தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூலை 25, 2016

நாட்டு ஆமைகள்

நாட்டாமைகள்

இதன் முதல் பகுதியை படித்த பிறகு தொடர... இதோ.
பொம்மைக்குள்...

நான் நகையைப் பார்க்கவே இல்லை இவன் பொய் சொல்றான்.
வீட்டுக்கு பொருள் கொடுக்கப் போனவனை யாரும் இப்படி சொல்ல மாட்டாங்க இவன் உன்னைவிட பெரிய சம்பளக்காரன் உன்னை ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை இவன் வார்த்தையில உண்மை இருக்கு உன் கண்ணுல பொய் இருக்கு உன்மீது நம்பிக்கை இல்லாமல் இவன் செய்த வேலைக்கு தண்டனைதான் இந்த அலைச்சல் சரி நகையை நீ கொடுக்க முடியுமா ? முடியாதா ? உனக்கு ஐந்து நிமிஷம் டைம் தர்றேன்.
அனைவரும் அமைதியாக இருக்க... இவன் ஒன்றும் சொல்லவில்லை...
டேய் நீ இவன் வீட்டுக்குப் போணைப்போடு.
அப்பொழுதெல்லாம் இந்தியாவில் மொபைல் போண் இவ்வளவு வளர்ச்சி அடையவில்லை அவனது வீட்டு நம்பருக்கு அழைப்பு போக இவனது மனைவி எடுக்க ஸ்பீக்கரை அழுத்திவிட்டு பேசினேன்.
இங்கே பாரும்மா நாங்க அபுதாபியிலருந்து ஊரைவிட்டு தள்ளி காட்டுக்குள்ளே இருந்து பேசுறோம் உன்னோட புருஷன் இப்ப எங்ககூடத்தான் இருக்கான் செயினைக் கொடுத்துட்டா ஒண்ணும் செய்யமாட்டோம் உடனே அபுதாபி திரும்பிடுவோம் இல்லைனா இன்னும் ஒரு வாரமே ஆனாலும் சரி கார் நிறைய சாப்பாடு இருக்கு உன் புருஷனை பட்டினியாப்போட்டு நாங்க மட்டுமே சாப்பிடுவோம் நீ நகையை அவன் பொண்டாட்டியிடம் கொடுக்கும்வரை என்ன சொல்றே ?
அண்ணே நல்லா இருப்பீங்க எம்புருஷனை ஒண்ணும் பண்ணிடாதீங்க...
இங்கே பாரும்மா... பிரச்சினை வேண்டாம் உன் புருஷன் கிட்டே கொடுக்கிறேன் பேசு.
என்னங்க எங்கே இருக்கீங்க ?
ஏய் நீ பயப்படாதே புள்ளே எனக்கு ஒண்ணும் இல்லை...
பாவி மனுஷா அன்னைக்கே சொன்னேனே கேட்டீங்களா ? அடுத்தவங்க பொருளு நமக்கெதுக்கு ? இப்படி சிக்கலு வரும்னு சொன்னேனே...
இவன் தலையில் அடித்துக்கொண்டான்.
இரும்மா... இப்ப என்ன சொல்றே ? போண்ல காசு ஓடிக்கிட்டு இருக்கு.
நான் கொடுத்துடுறேன்ணே... அவரை விட்டுருங்க...
சரி இன்னும் அரை மணி நேரத்துல அவரு பொண்டாட்டி உங்க வீட்டுக்கு வரும் செயினைக் கொடுக்கிறே நாங்க மறுபடியும் போண் செய்வோம்.
சரிண்ணே வரச்சொல்லுங்கண்ணே கொடுத்துடுறேன் அவரை ஒண்ணும் செஞ்சிடாதீங்கண்ணே..
இங்கே பாரும்மா எங்க புள்ளைங்க மேல சத்தியம் இதுவரை அடிக்கலை எங்களுக்கு தேவை செயினு வையி போணை.
டேய் நீ உன் வீட்டுக்கு போணைப்போட்டு உடனே போகச்சொல்லு.
வீட்டுக்கு அழைத்து சொல்ல, அவனது தம்பியும், மனைவியும் பைக்கில் இவனது ஊருக்கு போகவும் நாங்கள் மீண்டும் நகையை எடுத்தவன் வீட்டுக்கு போண் செய்யவும் சரியாக இருந்தது ஸ்பீக்கரில் அவனது மனைவி வர, இவனது மனைவி நகையைக் கொடுக்க..
இந்தாம்மா நீ நகையை வாங்கிட்டியா ? இவன் சொன்ன மாடல்தானே சந்தேகமாக இருந்தால் செயினை சுண்ணாம்பு சுவற்றில் லேசா உரசிப்பார் பென்சில் கோடு போட்டால் ஓகே.
ஆமாண்ணே பென்சில் கோடுதான்
ரைட் உடனே உன்னோட ஊருக்கு கிளம்பு..
அண்ணே எம்புருசனை ஒண்ணும் செஞ்சிடாதீங்கண்ணே..
இங்கே பாரும்மா பிரச்சினை முடிஞ்சுருச்சு நீயும் எங்களுக்கு தங்கச்சி மாதிரித்தான் செயின் வந்துருச்சு சந்தோஷம் அடிக்க வேண்டிய அவசியமில்லை உன் புருஷனை அவனோட கம்பெனியில் கொண்டு போயி விட்டுறோம் போணை வையி.
மீண்டும் காரை விரட்டிக்கொண்டு அவனது கேம்ப் வரும்வரை யாரும் பேசவில்லை பின்புறத்தில் இருந்தவன் காரைத்திறந்து விட்டு சொன்னான்.
இங்கே பார் உனக்கும், அவனுக்கும் பிரச்சினை முடிஞ்சு போச்சு இதோட நீ உன் வழியில போ அவன் அவனோட வழியில போயிடுவான் மறுபடியும் பிரச்சினை வேண்டாம் வேணும்னா சொல்லு மோதிப்பார்க்கலாம்.
அவன் அனைவரையும் முறைத்து விட்டு சென்றவன் பத்து வருடம் கடந்து விட்டது இதுவரை பிரச்சினை இல்லை நகைக்காரன் சொன்னான்.
இவனாலே எனக்கு நாலு மாசமாக எவ்வளவு போண் செலவு மனஉலைச்சல்.
அது நீ செய்த தவறுக்கு கிடைச்ச தண்டனை கிடைக்காத நகை கிடைச்சுருச்சு எல்லோரையும் ஹோட்டலுக்கு அழைத்துப்போனான் நான்கு பேரும் வயிறு நிறைய சாப்பிட்டோம் நண்பன் மனம் நிறைய பணம் கொடுத்தான்.

