தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 06, 2019

ஏற்காடு, ஏட்டிக்குபோட்டி ஏகம்மை


என்னங்க யோசனையா இருக்கீங்க...?
ஏண்டி உன் மகன் இந்த சமுதாயத்துல பொழைச்சுக்கிருவானா ?
ஏன்... சந்தேகம் நீங்களே பொழைச்சுக்கிட்டு இருக்கும்போது என் மகனுக்கென்ன தங்கம் ?.
? ? ?
* * * * * 01 * * * * *

ஏங்க, தீக்குளிக்கிறவங்களுக்கு எடப்பாடி அரசு மூணுலட்ச ரூபாய் தருதாமே?
அதுக்கு என்ன ?
நீங்ககூட சும்மாதானே இருக்கீங்க... போய் குளிச்சிட்டாவது வரலாமே....
? ? ?
* * * * * 02 * * * * *

ஏங்க நேற்று ஹனுமார் கோயிலுக்கு போனீங்களாமே... ஏன் ?
என் குறையை சொல்லத்தான்.
அதுக்கு எதுக்கு... அவ்வளவு தூரம் வீட்டுல இருக்கிற கண்ணாடியை பார்த்து சொல்லி இருக்கலாமே... ?
? ? ?
* * * * * 03 * * * * *

ஏங்க சன்னலோரம் ஏதோ உருவம் தெரியுது வந்து பாருங்க...
நீ எதிரில் போய் நின்னாப்போதுமே...
அதுக்குத்தானே உங்களைக் கூப்பிடுறேன்.
? ? ?
* * * * * 04 * * * * *

ஏங்க அம்பாளுக்கு நேர்த்திக்கடன் வச்சு இருக்கேன் அடுத்த மாசம் உங்களுக்கு முடி இறக்குறதா...
அப்படி என்ன நேர்த்திக்கடன் ?
எனக்கு பொடுகு வச்சு, முடியெல்லாம் கொட்டுறது நிற்கிறதுக்காக...
? ? ?
* * * * * 05 * * * * *

Chivas Regal சிவசம்போ-
இப்படி பொண்டாட்டி வாச்சா குடும்பம் ஜிமுஜிமுன்னுதான் வாழும்.

44 கருத்துகள்:

 1. 02) 'குளிச்சுட்டு' அப்புறம் எங்கே வருவது?!!!!!

  பதிலளிநீக்கு
 2. 03) தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், வீட்டுக் கண்ணாடியில் இருப்பார்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியும் நினைக்கலாமோ... நன்றி ஸ்ரீராம்ஜி

   நீக்கு
 3. ஜிமுஜிமு வுக்கு சரியான அர்த்தம் என்ன ஜி?

  பதிலளிநீக்கு
 4. "சன்னலோரம் ஏதோ" தவிர மற்றவை அருமை. இந்த மாதிரி மனைவி அமையக் கொடுத்து வச்சிருக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இப்படி மனைவி வாய்த்தவர்கள் கொடுத்து வைத்ததாக சொல்லவேயில்லையே....

   நீக்கு
 5. ஜிகுஜிமுவின் பொருளை நீங்களே சிவசம்போவிடம் கேட்டு சொல்லுங்களேன் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவசம்போ தெளிவாகும்போது (?) கேட்டு சொல்கிறேன் நண்பரே

   நீக்கு
 6. ஹா ஹா ஹா ஹா

  ரசித்தோம்

  கீதா

  பதிலளிநீக்கு
 7. காலைலியே போட்ட் கமென்ட் இப்பதான் போகுது..பப்ளிஷ் ஆகாமவெ இருந்துச்சு...பப்ளிஷ் கொடுத்தும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா பெங்களூருவிலிருந்து தேவகோட்டை அதிகமான தூரம்தானே...

   நீக்கு
 8. முடி இறக்குறதா?? யாருக்குங்க ஜி? தலைல முடியே இல்லாம....ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்து சிரித்தமைக்கு நன்றி.
   யாருக்கு முடியில்லை ஏகம்மை கணவருக்கா ?

   நீக்கு
 9. ஏட்டிக்கு போட்டி உங்களிடம் தான் கற்க வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா இது ஏகம்மை விவகாரம்.
   எனக்கு இதில் பந்தமில்லை.

   நீக்கு
 10. ஹாஹா... சரியான எடக்குப் பேர்வழியா இருக்கிறாரே... கணவன் பாடு திண்டாட்டம் தான்!

  அனைத்தும் ரசித்தேன் கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ரசித்து சிரித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 11. ஜிமுஜிமுன்னு ஜிம்மிற்கு போக வேண்டியது தான் ஜி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சிவசம்போவின் வார்த்தை ஜாலம் உங்களுக்கு புரிந்து கொள்வது கண்டு மகிழ்ச்சி.

   இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி

   நீக்கு
 12. இப்படிக் கணவன், மனைவி அமைவதிலும் ஓர் ரசனை இருக்கத்தான் செய்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. இதை அனுபவித்தவர்களுக்குதானே தெரியும்.

   நீக்கு
 13. எல்லா ஏகம்மையும் இப்படியே இருந்துட்டா நாட்டுல பிரச்சினையே இருக்காது...

  எல்லாம் தீர்ந்திரும்!?....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அதாவது வாயைக்கட்டி வாழச் சொல்றிங்க! நல்லாத்தான் இருக்கும்.

   ஆனால் சிதம்பரத்துக்கு மீனாட்சி அமையும்போதுதான் பிரச்சனை பூகம்பமாக வெடிக்குது.

   நீக்கு
 14. அனைத்தும் ரசித்தேன்..

  முதல் ஜோக் ..அது பொதுவாகவே எல்லா மனைவிகளுக்கும் தங்கள் குழந்தைகள் மேல ரொம்பவே நம்பிக்கை...பாசம்தான் போல....

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பிக்கை நல்லதே அதற்காக கணவரை அவமதிக்கலாமா ?

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  அனைத்து நகைச்சுவையும் நன்றாக ரசிக்கும்படி இருந்தது.

  2ம் 3ம் நல்ல நகைச்சுவை. இப்படிபட்ட மனைவிகள் இருக்கும் வரை கணவருக்கு சலுகைகள் கிடைக்கும் போலிருக்கிறது.

  5ம் ரசித்தேன். முடி இறக்கும் அடுத்த மாதத்திற்குள் மனைவிக்கு பொடுகும், முடி உதிரும் பிரச்சனையும் நின்று விட்டால் சரிதான்.. .அதறகு அந்த கணவரும் வேண்டிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாவம் "அவன் ஒரு தொடர்கதை" ஆவான். ஹா ஹா ஹா

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "அவன் ஒரு தொடர்கதை" ஹா.. ஹா.. ஸூப்பர் சகோ வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. மனை...வீ....அமைவதெல்லாம் இதற்குத்தானோ.... பரவாயில்லை நான் தப்பிச்சேன்...தலைவரே!!

  பதிலளிநீக்கு
 17. நானும் கண்ணாடி முன் நின்றுதான் அனுமனை கும்பிட்டேன்

  பதிலளிநீக்கு
 18. ஏட்டிக்கு போட்டியை ரசித்தேன்.
  மனைவிக்கு முடி கொட்டுவதால் கணவர் முடி நேர்த்திகடனை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ மகனிடம் இப்படி சொல்ல முடியுமா ?

   நீக்கு
 19. நகைச்சுவையை ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 20. எல்லாம் அருமை மிகக் குறிப்பாய் நேர்த்திக்கடன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞரின் வருகைக்கு நன்றி.
   தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 21. ஆஹா. அத்தனையும் சுவை. அடிக்கடி. ஏகம்மையை வரச்சொல்லவும்.

  பதிலளிநீக்கு