இறைவன் மனிதனை படைத்தான்,
மனிதன் மதங்களை வகுத்தான்,
மதம் ஜாதிகளை பிரித்தன,
ஜாதி ஏற்றத் தாழ்வுகளை
அமைத்தன,
இந்த உலகை படைத்தது சுப்பு
என்கிறான் ஒருவன்.
இல்லை
சுல்த்தான் என்கிறான் இன்னொருவன்.
இல்லவே இல்லை அசுத்தமான சாணத்திலிருந்து புழு எப்படி வந்ததோ அதைப்போலத்தான் இந்த உலகம் சூரிய குடும்பத்திலிருந்து
தானே உருவானது என்கிறான் வேறொருவன்.
எல்லா
மதங்களும் மனிதனுக்கு போதனைகளை வழங்கியது அவனவன் அந்த போதனைகள்படி வாழ்கிறானா ? இல்லை ஆனால் எல்லா மதங்களுமே
அன்பை போதிக்கின்றது அதை மட்டும் மறந்து விடுகிறாயே... மானிடா மொத்த பிரிவினைக்கும்
ஆரம்ப காரணம் என்ன ?
தலைமை
ஆம் தலைமையே...
எல்லா
மனிதனும் தலைமை வகிக்கவே ஆசைப்படுகின்றான் தலைமை ஆசைதான் மனிதனை இத்தனை தூரத்துக்கு
கொண்டு வந்து விட்டு விட்டது சரி இதற்கு தீர்வுகாண என்னதான் வழி ?
நான்கும்
நான்கும் எட்டுதான், ஐந்தும் மூன்றும் எட்டுதான் இப்படி எண்கள்
மாறிவந்தாலும் அதன் கூட்டுத் தொகை ஒன்றுதான்.
இதைப்போல...
இறைவன் என்பது தமிழ் மொழி,
God என்பது
ஆங்கில மொழி,
அல்லாஹ் என்பது அரபு மொழி,
பஹவான் என்பது ஹிந்தி மொழி,
தைவம் என்பது மலையாள மொழி,
தேவுடு என்பது தெலுங்கு மொழி,
தெய்வா என்பது கன்னட மொழி,
தேவிய என்பது சிங்கள மொழி,
பாங்கிநூன் என்பது தகாளான் மொழி,
இப்படி வார்த்தைகள் மாறி வந்தாலும் அர்த்தம் ஒன்றுதான் அப்படியானால் இந்த இறை பிரச்சினைக்கு மொழியும் ஒரு காரணமா ? அப்படியானால் இந்த மொழி பிரச்சினையை தீர்க்க வழியே இல்லையா ?
உண்டு.
ஆம்
உலக மக்கள் அனைவருமே ஒரே மதம், ஒரே மொழியை பேசுவது இது நடைமுறைக்கு சாத்தியமா ?
சாத்தியமே...
விஞ்ஞானம்
வளரத் தொடங்கிய அந்தக் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் 26 எழுத்துக்களில் உலகையே
ஒருங்கிணைக்க வில்லையா ?
ஆனால்...
இன்று
அப்படியா Internet - E Mail என்று வந்து விட்டது.
உடனே....
புதிதாக
ஜிங்குஜாங் என்றொரு மதத்தை ஏற்படுத்துவோம் மங்குனி என்றொரு மொழியை ஏற்படுத்துவொம்.
ஜிங்குஜாங்
மங்குனி
Cross
Attack:
ஏண்டா...
ங்கொய்யாலே... ஏதோ சொல்ல வர்றேன்னு கேட்டா புதுசா பிரச்சினையை உருவாக்கி விட்ருவே
போலிருக்குதே.... நிறுத்தடா.... இனிமே இந்த மாதிரி கோக்குமாக்கு ஏதாவது செஞ்சே..................................
கடைசி சில வரிகள் வரை நல்லாத்தானே வந்தது?!!!!
பதிலளிநீக்குபோனாப்போகுது விடுங்க! என் பேர் எல்லாம் பதிவுல சொல்லியிருக்கீங்க... நன்றி மற்றும் பாராட்டுகள்.
:))
வாங்க நண்பரே ஹாஹாஹா பினிஷிங் குழப்பிடுச்சோ... பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குபுதிய ஜிங்சா மங்குனி நல்ல ஐடியா))))
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குநான் ஒண்ணும் சொல்லல்ல.
பதிலளிநீக்குஐயா என்ன வித்தியாசமாக சொல்லிடீங்க....