காணொளி

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று முடிவுக்கு வந்தது இந்நாட்டில் எப்படி வேண்டுமோ அப்படிச் செய்தேன் இது இந்தியாவுக்கு உதவாது.
சம்பவம் 2004 அல்லது 2005 இருக்கலாம்.
முற்றும்.

40 கருத்துகள்:

  1. ​​காணொளியில் இருப்பது தான் CHIVAS REGAL தானே?
    ​ஜெயகுமார் ​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க ஐயா Chivas Regalகளின் நிலைப்பாடு கடைசியில் இப்படித்தானே...

      நீக்கு
  2. மிகவும் புத்திசசாலித்தனமாகத் தீர்த்து வைத்து விட்டீர்கள். டைம்லி தொலைபேசி. அவர்களுக்கு யோசிக்க அவகாசமில்லாமல் பேச வைத்து... சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது திட்டம் இதுவாயினும் சட்டெனெ தீர்மானத்துக்கு வரும் என்று நானே எதிர் பார்க்கவில்லைதான்.

      நீக்கு
  3. ஒவ்வொரு அனுபவமும் வித்தியாசமானதுதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முனைவரே வாழ்க்கை முழுவதுமே அனுபவம்தானே....

      நீக்கு
  4. தங்களுடைய ராஜதந்திரம் வென்றது..
    உழைத்த காசு வீட்டுக்கு வந்தது..

