வெளிநாட்டில் வாழும் பலரும்
தங்களது நண்பர்கள் விடுமுறையில் நாட்டுக்கு போகும் பொழுது தனது வீட்டுக்கு நகை,
பொருள், ஏனைய பொருட்கள் கொடுத்து விடுவது வழக்கம் இது அனைவரும் அறிந்ததே எனது
நண்பன் ஒருவன் அவனது ஊருக்கு பக்கத்து ஊர்க்காரன் உழுந்தூர் பேட்டை ஏரியாவில்
ஏதோவொரு கிராமம் நாட்டுக்கு போக அவனிடம் தனது மனைவிக்கு சேலை, குழந்தைக்கு பொம்மை,
மற்றும் சோக்லெட் வாங்கி கொடுத்து அனுப்பி இருக்கிறான் இது நடந்து பத்து
வருடத்துக்கும் மேலிருக்கும் அவனும் கொண்டு போய் இவனது வீட்டில் கொடுத்து விட்டு
நல்லபடியாக விருந்தும் உண்டு விட்டு போய் விட்டான் சிறிது நேரத்தில் பூத்திலிருந்து அபுதாபிக்கு போண் அவனது மனைவியின் குரல்
என்னங்க,
செயினு இல்லை
? என்னடி
சொல்றே ? நல்லாப்பார்த்தியா
பொம்மையை
மொத்தமாகவே கிழிச்சுப் பார்த்துட்டேன் உள்ளே ஒண்ணும் இல்லைங்க
இரு
நான் அவனுக்கு போண் செய்யிறேன் நீ வீட்டுக்கு போ நான் வீட்டு நம்பருக்கு
அடிக்கிறேன்
அவனது
வீட்டு நம்பருக்கு அழைத்து கேட்டால்... அவன் இல்லையாம் மீண்டும், மீண்டும் அழைத்து
மறுநாள் பிடித்துக் கேட்டால்
நான்
நீ கொடுத்தபடி பொருளைக் கொடுத்துட்டேன் வேறேதும் எனக்குத் தெரியாது இதுக்குத்தான்
அடுத்தவங்க பொருள் வாங்கிட்டு வரக்கூடாது
டேய்...எனக்குத்
தெரியும் நீதான் எடுத்திருப்பே 3 பவுன் செயினு மரியாதையா எம் பொண்டாட்டிக்கிட்டே
கொடுத்துரு
செயினு
இருந்தால் நீ எங்கிட்டே நேரடியாக கொடுத்திருந்தால் நான் கொடுத்திருப்பேனே... நீ
பொய் சொல்றே
டேய்
நீ அபுதாபிக்கு வரமுடியாமல் பண்ணிடுவேன்
இஞ்சே
பாரு... நான் செயினை பார்க்கலை உன்னாலே முடிஞ்சதைப்பாரு
போணை
வைத்துவிட மீண்டும் அழைத்தால் யாரும் எடுப்பதில்லை ஊருக்குப்போண் செய்து
அடியாட்களை அனுப்பியும் அவன் மசியவில்லை, ஒன்றும் நடக்கவில்லை காலங்கள் மூன்று
மாதம் ஓடியது அவனும் அபுதாபி வந்து இறங்கி வேலையில் இணைந்து விட்டான் பஞ்சாயத்து
வந்தது என்னையும் சேர்த்து பஞ்சாயத்தார் மூம்மூர்த்திகள் மற்ற இருவரும் அவனை
அடிப்போம், உதைப்போம் என்று சொல்ல, இதற்கு நான் உடன்படவில்லை
அவனை
அடித்து விட்டு பேசாமல் போய்விட இதென்ன ? இந்தியாவா ? போலீஸிலும் புகார் கொடுக்க முடியாது எந்த ஆதாரமும் இல்லை
ரெண்டு பேரையும் உள்ளே வைப்பான் காலம்தான் போகும் ஜெயிலுக்குப் போய் வந்தால்
வெளியே வந்தவுடன் கம்பெனி கேன்சல் செய்து நாட்டுக்கு அனுப்பும் வேலையும் போயி
ஊருக்குப்போயி அவனை இழுத்துப்போட்டு அடித்தாலும் நகை கிடைக்காது நகையை வாங்கி
அதற்குப் பிறகும் உனக்கு கோபமிருந்தால் ? நாட்டுக்குப்போயி
பத்து வருசம் கழிந்தாலும் அவனை அடி போலீஸ் ஸ்டேஷன் போ மற்றதை அங்கே
பார்த்துக்கிறலாம் இதற்கு சம்மதம்னா நான் வர்றேன் இல்லை எனில் அவனை அடிப்பதற்கு
நான் தயார் இல்லை உங்களுக்கு பல விசயங்கள் இந்த நாட்டைப்பற்றி தெரியலை இது இந்தியா
இல்லை
சிறிது
யோசனைக்குப் பிறகு சம்மதித்தார்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் நீங்க யாரும்