நீக்குESPERANTO என்று உலகப் பொதுமொழி ஒன்றை ஏற்கனவே ஒருத்தர் உண்டாக்கிட்டாரே.
பதிலளிநீக்குநன்றி
--
Jayakumar
வாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஆரம்பிங்க
பதிலளிநீக்குநானும் சீடனா வாறேன்
இந்திய மடத்துக்கு நான் பொறுப்பு
மற்ற விஷயத்தை நேரடியா பேசிக்குவோம்
வாழ்த்துக்களுடன்
கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நேரில் பேசலாம் ஆகஸ்டில்.
நீக்குஒன்றுக்கு இரண்டு..
பதிலளிநீக்குஉபத்திரவத்துக்கு மூன்று!.. - என்று சொன்னார்கள்..
அதெல்லாம் போதாதென்று மேலும் ஒன்றா?..
வெளங்கிடும் - ஊரு!..
(அந்தப் பக்கமாக ஒரு சந்தேகம்!..)
தத்தியானந்தா, மஞ்சிதா எல்லாம் இருப்பாங்க தானே!?...
வாங்க ஜி எல்லா இடங்களிலும் எல்லாவகை மனிதர்களும் இருந்தால்தானே உலக நியதி விளங்கும்.
நீக்குநேற்று முன்தினம் இதைத்தானே நானும் சொன்னேன் >>>சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?
பதிலளிநீக்குஎல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க
எந்த சிற்பியாலும் முடியவில்லை !
ஜி நானும் அதை ஆதரித்தே கருத்துரை சொன்னேன்.
நீக்குஎன்னதான் புதிய மதம் ஆரம்பித்தாலும் பழைய மதங்கள் மறையப் போவதில்லை. எனவே ஜிங்குஜாங் மதம் தொடங்குவதிற்கு பதிலாக முடிந்தால் இருக்கிற மதங்களை இணைக்கப் பாருங்களேன்!
பதிலளிநீக்கு//இருக்கின்ற மதங்களை இணைக்கப் பாருங்களேன் //
நீக்குஆஹா அருமையான யோசனை நண்பரே அதேநேரம் நான் பதிவில் சொல்லி இருப்பது போல் தலைமை யார் ? அதுவே பிரச்சினை எல்லா மனிதர்களுமே தலைமை வகிக்கவே ஆசைப்படுகின்றார்கள் என்ன செய்வது ?
ஹிஹிஹி, ஶ்ரீராம் சொன்னப்புறமாத் தான் என் பேரும் இருக்குனு பார்த்தேன்! நல்லாவே இருக்கு! ஆனால் எந்த மதமும் ஜாதிப் பிரிவினையை உண்டாக்கவில்லை. ஜாதிப் பிரிவினை மனிதனால் மட்டுமே உருவானது! :(
பதிலளிநீக்குவருக சகோ ஜாதியை வகுத்ததும் மனிதன்தான் வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபனின் வருகைக்கு நன்றி
நீக்குகடவுளுக்கும், மதத்திற்கும், சாதிக்கும்எ, எந்த சம்பந்தமும் இல்லை...கடவுள் என்ற கான்செப்டை மனிதர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை ..என்று சொல்லலாம்...அவரவர்க்குத் தோன்றியபடி கடவுளுக்கு உருவம் கொடுத்து பேசுகின்றார்கள்..
பதிலளிநீக்குஉண்மைதான் மனிதன் கடவுளை சரியாக உணர்ந்து கொள்ளவில்லை.
நீக்கு"யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப்பட்டு...இது யாகவா முனிவருக்குப் பொருந்தும்....யாகவா முனிவர் நா காவா முனிவர்...அது உங்களுக்கு அல்ல...ஹிஹிஹி
பதிலளிநீக்குதலைவனை குறை சொல்லாதீங்க....
நீக்குஎங்கத் தெருவிலுள்ள காளியம்மன் எந்த மொழியிலும் பேசாது நண்பரே... அட கை சாடையால் கூட பேசாது நண்பரே......
பதிலளிநீக்குஊமையாக இருக்கலாம் நண்பரே. மனிதர்களில் ஊமைத்துரை என்று பெயர் இருக்கின்றதே...
நீக்குஜிங்குசா...மங்குனியா...?
பதிலளிநீக்குஅது சரி...
ஆம் நண்பரே புதிய மதம்தான்.
நீக்குமனிதர்கள் படைத்தது தானே இந்த மதங்களும், ஜாதிகளும்...... உண்மை தான். மனிதனை மனிதனாகப் பார்க்காதவரை பிரச்சனை தான்.
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்கு