    நேற்று நள்ளிரவே வாசித்து விட்டேன்.. ஆனாலும் Galaxy ல் கருத்துரை இடுவதற்கு சிரமமானது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உழைத்த செல்வம் என்றுமே நம்மை கைவிடாது என்பது எனது அனுபவத்தில் உண்மையே.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நலமா? இரு பதிவினையும் படித்தேன். தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவைதான். மிகுந்த திறமையுடன் உங்கள் நண்பரின் பிரச்சனையை முடித்து வைத்து விட்டீர்கள்!கடின உழைப்பில் அவர் பெற்ற பணம் அவரையே சென்றடைய நீங்கள் உதவியதற்கு பாராட்டுக்கள்.தங்கள் பதிவுகளை இதுவரை தொடராமைக்கு வருந்துகிறேன். இனி கடவுளருளால் தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமே... தாங்கள் மீண்டும் பதிவுலகம் வருவது அறிந்து மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

      நீக்கு
  6. நல்லவேளையாய் அந்தப் பெண்மணி நகையைத் தன் கணவன் கொடுத்ததை ஒப்புக் கொண்டாளே. அவளும் இல்லைனு சொல்லி இருந்தா! ஆச்சரியமான முறையில் தீர்ப்புக் கொடுத்திருக்கீங்க! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வேலையை அவுட்டோரில் போய் செய்ததால்தான் உண்மை சட்டென்று வெளிவந்தது.

      நீக்கு
  7. செம நாட்டாமை!!!

    நாட்டு ஆமைகள் செம நாட்டாமை!

    நாட்டாமைக்குப் பக்கத்துல செம்பு,வெத்தலைப் பெட்டி, தோள்ல வெள்ளைத்துண்டு, வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, அல்லக்கைகள் குடை பிடிச்சு.... எல்லாம் இருந்துச்சோ!!!? கொடுவா மீசை மட்டும் போதாது தலைலபெரிய கொண்டைக் குடுமி இருந்துச்சோ?!!!! ஆல மரம் இல்லை அரசமரத்தடிலதானே நாட்டாமை உக்காரும்? இது பாலைவனமாச்சே...ஹிஹிஹி

    அப்படி இருந்துருந்தாதான் நீங்க நாட்டாமை....ஹிஹிஹி

    உங்களை இப்படி ஏதாவது சொல்லலைனா வில்லங்கத்தாருக்குத் தூக்கம் வராதுங்கோ...சரிதானுங்களா நாட்டாமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே காருக்குள்ளேதான் பஞ்சாயத்து அதுவும் கருப்பு கிளாஸ்களை ஏற்றி விட்டுக்கொண்டு வெளியே தெரியாமல்....

      நீக்கு
  8. அருமையா பிரச்சனையை தீர்த்து வைச்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல வேளை.. கத்தியின்றி, ரத்தமின்றி நகையை ஆட்டையை போட்டவனின் உயிர் மிஞ்சிவிட்டது. தங்களின் ராஜதந்திரம் அபுதாபில் வென்று விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயிர் எடுக்கும் அளவுக்கு எல்லாம் இந்த நாட்டில் தைரியம் வராது நண்பரே சட்டம் அப்படி.

      நீக்கு
  10. வணக்கம் சகோ,

    தங்கள் எழுத்துக்கள் அருமை,, வாசிக்கதொடங்கியாச்சு,, நல்ல தீர்ப்பு.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே விழா சிறப்புடன் முடிந்து விட்டமைக்கு வாழ்த்துகள் தங்களது வரவு நல்வரவு ஆகட்டும் வாழ்க வளமுடன்.

      நீக்கு
  11. கில்(லாடி)லர் அல்லவா நீங்கள்?

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஏதும் உள்க்குத்து இல்லையே....

