காரைக்கால் தலைவாசல் சாவடி காலை 06.00 மணி மச்சக்காளை மனைவி கலையரசியிடம் கேட்டுக் கொண்டிருந்தான்...
யேண்டி, செவளக்காளைக்கு கழனித்தண்ணி வச்சியா ?
இருங்க காலையிலே எந்திரிச்சு இப்பத்தான் வாசலைத் தெளிச்சேன் அதுக்குள்ளேயா ?
நம்ம நாயி யேன்... ஒருக்காலை நொண்டுது ?
எந்தநாயி கல்லைக்கொண்டு எரிஞ்சுச்சே...
அப்பா அந்த கல்லு வீட்டுக்காரரு மயந்தேன் நம்ம நாயை, கல்லை விட்டெரிஞ்சான்.
ஏண்டா, காளைராசு அப்பவே ஆத்தாக்கிட்டே சொல்லலையா ? அந்தப் பயபுள்ளே வரட்டும் அவன் காலை ஒடிக்கிறேன் கொங்காப்பய மவனை...
காலையிலே நல்ல வார்த்தை பேசுறியளா ? காலை ஒடிப்பேன் தோலை உறிப்பேனு...
ஏண்டி பொசக்கெட்டவளே அதென்ன ? சாதாரணமா சொல்லிப்புட்டே எங்க ஊருலருந்து கொண்டு வந்த நாயிடி.
அதானே பாத்தேன்.... இன்னமும் ராசபாளயத்தே இழுக்கலையேனு... என்ன இருந்தாலும்.... எல்லாம் சாதி சனம் பாத்துதேன் பேசுதுக...
நீயின்னாப்பளே... என்ன ஓஞ்சாதி சனம் குத்தாலத்துல இருந்து வந்தா, விட்டா குடுக்கிறே அங்கிட்டும், இங்குட்டுமாத்தான் தாவிக்கிட்டு திரிவே...
என்னத்தே... தாவிக்கிட்டு திரிஞ்சாக.... ?
சரி காலையில ஒங்கிட்டே வாயெக் கொடுத்தா வெளங்குனாப்பலேதான்... ந்நான் பிஞ்சக்காட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வாறேன்.
வெஞ்சனத்துக்கு கத்திரிக்கா புடுங்கிட்டு வாங்க...
என்னடீ... போன, செவ்வாய்க்குதான் ஒரு சாக்கு பரிச்சாந்தேன்.
பாளையங்கோட்டையிலேருந்து... ய்யேந்தங்கச்சி வந்தாள்ல அவளுக்கு கொடுத்துட்டேன்.
வரும்போது கையை வீசிக்கிட்டு வர்றவளுக போகும்போது இங்கேயிருந்து அள்ளிக்கிட்டு போயிறாளுக.
ய்யேன் ஒங்கக்காவும்தான் போன மாசம் வந்து மிதுக்க வத்தலு, சோளம், வெள்ளிரிக்கா இதெல்லாம் கொண்டுக்கிட்டு போகும்போது..... வாயெப் பொத்திக்கிட்டு இருந்தீக...
அடியே எங்கக்கா பண்ருட்டியலருந்து வரும்போது பலாப்பழம் கொண்டு வந்துச்சே... ஓந்தொங்கச்சி என்னத்த கொண்டு வந்தா ?
ய்யேன் எங்க வூட்டுலருந்து எதுவும் வரலையாக்கும் ?
ஓவ்வீட்டுலருந்து கொண்டு வர என்ன இருக்கு ரெண்டு கொரங்கு குட்டியத்தான் புடிச்சுக்கிட்டு வரணும்.
ஆ..... மாமா ஒங்க ஊருல மட்டும் என்ன வாழுதாம் தெருப்பூராம் நாயாத்திரியுது.
அடியே நாயி நன்றியுள்ளதுடீ கொரங்க வச்சு என்ன.. செய்யிவே ?
அதை வச்சு வித்தை காட்டினாலும் கஞ்சி ஊத்தும், நாயி ஊரு வம்புல வாங்கியாரும்.
நாயைக் கழுவி நடுவீட்டுல வச்சாலும் அது நக்கிகிட்டுதான் திரியுங்கிறது சரியாத்தான் இருக்கு.
இப்ப யாரு நக்கிகிட்டு பொழப்பு இல்லாமத் திரியிறா ?
அதான் சொன்னியேடி கொரங்கா இருந்தாலும், வித்தை காட்டி சம்பாரிக்கலாம்னு.. எல்லாம் பரம்பரைப் புத்தி உன்னை விட்டு போகுமா ?
நாங்க ஒரு காலத்துல கொரங்க வச்சு உழைச்சு சாப்புட்டோம், நீங்க நாயை அடிச்சுக் கொன்னு பொழப்பு நடத்துறதுக்கு அது தேவலே....
யேண்டி இப்பத்தான் வெவசாயம் பாத்துக்கிட்டுதானே இருக்கேன் பழசை ஏண்டி இழுக்கிறே ?
யாரு.... சீப்பட்ட பொழப்பு வேணானு எங்க அப்பாரு வேங்கி கொடுத்த புஞ்சை நெலம் அதுல ஒழுங்கா வேலெ செய்யாமே வடக்குத்தெரு கொடுவா மீச கெழடு கூப்புடுதுனு நாயடிக்கப் போயிறது பின்னே நான் மட்டும் எப்புடி காட்டுல வேலை செய்யிறது ?
யேண்டி சும்மா இருக்கிற நேரத்துலதானடி போறேன் சொளையா 210 ரூவா கெடைக்கிதே...
நீ எதுக்குப் போறேனு, எனக்குத் தெரியாதா... சாங்காலம் அதுல 100 ஓவா கொண்டு வருவே, நாயைக் கழுவி நடுவீட்டுல வச்சாலும் அது நக்கிகிட்டுதான் திரியுங்கிறது சரியாத்தான் இருக்கு.
என்னடீ ந்நான் சொன்னதை திருப்பிச் சொல்றே ?
பேசிக்கொண்டு இருக்கும்போது கொடுவா மீசை பெருசு மொக்கைராசு வந்தது.
ஏலே... மச்சக்காளை இன்னிக்கி முனுசுபாலிட்டி மேஸ்திரி வரச்சொன்னாரு ஒடனே கெளம்புடா.
ஏய்யா... கெழட்டு மனுஷா... காட்டுல களையெடுக்காம, வேலயெல்லாம் அப்பிடியே கெடக்கு இப்பத்தான் பிஞ்சைக்காட்டுக்கு போறேன் சொன்ன ஆளையும் நீ வந்து இழுத்துக்கிட்டு போறீயே.... நான் காடு வேலக்கி என்ன செய்யிறது... ?
ஏத்தா சும்மாவா... மேஸ்திரி சொளையா 210 ரூவா கொடுக்குறாரே...
ஓவ்ரூவா யாருக்கு வேணும் போயா மொதல்லே...
பெருசு நீ கெளம்பு அவக்கிட்டே யேன்.. வாயெக்குடுக்கிறே ?
ஆமாடா குத்தாலத்துக்காரிய, சண்டைனா மத்தாளம் கட்டிக்கிட்டு வருவாளுக.
மச்சக்காளை கயிறை எடுத்து தோளில் போட, இருவரும் கிளம்பினார்கள்.
போயா போ சாங்காலம் சோத்துக்கு வருவிலே அப்ப, கடுக்கங்காயை நச்சுப்போட்டு கொழம்பு ஊத்துறேன் பேதி வந்து வீட்டுலயாவது கெடப்பே.. பேதியில ஓயிருவே... பாவி பறப்பான்.
புலம்பிக் கொண்டே... கழனித் தண்ணியை கரைத்து மாட்டுக்கு வைத்தாள் குற்றாலத்து மகராசி கலையரசி.
நடுத்தர வர்க்கத்துக்கு குடும்ப வாழ்வில் ஒருநாள் காட்சி!
பதிலளிநீக்குஆம் நண்பரே உண்மை வருகைக்கு நன்றி
நீக்குஆகா
பதிலளிநீக்குஇதுபோல் எழுத தங்களால் மட்டும்தான் முடியும் நண்பரே
தம +1
வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி
நீக்குமிகவும் ரசித்தேன். இயல்பான நடையில் நல்ல நகைச்சுவைப் பதிவு. ஊருக்குப் போய் நோட்டடிக்காம, நாட்டின் நாணயத்தையே அடிக்க ஆரம்பிச்சுட்டீங்களே! (எனக்கும் ஒரு காயின் கலெக்ஷனுக்குக் குடுத்துடுங்க)
பதிலளிநீக்குநண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி நாணயத்தை நான் வெளியிடுவதில்லை காரணம் நான் நாணயமானவன்.
நீக்குகில்லர்ஜி அகராதியில் இன்னும் என்னென்ன வார்த்தைகள் உள்ளனவோ?
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கு நன்றி என்னுள் எழுந்தவை விண்ணில் தெறிக்கும் இறுதிவரை...
நீக்குரசித்தேன் ஜி!
பதிலளிநீக்குத ம 5
வருக நண்பரே நன்றி
நீக்குவழக்கம் போல் அருமையான நகைச்சுவை பதிவு சகோ.
பதிலளிநீக்குவருக சகோ பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குகூட்டமா வந்து குடுமியப் புடிப்பாளுங்க..ங்கறது சரியாத் தான இருக்கு!.. நாய் புடிக்கிற வேலை..ன்னாலும் நிம்மதியா போக முடியுதா!..
பதிலளிநீக்குகாலக் கெரகம்..டா.. சாமீ!..
என்னா அங்கே சத்தம்!?..
ஒன்னுமில்லே.. ஒன்னுமில்லே.. ஊசி கீழ விழுந்துடிச்சி!..
ஹாஹாஹா வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஉரையாடல்களில் ‘மண்மணம்’ வீசும்படி அழகாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஇப்படி காயின் அடிக்கிற ட்ரிக்ஸ்சை எனக்கும் சொல்லிக் கொடுங்க ஜி :)
பதிலளிநீக்குவாங்க ஜி முனுசிபாலிட்டி மேஸ்திரி மச்சக்காளையை ஏமாத்திட்டாராம் இந்தக்காசு செல்லாதாம்ல... நமக்கு எதுக்கு ?
நீக்குகுற்றலாத்து மகராசிய இப்படியா...புலம்ப விடுறது...
பதிலளிநீக்குஅவ... தலையெழுத்து அப்படி நண்பரே
நீக்குஒங்க பதிவின் நடையே தனி
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரைக்கு நன்றி
நீக்குகாயினும் மச்சக்காளையும்....ஹ ஹ ஹா
பதிலளிநீக்குதொடர்கிறேன் நண்பரே!
நன்றி
கவிஞரின் வருகைக்கு நன்றி
நீக்கும்ம் சாதாரண வர்கத்து வீட்டுப் பெண்ணின் புலம்பல்!! அது சரி 150 ரூபா காயின் எங்கிட்டு இருந்து வந்துச்சு? கில்லர்ஜி வேலையா...சரி சரி எங்களுக்கும் அடிச்சுக் கொடுங்க...
பதிலளிநீக்குவாங்க, வாங்க 150 ரூபாய் காயின் 160 ரூபாய் டீலிங் OK ?
நீக்குஆங்கோர் இடத்து வாழ்வு
பதிலளிநீக்குஇங்கே படமெடுத்துப் பகிர்ந்தாற் போல
எங்களுக்கு இருக்குதையா!
வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு மதிழ்ச்சி
நீக்குதெற்கத்தி வாசம் அது வெட்டிவேரு வாசம்.ஊருக்கு வந்து போன மாதிரி இருந்தது. அருமையான நடை.
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்கு