தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 27, 2018

சிவகாசி Chivas Regal சிவசம்போ


இப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

வணக்கம் நான்தான் சிவகாசி சிவாஸ் ரீகல் சிவசம்போ எழுதுறேன் இந்த மாதம் ஏதோ மந்திர மாதம் போல மஞ்சத்து மந்திரம் தொடங்கி தலையணை மந்திரமாகி பின்னே தலையில அடிச்ச மந்திரமாகி, கடைசியில தரையில அடிச்ச மந்திரம் வரை நானும் பலிச்சேன்.. கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனது போல நம்ம கில்லர்ஜியோட மஞ்சத்துல தொடங்கிய தலைப்பும் படிப்படியா குறைஞ்சு யெஞ் சகலை மன்னாருவை தரையில அடிச்சுட்டாரு... யேன் போதைக்கு சீ..சீ.. யேன் அறிழிவுக்கு எட்டுனது வரை நான் தெளிஞ்சுக்கிட்டது மேழ் மக்கழிளிருந்து... கீல் மக்கழ்வரை எல்லா குடும்பங்கள்லயும் பிரச்சனை வர்றது இந்த பொம்பளைங்களாலதான் அம்பானி வீட்ல மில்லியன் கணக்குல பணமிருந்தும் அவங்க அண்ணன்-தம்பிங்க பிரிஞ்சு போயிட்டாங்க இருபத்துஏழு மாடியில வீடு கட்டி மேலே ஹெலிகாப்டர் வந்து இறங்கும் வசதியிருந்தும் கூடி வாழ்த் தெரியாமல் பிரிஞ்சு போயிட்டாங்க காரணம் என்ன ? இன்றைக்கு அத்தனை மாடியிலும் சுமார் எழுநூறு வேலைக்காரர்கள் வந்து, போயி, தங்கி அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இது இத்தனை பணமிருந்தும் புரியவில்லையே... விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை. சுமார் இரண்டரை லட்சம் கோடிகள் மக்கள் பணத்தை சுருட்டி வாழ நினைச்சாங்க இன்று இருப்பது எங்கே ? கப்பன் பார்க் பக்கத்திலே.... இது தேவையா ? இவ்வளவும் சுருட்ட விட்ட பாவத்துக்கு காலை இழந்து அடி வாங்கி செத்து கப்பன் பார்க்கில் பிறந்துட்டு சென்னை மணல்தான் கிடைச்சுருக்கு அதுலயும் குலவழக்கு சடங்குகள் கிடைக்கலையாம். ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடலை பார்த்தீர்களா ? போகும்போது என்ன வரும் ? கூடவே வளர்த்த மீசைதான் வரும் வேறென்ன ? உலகத்திலேயே பணக்காரன் யார் தெரியுமா ? கடைசிவரை தாய்-தந்தையரோடு வாழ்ந்தவன்தானாம். அதைவிட கோடீஸ்வரன் யார் தெரியுமா ? கடைசிவரை தாத்தா-பாட்டிகளை வைத்து அவர்களோடு இணைந்து வாழ்ந்தவன்தானாம் ஹூம் என்னத்தை சொல்லி ஏடுரைச்சாலும் கந்தன் புத்தி கருவாட்டு நாத்தம்தான்னு நம்ம ஜிங்கா மங்கா ஸ்வாமிகள் சரியாத்தான் சொல்லி வச்சு இருக்காரு அது மட்டுமா ? தனிக்குடித்தனம் சனிப்பிடித்தனம்னு சொல்லி இருக்காரே...

நான்யேன் குடிகாரனானேன் சிவனேன்னு திரிஞ்ச என்னை கண்ணாலம்னு ஒரு எலவைக் கூட்டினாங்கே மந்திரத்தோட எபெக்ட் நெப்போலியனையே தூக்கி விட்ருச்சு மறுநாள்லருந்து இப்படித் திரியிறேன். எல்லோரும் என்னை சிவாஸ் ரீகல் சிவசம்போ ன்னு சொல்றாங்கே.... என்ன செய்ய... ? இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான் தெளிஞ்சுக்கங்க.. மக்கழே தெலிஞ்சுகங்க.. இருந்தாலும் அதிராம்பட்டணம் அதிரடி அதிரா என்னையும் மதிச்சு அங்கிள்னு ஜொள்ளுறது மனசுக்கு ஜந்தோஷமா இருக்கு.... இருந்தாலும் அதுலயும் டவுட்டு.... அதிரா மோடிஜியிலருந்து.... ட்றம்ப், கமல்ஹாசன், ஏஞ்சலின் சித்தப்பா, செத்து ஆவியாப் போன கண்ணதாசன், வாலி, விஸ்வாமித்திரர் வரை அங்கிள்னு ஜொள்றபோது நம்மளை லந்து பண்ணுறாங்களோனு.... ஜந்தேகமும் இருக்கூ.... இதுக்குமேலே எமுதுனா... சீ... சீ... எழுதுனா குடிகாரப்பய ஒழர்ர்ர்ர்ர்ரான்னு சொல்லுவாங்க... நமக்கு எதுக்கு ஊர் வம்ஸ்.

