற்றி தெரியாது நண்பரே நான் காவாலிப்பயலைப்பற்றி எழுதினேன்.

   நீக்கு
 2. இந்தக் கபாலி ...சரி சரி
  காவாலி வெகு சுவாரஸ்ய்ம்

  வித்தியாசமாக எப்படி நித்தம்
  சிந்திக்கிறீர்களோ ?

  தொடர வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வாழ்த்துகளை அறிந்து மகிழ்ச்சி

   நீக்கு
 3. கபாலி வந்திருக்கும் நேரத்தில் இங்கு காவாலி
  ரசித்தேன் நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது.

   நீக்கு
 4. கபாலியா காவலியா ரசிக்க முடிகிறது,,,/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் ரசிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது.

   நீக்கு
 5. இது நம்ம தெருவில பார்த்த விளம்பரம்!..

  கா(ல்) வாளி புரொடக்‌ஷன்ஸ் அடுத்த தயாரிப்பு - அர வாளி!...

  உடனே உலகமெங்கும் பரபரப்பு!..

  ஏன்?.. முக்கா வாளி ..ன்னு எடுக்கலாம்..
  இல்லே முழு வாளி..ன்னு கூட எடுக்கலாமே!..

  அடே.. கெரகங்களா... இருந்தாத் தானடா எடுக்கறதுக்கு!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி மகிழ்ச்சியாக ரசித்திருக்கின்றீர்கள் மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 6. கபாலியா
  காவாலியா
  எதுவாயினும்
  படம் நன்றாக ஓடுகிறதே!

  பதிலளிநீக்கு
 7. காவாலி ஹஹஹஹஹஹ் ...மகிழ்ச்சி!!!

  பதிலளிநீக்கு
 8. நல்ல பதிவு. காவாலி பற்றிய எச்சரிக்கை அவசியம் தேவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. வேகநரியின் வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது

   நீக்கு
 9. கபாலி மேல போட்ட காச எடுத்துட்டுங்கலாம் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டவர்கள் காசை எடுத்து மகிழ்ச்சி அடையட்டும்

   நீக்கு
 10. கடைசி நகைச்சுவை மட்டும் ரசிக்க முடியலை. மற்றவை ரசித்தேன். :) உங்களையும் கபாலி ஜூரம் பிடித்து ஆட்டி இருக்கு போல! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது உண்மையான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது.
   குறிப்பு - சினிமாக்காரன் எவனும் என்னை ஆட்டி வைக்க முடியாது

   நீக்கு
 11. ஒரு படத்தை வைத்து இவ்வளவு நகைச்சுவை காட்சி்களா மிக்க நன்று

  பதிலளிநீக்கு
 12. காவாலி, கபாலியின் தாக்கம் கூடுதலாய் இருக்கிறதே புகைப்படத்துக்கும் பதிவுக்கும் தொடர்பு உண்டா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகை கண்டு மகிழ்ச்சி
   ஹாஹாஹா புகைப்படத்தில் இருப்பவன் எங்கள் வீட்டு காவாலிப்பயல் ஐயா.

   நீக்கு
 13. What the hell you are writing in Blog. I really dont understand what you are trying to say in your post. Worst its not worthy to read here.
  Waste of time be here.. Try to change urself in writing or delete your blog.

  Its really a crap blog i read...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு. ராஜராஜன் அவர்களுக்கு தாங்கள் என்னைவிட படித்தவர் என்பது புரிகின்றது இதுவரை சுமார் 400 பதிவுகளுக்கும் மேல் எழுதி விட்டேன் அவைகள் அனைத்தும் தங்களுக்கு புரிந்து விட்டது அதில் மகிழ்ச்சி உண்டு.

   இந்த ஒன்று மட்டும் புரியாமல் போனதில் எனக்கும் வருத்தம் உண்டு இனி புரிவது போல் எழுத முயற்சிக்கின்றேன்.

   2010லிருந்து வேலையற்றதனமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன் இன்று தாங்கள் உணர்த்தி விட்டதில் மகிழ்ச்சி.

   மேலும் எனது வலைப்பூவை நீக்கி விடச்சொல்வதற்கு நான் தங்களுக்கு அதிகாரம் தரவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

   ‘’தமிழ்’’ நம் இருவரையும் பேசவைத்தது ஆனால் தமிழன் என்பதால் எதிரும், புதிருமாக நிற்கின்றோம் இது யாருக்காக என்பதை கொஞ்சம் ஆலோசிக்கவும.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  நல்ல நகைச் சுவை பதிவு.ஒவ்வொன்றும் சிரிப்பை வரவழைத்தன. ரசித்தேன். பொருத்தமான பெயருடன் தங்களது அருமையான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

   நீக்கு
 15. காவாலி இம்புட்டு அட்டுழியம் செய்ஞ்சா முளுவாலி என்னன்னா பண்ணுவான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைக் காண்பதில் மகிழ்ச்சி இருக்காதோ... ஜி

   நீக்கு
 16. நகைச்சுவையே உன் பெயர்தான் கில்லர்ஜியோ?

  பதிலளிநீக்கு
 17. சகோ இயக்குநர் உங்களைத் தேடிக்கொண்டு இருக்கிறார்,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது எதற்கு என்று தெரிந்தால் மகிழ்ச்சி அடையலாம்.

   நீக்கு
 18. ரசித்தேன் கில்லர்ஜி. கலக்கிட்டீங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. மோகன்ஜி அவர்களின் முதல் வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது தொடர்ந்தால்... மேலும் மகிழ்ச்சி.

   நீக்கு
 19. இரசித்தேன்! கபாலி இரசிகர்கள் தவறாக எண்ணாமல் இருந்தால் சரி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.

   நீக்கு