தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 02, 2019

அத்தியின் வரவு


த்தி வரதரின் வரவால் பலருக்கும் வரவு வந்து இருக்கிறது. கோயிலோரத்தில் வீடு வைத்து இருந்தவர்கள் பக்தர்களிடம் பத்து ரூபாய் வசூலித்துக் கொண்டு கழிவறையை உபயோகத்துக்கு விட்டு அரைக்கிலோ மலத்தை தன்னோட வீட்டு மனையில் சேமிச்சு வைத்து இருக்காங்களே... இவங்கே விருத்திக்கு வருவாய்ங்களா ?

நீங்களெல்லாம் அத்தியின் மீது உண்மையான பக்தி வைத்திருந்தால் பக்தர்களுக்கு இலவசமாக உபயோகத்துக்கு கொடுத்து இருக்கலாமே... பணத்தைக் கொடுத்தால் உடனடி தரிசனம் மேலும் கொடுத்தால் அருகில் நின்று தரிசனம் அதற்கு மேலும் கொடுத்தால் அருகில் அமர்ந்து தரிசனம் மென்மேலும் கொடுத்தால் படுத்துக் கொண்டு தரிசிக்கலாமோ...? பணம் உள்ளவனும், பதவி உள்ளவனும் அத்தியை தொட்டுப் பார்க்கமுடிகிறது. பணம் இல்லாதவன் பத்து மணிநேரம் வரிசையில் நின்றும் ஒருநொடியே தரிசிக்க முடிகிறது இதெல்லாம் அத்தியின் திருவிளையாடலா ?

வீட்டுக் குழாயடியில் நிகிழிக்குப்பியில் தண்ணீர் பிடித்து விற்று இருக்கின்றார்கள் தண்ணீர் தானம் உலகிலேயே சிறந்த புண்ணியம் இல்லையா ? இதைச்செய்து அத்தியின் அருளைப் பெறக்கூடாதா ? 48 தினங்கள் எல்லா கடவுளையும் மறந்து விட்டோம். இனி பழையபடி நாற்பது வருஷத்துக்கு மற்ற கடவுளிடம் வேண்டியதை கொடுத்து விட்டு வேண்டுதல்கள் தொடரும்...

ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி இருக்கிறது அத்தியின் வரவு யாருக்கு பயன் ? இந்தப் பணத்தை வைத்து எத்தனை அனாதை குழந்தைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த இயலும் பந்தப்பட்டவர்கள் இதைச் செய்வார்களா ? இப்படி செய்வதை தவறென்று அத்தி நம்மை தண்டிப்பாரா ? இத்தனை சக்தி வாய்ந்த அத்திதான் இதைச் செய்யக்கூடிய சூழலை உருவாக்கி தந்து விடமுடியாதா ?


நயன்தாரா அத்தியின் அருகில் நிற்க ஐதீகத்தில் இடமிருக்கிறதா ? தெரியாமல்தான் கேட்கிறேன் அவளை உத்தமி என்று சொல்ல இயலுமா ? இது தீட்டு ஆகாதா ? இதை தமிழகத்து பக்தர்களுக்கு கேள்வி கேட்கும் எண்ணம் இல்லையா ? //நயன்தாராவை தரிசித்த பக்தர்கள் அருகில் அத்தி வரதர்// என்று நையாண்டி செய்கின்றார்கள் இதைப் படித்து விட்டு எனக்கு இரத்தக்கண்ணீரே வந்து விட்டது. ஏதோவொரு தெருவின் மூலையோரத்தில் வறுமைக்காக கற்பை இழந்தவள், இழப்பவள் கோவிலுக்கு வரும்போது சமூகம் அவளை வார்த்தையால் சாடுகிறதே ஏன் ? வறுமைக்கு போனால்தான் விபச்சாரமா ? வளமைக்கு போனால் விபச்சாரம் இல்லையா ? இதென்னயா நியாயம்... இடுப்புல தட்டுனேன் அடுப்பு தெறிச்சுப் போச்சுனு சொன்ன மாதிரி இருக்கு ? இதற்கு மேல் எழுதினால் நண்பர் திரு. பசி பரமசிவம் அவர்கள் சண்டைக்கு வந்தாலும் வரக்கூடும் எனக்கு எதற்கு ஊர் வம்புஸ்.

Chivas Regal சிவசம்போ-
காஞ்சிபுரத்துக்கும், நாமக்கல்லுக்கும் என்னையா தொடர்பூ...
சிவதாமஸ்அலி-
அத்தி அடுத்த விஸிட் வர்றதுக்குள்ளே காஞ்சிபுரத்துல வீடு வாங்கிடணும்.


காணொளி

71 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி ஜி உடல் நலம் பேணவும்.

   நீக்கு
  2. தனபாலன் அவர்களுக்கு உடல் நலம் இல்லையா?
   வியாபார பயணத்தில் இருப்பார் என்று நினைத்தேன்.
   உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் தனபாலன்.

   நீக்கு
  3. ஆமாம் சகோ உடல் நலமின்றி இருக்கிறார்.

   நீக்கு
  4. டிடியின் உடல் பூரண நலம் பெறப் பிரார்த்தனைகள்.

   நீக்கு
 2. ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி பொயிங்கிட்டார்....ஏற்கனவே இதுக்குப் பொயிங்கிருக்கீங்களே!!! இல்லையோ?!!

  கில்லர்ஜி உங்களின் கோபம் புரிகிறது. இதைப் பற்றி பல செய்திகளும் வந்தனவே. எத்தனையோ நல்லதும் கெட்டதும் வந்ததுதான். பணம் கொடுத்து தரிசனம் என்பது எனக்கும் நெருடும் தான். இறைவன் முன் எல்லோரும் சமம் தான். ஆனால் இதெல்லாம் மனிதர்கள் படுத்தும் பாடு.

  விபச்சாரி என்ற வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது கில்லர்ஜி. அது யாராக இருந்தாலும் சரி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்துரைக்கு நன்றி.
   சபை நாகரீகம் கருதி தங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

   நீக்கு
 3. கோபம் எல்லாம் சரிதான்.  பணம் இங்கு மட்டும்தான் சேர்கிறதா?  கலிகாலத்தில் வழி இருப்பவன் எல்லாம், வழிகிடைக்கும் வழிகளில் சம்பாதிக்கிறான்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இறைபயம் அற்றுப்போய் விட்டதே...

   நீக்கு
 4. கோபங்கள் எந்த மாற்றத்தையும் விளைவிக்கப் போவதில்லை. ஸோ நம்மால் முடிந்த நல்லதை செய்துவிட்டுப் போவோம் கில்லர்ஜி. அதுவும் ஆர்பாட்டம் இல்லாமல்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில நேரங்கள் அல்ல பல நேரங்களிலும் சமூக கோபம் வரத்தான் செய்கிறது.

   நீக்கு
 5. அத்தி வரதர் நிற்க அருகில் இருப்பவர் உற்சாகம் கண்ணில் தெரியவில்லையா காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று கேட்டதில்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அவர்களுக்கு சந்தர்ப்பவாத வாழ்க்கையே...

   நீக்கு
 6. எந்த கடவுளும் பணத்தை எனக்கு காணிக்கையாகக் கொடு என்று கேட்பதில்லை. இன்னும் கிடைக்கும் என்ற பேராசையால் மனிதன் செய்யும் செயல் இது. இதில் எல்லா மதத்தினரும் ஒன்று தான்.

  பதிலளிநீக்கு
 7. தங்களின் ஆதங்கமும், கோபமும் நியாயமானதே. ஆனால் அந்த நடிகை பற்றிய கருத்தை மாற்றி சொல்லியிருக்கலாம். ‘சம்பந்தப்பட்டவர்கள்நடிகைக்கு முக்கியத்துவம் தந்ததையும், அதை ஊடகங்கள் விளம்பரப்படுத்தியதையும் தவிர்த்திருக்கலாம்’ என சொல்லியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்து ஏற்கப்பட்டு சற்றே மாற்றினேன்.

   ஊடகங்களின் அட்டூழியம் தாங்கமுடியவில்லை.

   நீக்கு
 8. நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா என்பது தெரியாதோ. அதையும் சுட்டியிருக்கலாம். பொங்குவது எளிது ஆனால் உங்கள் பொங்கலை யாரும் சீண்டமாட்டார்கள்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது வேறயா... சத்தியமாக இந்த விடயம் தெரியாது ஐயா.

   சீண்டுவதற்கு நமது பதிவை அரசியல்வாதிகளும், கூத்தாடிகளுமா படிக்கிறார்கள் ?

