தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 16, 2018

மஞ்சத்து மந்திரம்


மஹேந்திரபுரி மன்னன் மதுசூதனின் அரண்மனை பள்ளியறை மஞ்சத்தில் இளவரசி நளாயினியின் மடியில்... இளவரசர் இளமாறன்.

இளவரசே தாங்கள் போரிட்டு கைப்பற்றிய மங்கள தேசத்தை தங்கள் தமக்கையின் மணாளனுக்கு முடி சூட்டப் போவதாக மன்னர் அறிவித்திருப்பதாக அந்தப்புரத்தில் நான் கேட்ட செய்தி உண்மையா ?
ஆம் நளாயினி உண்மைதான் இது சந்தோசமான செய்திதானே ?
எப்படி சந்தோசமாகும் ? தாங்கள் அல்லவா போரிட்டீர்கள் தர்மப்படி தாங்கள் முடிசூடுவதுதானே முறையாகும் ?
அதனால் என்ன... முடிசூடிக்கொள்வது உனது சகோதரர்தானே ?
இப்படிப் பார்த்தால் இந்த அரண்மனையில் மட்டும், எனக்கு எட்டு சகோதரர்கள் ஆயிற்றே அப்படியானால் என் வயிற்றில் வளரும் தங்களின் மைந்தனுக்கு நாளை எதை முடி சூட்டுவீர்கள் ?
ஆஹா என் மணாளினிக்கு இப்பொழுதே என் மைந்தனைப்பற்றி கவலை வந்து விட்டதே பரவாயில்லையே !
சமாளிக்க வேண்டாம் எனது வினாவுக்கு விடை சொல்லுங்கள் ?
நம் மைந்தன் எதிர்காலத்தில் நம் குலதெய்வம் தொட்டிச்சியம்மன் அருளால் ஏழு உலகையும் சிறை பிடித்து இளவரசன் ஆவது நிச்சயம்.
ஹும் நான் தாங்கள் மன்னர் ஆவதைப்பற்றி பேசுகின்றேன், தாங்கள் நம் மைந்தனையும் இளவரசன் ஆக்குவதைப்பற்றி பேசுகின்றீர்களே !
இளவரசி இன்று என்ன ஆயிற்று உனக்கு... மகாராணியாரோடு ஏதும் பிணக்கா ?
மகாராணியோடு பிணக்கா அது எப்படி முடியும்... நான் வாழ வந்தவள்தானே... நான் யார் மகாராணியா ?
இன்று உனது பேச்சில் ஏதோ சூட்சுமம் தெரிகிறதே ?
ஆம் நான் நேராக விசயத்திற்கு வருகிறேன் மங்களதேசத்திற்கு தாங்கள் மன்னராகவும், நான் மகாராணியாகவும் முடியுமா ? முடியாதா ?
இளவரசி சற்றுப் பொறு நான் நாளையே மன்னரிடம் கலந்து ஆலோசிக்கிறேன்.
வேண்டாம் மன்னரிடம் ஆலோசித்தால் என்ன ஆகும் என்பது தாங்களுக்கு தெரியாததா ? தங்களின் வீரத்தால் மங்கள தேசத்தை கைப்பற்றிய தாங்கள் நேரடியாக மன்னராக முடியாதா ?
மன்னர் எனது தந்தையார் அல்லவா... அப்படி செய்ய இயலாது.
ஏன் இயலாது ? லிபியாவில் கடாபி ஆட்சி அமைக்க வில்லையா ? பாலஸ்தீனில் யாஸர் அராபாத் ஆட்சி அமைக்க வில்லையா ? பாக்கிஸ்தானில் கூட முஷாரப் ஆட்சி அமைக்க வில்லையா ? அவர்களால் கூட முடியும்போது மாவீரராகிய தாங்களால் ஏன் இயலாது ?
இன்று அவர்களின் நிலையை பார்த்தாயா ? இளவரசி இது நடக்காத காரியம் மட்டுமல்ல நடக்க கூடாத காரியமும்கூட.
அப்படியானால் நான் நாளையே கொங்குநாடு செல்கிறேன்.
இளவரசி இது தவறு உனது வளைகாப்பு வைபவம் நடக்கப் போவதால் நாடே கோலாகலப்படப் போகும் இந்த தருணத்தில் நீ உனது தாய் வீடு செல்வது சரியல்ல !
வேண்டாம் எனது வளைகாப்பு வைபவம் கொங்கு நாடே சிறக்க எனது தந்தையார் மன்னர் மலையரசர் நடத்துவார் தாங்கள் மட்டும் விருந்தினராக வந்து கலந்து கொண்டால் போதும்.
இளவரசி வேண்டாம் இது தவறு.