      நீக்கு
  12. உங்கள்; நண்பரிடம் நேர் வழியில் செயினைக் கொடுத்துஇருந்தால் இத்தனை தொல்லை வந்திருக்காது என்றாவது சொன்னீர்களா நண்பனிடம் நம்பிக்கை இல்லாமல் செய்த தவறு என்று கூறி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நேரடியாக கொடுத்திருந்தால் அவன் கண்டிப்பாக கொடுத்திருப்பான் அதில் மாற்றமில்லை.

      நம்பாமல் செய்த குறுக்குவழி அவன் எத்தனுக்கு எத்தனாக இருந்திருக்கான்.
      மேலும் இப்படியும் சிலர் செய்து வெற்றி பெற்றும் இருக்கின்றார்கள் ஐயா

      நீக்கு

  13. ஆழ்ந்து சிந்தித்து, திறமையாக செயல்பட்டு நகையை இழந்தவருக்கு கிடைக்க செய்ததோடல்லாமல் குற்றம் செய்தவருக்கு எந்த சேதாரமும் இல்லாமலும் செய்துவிட்டீர்கள்.உங்களின் விசாரணை வித்தியாசமானது! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே குற்றம் செய்தவனை நாம் தண்டிக்க இங்கு வழியே இல்லை அப்படிச்செய்தால் நாமும் தண்டிக்கப்பட வேண்டிய நிலைக்குள் வந்து விடுவோம்.
      நான்தான் முடிவில் சொன்னேனே... இது இந்தியாவுக்கு உதவாது வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. வணக்கம்
    ஜி
    நல்ல வடிவாக சொல்லி இறுதியில் பிரச்சினையை தீர்த்து வைத்தீர்கள் நாட்டாமையாக வந்தது எப்ப ஜி... வாழ்த்துக்கள் த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டாமை பதவியேற்று 10 ஆண்டுகளாகி விட்டது சமீபத்தில் சொம்பு தொலைந்து விட்டதால் இப்பொழுது பஞ்சாயத்துக்கு போவதில்லை நண்பரே

      நீக்கு
    2. வணக்கம்
      ஜி

      செம்பு சையஸ் சொல்லுங்கள் மலேசியாவில் இருந்து வாங்கி அனுப்புகிறேன். ஹீ...ஹீ...ஹீ...

      நீக்கு
    3. வருக நண்பரே 4+5 உயரம் 9+4 அகலம் பித்தளைச்செம்பு கிடைக்கா விட்டால் தங்கமாக இருந்தாலும் பரவாயில்லை.

      நீக்கு
  15. பிரச்சனையை அருமையாக முடிச்சிட்டீங்க சகோ. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. நல்ல வேளை உண்மை வெளி வந்ததே..... கூடவே தங்கச் சங்கிலியும்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இதற்கு அடிப்படை காரணம் அவுட்டோர் போனதுதான்

      நீக்கு
  17. காதும் காதும் வைச்ச மாதிரி டீல் பண்ணிய விதம் அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதற்கு இந்த நாட்டு சட்டங்களே காரணம் இந்தியாவில் அடி கொடுத்தாலும் நகை கிடைக்காது

      நீக்கு
  18. செம கில்லாடிதான். ஆனாலும் அவனின் மனைவி, "இல்லை அண்ணே" என்று நடித்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? உங்கள் நண்பரின் நல்ல நேரம், 4 மாதமானாலும் நகை கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவரது மனைவி இப்படி சொல்லாததற்கு காரணம் நாங்கள் காட்டுக்குள் இருப்பதாகவும், மேலும் சாப்பாடு கொடுக்காமல் பட்டினியாக போட்டுக்கொல்வோம் என்று சொன்னதே முக்கிய காரணம்.

      அதேநேரம் இப்படி பிரச்சினைகள் வரும் என்பதை அவரது மனைவியும் எதிர்பார்த்துதான் இருந்திருப்பார்.

      நானே நினைக்கவில்லை இவ்வளவு சுலபமாக உண்மை வெளிவரும் என்று.

      நீக்கு
  19. சைலன்ட் கில்லர் என்று சொல்வார்களே. அது நீங்கள்தானோ !

    பதிலளிநீக்கு