அவன்மீது கை வைக்க கூடாது ஒருவேளை நான் கை வைத்தால் அவனை நீங்க அடிக்கலாம் என்ற
உறுதி மொழியை வாங்கி கொண்டு வரும் வெள்ளிக்கிழமை அவனைப் புடிப்போம் என்று
முடிவெடுத்து அன்றைய தினம் சிறிய வாக்மேன் டேப் ரெக்கார்டரையும் எடுத்துக்கொண்டு
அப்பொழுதெல்லாம் மொபைலில் இவ்வளவு வசதிகள் வரவில்லை காரில் டிரைவிங் ஸீட்டில்
நான், பக்கத்து ஸீட்டில் நகையை இழந்தவன், பின்புறத்தில் இருவர் ஒருவனை அவனது
கம்பெனி கேம்புக்குள் அனுப்பி மெதுவாக பேசி அழைத்து வரச்சொன்னேன் மறைவான இடத்தில்
கார் நிற்க பின்புறக்கதவைத் திறந்தவுடன் அவனை உள்ளே தள்ளி விட்டு மற்றவனும் உள்ளே
உட்கார்ந்து கொள்ள, நான் காரைக் கிளப்பினேன் அவன் யாரு... யாரு... என்று கத்த
சத்தம் போடாமல் வா என்றேன் முன்புறத்தில் எனது பக்கத்தில் அமர்ந்து இருந்தவனைக்
கண்டதும் அவனுக்கு எல்லாம் விளங்கி விட்டது யாரும் பேசவேண்டாம் அவன் கையை மட்டும்
ரெண்டு பேரும் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற கட்டளையோடு காரை சவூதி அரேபியா
நாட்டுக்குச் செல்லும் சாலையில் விரட்டிக்கொண்டு போனேன் பாலைவன மணல்வெளிகள்
நிறைந்த இடம் பிரதான சாலையிலிருந்து பிரிந்த சாலையில் இறக்கி போலீஸ்காரர்கள் சென்றால் காணதவாறு
ஒதுக்கி நிறுத்தினேன் காரை விட்டு யாரும் இறங்க வேண்டாம் என்று டேப் ரெக்கார்டரில்
பதிவு பட்டனை அழுத்தி விட்டு அவனிடம் பேசினேன்.
இது
நடுக்காடு உன்னை அடிச்சுக்கொன்று மணலில் போட்டு மூடிட்டு போனாலும் கண்டுபிடிக்க
ஒருவாரம் ஆகும் எங்களை போலீஸ் கண்டிப்பாக பிடிச்சுடும் அதைப்பற்றி கவலையில்லை நீ
மனைவி, மக்களோட வாழணுமா ? வேண்டாமா ? நீதான்
முடிவு செய்யணும் சொல்லு நகை எங்கே ? ம
...தொடரும்
அட...
பதிலளிநீக்குதுப்பறியும் பணியா...
பொம்மைக்குள் நகையை வைத்து அவனிடம் சொல்லாமல் கொடுத்தது தவறுதானே...
தொடர்கிறேன்...
வருக நண்பரே துப்பறியல் அல்ல பஞ்சாயத்து மட்டுமே...
நீக்குகடைசீல துப்பறியும் கதைக்கு வந்துட்டீங்களா, பலே.
பதிலளிநீக்குகதை இல்லை ஐயா உண்மைச்சம்பவம் வருகைக்கு நன்றி
நீக்குசஸ்பென்சோடு கதையை ........ம் ......
பதிலளிநீக்குவருக தொடர்க நன்றி
நீக்குகபாலியை விட சுவாரஸ்யமா இருக்கே.....! அப்புறம் என்ன ஆச்சு? தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஇது காவாலிப்பயல் நடந்து கொண்ட உண்மைச் சம்பவம் நண்பரே.
நீக்குஆஹா சுவாரசியமான இடத்தில தொடரும் போட்டுட்டீங்களே.
பதிலளிநீக்குவருக நண்பரே நானும் எப்பத்தான் எழுதிப்பழகுறது....
நீக்குஅட செயின் கதை ஸ்வாரஸ்யமா ஆரம்பிச்சு இருக்கு. சஸ்பென்ஸ் முடிவு. அடுத்த பகுதிக்கு I'm waiting!
பதிலளிநீக்குவாங்க ஜி காத்திருப்பிற்க்கு நன்றி
நீக்குபொழைப்பை பாக்க போன தேசத்துல பஞ்சாயத்து வேறயா?!
பதிலளிநீக்குநடக்கட்டும்...
பஞ்சாயத்துதான் நண்பரே பக்குவமாக..... நம்மூரு மாதிரி இல்லாமல்....
நீக்குஇதே மாதிரி நடந்துள்ளது..
பதிலளிநீக்குஆனால், அதற்கு வேறு விதமான முடிவு!..
இது எப்படியாகின்றது என - காத்திருக்கின்றேன்..