இளவரசன் இளமாறன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சட்டென எழுந்து மற்றொரு அறையில் நுழைந்து தாழிட்டுக் கொண்டாள் இளவரசி நளாயினி

அடுத்து இதை வேறு வகையில் பார்ப்போம் – கில்லர்ஜி

69 கருத்துகள்:

 1. ஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்ட்டூஊஊஊஊஊ:).. இருங்கோ மது-நளா அது என்ன மட்டர் எனப் படிச்சிட்டு வாறேன்:).

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா எப்பூடி எல்லாம் சண்டையை ஆரம்பிக்கிறார்கள்.. ஆனா இது கதைபோல இல்லாமல் ஏதோ உள்குத்துப் பதிவுபோல எல்லோ இருக்கு:) விடியட்டும் பார்ப்போம்:)....

  ஊசிக்குறிப்பு:
  நளாயினியை குழந்தை பெற.. அதிராவின் கிளினிக் க்கு வர ஜொள்ளுங்கோ:)).. காசு வாங்காமல் இலவசமா வைத்தியம் செய்து அனுப்பி வைக்கிறேன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மன்னர் மலையரசரும், அரண்மணை வைத்தியர் வைத்திய நாதனும்தான்.

   அடிக்குறிப்பு-
   மேலும் நான் என்றுமே கொலைக்குற்ற பாவத்துக்கு உடன்படும் பழக்கமில்லை.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கில்லர்ஜிக்குப் பொறாமை:) அரசிக்கு வைத்தியம் செய்தால் அதிராவின் புகழ் உலகெல்லாம் பரவிடும் என:))..

   அதுஜரி:) மதுசூதனனின் செல்லப்பெயரோ மலை அரசர்?:)

   நீக்கு
  3. ஹலோ மகேந்திரபுரின் மன்னர் மதுசூதனன் நளாயினியின் மாமனார், கொங்கு நாட்டின் மன்னர் மலையரசர் நளாயினியின் நாத்தனாரின் சகோதரன் இளமாறனின் கொளுந்தியாளின் தந்தையார்.

   விளக்கம் போதுமா ? இல்லை இன்னும் விளக்கவா ?

   ஏஞ்சல் வந்து உங்களுக்கு டோஸ் விட்டால்தான் சரியாகும்.

   கொஞ்ச நேரத்துல என்னை கொச'ப்பிட்டீங்களே...

   நீக்கு
  4. ////கொங்கு நாட்டின் மன்னர் மலையரசர் நளாயினியின் நாத்தனாரின் சகோதரன் இளமாறனின் கொளுந்தியாளின் தந்தையார்.////

   ஹையோ மீ பெயிண்ட்டாகிறேன்ன்ன்ன் எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்பி விடுங்கோ:).. ஒரு டவுட் கேய்ட்டது டப்பாஆஆ:)..

   நீக்கு
  5. ///கொஞ்ச நேரத்துல என்னை கொச'ப்பிட்டீங்களே...
   //
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர் பிச்சை வாணாம்ம்ம் ...... ..... :)....

   https://www.google.co.uk/search?q=running+cat&ie=UTF-8&oe=UTF-8&hl=en-gb&client=safari#imgrc=JQu2C97Ldoc6TM:

   நீக்கு
  6. தண்ணீர் எடுக்க ஜேம்ஸ் ஊரணிக்குத்தான் போகணும்.

   நீக்கு
  7. //ஹையோ மீ பெயிண்டாகிறேன்//

   அடடே... அப்படியே எடுத்து சுவரில் அடிச்சுடலாம்! என்ன கலர்? :P

   நீக்கு
  8. எல்லா குழப்பத்துக்கு காரணம் இந்த திடீர் டாக்டர்ர்ர்ர்ர் தான் :) நான் ரெடியாகிட்டேன் மருத்துவரம்மாவை தேம்ஸில் தள்ள யார்ரயாரெல்லாம் வரீங்க லிஸ்ட் எடுக்கறேன் பேர் குடுங்க

   நீக்கு
  9. அச்சச்சோ கொல:) வெறியோடதான் கிளம்பியிருக்கிறாங்க ஜாமீஈஈஈஈஈஈஈஈ:)).. சுவரில அடிக்கப் போறாங்களாம்.. தேம்ஸ்ல தள்ளப்போறாங்களாம்.. அதில நெம்பர் டூஊஊஊஊஊ வும் ரெடியாமே:)).. வைரவா வைரமுடிக்கு எப்பூடியாவது இம்முறை ஏற்பாடு பண்ணிடுறேன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்:))..

   http://www.funnycatsite.com/pictures/Hide_And_Seek_Cat.jpg

   நீக்கு
  10. ஜேம்ஸ் ஊரணியில் குதிக்கப் போறதாக எட்டு வருசமாக ஜொள்ளுவது யாரு ?

   நிறைய பதிவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

   நீக்கு
  11. ஒரு சுவீட் 16:)[அது நாந்தேன்ன்:)] ஆற்றிலே குதிப்பது அவிங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்காமோ.. தோஓஓஓஓஓஒ என் ஆயுதத்தை வெளியே எடுத்திடுறேன்:)...

   http://www.ndcabins.com/K-9%20Accomodations.htm

   நீக்கு
 3. ஆஜர்!!! வாசிச்சுட்டு வாரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. கில்லர்ஜி இது ஏதோ பகடை போல் தெரிகிறதே!!! இந்த பூமிச் சண்டை எல்லா காலத்துலயும் நடக்கும்!தான்.. அடப்பாவி என்னப்பா அரண்மனை வைத்தியர்...கொலைக்குத்தம்னு எல்லாம்...குழந்தை அழிப்பா...

  இந்த முறை உள்குத்து புரியலை..வர வர அரசியல் ஞானம் கம்மியாகுது...அந்த வேறக் கோணம் என்னவோ..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வைத்தியர், கொலைக்கேசு எல்லாம் யாரோ ஊரணியோரம் எம்.பி.பி.எஸ். பட்டம் வாங்கியவங்களால் வந்தது.

   நீக்கு
  2. பகடை இல்லை கீதா... பகடி! சீனு இதற்கு ஒரு வார்த்தைப் பிரயோகிப்பார். எனக்கு அந்த வார்த்தை அவ்வப்போது மறந்து போகும்!

   நீக்கு
  3. ஸ்ரீராம்ஜி பதிவைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...

   நீக்கு
  4. ஆமாம் பகடி!! டைப்பும் போது தப்பாயிடுச்சி!!! ஹிஹிஹிஹி ஸ்ரீராம்....

   கீதா

   நீக்கு
 5. கில்லர்ஜி என்ன கில்லர்ஜி இப்படி ரொம்ப அதிர்ச்சியான செய்தி எல்லாம்....தேம்ஸ் ஊரணிய தாமஸ் அலி வாங்கிப் போட்டாராமே....அப்ப பூஸார் இனி அங்க குதிக்கவோ போராட்டம் பண்ணவோ முடியாதோ??!!!! அடப் பாவமே!! பார்த்து...எங்கட தேம்ஸ வாங்குறது யாரு...விட மாட்டோம் அப்படினு பூஸார் அங்க டேம் கீம் கட்டிராம. அப்புறம் காவேரி போராட்டம் மாதிரி ஆயிடப் போகுது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் அதிரா இனிமேல் சென்னையின் கங்கை நதிக்குத்தான் வருவாங்க...

   நீக்கு
 6. // ஸ்ரீராம்ஜி பதிவைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே... //

  அதைப்பற்றித்தான் முதல் கமெண்ட்டே போட்டேன்... எங்கே போனது..?

  பதிலளிநீக்கு
 7. என் நினைவில்... மாருதியின் பொருத்தமான ஓவியத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்றும் தனது வாழ்க்கை அஸ்திவாரத்தைப் பற்றி இளவரசனின் மணாளினி கவலைப்படுகிறார் என்றும் எழுதி இருந்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நன்று ஸ்ரீராம்ஜி வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. ஶ்ரீராம்... எனக்கும் அப்படித் தோன்றியது. ஆனால் கதைப்படி மனைவி மடியில்ல்லவா இளவரசர் படுத்திருக்கவேண்டும். எப்போது எழுந்தார் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

   நீக்கு
  3. நண்பர் நெ.த. அவர்களுக்கு... கதையின் தொடக்கத்தில் இளமாறன் பள்ளியறையில் நுழைகின்றார் அப்படிப் பார்த்தால் உங்களுக்காக காணொளி எடுத்துதான் போடவேண்டும்

   நீக்கு
 8. ஙே!!!!!!!!!!!!!! ஒண்ணுமே புரியலை உலகத்திலே! !!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பதிவில் விளங்கும் ஆனால் அது இதன் தொடர்ச்சி அல்ல!

   நீக்கு
 9. இந்தப் பதிவின் உட்கருத்து? ஙே!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாடாளும் ஆசை, தனிக்குடித்தன ஆசை என்றும் சொல்லலாம்.

   நீக்கு
 10. கதைன்னு பார்த்தால் இன்டெரெஸ்டிங்காக இருக்கு. ஆனால் கில்லர்ஜி இப்படி எழுதமாட்டாரேன்னு யோசிக்கறேன். இது கௌதமி-சுப்புலட்சுமி கதையா, விவேக்-தினகரன் கட்சி ஆரம்பித்த கதையா என்று குழப்புகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கதையின் மூலம் "தனிக்குடித்தனம்" ஆனால் அடுத்த பதிவில் புரிந்து விடும்.

   நீக்கு
 11. கதை கதையாம்...காரணமாம்..அது சஸ்பென்சாம் ஙே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அடுத்த பதிவுக்கு கண்டிப்பாக வரவும்.

   நீக்கு
 12. பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் மாதிரி கடைசி வரைக்கும் இளவரசராகத் இருக்கணும் போல இருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கவுண்சிலராகவே இருந்தால் போதுமா.... சேர்மன் ஆவது எப்போது ?

   நீக்கு
 13. அக்காலத்திலிருந்து தற்காலத்திற்கு வந்த கதையில் மறுபடியும் கர்ணன் திரைப்படத்தில் வருவது போல ஒரு திருப்பம். அடுத்து என்னவோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி காத்திருப்புக்கு நன்றி

   நீக்கு
 14. படத்தில் உள்ள இளவரசியை பார்த்தால் சண்டைக்காரி போல தெரியவில்லையே.

  கணவன் மனைவி சண்டைகள் பற்றிய ஒரு ஆங்கில பொன்மொழியின் தமிழாக்கம்:
  மனைவியுடனான சண்டையில் அவள் சொல்லே இறுதியானது. அதற்கு கணவன் சொல்லும் ஒவ்வொரு பதிலும் ஒரு புது சண்டையை ஆரம்பிக்கும்.

  உங்கள் பதிவு அந்த பொன்மொழியைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி தொடர்ந்து மற்ற பதிவுகளுக்கும் வருக... நன்றி

   நீக்கு
 15. யாரடா அங்கே!..

  உத்தரவு மன்னா!...

  எடடா என் வாளை... கொட்டடா போர் முரசை!..

  மன்னரின் வாள் முறிந்து வருடங்களாகின்றன.. மேலும்
  போர் முரசின் தோல் கிழிந்ததால் பூனை உறங்கும் குடிலானது அரசே!..

  கஷ்ட காலமடா கந்தசாமி... கஷ்ட காலம்!..

  அவர் தங்களுடைய மைத்துனரா மன்னா?..

  இல்லையடா.. நான் தான் ... நானே தான்!...

