தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 14, 2017

கோமளவள்ளி


ஏண்டி கோமணவள்ளி கடைக்கு போறேன் ஏதும் வாங்கணுமா ?
உங்கள்ட்ட எத்தனை தடவை சொல்றேன் அப்படிக் கூப்பிடாதீங்கனு...

வாய் தவறி வந்துடுச்சு அதுக்கேன் கோவிக்கிறே.... ?
ஒரு தடவை தவறுனாச் சரி எப்பவுமேவா ?

இதெல்லாம் ஒரு பிரச்சனையா. ஒங்க அப்பா நல்லா பேராத்தான் வச்சாயென்ன ?
இப்ப அதான் குறைச்சலாப் போச்சா ?

அப்ப யேண்டி... குரைக்கிறே ?
இஞ்சே பாருங்க இப்படி ரெட்டை அர்த்தத்துலே பேசுனீங்க.... ?  

என்னடி... செய்வே ?
எங்க ஊருக்குப் போயிட்டு வந்துடுவேன்.

யேன்.. ஒங்க ஊருலருந்து மச்சானுக்கு என்ன கொண்டு வரப்போறே.. ?
கொண்டு வரமாட்டேன் அங்கேயே வச்சுட்டு வந்துடுவேன்.

வச்சுட்டு வந்துடுவியா ? மச்சானுக்காக ஊருக்குப் போறவ... அங்கே ஏன்... வச்சுட்டு வர்றே... ?
இதெல்லாம் கொண்டு வரமுடியாது... எங்க ஊரு ஆத்துலதான் வச்சுட்டு வரமுடியும்.

என்னடி ஒண்ணும் புரியலையே.... ஆத்துல என்ன... வைக்கப்போறே... ?
செய்வினைதான்.

? ? ?
என்ன... பேச்சைக் காணோம். ?

யேண்டி... இதெல்லாம் கொஞ்சமாவது நியாயமாடி ?
உங்களை வாயைக்கட்டி வச்சாத்தான் சரியா வரும் பேசாமல் இருந்தாலும் பரவாயில்லை சாப்பிட மட்டும் வாயைத் திறங்க போதும்.

அடியே இனிமேல் அப்படிக் கூப்பிட மாட்டேன் எனக்கு வாயில அதான் வருது வேற ஏதாவது பேரு நீயே சொல்லேன். ?
ஏன்... வள்ளினு கூப்பிட்டா என்ன ?

சரி அதுக்கும் வள்’’ளுனு விழமாட்டியே ?
சுத்தி வளைச்சு உங்களுக்கு சொந்த ஊர் புத்திதானே வருது.

அடியே.... ராஜபாளையம் தமிழ் நாடு முழுக்க பேமஸு தெரிஞ்சுக்க.
இனிமே இப்படிப் பேசினீங்க... உடனே பஸ் ஏறிடுவேன் ஞாபகம் வச்சுக்கங்க...

ஹும் அன்னைக்கே தரகர்கிட்டே சொன்னேன் எமனேஸ்வரத்துல பொண்ணு வேண்டாம்னு கேட்டாரா.... அந்த ஆளு... எதுக்கெடுத்தாலும் ஊர்ப்புத்தியை காட்டிடுறா.... அந்த தரகர் மட்டும் மாட்டுனான்....

திடீரென வீட்டுக்குள் நுழைந்த ஆறு வயதில் ஆணும், நாலறை  வயதில் பெண்ணுமான இரண்டு வாண்டுகள் வந்து தாத்தா.... அம்மாச்சி... என்று பெரியசாமி ஐயாவையும், கோமளவள்ளி அம்மாளையும் கட்டிப்பிடிக்க... அடடே.... வாங்க வாங்க செல்லங்களா... தங்கம் வாங்க, தங்கம் வாங்க மாப்பிள்ளை, வாம்மா, வாங்க மாப்பிள்ளை... நல்லாயிருக்கியாம்மா..... ஏங்க சேர் எடுத்துப்போடுங்க... வாங்க உட்காருங்க... 
கோமண..... அது... அது... வந்து சீக்கிரம் தூக்குச்சட்டியை எடுத்தா கடைக்குப் போயிட்டு வர்றேன் 
என்ற பெரியசாமி ஐயாவை கோமளவள்ளி அம்மாள் முறைத்து விட்டு தூக்குச்சட்டியை எடுத்துக் கொடுத்ததை மதுரையில் இருந்து வீட்டுக்கு விருந்தாளி வந்த இளைய மகளும், மருமகனும், பேரனும், பேத்தியும் கவனிக்கவில்லை ஐயா தனது T.V.S.50-யை எடுத்துக்கொண்டு பேரன் முகேஷை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு விரைந்தார் கறிக்கடையை நோக்கி... சரி அவங்க சந்தோஷமாக இருக்கட்டும் நீங்க கருத்துரையை போட்டுப் போங்க... நான் ய்யேன் வேலையைப் பார்க்கிறேன் அடுத்த பதிவைப் போடணும்...

சாம்பசிவம்-
நாற்பது வருஷமா கூப்பிட்டு வந்த பேரை மாற்ற முடியுமா ?

Chivas Regal Sivasambo- 
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் தரகரு இன்னும் உசுரோட இருக்காரா ?

சிவாதாமஸ்அலி-
பெருசுக.. இந்த வயசு வரைக்கும் சந்தோஷமாக விளையாடுதுகளே இதெல்லாம் எல்லோருக்கும் கிடைக்குமா ? 


நகைச்சுவை பதிவு எழுத வைத்த நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நன்றி. நான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன் என்னால் பிறர் சிரித்து மகிழட்டும் என் சோகம் என்னோடுதான். 

52 கருத்துகள்:

  1. உள்ளார்ந்த வாத்சல்யம் தெரிகிறது! நல்ல தம்பதிகள்.

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவையாக ஆரம்பித்து பாதியிலேவிட்டு விட்டு போனமாதரி அல்ல இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே விருந்தாளி வந்த பிறகு அந்த இடத்தில் நமக்கு வேலை இல்லையே...

      நீக்கு
  3. சுகமான தாம்பத்தியம். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. மனதை வேறு ஏதேனும் ஒரு புதிய செயலில் மாற்றுங்கள் ஜி... ஆறுதல் கிடைக்கும்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு.

    சோகம் மறக்க இதுவும் ஒரு வழி தான். கவலையை மறக்க முயற்சி செய்யுங்கள் நண்பரே.....

    பதிலளிநீக்கு
  6. உங்களை எழுத வைத்த நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி.
    சிரிப்பிலும் நல்ல விஷயத்தை சொன்னீர்கள், பேரக்குழந்தைகள் தாத்தா, பாட்டியை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பினார்கள்.
    சின்ன செல்ல சண்டைகள் வாழ்வுக்கு தேவைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. தமிழ்மண ஓட்டு அளிக்க முடியவில்லை யாருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. கணவன் மணைவி சண்டை வெகுவாகக் கவர்ந்தது. ரசித்துச் சிரித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே கணவன்-மனைவி சண்டையிடும் பொழுது விலக்கி விடாமல் சிரித்து மகிழலாமா ?

      நீக்கு
  9. கை கலப்பு இல்லாமல் கலகலப்பு!..
    அன்பும் மகிழ்வும் எங்கும் மலரட்டும்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  10. நல்லா இருந்தது. எல்லாப் பெற்றோர்களுக்குமே, மகனைவிட, மகள் குடும்பத்தோடு வருவது இன்னும் மகிழ்ச்சியைத் தரும். நல்லா இதைக் கொண்டுவந்திருக்கீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிகச்சரியான விடயம் சொன்னீர்கள் அக்மார்க் உண்மை

      நீக்கு
  11. இதைத்தான் எதிர்பார்த்தோம், தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  12. பேக் டு ஃபார்ம் கொஞ்சம் கொஞ்சமா இல்லையா ஜி! இப்படியே தொடருங்கள் கொஞ்சம் இளைப்பாரலாம்...

    பேரன் பேத்தி அதுவும் மகள் வயிற்றுப் பேரன் பேத்தி வந்தாலே பெற்றோர் மாறிவிடுகின்றனர்..ஒரு வேளை மா "ப்பிள்ளை"
    பயமோ??!!.குழந்தைகளும் சூழலை மாற்றிவிட்டனர்!

    கீதா: என் பெயரும் கோமளவல்லி ஹிஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக விரிவான கருத்துரை
      உங்கள் பெயரும் முதல்வர் பெயர்தானா ?

      நீக்கு
    2. எந்தமுதல்வர்??!!! மறைந்த முதல்வர்??!!! ஹஹஹ் அப்ப நான் இடைத்தேர்தல்ல நின்னா ஜெயிச்சுருவேனோ??!!!! ஹிஹிஹிஹி

      நீக்கு
    3. ஆமாம் ஆர்.கே தொகுதி காத்தாடுதாமே... புகுந்து பார்க்கலாமே...

      நீக்கு
  13. இத்தனைவருடத்தில் கோமள வல்லிக்கு தான் கோமணவல்லி என்னும் நினைப்பே வந்திருக்க வேண்டுமே வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியாமலா இருக்கும ஐயா இருப்பினும் மச்சானுடன் செல்லக் கோபம்தான்.

      நீக்கு
  14. அறிஞர் நெல்லைத்தமிழன்
    தங்களுக்கு
    தன்னம்பிக்கை ஊட்டி உள்ளார் - முதலில்
    அவருக்குப் பாராட்டுகள் - அடுத்து
    தங்களது உள மாற்றத்திற்கு
    நான் பணிகின்றேன்!
    மேலும்
    சிறந்த பதிவுகளைத் தாருங்கள்
    இவ்வண்ணம்
    தங்கள் வாசகன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  15. நல்ல ஜோடி அய்யா
    தம ஒன்று

    பதிலளிநீக்கு
  16. ரசித்துப்படித்தேன். நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  17. நல்ல குடும்பம் இப்ப எல்லாம் விருந்தாளிக்கு கூட மரியாதை இல்லாமல் போச்சு ஜீ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா.. இது பெரிய கொடுமைதான் நண்பரே.

      நீக்கு
  18. கோமளவல்லி ,அழகான தமிழ் பெயர் !பேரன் பெயர் முகேஷ் !காலம் தமிழைக் கொலை செய்துக் கொண்டிருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  19. நன்றி, மீண்டு..,ம்,,,வருக.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா3/16/2017 12:09 AM

    ரசித்தேன் சகோதரா

    பதிலளிநீக்கு
  21. எப்போதும் போல் நகைச்சுவை அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  22. பதிவை இரசித்தேன்! ‘இன்பம் வரும் துன்பம் வரும் உலகம் ஒன்று தான்’ என்பதை மனதில் கொண்டு இயல்பு நிலைக்கு வருவீர்கள் எனத் தெரியும். அப்படியே வந்தும் விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு