தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 31, 2019

UAE to AUSTRALIA


Place: Australia Sydney Banks town Airport Me & My Frantz Mr. Chokkan

ஸ்திரேலியாவில் இருக்கும் நமது இனிய நண்பர் திரு. சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள் நான் அபுதாபியிலிருக்கும் பொழுது மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் விடுமுறை கிடைத்தால் வாங்களேன் ஆஸியை சுற்றிப் பார்த்து விட்டு போகலாம் என்று... மனதுக்குள் என்ன நினைத்திருந்தாரோ.... நண்பரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பது நட்பின் இலக்கணம் அல்லவா ஆகவே எமிரேட்ஸில் தேசியதினம் அரசு தினத்தோடு சேர்ந்து ஐந்து தினங்கள் விடுமுறை கொடுத்தார்கள். மேலும் ஐந்து நாட்கள் விடுமுறை எடுத்து மணிகண்டனுக்கு வேஷ்டி சட்டை எடுத்துக் கொண்டு விசிட் அடித்தேன்.

சனி, ஜனவரி 26, 2019

மகனுக்கு திருமணம்...



வணக்கம் வலைப்பூ நட்பூக்களே...
எனது மகனுக்கு திருமணம் வைத்து இருக்கிறேன் தைமாதம் 25 ஆம்தேதி வெள்ளிக்கிழமை (08.02.2019) அன்று பரமக்குடி, மதுரை-இராமேஸ்வரம் சாலையில் உள்ள ராஜா மஹாலில் திருமணவிழா நிகழ்வுகள் ஏற்பாடாகி இருக்கின்றது. மணமக்கள் தமிழ்வாணன்-பிரியங்கா இருவருக்கும் தங்களது ஆசிகளையும், வாழ்த்துகளையும் வேண்டி நிற்கிறேன்

திங்கள், ஜனவரி 21, 2019

நத்தம், நண்பன் நம்பிராஜன்


இன்று கண்டிப்பாக
சொல்லிவிட
வேண்டியதுதான்
ஆம்
எத்தனை காலம்தான்
மனதுக்குள் வைத்து
பூட்டி வைப்பது
அவள் எனது டேபிளுக்கு
அடுத்த டேபிள்க்காரி
பணியில் சந்தேகமெனில்
உடன் வந்து கேட்பது
என்னிடமே..
காரணம் எனக்கு எல்லாம்
தெரியும் என்று அவள் நம்பி
வாழ்கிறாள் இந்த நம்பிராஜனை

திங்கள், ஜனவரி 14, 2019

மொக்காசியா To மெல்லேந்தியா



இதன் முந்தைய பகுதியை படிக்க கீழே சொடுக்குக... I like Indian People

ஃபுல்ஸி என்ன இது ?
ரண்ஸிட் இப்போ உன்னோட உடம்பிலிருந்து ரத்தத்தை எனது உடம்புக்கு டிரான்ஸ்பர் பண்ணப்போறாங்க முழுவதும் இல்லை பாதிதான் அதன் பிறகு நீ இங்கேயே ஒரு மாதம் தங்கி ரெஸ்ட் எடுத்து உடம்பைத் தேற்றிக் கொள்ளலாம் எல்லாம் நான் பார்த்துக்கிருவேன் பயப்படாதே..

நான் எதுக்கு ரத்தம் கொடுக்கணும் சம்மதிக்க மாட்டேன் உனக்கு ரத்தம் மாற்றும் அளவுக்கு என்ன பிரச்சனை ?
இதோ பார் எனக்கு இருக்கின்ற பவருக்கு உன்னிடமிருந்து சுலபமாக ரத்தம் எடுக்க முடியும் அதை முதலில் புரிந்துகொள்.

வியாழன், ஜனவரி 10, 2019

I like Indian People


ஞ்சித் இன்னும் திருமணம் ஆகாதவன் காரணம் திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லாதவன் இரண்டு அக்காள் மூன்று அண்ணன்களோடு பிறந்தவன் எல்லோருக்கும் திருமணம் முடிந்து விட்டது வீட்டில் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் கோயிலுக்கு நேர்ந்து விட்டு விட்டார்கள் நல்ல ஜாலியான பேர்வழி அப்பா இறந்து விட்டார் அம்மா பாரம்பரிய திருநெல்வேலி வீட்டில் இருக்கின்றார் அம்மாவுக்கு தேவையான பணத்தை செலவுக்கு அனுப்பி விடுவான் வருடத்துக்கு ஒருமுறை மே மாதம் சரியாக பள்ளி விடுமுறையில் நாட்டுக்கு வந்து விடுவான் குடும்பத்து அனைத்து பிள்ளைகளும் வந்து விடவும் வீடு ரணகளப்படும் அவனது அம்மா சத்தம் போட்டு அடக்கி வைத்தாலும் உள்ளுக்குள் பெயரன்-பெயர்த்திகளின் சேட்டைகளை ரசிப்பார் ரசிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே... எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் இதோ கணவருக்கு கிடைக்க வில்லையே

ஞாயிறு, ஜனவரி 06, 2019

ஏற்காடு, ஏட்டிக்குபோட்டி ஏகம்மை


என்னங்க யோசனையா இருக்கீங்க...?
ஏண்டி உன் மகன் இந்த சமுதாயத்துல பொழைச்சுக்கிருவானா ?
ஏன்... சந்தேகம் நீங்களே பொழைச்சுக்கிட்டு இருக்கும்போது என் மகனுக்கென்ன தங்கம் ?.
? ? ?

செவ்வாய், ஜனவரி 01, 2019

புத்தாண்டு வாழ்த்துகள்



னிய வலைப்பூ உறவுகள் அனைவருக்கும், என்னை நேசிக்கும் உள்ளங்களுக்கும், என்னை வெறுக்கும் உள்ளங்களுக்கும் எமது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் உலக மக்கள் அனைவருக்கும் எல்லா வளமும், நலமும் பெற்று, சந்ததிகள் பெறுகி மகிழ்வுடன் வாழ இறையருள் கிடைக்கட்டும் என்று வழக்கம்போல் உலக மேலாளரை வேண்டுகிறேன்.