வாங்க ஜி நடந்தவைகளை சொல்கிறேன் காத்திருப்புக்கு நன்றி
நீக்குதிக் திக் திக் தான்! உண்மைச் சம்பவம்னு வேறே சொல்றீங்க! ஆனாலும் பொம்மைக்குள் நகையை வைக்காமல் கையிலேயே கொடுத்து விஷயத்தை இருவருக்கும் தெரியப் படுத்தி இருக்கலாம்.
பதிலளிநீக்குஉண்மைச்சம்பவமே.... சிலர் இப்படித்தான் அறிவாளி என்று நினைத்துக்கொண்டு முட்டாள்த்தனமாக செய்து விடுவார்கள்.
நீக்குஇப்படியான உண்மைச் சம்பவங்கள் கேட்டதுண்டு ஜி. ம்ம் பொம்மை என்று நீங்கள் சொல்லி வரும் போதே தெரிந்துவிட்டது அதற்குள் பொருள் இருக்கும், அந்த ஆள் களவாடியிருப்பான் என்று..... காத்திருக்கின்றோம் உங்கள் பஞ்சாயத்தை அறிய...
பதிலளிநீக்குவருக அடுத்த பதிவில் முடிவை காணுங்கள் வருகைக்கு நன்றி
நீக்குபொம்மைக்குள் செயினை வைத்து அனுப்பியதே வில்லங்கமான விஷயம் என்று தோன்றுகிறது தவறான விஷயத்துக்கு கில்லர்ஜி உதவலாமா?
பதிலளிநீக்குவாங்க ஐயா எனது உதவி எந்த வகையானது என்பது அடுத்த பதிவில் தெரியும் தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குகற்பனையை விட உண்மை சம்பவம் சுவாரசியமாய் இருக்கிறது !
பதிலளிநீக்குஅநேகமாய் ,அவன் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன் :)
வாங்க ஜி உங்களது கணிப்பை பொருத்திருந்து பாருங்கள்
நீக்குசஸ்பென்ஸ் இன்னும் நீடிக்குமா?
பதிலளிநீக்குவருக முனைவரே பதிவு நீண்டதால் தொடரும் போட்டேன் அடுத்த பதிவில் முடிந்து விடும்
நீக்குஇந்த சம்பவம் நடந்தது பொம்மை சினிமா வந்த காலத்திலா? அதில் யேசுதாஸ் பாடிய முதல் பாடல் "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தால் எல்லாம் பொம்மை"
பதிலளிநீக்கு--
Jayakumar
ஐயா இன்றுதான் 1964-லில் வெளியான, K.J. யேசுதாஸ் பாடிய முதல் பொம்மைப் படப்பாடல் எடுத்து வைத்தேன் அதையே தாங்களும் சொல்லி விட்டீர்கள் அடுத்த பதிவில் வரும்.
நீக்குதுப்பறியும் கதை உண்மை என்று சொல்லியிருக்கீங்க அருமை சகோ. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.
பதிலளிநீக்குவருக சகோ தொடர்வதற்கு நன்றி.
நீக்குஆ.....அப்படியா....அடுத்தது.என்ன..தொடருகிறேன்..
பதிலளிநீக்குவருக நண்பரே தொடர்க...
நீக்குஎமது ஊற்று வலைத் திரட்டியில் தங்கள் தளம் இணைக்கப்பட்டுவிட்டது.
பதிலளிநீக்குhttp://ootru.yarlsoft.com/
http://ootru.atwebpages.com/
தாமதத்திற்கு மன்னிக்கவும்
தங்கள் ஒத்துழைப்பிற்கு ஊற்று நன்றி தெரிவிக்கின்றது.
எமது தள இணைப்பிற்க்கும், தகவலுக்கும் நன்றி நண்பரே
நீக்குஉண்மை சம்பவத்தை ....தொடரும் என போட்டு எல்லோரையும் காத்திருக்க வைத்து விட்டீர்கள். நன்று
பதிலளிநீக்குநாளையே வருக நண்பரே...
நீக்குஆஹா! துபாயிலும் பஞ்சாயத்தா? கலக்குங்க!
பதிலளிநீக்குபஞ்சாயத்து உலகம் முழுவதுமே உண்டு நண்பரே
நீக்குசஸ்பென்ஸ். அறிய ஆவலாக இருக்கிறேன். தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குவருக தொடர்வதற்கு நன்றி நண்பரே.
நீக்குபண்ணுனது நியாயமா? சொல்லாமல் நகையை பொம்மையில் வைத்து அனுப்பலாமா? யார் அந்த புத்திசாலி?
பதிலளிநீக்குதெரிந்த நண்பர்தான் நண்பரே... முடிவுப்பதிவு (நாட்டு ஆமைகள்) பாருங்கள்
நீக்குதங்களின் மிரட்டலுக்கு அவர் பயந்து குற்றத்தை ஒப்புக்கொண்டாரா? காத்திருக்கிறேன் முடிவு அறிய.
பதிலளிநீக்குவருக நண்பரே விடை அடுத்த பதிவில் காண்பீர்கள்.
நீக்கு