தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 28, 2017

சமூகத்து SUNமுகங்கள்


நான் வேலை செய்தது Government Office வேலைக்கு போகும்போது Tie கட்டிப் போகவேண்டும் சில நாட்களில் Got போட்டு போவேன் ஒருநாள் நான் Office போகும்போது வழியில் எனது நண்பர்கள் இரண்டு பேரை சந்திக்க நேர்ந்தது சற்று நலகுசலம் விசாரித்து விட்டு சென்று விட்டேன் அதில் ஒரு நண்பர் எனக்கு மிகமிக வேண்டியவன் மற்றவன் சொல்லியிருக்கிறான், அவனிடம்... 
இவனுக்கு வந்த வாழ்க்கையை பார்த்தீயா ? 
என்று காரணம் நாங்கள் எல்லோருமே ஒருகாலத்தில் ஒன்றாக போனவர்கள் (20 வருடங்களுக்கு முன்பு U.A.E க்கு) இன்று வரை அவர்கள் கந்தூரா என்று சொல்லப்படும் Labor Dress தான் போட்டு இருக்கிறார்கள் காரணம் அவர்கள் இன்றுவரை அதே Company யில்தான் வேலை செய்கிறார்கள் இதற்கு நான் என்ன செய்ய முடியும் ? விதி என்று சொல்வார்களே அதுதான். வேலை முடிந்ததும் எனக்கு பிடித்த கருப்பு நிறத்தில் Pant & T-Shirt போட்டுக் கொண்டுதான் நான் வெளியில் செல்வேன் அதே நிறத்தில் எத்தனை உடைகள் வைத்திருக்கிறேன் என்பது எனது Room metக்கு மட்டும்தான் தெரியும் மற்றொரு நாள் நான் வெளியில் போகும்போது என்னை குறை சொன்னவனை சந்திக்க நேர்ந்தது அவன் கேட்டான் என்னை...
நல்லாத்தானே சம்பாரிக்கிறே... ஏன் நல்ல Dress போட வேண்டியதானே ?
முதல்ல நான் எப்படி ? Dress பண்ணணும்னு சரியா சொல்லு, நல்லாயிருந்தா இவனுக்கு வந்த வாழ்க்கையா ? னு கேட்கிறே, நல்லாயில்லாட்டா இப்படி கேட்கிறே, நான் என்ன செய்ய ? முடிவை நீயே சொல் என்றேன் அவனுக்கு திக்கென்றாகி விட்டது, ஒன்றும் சொல்லாமல் போய் விட்டான்.
என்ன செய்வது சமூகத்தில், இந்த மாதிரி சண்முகங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், இவன் என்ன செய்வான் ? என்மீது உள்ள கோபத்தை எப்படி காண்பிப்பது ? ஒரு 4 பேரை சந்தித்து 8 விதமாக சொல்லி விட்டு போய் விடுவான், அந்தப் 8 பேரும் எப்படி  பட்டவர்கள் ஒரு 16 பேரை சந்தித்து 32  விதமாக சொல்லக் கூடியவர்கள், அந்த 32 பேரும் ஒன்று கூடுதலாக போட்டு ஆயக்கலை 65 ன்னு சொல்லிட்டு போய்ட்டே...... இருப்பார்கள், இவர்கள்தான் 
திண்ணைப்பேச்சு வீரர்கள் 
வாழ்நாளில் கடைசிவரை இப்படித்தான் இருப்பார்கள் ஏனெனில் பேய் காலை வளைக்க முடியுமா ? மா


CHIVAS REGAL சிவசம்போ
பேய்க்கு கால் இருக்கா... இல்லையா ?

சாம்பசிவம்
கலர்க்கலரா உடையணியும் மனிதனுக்கே இருக்கும்போது வெள்ளை உடையணியும் வெள்ளை மனம் படைத்த பேய்க்கு இருக்காதா ? தா

42 கருத்துகள்:

  1. என்ன நண்பரே, பேய், கீய் என்று ஆரம்பித்துவிட்டர்கள்? பயமாக இருக்கிறது! நாயகன் படத்தில் வேலு நாயக்கர் சொல்வதுபோல "நாலு பேருக்கு நல்லது நடக்குமானால் நாம் செய்யும் எல்லாமே நல்லதுதான்". ஒன்று சொல்லட்டுமா? நண்பர்கள் என்று நாம் நினைக்கும் யாருமே, எதோ ஒருவகையில் நம் மீது பொறாமையோடுதான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் நாம் வாழ்ந்தாகவேண்டும். - இராய செல்லப்பா நியூஜெர்சில்யில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நடைமுறையின் உண்மையை அழகாக சொன்னீர்கள் நன்றி

      நீக்கு
  2. நாலுபேர் நாலுவிதமா சொல்றாங்கன்னா அவங்களுக்குள்ள ஒத்துமை இல்லைன்னு அர்த்தம். உலகம் ஆயிரம் சொல்லட்டுமே.. உனக்கு நீதான் நீதிபதின்னு தமிழிலும், குச் தோ லோக் கஹேங்கே.. லோகோங் கா காம் ஹை கெஹனா..என்று ஹிந்தியிலும் பாடிவிட்டுச் சென்றுவிட வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  3. இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    தம +1
    நண்பரே ஒருநிமிடம் எனது வலைப் பூவிற்கு வாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் உண்மையே...
      வந்தேன் அன்புக்கடனின்பால்... மெய் சிலிர்த்து நின்றேன்.

      நீக்கு
  4. பேய்க்கு கால் இருப்பதும் இன்றைக்கு தான் தெரியும் ஜி... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  5. பெரும்பாலும் நண்பர்கள் ஒரே லெவலில்தான் இருக்கவேண்டும் என எண்ணுவார்கள். தங்களில் ஒருவன் முன்னேறுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை நிறையபேருக்கு இருக்காது. அதனால்தான் அவர்கள், "ஊருல என்னோட ஒண்ணுமில்லாம திரிஞ்ச பய. எத்தனைதடவை நான் சாப்பாடு வாங்கிக்கொடுத்திருக்கேன்"என்றெல்லாம் பழங்கதை பேசித்திரிவார்கள். - இந்தத் திண்ணைப் பேச்சு வீர்ரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி அப்படின்னு பட்டுக்கோட்டையார் அப்பவே பாடிட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நண்பரே பட்டுக்கோட்டையார் அன்றே சரியாக சொன்னார் வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. அட! ஜி! இந்த திண்ணைப் பேச்சு வீரர்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். நம் மனசாட்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதும். இடித்துரைப்பவன்தான் நண்பன். அப்படி இடித்துரைப்பவர் யார் சொல்லுங்கள்? உங்கள்/நம் மனசாட்சிதான் இல்லையா? எனவே அதுதான் உற்ற நண்பன். இதை எல்லாம் இந்தக் காதில் கேட்டு அந்தக் காதுவழியாக விட்டுவிடுங்கள் ஜி!

    அப்புறம் சிவசம்போகிட்டயும், சாம்பசிவத்துக்கிட்டயும் சொல்லிடுங்க பேய்க்கு வேண்டுமானாலும் கால் இருக்கலாம்....ஆனால் வதந்தீக்கும், ஊழல் பேய்க்கும் காலே கிடையாது!!! ரெக்கை கட்டிப் பறக்கும்!!! அப்படினு சொல்லிடுங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெக்கை கட்டி பறக்குமா ? ஹா..ஹா..ஹா.. சொல்லி விடுகிறேன்

      நீக்கு
  7. திண்ணைகளை ஒழித்துக் கட்டிய தமிழன் (!) திண்ணைப் பேச்சுகளை மட்டும் மறப்பதேயில்லை.. வெறுப்பதேயில்லை!..

    நாய் வாலை நிமிர்த்தினாலும் பேய்க் காலை வளைக்க முடியாது.. ன்னு - ஜலஜானந்த ஸ்வாமிஜி(?) சொல்லியிருக்கிறாரே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஜி திண்ணைகளை ஒழித்து விட்டோம்

      நீக்கு
  8. பதில்கள்
    1. என்னைப்போல என்றால் ?
      நானும் திண்ணைக்காரனோ ?
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  9. திண்ணைப் பேச்சு வீரர்கள்..... அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்..... விடுங்க ஜி!

    பதிலளிநீக்கு
  10. பொறாமையில் வெந்து புழுங்கட்டும். விட்டித்தள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் நண்பரே போட்டோ ஷாப்பில் படமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  12. சமூகத்தின் சண்முகங்களை தெரிந்து கொண்டேன்.நண்பரே.....

    பதிலளிநீக்கு
  13. எல்லாம் பொறாமைதான் காரணம் சகோ... விட்டுத்தள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  14. விதி என்று சொல்வார்களே ....என்று தன்னடக்கத்துடன் கூறிக் கொண்டுள்ளதை வன்மையாய் கண்டிக்கிறேன் !அவரவர் திறமை என்று சொல்லுங்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பல திறமைசாலிகள் உலகம் அறியாமலேயே மறைந்து போகின்றார்களே...

      நீக்கு
  15. இந்த மாதிரி சண்முகங்களை நானும் தினமும் பார்க்கிறேன்...
    என்ன செய்வது கடந்து செல்ல வேண்டிய வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அனைவரும் கண்டே தீரவேண்டும்

      நீக்கு
  16. போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித்
    தூற்றுவார் தூற்றட்டும்

    பதிலளிநீக்கு
  17. நாம் வாழ்வது நமக்காக!

    பதிலளிநீக்கு
  18. பின்னால் பேசும் சண்முங்களின் பேச்சு உங்களை பாதித்து இருப்பதன் விளைவே இந்த பதிவு என் நினைக்கிறேன்.நமக்கு பின்னால் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கவே கூடாது அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷ்யமாக இருந்தாலும் சரி முக்கியமாக அடுத்தவர்களின் பேச்சு நம்மை எந்த விதத்திலும் பாதிக்காத படி நம் மனதை வைத்து கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகான விளக்கம், விரிவான கருத்துரை நன்று நன்றி.

      நீக்கு
  19. உலகம் பேசுகிற பேச்சுக்கள் பல,,,,,,/

    பதிலளிநீக்கு
  20. “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
    வையகம் இதுதானடா …..

    வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
    வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்”

    என்று ‘நான் பெற்ற செல்வம்’ என்ற திரைப்படத்தில் கவி கா.மு.ஷெரிப் அவர்களின் பாடலை திரு TMS அவர்கள், திரு G.ராமநாதன் இசையில் பாடியது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அருமையான பாடல் வரிகள் நினைவூட்டலுக்கு நன்றி

      நீக்கு