   என்னைப் போன்ற சமூக சிந்தனையுள்ள உங்களைப் போன்றவர்கள்தானே ஐயா.

   நீக்கு
 9. //நயனதாரா// - நீங்கள் சொன்னதை என் மனசு ஏற்கவில்லை.

  மயக்கமென்ன இந்த மெளனமென்ன மணி மாளிகை தான் கண்ணே........
  உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்....

  இப்படி நடக்காத ஆண்கள் 'விபசாரன்' இல்லையா? யோசிங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே இந்தக்கூத்தாடிகள் விபச்சாரன் அன்றி வேறு யார் ?

   நீக்கு
 10. உங்க ஆதங்கம் புரியுது. நாங்க பெரும்பாலும், இது எதுக்கு 'தெய்வக் குத்தமான சிந்தனை' (அதாவது எதுக்கு அடுத்தவன் தவறுகளை நாம சொல்வது என்று) என்று ஒதுக்கிடறோம். நீங்க எழுதியிருக்கீங்க. அதுதான் வித்தியாசம்.

  ஆனா படங்கள் எடுக்கும்போது சில போஸ்கள், தவறான அர்த்தம் தரும்படி அமைந்துவிடும். அப்படித்தான் இந்தப் படமும் என்று நான் நினைத்துக்கறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நம்மளால் இந்த கூத்துகளை பொறுக்க முடியவில்லையே....

   நீக்கு
 11. அப்புறம், கடவுள் என்பது அனேகமா எல்லா சமயத்திலும் (occasion) சாட்சி பூதம் தான். அப்படி இல்லாமல் ஒவ்வொண்ணுக்கும் பொங்கணும்னா, யோசிச்சுப் பாருங்க... ஒரு அரசியல்வியாதியாவது உயிரோட இருக்க முடியுமா?

  கடவுள் பெயரால் மனிதர்கள் செய்வதற்கு கடவுளைப் பொறுப்பாக்குவது சரியா? அவருக்கு தீர்ப்பு கூறும் நேரம் வரும்போதுதான் நம் செயல்களை எடைபோட்டு தீர்ப்பளிப்பார். இல்லைனா, கட்-அவுட் விழுந்த உடனேயே அதற்குப் பொறுப்பானவர்களும் இறந்திருக்கணுமே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுள் அளவுக்கு மீறி அமைதியாக இருப்பது சரியல்ல நண்பரே...

   தீர்ப்பு நாளின் நியதி பிற மனிதர்களுக்கு தெரிய மாட்டுதே...

   நீக்கு
  2. இயங்குவதும் அவனே இயக்குவதும் அவனே. எல்லாம் அவன் செயல்.

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 12. இந்தப் போஸ்ட் எப்போ வந்துது?.. என் கண்ணுக்கு தெரியாமல் போச்ச்.. இருப்பினும் சூடு இன்னமும் இருக்கே:)) அது ஆறமுன்பு வந்திட்டேன் ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா சூட்டோடு வந்தமைக்கு நன்றி

   நீக்கு
 13. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி.. முதல் படம் பார்த்துப் பதறிப் போயிட்டேன்.. பின்னர் கையை வச்சுத்தான் கண்டுபிடிச்சேன்.. நல்ல அழகாக அலங்கரிச்சிருக்கினம்.. 1ச்ட் பிறைஸ் கிடைச்சிருக்க வாய்ப்பிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எதற்காக பதறிப்போனீங்க...? நீங்க ஸ்கோட்லாண்ட் என்று நிரூபிச்சுட்டீங்க...

   நீக்கு
 14. நடிகர்களை நான் குறை சொல்ல விரும்புவதில்லை, ஆனா அவர்களை அவர்கள் இடத்தில் வைக்காமல் இப்படி சுவாமிக்கு முன்னால் மக்களின் கவர்ச்சிக்காக கூட்டி வருவது, அவர்களுக்கு மாலை போட்டு கும்பம் கொடுத்து வரவேற்பளிப்பது கொஞ்சமும் பிடிப்பதில்லை, கோயில் எனில் அங்கு ஒரு புனிதமிருக்கோணும்... அவர்கள் தப்பு செய்தார்கள்.. இல்லை செய்யவில்லை என்பது வேறு, இப்படிப் பார்க்கும்போது கடவுளை கும்பிட மனம் வருவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இந்த புனிதம் இங்கு சிதறடிக்கப்படுகிறது இதற்கு காரணம் அரசும், அறநிலையத்துறையினரும், ஐதீகம் மறந்த ஐயர்களும் மட்டுமே...