சாம்பசிவம்-
அடடே... பரவாயில்லையே... நீ கூட வெப்ஸைட் படிக்கிறியே ?

காணொளி
Whose uncle is he ?

நட்பூக்களே இந்த மந்திரப் பதிவுகள் நான் அபுதாபியில் இருக்கும் பொழுது எழுதியது தேதி 30.07.2013  பதிவுலகில் பிரபலம் ஆனபிறகு வெளியிடுவோம் என்று காத்து காத்து விழிகள் பூத்ததே மிச்சம் வலையுலகில் பிரபலம் ஆவது எமக்கு பிராபலம் போல ஆகவே இதை இப்பொழுதாவது வெளியிடுவோம் என்று தங்களது பார்வைக்கு வெளியிட்டேன் கில்லர்ஜி

55 கருத்துகள்:

 1. ஆவ்வ்வ்வ்வ் இன்று மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ பூஸோ கொக்கோ?:).. இருங்கோ அங்கிள் என்ன ஜொள்றார் எனப் படிச்சிட்டு வாறேன்.. நான் சொன்னது சிறீ சிவசம்போ அங்கிளை:))

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சந்தடி சாக்கில கூட்டுக் குடும்பத்தை உள்ளே நுழைச்சிட்டீங்க. உங்களுக்கென்ன.. வேர்க் போய் வருவீங்க, வீட்டில குட்டுக் குடும்பத்தில இருந்து படும் துன்பம் பெண்களுக்குத்தானே தெரியும்:) அதனாலதான் அது வேண்டாம் என்கிறார்கள்:).. இது பற்றி ஒரு பட்டிமன்றம் வச்சு வாதாடலாமே:))..

  நான் எத்தனையோ கூட்டுக் குடும்பத்தில் இருந்த பெண்களின் சோகக் கதை கேட்டிருக்கிறேன்.. அது கொடுமையிலும் கொடுமை. நான் கூட்டுக் குடும்பம் எனச் சொல்ல வருவது பெற்றோரோடு இருப்பது அல்ல...

  பெற்றோரோடிருப்பது ஓகே, அதையும் தாண்டி.. மைத்துனி மைத்துனன்,, இப்படி சேர்ந்திருப்பது சரிப்பட்டு வராது.. அது எங்காவது சில இடங்களில் சந்தோசமாக இருக்கிறார்கள் என்பதை வச்சு கூட்டுக்குடும்பமே சிறந்தது என வாதாடக்கூடாது:))..

  வெளிநாட்டில் பணக்காரர்களாக இருக்கும் வெள்ளைகள் ஆரும் கூட்டுக் குடும்பத்தில் இல்லை என்பதனை ஜொள்ளிக்கொள்கிறேன்:)..

  இது திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈஈ:).. சிறீ சிவசம்போ அங்கிளைக் குடிக்கப் பண்ணிட்டி, இப்பூடிப் பேசச்சொல்லிக்கொடுத்தே பேச வச்சிருக்கிறார் கில்லர்ஜி:))கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  அவர் சுய நினைவில் இருக்கும்போது கேய்ட்டுப் பாருங்கோ திரும்ப:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண்டாண்டு காலமாக கூட்டுக்குடும்பமே அழகிய இந்திய கலாச்சாரத்தை பறைசாட்டிக் கொண்டு இருந்தது.

   வெளிநாட்டு வணிகர்களின் வியாபாரத் திட்டமிடல் இதை சீர்குலைத்து சீரழித்து விட்டது

   இதற்கு காரணமாவர்கள் ஆட்சியாளர்களே... இந்த திருடர்களை மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்தது அறியாமை மக்களேயன்றி வேறு யார் ?

