தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 19, 2016

வெல்லத்தான் நினைக்கிறேன்...

இப்பதிவின் முந்தைய தொடர்பு பதிவுகளின் இணைப்புகள் கீழே...

என் கதையை கேளுங்கள்...
வெல்லத்தான் நினைக்கிறேன்... ஆம் வெல்லத்தான் நினைக்கிறேன்... யாரை ? என்றுதானே கேட்கின்றீர்கள், அதை சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனால் எனக்கு மறதி கொஞ்சம் கூடுதல் இருப்பினும் சொல்வேன் அதற்குத்தானே வந்து இருக்கிறேன் தவறு செய்தவர்களை, கொல்லத்தான் நினைக்கிறேன்... என்ன ? குழப்பமாக இருக்கின்றதா ? (காலம் முழுவதும் உம்மோட பதிவுகள் இப்படித்தானே இருக்கு) யாரது... அங்கிட்டு புலம்புவது போலிருக்கு ? வில்லங்கத்தாரா ? சரி விசயத்துக்கு வருவோம் தேர்தல் நடந்து முடிந்து எல்லோரும் அவரவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்கள் அடுத்தது என்ன ? விட்டதை பிடிப்பதுதானே.... இனி நாம் தினசரிகளைப் படித்து, தொலைக்காட்சிகளைப் பார்த்து விட்டு பால் விலை ஏறிடுச்சு, அரிசி விலை கூடிருச்சு என்று புலம்ப வேண்டியதுதான் இதைத்தானே 1947-லில் இருந்து கடைப்பிடிக்கின்றோம் இதற்கெல்லாம் மாற்றம் வரவேண்டும் என்றால் என்ன செய்வது ? அநியாயக்காரர்களை மக்களுக்கு சேவை செய்யாதது ஏன் ? என்று கேட்டு கூண்டில் நிறுத்தி வாதாடி அவர்களை வெல்லத்தான் நினைக்கிறேன்... அரசியலில் மாறுபட்ட புரட்சியை ஏற்படுத்தி மக்களின் மனதை வெல்லத்தான் நினைக்கிறேன்... எல்லாமே பொதுவுடமை செய்து அரசியல்வாதிகளை வெல்லத்தான் நினைக்கிறேன்... இனிமேல் இந்தியாவில் தேர்தலே இல்லை இவர்தான் தொடர் ஆட்சியாளர் என்று இந்திய மக்கள் அனைவரும் சொல்லும் அளவுக்கு அவர்களின் மனதை கொள்ளையடித்து வெல்லத்தான் நினைக்கிறேன்... யுத்தமின்றி, சத்தமின்றி அண்டை நாட்டு அதிபர்களின் மனதையும் வெல்லத்தான் நினைக்கிறேன்... இருப்பினும் முடியவில்லை எப்படி முடியும் ? நான்தான் செத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதே நான் அரசியல்வாதிகள் பக்கத்தில் நின்று கொண்டு அவர்களை மிரட்டுவது அவர்களின் விழிகளுக்கு மட்டுமல்ல, மக்களின் விழிகளுக்கும் புலப்படவில்லையே... என்ன செய்வது மக்களே... எல்லாம் பகவான்(ஜி) செயல் இருப்பினும் நான் அவர்களை வெல்லத்தான் நினைக்கிறேன்...

Chivas Regal சிவசம்போ- 
ஆஹா... இனிமேல் டாஸ்மாக் போயிட்டு தனியாக போககூடாதோ...
வாழ்த்துகள் நண்பரே.

37 கருத்துகள்:

 1. வென்றுவிட்டீர்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 2. ஏனோ அந்த பழமொழி நினைவுக்கு வருதே ..கூரையேறி கோழி ..........:)

  பதிலளிநீக்கு
 3. விலைவாசி (எல்லாப் பொருட்களுக்கும் ) என்பது எனக்குத் தெரிந்து ஏறிக்கொண்டு தான் இருக்கிறது . விதி விலக்கு டெலிபோன் சார்ஜு ஒரு காலத்தில் ஒரு 1/2 நிமிடம் டெல்லிக்குப் பேசினால் 20 ரூபாய் ஆகும் .இன்டர்நெட் ஒரு காலத்தில்E- மெயிலில் U R wen hv என்றெல்லாம் எழுதிக்கொண்டு இருந்தோம்

  பதிலளிநீக்கு
 4. வெல்லுங்க..... வெல்லுங்க...

  அப்பப்போ யாகவா முனிவர் மாதிரி பேசறீங்க! (300 வருஷம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா அவரு இப்படித்தான் பேசுவாரா ?

   நீக்கு
 5. நல்ல ஆசைதான்...வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. வெற்றி உங்களுக்கே.....

  த.ம. 5

  பதிலளிநீக்கு
 7. படித்தேன். ஆனால் கருத்தைக் கண்டுபிடிக்காமல் தோற்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா விடயம் இல்லாத பதிவுதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. villangatharai izukkamal umakku thookam varathe hahahahah...

  vellaththan ninaikiren....hum athan ungalukku eppavo prime minister pathaviye koduthachu....ana atha thakka vaichchukama enna ji neenga...

  பதிலளிநீக்கு
 9. முயற்சி திருவினையாக்கும் விடாதீர்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
 10. சுவையாக இருக்கிறது
  இந்த ...த்தான்கள்
  மிகவும் இரசித்துப் படித்தேன்
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 11. அருமையாக இருக்கு சகோ. வாழ்த்துக்கள்! நான் படிக்காத தங்களின் பதிவுகளை புக்மார்க் பண்ணி வைத்திருக்கிறேன். ஊருக்கு வந்ததும் கண்டிப்பாக கருத்திடுவேன். நீங்க இந்தியா வாரீங்களா சகோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ புக் மார்க் செய்து வைத்திருப்பமைக்கு நன்றி
   ஆமாம் அடுத்த மாதம் இந்தியா வருகிறேன்.

   நீக்கு
 12. ​உங்களுக்கு யாகவா முனிவர் பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் அவர் பிரபலம். இனான்ய மொழி என்று காண போனா என்று சொல்லிவிட்டு அதற்கு தமிழில் "கல்லு விளையும் கரும்பு விளையாது" என்றெல்லாம் சொல்வார். நான் ரஜினிக்கே சூன்யம் ​எடுத்தவன்டா என்றெல்லாம் பெருமை கொள்வார். தற்போது இல்லை. அவரும் நடனம் ஆடும் சாமியாரும் tv யில் சண்டை போட்டுக்கொண்டது மிகப் பிரபலம். ​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைவிட முக்கியமான விஷயம்... தனக்கு ஐநூறு வயதாகி விட்டது, ஆயிரம் வயது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தது...!!!!

   நீக்கு
  2. வாங்க J.K ஐயா நான் யாகவா முனிவரைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் இருப்பினும் அவ்வளவு ஞாபகம் இல்லை தகவலுக்கு நன்றி.

   நீக்கு
  3. நண்பரே ஸ்ரீராம் அவர்களின் மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
  4. யாகவா முனிவர் நா"காவா முனிவர்!!!

   நீக்கு
 13. அரே... சதாசிவோம்!..

  முன்னூறு வருஷத்துக்கு முன்னே - போய்ச் சேர்ந்திருந்தாலும் சரி.,
  நானூறு வருஷத்துக்கு பின்னே வந்து சேர்வதாக இருந்தாலும் சரி.,

  இந்தக் கனவு எதுவும் நிறைவேறப் போவதேயில்லை...

  அப்படியே கனவுகளுக்காக பாடுபட்டாலும் ஏதாவது ஏதாவது ஒரு சாக்கு சொல்லி உள்ளே புடிச்சிப் போட்டு லாடம் கட்டிடுவாங்கோ!.

  உஷாரையா.. உஷாரு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஹாஹாஹா என்ன இப்படி சொல்லிப்புட்டீக.... நடக்காதோ....

   நீக்கு
 14. ஹாஹா, யாகவா முனிவரைத் தோற்கடிச்சுட்டீங்க! :) நல்ல கற்பனை தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோருமே என் தலைவனைப்பற்றி பேசுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கின்றது.

   நீக்கு
 15. அத்தான் என் அத்தான் என்னைத்தான் இப்படி வெல்லத்தான் சொல்லத்தான் கொல்லத்தான் எப்படி சொல்வேனையா ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா வாங்க ஐயா மொத்தமாக படித்து விட்டீர்கள் போலயே.... சென்னையிலிருந்து பெங்களூரு சென்று விட்டீர்களா ?

   நீக்கு
 16. அய்யோ பாவம் பகவான்(ஜி) எத்தனை செயல்களைத்தான் அவரும் செய்வாரோ...!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே எல்லாவற்றுக்கும் அவர்தானே... பொருப்பு

   நீக்கு
 17. ஆட்சியாளர்களை வெல்லுங்கள் அப்புறம் சொல்லுங்கள்)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நண்பரே கண்டிப்பாக சொல்லுவேன்

   நீக்கு