  பதிலளிநீக்கு
 16. மன்னர் கால கதைக்குள் அரபாத் ஐயும்,கடாபியையும் உங்களால்தான் கொண்டு வரமுடியும். ஹா..ஹா.. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  மன்னர் காலத்திலிருந்தே சுயநலங்கள், போட்டி, பொறாமை இவையெல்லாம் இருந்தது சகஜமே. ஆனால் தனிக்குடித்தனமும் அங்கிருந்துதான் துவக்கமா?

  அரச காலத்து வார்த்தைகள் சூப்பர்.சாண்டில்யன் கதைகள் நினைவுக்கு வந்தன.அதற்கேற்ற படமும் அருமை. மிகவும் ரசித்தேன்.

  மன்னர் காலத்து கதை என சுவாரஸ்யமாக படித்து வந்தேன். இடையில் ஒரு திருப்பமென தொடரின் அடுத்த பகுதி. திருப்பத்தைக் காண காத்திருக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தனிக்குடித்தனம் தொடங்கியது பதவி ஆசையிலிருந்துதான்...

   தொடர்வதற்கு நன்றி

   நீக்கு
 18. பழைய காலக் கதை போல் இருந்தாலும் இப்போது உள்ள அரசியல் கதையோ ! என்று சந்தேகம் இருக்கிறது .உளவாளிகள் உளவறிந்து சொன்னது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அடுத்த பதிவில் இதன் கோணம் புரிந்து விடும் வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. டிரம்ப் லருந்து டிடிவி அப்புறம் talkடர் மியாவின் அங்கிளருந்து .சித்தப்பா வரை ,தாத்தா குடும்பம் பழம் அக்காவா குறிஞ்சி மலரான்னு குழம்பி குழம்ம்பி தலை சுற்றுதே :) எல்லாரையும் யோசிச்சி பார்த்தேன் ஆனா என்னால் கடைசி வரைக்கும் இளமாறனும் நளாயினியும் யாருன்னே கண்டுபிடிக்க முடியல்லையெ :)
  அட்லீஸ்ட் விக்கிப்பீடியா நெல்லைத்தமிழனாவது கண்டுபிடிப்பார்னு வெயிட் செஞ்சேன் :)

  சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க கில்லர்ஜீ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இளமாறனும், நளாயினியும் மணவாளனும், மணவாட்டியும்தான் (கணவன்-மனைவி) இதிலென்ன குழப்பம் ?

   மீண்டும் ஞாயிறு மாலை 4:00 மணிக்கு பதிவு வரும்.

   நீக்கு
 20. தந்திரமாக அடுத்த பதிவில் மந்திரம்...?!?

  பதிலளிநீக்கு
 21. இனிய சரித்திரம் உருவாகிறது. உரிமை, சண்டை,வாரிசு அரசியல் எல்லாம் தமிழ்னாட்டில் தானே. அடுத்துப் பார்க்கலாம்.
  கொங்கு நாடு வேற. சுவாரஸ்யம் தான் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா அடுத்த பதிவில் வேறுவகை புரியும் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 22. கதை நன்றாக வந்துள்ளது. விரைவில் சஸ்பென்சை வெளிக்கொண்டுவாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 23. மிக அருமை சகோ . அடுத்த பதிவை படிக்க ரன்னிங் :)

  பதிலளிநீக்கு
 24. காத்திருக்கிறேன் இளவரசர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என அறிய.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பதிவு முடிந்தது அடுத்தது வேறு கோணம்.

   நீக்கு
 25. இது மன்னர் வீட்டு விவகாரமாக இருப்பதால்..இதில் நான் கருத்து சொல்லி மன்னரின் கோபத்துக்கு ஆளாகி நான் தடா..பொடாவில் சிறையில் இருக்க நான் விரும்பவில்லை நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இது 18-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது ஆகவே எல்லோரும் மண்ணோடு மண்ணாகிட்டாங்க... பயப்பட வேண்டாம்.

   நீக்கு
 26. வரலாற்றுக் கதையோடு, நிகழ்காலச் சரித்திரத்தையும் பின்னைப் பிணைந்து அற்புதமாய் எழுதியுள்ளீர்கள் நண்பரே
  காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு