தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 22, 2017

தூக்குல செத்தவனுக்கு, நாக்குல சனி


முன்குறிப்பு - பலவீனமான இதயம் உள்ளவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்

எமனே எருமையே உனக்கு தன்மானம்
உண்டெனில் என் வீட்டுக்கு வராதே

மரணமே உனக்கு சூடு சொரணை
உண்டெனில் என்னை நெருங்காதே

தாம்புக்கயிறே என்னை தூக்கிலிட்டால்
வீம்பு பண்ணாமல் நீயே அறுந்து விடு

என்னை தலையை வெட்டபோனால்
வாளே நீ சட்டென மறைந்து விடு

விஷமே ஒருவேளை உன்னை கொடுத்தால்
உள்ளே போனாலும் பின்புறமாய் ஓடி விடு

தீயே நீ சத்தியத்துக்கு கட்டுப்பட்டது
உண்மையெனில் என்னை தீண்டாதே

மண்ணே நீ தர்மத்திற்கு கட்டுப்பட்டது
உண்மை எனில் என்னை மூடாதே

வெட்டியானே கடமை தவறாத நீ
வெட்டியாக எனக்கு குழி வெட்டாதே


சாம்பசிவம்-
தூக்குல செத்தவனுக்கு நாக்குல சனியாம் என்னத்த சொல்ல ?

CHIVAS REGAL சிவசம்போ-
என்னையா கவிதை இது செத்தவன் கையில வெத்தலை பாக்கு கொடுத்தது மாதிரியிருக்கு

சிவாதாமஸ்அலி-
கெட்டவனுக்கு எட்டுனு சொன்னது போல இருக்கு ஏண்டா பேதியில பெரண்டு போவியலா உங்களைக்கொண்டி குழியில வெக்கே எவனாவது நல்லதா நாலு வார்த்தை சொன்னீயலாடா

பின்குறிப்பு – சும்மாதானே இருக்கோம் கவிதையாவது எழுவோமேனு பேனாவை கழுத்தை பிடித்து திருகினேன் அது சட்டென கத்திபோல துருத்திக் கொண்டு என்னை குத்தி விட்டது கோபங்கொண்டு அந்தக் குருதியை கொண்டுதான் வடித்தேன் இதை அதனால்தான் ரத்தச்சிவப்பு - கில்லர்ஜி

44 கருத்துகள்:

  1. எதிர்மறையாய் சிந்தித்து இருப்பதைப் பார்த்தால் ,இது bநெகடிவ் இரத்தம் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  2. காலனுக்கு என்கௌண்டரா.ஹஹ்ஹஸ்..நீடூழி வாழ வாழ்த்துகள்...!!!!

    பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தது....காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்...எந்தன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எல்லோரையும் கொல்லும் காலனை நான்கு அரசியல்வாதிகள் சேர்ந்தால் தூக்கிடலாம்.

      நீக்கு
  3. ஏன் இந்தக் கொலைவெறிக் கவிதை? காலையிலேவா? த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பொதுவாக எனது பதிவுகள் காலையில்தானே வருகிறது.

      கவிதை பிறர் எழுதாத வகையில் வரவேண்டும் என்பது எனது பேராசை ஹி.. ஹி.. ஹி..

      நீக்கு
    2. பாரதி எழுதிப்புட்டாரே....ஹிஹிஹி

      நீக்கு
    3. போன ஜென்மத்துல நான் எழுதி வச்சதை படிச்சிட்டாரோ ?

      நீக்கு
  4. ஒய் திஸ் கொலவெறி கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலனையும் மிரட்டிப் பார்க்கணும் நண்பரே...

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஆஹா அரிவாள், கோடரியை உபயோகப்படுத்த மறந்து விட்டேனே ஜி

      நீக்கு
  6. சனி பக்வான் பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது.யாருக்கு எல்லாம் சனி பக்வான் கஷ்டம் கொடுத்தார் என்று சொல்லி எனைத் தொடாதே சனீஸ்வரா என்று முடியும்.
    அது போல் நீங்கள் நீதி தேவனுக்கு பாட்டு எழுதி விட்டீர்கள்.

    எமபயம் நீங்க கந்தர் அநுபூதி பாடல்:-

    சாகாது, எனயே சரண்ங் களிலே
    கா கா, நம்னார், கலகம் செயும் நாள்
    வாகா! முருகா! மயில் வாகனனே!
    யோகா ! சிவஞான உபதேசிகனே!

    இதை பாட சொல்வார்கள் எங்கள் வீடுகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      அடடே எனது இந்தக் கவிதையில்கூட இப்படியெல்லாம் பொருள் இருக்கின்றதா ?

      நான் சித்தன் போக்கு 7 O'clock என்று எழுதிப்போறவன் நன்றி சகோ

      நீக்கு
  7. இத்தனை மனோதைரியம் இருந்தால் காலன் தாமதமாகத்தான் நெருங்குவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் தைரியமிருந்தால் ங்கொய்யாலே வரட்டும் பார்ப்போம்.

      நீக்கு
  8. நன்றி நண்பரே
    பலோவர் இணைத்துவிட்டேன்
    தயவு செய்து எனது தலத்தை பர்கவும்
    தமிழில் கணணி தகவல்

    பதிலளிநீக்கு
  9. என்னது தூக்குல தொங்கினவனுக்னு நாக்குல சனியா..... அப்ப கழுத்துல இருப்பதுக்கு பேரு என்னாது......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழுத்துல இருப்பது கயிறுதான் நண்பரே

      நீக்கு
  10. ரசிக்க முடியலை! மன்னிக்கவும்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி
      மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்வதே உண்மையான விமர்சனம்
      எனது கருத்துகள் அனைத்தையும் மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்பது நியாயமான கருத்து கிடையாதுதான்.

      இப்படி அபச குணமாக எழுதினால் யாருக்குத்தான் பிடிக்கும்
      எல்லாம் சரி இதுபோல ஒரு பதிவு இருக்கே அதை என்ன செய்யிறது ?

      நீக்கு
  11. என்னதான் நாக்குல சனி இருந்தாலும் போகவேண்டிய நாளிலே போய்த்தானே ஆகவேண்டும்!
    அது சரி. இதய பலவீனமா அல்லது பலவீன இதயமா? விளங்கவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சொல்வார்களே நண்பரே இருப்பினும் தங்களது கருத்துப்படி மாற்றி விட்டேன் நன்றி

      நீக்கு
  12. காலா... உன்னைக் காலால் எட்டி நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  13. பேதியில் கேட்டவனுக்கு எட்டு - இதன் பொருள் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ''கெட்டவனுக்கு எட்டு'' என்ற பழஞ்சொல் உண்டு நீங்கள் சொன்ன பிறகு செல்லில் பார்த்தேன் வார்த்தை மாறி வந்து இருக்கின்றது இப்பொழுது சரியாகி விட்டது என்று நினைக்கிறேன்.

      கேள்விக்குறி, முற்றுப்புள்ளி, கமா இவைகள் தற்பொழுது எனக்கு பிரச்சனையை கொடுக்கின்றது தகவல் சொன்னமைக்கு நன்றி

      நீக்கு
  14. பதிவு எழுதும் முதல் நாள் சரியான தூக்கமில்லையோ? மாறுபட்டு வந்ததுபோலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நான் உறக்கத்தை இழந்து ஆண்டுகள் மாமாங்கம் கடந்து விட்டது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. பெரிய அக்கப்போரா இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.... ஹா... ரசித்து சிரித்தேன் தங்களது கருத்துரையை....

      நீக்கு
  16. பதில்கள்
    1. நன்று தங்களது முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் ஐயா.

      நீக்கு
  17. இது கவிதையா ஜி!

    கம்பியூட்டர் படுத்தலால் தாமதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜிஇது கவிதையா ?
      அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்.

      நீக்கு
  18. அருமையான் சொல்க்கட்டு/

    பதிலளிநீக்கு