தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 19, 2016

இதுக்குப்பேரு, நீங்கதான் சொல்லணும்


ன்று ஏனோ மனசு சரியில்லை அபுதாபி குப்பான் சட்டிசாமி தெருவில் அப்படியே நடந்து போனேன் தலையை லேசாக வலித்தது டீக்கடையை கண்டதும் டீ சாப்பிடுவோம் என்று டீ சொல்லி விட்டு உட்கார்ந்தேன், அருகில் இரண்டு அரேபியர்கள் உட்கார்ந்து BASICகே இல்லாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள் பொதுவாக எனக்கு ஆறறிவுள்ள மானி(ட்)டர்களின் பேச்சுகளை ஒட்டுக் கேட்கும் பழக்கம் கிடையாது இருப்பினும் அவர்களின் சம்பாஷனைகள் எனது செவிகளுக்குள் வழுக்கட்டாயமாக நுழைந்து சேதாரமாக்கினாலும், என்னை அந்த இடத்தை விட்டு போகவிடாமல் கட்டிப் போட்டது என்பதுதான் உண்மை அவர்கள் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து தங்களுக்காக எழுதியுள்ளேன்.

ஏண்ணே நேத்து அத்தாச்சி புளியங்கொட்டையிலே பலகாரம் செஞ்சது நல்லாருந்சுச்சுனு சொன்னியே, அது எப்பிடினு சொல்லுண்ணே... ய்யேன் வூட்டுக்காரிக் கிட்டயும் செய்யச் சொல்லணும்.
அது வந்துடாம்பி, புளியங்கொட்டே ¾ ப்படி, வெளக்கெண்ணே ½ கிலோ, கேப்பமாவு 1 ¼ லிட்ரு, கொடுக்காப் புளிதைலம் ½ கிலோ, நெய்யி ¼ லிட்ரு, கேசரிப்பவுடரு 100 மில்லி, இஞ்சி ¼ லிட்ரு, நாட்டு வெங்காயம் ரெண்டொழக்கு, கொடமொளகா ½ லிட்ரு, அப்பொறன்ன ? கடுகு, வெந்தயம், ரெண்டு கையி உப்பு இது போதும்டா...
சரிண்ணே எப்புடிச் செய்யிறது அதச்சொல்லு....
நா வேணா வூட்டுக்கு வந்து கொழுந்தியாக்கிட்டே சொல்லட்டுமாடா ?
வேண்டாணே ஒனக்கு என்னத்துக்கு செரமம் யேங்கிட்டயே சொல்லு.
சரிடா மொதலே அடுப்ப பத்தவெச்சு, சட்டியெ எடுத்து வெய்யி ஒரு 2 ½ கிலோ தண்ணியெடுத்து ஊத்து, தண்ணி நல்லா தளப்பொளானு கொதிச்சதும், கேப்பமாவைக் கொட்டி கிண்டிக்கிட்டே இரு, கொஞ்சொம் எழகுனாப்புள வரும் பட்டுனு கொடுக்காப்புளி தைலத்த ஊத்திப்புட்டு, கழனித் தண்ணியில ஊறவச்ச புளியங்கொட்டய கொட்டி கிண்டி மூடி வச்சுட்டு, இன்னொரு அடுப்புல தாளிக்கிரக்கிறாப்புல சட்டிய வெச்சு, வெளக்கெண்ணெய ஊத்து, சூடானதும் கடுகு, வெந்தயொம், அப்பொறமா நாட்டு வெங்காயம், கொடமொளகா போட்டு வறுத்துக்க, தீயெக்கொறச்சு வச்சுட்டு, குடிக்க தண்ணி வாங்குடா தம்பி...
ஏலே, அண்ணனுக்கு இன்னொரு டீ போடுலே... நீ சொல்லுணே...
அப்பொறமா, மொதச்சட்டியெத் தொறந்து, அரச்சு வச்ச இஞ்சிய ஊத்தி, கேசரிப்பவுடரெ கொட்டிக்கிண்டு அப்படியே ரெண்டு கையி உப்பப்போடு, நல்லா வாழத்தாரு விட்ட நெறத்துல வரும், வெளக்கெண்ணே போட்டு தாளிச்சயில அத அப்பிடியே ஊத்தி மெதுவாக்கிண்டி விட்டு நெய்யவிட்டு மூடி வச்சுடு செத்தநாளி கழிச்சு எறக்கி வெய்யி வாசம் கமகமனு தெருவே மணக்கும்டா... ராத்திரிக்கி பயலும், சிருக்கியும் சாப்புட்டு பாருங்க அப்பொறம் சொல்லுவா, கொழுந்தியா இந்த மச்சான் மன்ஸூரப்பத்தி.
சரிண்ணே இப்பிடியே சந்தைக்கு சாமான் வாங்கிட்டுப் போறேணே..
சரிடாத் தம்பி அப்பிடியே ரெண்டு வடைக்கி காசு கொடுத்துட்டுப்போ...
சரிண்ணே.

அவன் டீக்கடைகாரருக்கு காசு கொடுத்து விட்டு சந்தோஷமாக ‘’அழகிய லைலா’’ என்ற அரபிக் பாடலை முணுமுணுத்துக்கொண்டே போய் விட்டான் எனக்கு மனதுள் ஆசை முளைத்து விட்டது நாமும் எத்தனை நாட்களுக்குத்தான் தேவகோட்டை சகோதரி ஆர். உமையாள் காயத்ரி அவர்கள் சொன்னதையே... செய்து பார்த்து தின்பது ? ஒரு மாற்றத்திற்க்காக இந்த அரபிகள் சொன்னதை செய்து தின்போமே... உடன் எலக்ட்ரா தெருவில் பிரபல வலைப்பதிவர் மனசு சே. குமார் அவர்கள் தங்கியிருக்கும் பில்டிங் பக்கத்தில் உள்ள வீரமாகாளியம்மன் மளிகைக் கடையில் அவர்கள் சொன்னதை எல்லாம் வாங்கிக் கொண்டு போய், அவர்கள் சொன்னதைப் போலவே செய்து பார்த்தேன் அருமையாக வந்தது ஆவலுடன், ஆசையுடன், ஒருவித காதலுடன் எடுத்து தின்றேன்... எனதருமை நண்பர்களே.... நண்பிகளே... தின்றதுதான் ஞாபகம் இருக்கிறது பிறகு நடந்ததை அபுதாபி நண்பர்கள் சொன்னார்கள் (மனசு சே.குமார் உள்பட) ஆப்ரேஷன் தியேட்டருல போட்டு, வாயைக் கிழித்துதான் வாயில் இருந்ததை வெளியில் எடுத்தார்களாம்...13 நாட்களாக N.M.C Hospital லில் I.C.U. விலிருந்து... நேற்றுதான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தேன் ஹும் என்னத்தச் சொல்ல ? காலக்கெரகம் இவ்வளவும் சொன்ன அந்தப் பேதியிலே ஓயிருவாங்கே, இதுக்குப்பேரு மட்டும் சொல்லவே இல்லை அதனால இதுக்குப்பேரு நீங்கதான் சொல்லணும்.

குறிப்பு – நான் பெற்ற துன்பம் இந்த வலையுலகம் பெறக்கூடாது ஆகவே நண்பர்களே, நண்பிகளே தயவு செய்து இதைச் செய்து பார்க்காதீங்க....

01. கேப்பை மாவு1 ¼ லிட்டர்.
02. கொடுக்காப்புளிதைலம் ½ கிலோ
03. புளியங்கொட்டை, ¾ படி
04. விளக்கெண்ணை ½ கிலோ
05. கடுகு
06. வெந்தயம்
07. நாட்டு வெங்காயம் இரண்டு உழக்கு
08. கொடைமிளகாய் ½ லிட்டர்
09. இஞ்சி ¼ லிட்டர்
10. கேசரிப் பவுடர்
11. இரண்டு கை உப்பு
12. நெய் ¼ லிட்டர்.
இத்தனை பொருள்களும் வாங்கியதற்க்கு எனது செலவு 
General Market Bill--------48.00 UAE Dirham’s
N.M.C. Hospital Bill--------2580.00 UAE Dirham’s  
Total Expensive-------------2628.00 UAE Dirham’s
Indian Money----------------45,990.00 Indian I.Rs
  
குறிப்பு - இந்த ரெசிபி எனது கண்டுபிடிப்பு ஆகவே யாரும் இதை காப்பி செய்து அவர்களது தளத்தில் வெளியிடக்கூடாது குறிப்பாக சமையல்கலை பதிவர்கள் திருமதி R. உமையாள் காயத்ரி, திருமதி மனோ சாமிநாதன், திருமதி. S. சாரதா, திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திங்க''கிழமை ஸ்பெஷல் திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் - கில்லர்ஜி

34 கருத்துகள்:

  1. யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் ...ஆஹா ,உங்களுக்கு என்னே ஒரு பெருந்தன்மை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி செய்து பார்க்க வேண்டாம் என்றே சொல்லி இருக்கிறேன்.

      நீக்கு
  2. எனக்கு என்னையும் டாக்டர் கந்த சாமியையும் லண்டனுக்கு அழைத்துப் போனது ஏனோ நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வாங்க ஐயா மோல்ட்மெல்ட் மாதிரியா ?

      நீக்கு
  3. சரி சரி நீங்க சொன்ன ரிசிப்பியை நாங்க செய்து பார்க்க மாட்ட்டோம் ஆனால் அடுத்த தடவை வலைப்பதிவர் விழா என்று ஒன்று நடந்தால் அங்கே நீங்கள் இந்த ரிசிப்பியில் சொன்னதை செய்து விழா ஆரம்பிக்கும் போது எல்லோருக்கும் கண்டிப்பாக தரணும். சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்படியா என்னை கொலைப்பழியில் மாட்டி விடுவது ?

      நீக்கு
  4. படிக்கக் கூடாத ஜோக் மாதிரி செய்யக் கூடாத ரெஸிப்பியா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே அப்படியும் நினைக்கலாம்

      நீக்கு
  5. இந்த ரெசிபியை நான் செய்து பார்த்து கில்லர்ஜிக்கு கொரியரில் அனுப்பிவைக்கப் போகிறேன்.
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டது போதும் என்னாலே என்று பட்டிணத்தாரும் சொன்னாரே.... நண்பருக்கு சிரமம் எதற்கு ?

      நீக்கு
  6. இருந்தாலும் செய்து பார்க்கும் ஆவல் இல்லை))))

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! அருமையான ரெசிபி! செய்து பார்க்கக் கூடாதுனு தடா போட்டுட்டீங்களே! ஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  8. அது என்னமோ தெரியலை, உங்க பதிவுகள் எனக்கு மின் மடலில் வருவதே இல்லை. :( மற்றபடி கோபம் எல்லாம் ஏதும் இல்லை!

    பதிலளிநீக்கு
  9. ஜி+ இல் உங்களை நண்பராக்கி இருக்கேன். அதில் பதிவுகள் அப்டேட் ஆகையில் பார்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா தடை போடலைனா.. எனது கண்டுபிடிப்பை வச்சு மற்றவர்கள் புகழ் பெற்று விடுவார்களே....
      ஜி+நண்பராகியமைக்கு நன்றி

      நீக்கு
  10. உங்கள் ரெசிபியை உங்களால் மட்டும் தான் செய்ய முடியும் சகோ. எனக்கு கண்டிப்பாக வராது. எனவே எனது தளத்தில் தங்கள் ரெசிபியை காப்பி அடித்து போட மாட்டேன். நீங்களும் செக் பண்ணிக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் உண்மையான தகவலுக்கு நன்றி

      நீக்கு
  11. >>> இதுக்குப் பேரு நீங்க தான் சொல்லணும்!..<<<

    பரிசுத் தொகை எம்புட்டுன்னு சொல்லலையே!?..

    ஆழந் தெரியாம காலை உடக்கூடாது..ங்கறது மறந்து போச்சு போல!..

    மச்சான் மன்ஸூர நம்பி இறங்கினதில மெடிக்கல் செலவு தான் மிச்சம்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி ஆசைதான் துன்பத்துக்கு மூலதனம்

      நீக்கு
  12. இது உம்மால் மட்டும்தானய்யா முடியும். தம6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் முத்தாய்ப்பான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  13. நீங்கள் செய்து சாப்பிட்டது கேகொபு களியா?
    (கேகொபு என்பது கேப்பை+கொடுக்காப்புளி+புளியங்கொட்டை கலந்த கலவை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே 'கேகொபு' அடடே இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது நன்றி

      நீக்கு
  14. காலக்கிரகம் விடாது போலிருக்கே....நல்லவேளை அந்தப்பக்கமே எட்டிப் பார்க்கிறதே இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ஊரிலேயே இருங்க நண்பரே நானும் வந்துருவேன்.

      நீக்கு
  15. என்னுடைய பின்னூட்டம் என்னவானது? செல் போனில் டைப் செய்து அனுப்புவதில் இது ஒரு சங்கடம், சில சமயம் இரண்டு முறை போஸ்ட் ஆகி விடுகிறது, அல்லது விடுபட்டு போய் விடுகிறது. எனக்குதான் சரியாக ஆபரேட் பண்ண தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
    எனிவே! சமையல் குறிப்புகள் உங்களை அதிகம் பாதித்திருப்பது புரிகிறது. பொழுது போகாத ஒரு நாளில் உங்கள் ரெசிபியை முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ உங்களது பின்னூட்டம் வரவில்லையே...
      பொழுது போகாத நாளென்ன... விருந்தாளி வரும்பொழுது செய்யுங்கள்.

      நீக்கு
  16. எங்க இதுக்கு நான் போட்ட கருத்து...?

    ரெஸிபி சொல்லிட்டு செய்யகூடாதுன்னு வேற...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முன் வரவில்லையே நண்பரே மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. இது சமையலறை விஷயம் மாதிரி தெரியலையே....அதனால லேப் ஒன்றும் கட்டிக் கொடுத்துடுங்க அப்புறம் செய்து பார்க்கலாம்.என்ன சொல்றீர்ங்க ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே ஒரு அமௌண்ட் செலவு செய்'துட்டு'தான் வர்றோம்

      நீக்கு