   நீக்கு
 3. ///இருந்தாலும் அதிராம்பட்டணம் அதிரடி அதிரா என்னையும் மதிச்சு அங்கிள்னு ஜொள்ளுறது மனசுக்கு ஜந்தோஷமா இருக்கு.... இருந்தாலும் அதுலயும் டவுட்டு.... ///
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) போதை வந்திட்டால் புத்திபோய் டவுட்டு வந்திடுமாமே:)... அதுதான் வந்திருக்கு இங்கயும்:)... இதில டவுட்டே இல்ல:)... முதல் படத்தில என்னா ஸ்டைலா குடிக்கிறார் பாருங்கோ:)...

  ஆனா வீடியோ அது திட்டமிடப்பட்ட சதீஈஈ:) வீடியோவில் இருப்பது சிறீ சிவசம்போ அங்கிள் இல்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா நல்லா கேளுங்க....ஒரு நல்ல புள்ளைய போய் டவுட் பண்ணலாமா? இந்த நல்ல புள்ளை எல்லாரையும் ஒரே போல பாவிச்சு அங்கிள்னு சொல்லுறது எவ்வளவு பெரிய மனம் வேணும்? இல்லையா அப்படிப்பட்ட ஒரு நல்ல புள்ளைய இப்படி டவுட் பண்ணலாமோ சிவாஸ்!!! நு கேளூங்கோ.நான் வாரேன் உங்கட கட்சிக்கு....ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. மேலே புகைப்படத்தில் இருப்பது குடிக்க தொடங்கிய காலத்தில் எடுத்தது. காணொளி குடிச்சு நாசமாகிப்போயி சாலையில் தள்ளாடும்போது எடுத்தது அதாவது சமீபத்து நிலைப்பாடு.

   நீக்கு
  3. அது கீதா , கில்லர்ஜிக்குப் பொறாமை:)... அதனாலதான் இம்முறை நமக்கு எதிராளியாக்கியிருக்கிறார் சிறீ சிவசம்போ அங்கிளை:)...

   இவர் சுசுக்கி மாருதியில , ரெண்டு கையையும் விட்டிட்டு ஓடிப்போய் சடின் பிரேக் அடிச்சு நிப்பாட்டி..... ஐ ஆம் கில்லர் - ஜி புரொம் நியூயோர்க் ரமில்நாடு :) என்றிருப்பார்:)...

   அந்தாள் ஏற்கனவே நிற்கமுடியாமல் நின்ற மனிசன் பாவம் நியூயோர்க்கில் இருந்து ஆரோ தன்னைக் கொல்ல வந்திருக்கினம் என நினைச்சு(ஏனெண்டால் பாருங்கோ சிறீ அங்கிளுக்கு இங்கிலீசுதான் புரியும் ) இவர் சொல்லச் சொல்ல அப்படியே வாக்குமூலம் குடுத்திருப்பார் பயத்தில:)...

   ஏனெனில் ஸ்ரீ சிவசம்போ அங்கிள் எப்பவுமே நீதியாத்தான் பேசி வந்திருக்கிறார் என்பதனை இந்த சுப்பையா அங்கிள் கோட் ஜஜ் க்குக் கூறி அமர்கிறேன்:)...

   நீக்கு
  4. உங்க அங்கிளைப்பற்றி உங்களுக்குத்தான் தெரியும்.

   நீக்கு
 4. ஆஹா இப்போ கில்லர்ஜியும், மோடி அங்கிளைப்போல பிற-பலம்:) சே சே பிறப்பலம்:)) சே..சே. என்ன இது டங்கு கண்டபடி ஸ்லிப்பாகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பிரபலம் ஆகிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க பின்னூட்டமே பிராபலமாக இருக்கிறதே...

   நீக்கு
 5. பதிவை படித்தால் கண்ணைக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்குகாரணம் முந்தையை தொடர்களை படிக்காததால் அதனால நான் அப்பாலக்க வாரேன் சுவாமியோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ட்றுத் ... முந்தையதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை:) நீங்க எஸ்கேப் ஆகாமல் இதுக்குப் பதில் போடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
  2. தமிழரே படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.

   நீக்கு
  3. சரி சரி ஒரு பெக் போட்டுட்டு வந்து மீண்டும் படிக்கிறேன் கருத்து சொல்லுறேன் ஆனால் கருத்து சொன்னால் எனக்கு வைர நெக்லஸ் கிடைக்குமா?

   நீக்கு
  4. நெக்லஸ் உங்களுக்கு எதற்கு ?

   நீக்கு
 6. கில்லர்ஜி சிவாஸின் ஜட்ஜ்மென்டை நான் முதல் பதிவிலியே லைட்டா சொன்னேன்னு நினைக்கிறேன்...பெண்கள் நு சொன்னீங்கனா நான் எதிர்க்கட்சிக்குப் போக வேண்டிவரும்னு....

  யெஸ் கில்லர்ஜி...சிவாஸின் ஜட்ஜ்மென்டை என்னால் முழுவதும் ஏற்றுக் கொள்ள இயலாது..குடியில் தத்துவம்னு எல்லாம் சொல்லிடப் புடாது..ஹா ஹா ஹா ஹா ஹா...இது விவாதிற்குரிய ஒரு சப்ஜெக்ட்....

  இப்ப இதை ஆதியிலிருந்து நான் தொடங்கினால் பெரீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீயீசா போகும்...எனவே மீ ஓடிங்க்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடிகாரமட்டை உளறினாலும் சொன்ன சில விடயங்களில் சரித்திர நிகழ்வுகள் இருப்பது உண்மைதானே...?

   நீக்கு
 7. படித்தேன். சிவசம்போ போதையில் பேசுவதால்தான் பெண்களுக்கு எதிராகப் பேசி இருக்கிறார் என்றும், எனவே பெண் உரிமைச் சங்கங்கள் சண்டைக்கு வரவேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்(ல்)கிறேன்! குடும்பத்தைத் தாங்கும் அவர்களால்தான் குடும்பங்கள் பிரிகின்றன என்கிற கருத்தில் உரிமையாளர் திரு கில்லர்ஜிக்கே உடன்பாடு இருக்காது என்றும் நம்புகிறேன். பெண்களின் கஷ்டம் தெரியாமல் சிவசம்போ ஆணாதிக்க மனப்பான்மையில் (போதையில் இருக்கும்போது மட்டும்!) இருக்கிறார் என்கிற சந்தேகத்தையும் ஒதுக்கிவிட முடியாது என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்!

  :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி அவர்களின் நடுநிலையான விளக்கவுரை ஸூப்பர் நன்றி ஜி

   நீக்கு
  2. ஸ்ரீராம் தெளிவான:) மனநிலையோடு இருந்தமையாலதான் தெலி:)வா:) எழுதியிருக்கிறார் என்பது தெளிவாப் புரியுது:)..

   நீக்கு
 8. ஆகா
  கூட்டுக் குடும்பச் சிதையை அம்பானினை வைத்தே அருமையாய் சொல்லிவிட்டீர்கள் நண்பரே
  தாங்கள் என்றோ பிரபலம் ஆகிவிட்டீர்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அம்பானி குடும்பம் பிரிந்து வாழ்வது அறியாமையால்தானே...

   சோற்றுக்கு வழியில்லாத குடும்பங்கள் பிரிந்தால் சமூகத்தால் ஆபத்து இல்லை.

   ஆனால் இவர்களுக்கு ?

   நீக்கு
 9. குடிப்பவர்களுக்கு ஏதாவது காரணம் வேண்டுமே!

  கூட்டுகுடும்பம் இந்த காலக்கட்டத்தில் முடியாது.
  வேலை நிமித்தம் வெளியூர்களில் வேலைப் பார்க்க வேண்டி உள்ளவர்கள் எப்படி சேர்ந்து இருக்க முடியும்.

  உள்ளூரில் அப்பா, மகன் ஒரே வியாபாரம் செய்தால் இருக்கலாம்.
  அதுவும் கூட வரவு ,செலவு தனி தனியாக இருப்பது நல்லது வெறுப்பு வராது.

  அதிரா சொல்வது போல் அண்ணன், தம்பி அப்பா, எல்லோரும் சேர்ந்து இருக்கும் போது சில பிரச்சனைகள் வரலாம்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விரிவான கருத்துரை.

   காலத்தை மாற்றி விட்டு, காலம் மாறிவிட்டது என்று நாம் தப்பிக்க பார்க்கிறோம் இதுதான் உண்மை.

   இது வெளிநாட்டு சதி இதை தீட்டி பல மாமாங்கம் கடந்து விட்டது.

   இதனைக்குறித்து விரிவாக பதிவு தருகிறேன் நன்றி சகோ.

   நீக்கு
  2. ////
   அதிரா சொல்வது போல் அண்ணன், தம்பி அப்பா, எல்லோரும் சேர்ந்து இருக்கும் போது சில பிரச்சனைகள் வரலாம்///
   அதேதான் கோமதி அக்கா.... வெளியிடத்திலிருந்து கூட்டுக் குடும்பத்துக்குள் நுழையும் பெண்ணுக்கு அங்கு எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது...

   சரி சரி கில்லர்ஜி யின் போஸ்ட் வரட்டும் எதுக்கும்:)

   நீக்கு
  3. வரும் பதிவு நம்மை ஏமாற்றிய வெளிநாட்டு கும்பலுக்கு உடந்தையாக இருந்த நமது அரசியல்வாதிகளின் செயலைப்பற்றியது.

   நீக்கு
 10. அப்பாடா...! அன்றைய பதிவு இன்று நிறைவேறி விட்டது...!

  பதிலளிநீக்கு
 11. இன்றைய நிலையில் கூட்டுக்குடும்பம் என்பதை இக்கால இளைய தலைமுறை விரும்புவதில்லை என்பது ஊரறிந்த உண்மை. எனவே மகிழ்வோடு பிள்ளைகளுக்கு தனிக்குடித்தனம் வைத்துக்கொடுத்து, அவ்வப்போது சந்தித்து மகிழ்வதே சாலச் சிறந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இதுதான் உண்மைநிலை நாளை நானும் இதையே அதுவும் மறுநாளே செய்வேன்.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  நல்ல நியாயமான விளக்கவுரை. ஆனாலும் இப்போதைய சூழலில் கூட்டுக் குடும்பம் ஒத்து வராததை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கிறது. அதை நனவாக்கி வாழ்நாளுக்குள் நிறைவேற்றி பார்த்து விடவேண்டுமென்ற ஆசையும் நிறையவே இருக்கிறது.அதறகு கூட்டு குடும்பங்கள் ஒத்து வராத பட்சத்தில் தனியாக செல்வதைதான் அனைவர் மனமும் ஏற்கிறது. அனைவராலும் விட்டுக் கொடுத்து வாழ்வதென்பது இயலாததாக போய் விட்டது. நம்மால் காலம் மாறி விட்டதா, இல்லை காலம் தன்னைத் தானே மாற்றிக் கொண்டதாவென்றும் தெரியவில்லை. மொத்தத்தில் நாம் காலத்தால் தள்ளப்பட்டு போய்க் கொண்டிருக்கிறோம்..அவ்வளவுதான்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மை நிலையை அழகாக விவரித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 13. குடிக்கும் போது உண்மையே பேசுவார்களாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அப்படீனாக்கா... சிவசம்போ சொல்வதெல்லாம் உண்மை.

   நீக்கு
 14. ஷிவாஸ்ரீகல் குடிப்பவர் போல் தெரிய வில்லையே காணொளியில் இருப்பவரைப் பார்த்தால் சரியான பட்டச் சாராயக் கேஸ்பொல் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. இது மொடாக்குடியன்தான் ஐயா.

   நீக்கு
 15. கூட்டுக் குடும்பம் நல்லது தான். ஆனால் அதில் சில, பல ஏற்றத்தாழ்வுகள், அவமானங்கள், மருமகள்களிடம் பாசம் காட்டுவதில் வேறுபாடுகள், ஒருவரே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி இருப்பது எனப் பல அனுபவங்கள் இருக்கு. அனுபவச்சிருக்கேன். மாமனார், மாமியாரை வைச்சுக்கறதில் பிரச்னை இல்லை என்றாலும் அவர்கள் ஒரு பிள்ளையிடம் ஒரு மாதிரி, இன்னொரு பிள்ளையிடம் ஒரு மாதிரி என நடந்து கொள்வதும், இங்கே உள்ள நிலைமையை அங்கேயும் அங்கே உள்ளதை இங்கேயும் சொல்லிக் கொண்டு காலம் கடத்துவதும் பிரச்னைகளைப் பெரிது பண்ணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இன்றைய பெண்களுக்கு குழந்தையை குளிப்பாட்ட தெரியவில்லை

   குளிப்பாட்டுவது அதுவொரு கலை சில நேரங்களில் தலைக்கு ஊற்றத் தெரியாமல் தண்ணீரில் குழந்தை படும்பாடு இருக்கிறதே செத்து, செத்து பிழைக்கும் இதெல்லாம் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தையை பக்குவமாக செய்வார்கள்.

   கூட்டுக்குடும்பம் எல்லா வகையிலும் பலன்தான் சொல்லப்போனால் திருடர்களிடமிருந்துகூட...

   நீக்கு
 16. ஆனாலும் விட்டுக் கொடுத்தல், பகிர்ந்து உண்ணுதல், பெரியோருக்குக் கீழ்ப்படிதல், என்ன பிரச்னை வந்தாலும் கலங்காமல் எதிர்கொள்வது போன்ற பல நேர்முறையான விஷயங்களும் இருக்கின்றன. என்னோட ஓட்டும் இப்போதும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு என்றாலும் கொஞ்சம் மனஸ்தாபம் வந்தாலும் விலகி வாழ்வது நல்லது. அதோடு மனஸ்தாபத்திற்கான காரணத்தை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பொழுது உள்ள பெண் பிள்ளைகள் பெரும்பாலும் தான் படித்து விட்டோம் என்ற கர்வம் உள்ளது. உறுதியாக சொல்லமுடியும்.

   நீக்கு
 17. என்னத்தை சொல்றது?...
  எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை..

  எது நியாயம் ந்னு புரியலை...

  வாலறுந்த நரி மாதிரி
  எதைப் பார்த்தாலும் திகிலா இருக்கு!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நலமுடன் தஞ்சை வந்து விட்டீர்களா ?

   இனி கூட்டுக்குடும்பம் காணவே முடியாது ஜி

   நீக்கு
 18. அபுதாபியில் இருக்கும்போதே எழுதினதா? அதான்... ஏன் இப்படி இந்தச் சமயத்தில் இதனை எழுதுகிறார் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே எழுதியே ஐந்து வருடமாகி விட்டது.

   நீக்கு
 19. கூட்டுக் குடும்பம் - அதில் இருக்கும் நன்மை யாருக்கும் புரிவதில்லை! என்ன செய்ய.

  காணொளி - கலக்கல்!

  பதிலளிநீக்கு
 20. இனிதானா நீங்கள் பிரபலம்? எப்போதோ ஆகிவிட்டீர்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் கருத்து உண்மையானால் மகிழ்ச்சி.

   நீக்கு
 21. கூட்டுக் குடும்பமே பலம் வாய்ந்தது. அம்பானி குடும்பம் இந்த உண்மையை மதிக்காமல் போனதால் பல விரும்பத்தகாத விளைவுகள். நல்ல விமரிசனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இந்த பிரிவு தொடங்கியது அந்த வீட்டு பெண்மணிகளால்தான்...

   நீக்கு
 22. ஷிவாஸ் ரீகலை உள்ளதள்ளிட்டு, கூட்டுக்குடும்பம், பொரியல் குடும்பனா, ஒலகம் எப்பிடிக் காதுகொடுத்துக் கேக்கும்? உள்ளபோனதப்பத்திதானே அது வெளில பேசிட்டுத் திரியும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே ஆஹா... நான் இந்த ரூட்டை மறந்துட்டேனே..

   நீக்கு
 23. கூட்டுக்குடும்பத்தில் பல நன்மைகள் இருக்கின்றன. என்னோட ப்ரெண்ட் ஒருத்தர் இன்னும் காரைக்குடியில் கூட்டுக்குடும்பமாக இருக்கின்றா. பார்க்க சந்தோஷமாக இருக்கும். தந்தை வழிபாட்டி,தாத்தா கூட இருக்கிறாங்க.
  இப்போ குறைந்து வருகின்றன. இனியும் இருக்குமா என்பது கேள்விக்குறியே.

  இப்பதிவுகள் போட்டதால் (இன்னும் )பிரபலமாகிவிட்டீங்க. ஹா..ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக காரைக்குடியா ? தேவ To காரை 18 KM மகிழ்ச்சி.

   நானும் பிரபலம் ஆகிட்டேனா ?

   நீக்கு