   நீக்கு
  2. பெரும்பாலான கோயில்களில் ஐயர்களைக் குறை சொல்ல முடியாது கில்லர்ஜி, அவர்களால் ஒண்ணும் பண்ண முடியாது. சொன்னதை செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை.. பரிபாலன சபையே இதுக்குப் பொறுப்பு.. நிறையக் கோயில்கள் ஐயர்மார்களை விலை கொடுத்து வாங்கி இருக்கிறது, இங்கு வெளிநாட்டுக் கோயில்கள் எல்லாமே அப்படித்தான்... இப்படிச் செய்யுங்கோ என்றால் செய்யத்தான் வேண்டும்.

   நீக்கு
  3. //அவர்களால் ஒண்ணும் பண்ண முடியாது. சொன்னதை செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை//

   உண்மை ஏற்றுக்கொள்கிறேன் இறை நம்பிக்கை முழுமையாக, உண்மையாக உள்ளவர் மனது மனிதனுக்கு பயப்படாது

   நீக்கு
 15. உண்மைதான் நானும், கஸ்டத்தில் பஞ்சத்தில், குடும்பத்தைக் காப்பதற்காக விபச்சாரத்தை தொழிலாக செய்வோரை இழிவாகப் பேச மாட்டேன்.. அது அவர்களிடத்தில் இருந்து அவர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்கும்போதுதான் கஸ்டம் புரியும்.. சில படங்களில் பார்க்கிறோமே..

  ஆனா அவர்களை இழிவாகப் பேசும் சமூகம், பணத்தோடு இருப்போர் என்ன செய்தாலும், உயர்வாகப் பேசி, தலையில் வைத்துக் கொண்டாடுகிறது... இதை மாற்ற முடியாது... நாளாக ஆக அதிகரிக்கிறதே தவிர குறைவதாக இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்கும்போதுதான் கஸ்டம் புரியும்//

   உண்மையான வார்த்தை இந்த சமூகம் அவர்களை வேதனைப்படுத்தி மேலும் இழிவு படுத்துகிறது.

   அதேநேரம் நடிகைகளை தெய்வமாக பூஜிப்பது ஏன் ? தவறுகளின் தொடக்கம் மக்களே...

   நீக்கு
 16. பணம் எல்லாவற்றையும் செய்கிறது. நாம் வீணே சினமடைந்து விளையப் போவது என்ன.
  அமைதியாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
 17. ஆவ் !!! உண்மையில் கவரிமியாவ் சொல்லலைன்னா இது  அலங்காரம்னு தெரிஞ்சிருக்காது .அத்தி வரதர்னு செய்தி  தலைப்பு மட்டும் பார்த்தேன் ,டீடெயிலடா படிக்கலை .முழு செய்தி விவரம் படிச்சாதான் எனக்கு புரியும் .பணம் பத்தும் செயும்  அந்த குருக்கள் எல்லாரையும் ஒரே சமமா  நடத்தியிருந்தா இப்படி கோபப்பட்டிருக்க மாட்டீங்க .கோபத்திலும் அந்த வார்த்தை வி ------  வேண்டாமே ப்ளீஸ் . அதோடு இந்த நையாண்டிகள் அப்பாவிகளை உசுப்பேற்றி விட்டு அடுத்த செகண்டே நயன்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்குவாங்க . அவங்க இயல்பே அதுதான் . 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவரிமான் from ஸ்கோட்லாண்ட் ஆச்சே...

   //இந்த நையாண்டிகள் அப்பாவிகளை உசுப்பேற்றி விட்டு அடுத்த செகண்டே நயன்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்குவாங்க . அவங்க இயல்பே அதுதான்//

   ஸூப்பர் உண்மை சகோ.

   நீக்கு
  2. கில்லர்ஜி.. இங்கின என் பெயரை ஆராவது டப்புடப்பா சொன்னார்களோ?:)

   நீக்கு
  3. நீங்க ஸி.ஐ.டி.தானே...

   நீக்கு
 18. நீங்கள் சொல்வது போல் பணம் படைத்தவர்களே இறைவனை நெருங்க முடியும் என்ற நிலை சில இடங்களில்.

  நல்லது, கெட்டது எல்லாம் இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறார்.
  நடப்பது, நடந்து கொண்டு இருப்பது, நடக்க போவது எல்லாம் முன்பே விதிக்கபட்டு விட்டது.நாம்
  கோப பட்டு ஒன்றும் ஆக போவது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ எல்லாம் விதியின் வழியே அன்றி வேறில்லைதான். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 19. அத்திவரதரின் வரவால் விளைந்த தீங்குகள் குறித்துத் துணிந்து பதிவிட்டமைக்கு முதலில் என் பாராட்டுகள். ஆனால்.....

  /இதற்கு மேலும் எழுதினால் ‘பசி’பரமசிவம் சண்டைக்கு வந்தாலும் வரக்கூடும்/ என்று பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மையில், இதற்கு மேலும் நீங்கள் எழுதாததால்தான் உங்களுடன் சண்டையிட நினைக்கிறேன்.

  பகைவரின் படையெடுப்பின்போது வரதர் சிலை குளத்தில் வீசப்பட்டது வரலாறு[இதை ஒரு ஜீயரே சொல்லியிருக்கிறார்]. இதை மறைத்து, பல்லாண்டுகள் குளத்தில் துயில்கொண்டார்; இப்போது சயன கோலத்திலும் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்க வந்திருக்கிறார் என்றெல்லாம் கதையளந்தார்கள் [இது குறித்துக் கணிசமான எண்ணிக்கையில் பதிவுகள் எழுதியுள்ளேன்]. சுயநலமிகளான ஊடகக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு இக்கதைகளை மக்களிடையே பரப்பினார்கள்.

  ‘சாமி தூங்குமா? குளத்துக்குள் ஏன் தூங்குது? வருடக்கணக்கிலா? இப்போது சயன கோலத்திலும் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பவர் இதற்கு முன்பு அருள்பாலிக்கவில்லையா? வண்ண வண்ணப் பட்டுடுத்தல்; வைர வைடூரிய தங்க நகைகளால் அலங்காரம்.....சே..... புத்தியுள்ள மனிதர்களின் செயலா இது?’ என்பன போல் கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட எழுப்புக் கேள்விகளை இவர்கள் இருட்டடிப்புச் செய்தார்கள்.

  முட்டாள்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தால்தான் இவர்களின்[சாமிகளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் & ஊடகக்காரர்கள்] பிழைப்பு நடக்கும் என்பதே காரணம்.

  இன்னும் நிறைய எழுதி, நீங்களும் ஏன் எழுதவில்லை என்று சண்டையிட ஆசைதான். பின்னூட்டமே ஒரு பதிவாகிவிடும் என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

  நன்றி நண்பர் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கோபம் உல்டாவாகி விட்டதே.. ஹா.. ஹா..

   வரதரின் வரலாறு நானும் படித்து இருக்கிறேன். எதையும் எப்படியும் திருச்சு விடலாம் என்பதற்கு அத்தியின் குளியலே ஒரு சான்று.

   எப்படியோ கடவுளால் மனிதர்கள் பிழைத்து "பசி" ஆறட்டும் வருகைக்கு நன்றி.

   (குறிப்பு-கிழித்தெழுத எனக்கு தெரியாது என்று மட்டும் நினைக்காதீர்கள் சபை நாகரீகம் கருதி எனது விரல்களுக்கு 'திண்டுக்கல்' பூட்டு போட்டு இருக்கிறேன் 'நாமக்கல்' நண்பரே)

   நீக்கு
  2. அச்சச்சோ என்ன இது அறிவுப்பசிஜி இப்பூடி உசுப்பேத்தி விடுறீங்க கில்லர்ஜியை:) கர்ர்ர்ர்:)) பிறகு கில்லர்ஜி தன் ஒரிஜினல் வாயைத்திறந்தாரோ அவ்ளோ தேன்ன்ன்:)) ஹா ஹா ஹா ஹையோ மீக்குப் பயம்மாக் கிடக்கு மீ ஓடிடுறென்ன்:))

   நீக்கு
  3. ஆமா உறங்கி கிடக்கும் சிங்கத்தை சொறிந்து விட்டால் பிறகு அசிங்கமாகி விடும்.

   நீக்கு
  4. அத்தியின் வரதரின் வரவால் விளைந்த தீங்குகள் குறித்து நீங்கள் துணிந்து பதிவிட்டதாக என் கருத்துரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருப்பது பெரும் தவறு என்பதை உணர்ந்து மிகவும் வருந்துகிறேன்.

   பதிவை வரிவரியாகப் படிக்காதது காரணமாயிற்று.

   நீங்கள் அத்தியின் வரவு என்று குறிப்பிட்டிருப்பது அவருக்கு வந்த வருமானத்தைக் குறிக்கிறது. ‘அத்தியின் வரவு’ என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன். இந்தப் பதிவில் அத்திவரதரால் தீங்கு விளைவதாக நீங்கள் குறிப்பிடவே இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.

   அத்திவரதர் குறித்த நிகழ்வுகள் கண்டிக்கப்படுதல் வேண்டும் என்ற என் விருப்பத்தை உங்கள் மீது திணித்ததற்காக மீண்டும் மீண்டும் வருந்துகிறேன்.

   என்னுடைய கருத்துரை உங்களை வருத்தமுறச் செய்துவிட்டது என்பதை உணர்ந்துவிட்டதால் இக்கருத்தைப் பதிவு செய்ததற்காக மன்னிப்பு வேண்டுகிறேன்.

   என் பதிவுகளிலாகட்டும் கருத்துரைகளிலாகட்டும் பிறர் மனதை நோகடித்தல் கூடாது என்னும் என் கொள்கையிலிருந்து பிறழ்ந்திருக்கிறேன். நிகழக் கூடாதது நிகழ்ந்திருக்கிறது.

   மீண்டும் என் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே.

   நன்றி கில்லர்ஜி. அதிராவுக்கும் என் நன்றி. அவ்ருடைய பின்னூட்டம்தான் இரண்டாம் தடவையாக உங்களின் பதிவை வாசிக்கத் தூண்டியது.

   இருவருக்கும் மீண்டும் நன்றி.

   நீக்கு
  5. வருக நண்பரே
   அத்தியின் வரவு பலருக்கும் வரவை  வைத்து இருக்கிறது (அதாவது வீட்டு மனையடியில் கனத்தை)

   தங்களது கருத்து என்னை வருத்தமுறச் செய்யவில்லை நான் எதையுமே ஜாலியாக நினைப்பவனே சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன் தங்களது கருத்தை படித்து.

   இத்துடன் சிங்கம், அசிங்கம் என்ற கருத்துரை அதிராவுக்கு கொடுத்து இருக்கிறேன் நண்பரே

   நீக்கு
  6. அல்லோஒ கில்லர்ஜி.. சிங்கம் அசிங்கம் என ஜொன்னால் அதிரா வும் ஜண்டைக்கு வருவேனாக்கும்:)) ஹா ஹா ஹா..

   என்னாலதான் அறிவுப்பசிஜி 2 வது பெரிய கொமெண்ட் போட்டிருக்கிறார் என்பதனால அந்த கொமெண்ட்டுக்கான செலவை என் சுவிஸ் பாங் எக்கவுண்டில போட்டுவிடவும் கில்லர்ஜி:))

   நீக்கு
  7. வாங்க ஸ்விஸ் கணக்கில் பணம் போட்டு விடுகிறேன் இதற்காக கோவித்துக்கொண்டு ஜேம்ஸ் ஊரணியில் குதிக்க வேண்டாம்.

   நீக்கு
 20. கடவுள் தன்னை வியாபாரப் பொருளாக ஒரு போதும் அறிவித்தது இல்லை. இது கடவுள் பெயரால் மனிதர்கள் செய்த வியாபாரம். அதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்? கடவுள் அவர்களுக்கு இந்த எண்ணத்தைக் கொடுத்தார் என்பது உங்கள் பதிலானால் ஆரம்பத்திலிருந்தே எல்லாம் இரண்டாகவே இருந்து வருகிறது. நல்லவை/கெட்டவை என! கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அறிவை நாம் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் தானே எல்லாம் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நான் இறைவனை குற்றம் சொல்லவில்லை. மனிதன் இறைபயமின்றி இவ்வளவு தைரியமாக கடவுளை காட்சிப் பொருளாக்குவதை என்றுமே எதிர்க்கிறேன்.

   நீக்கு
 21. சாமி தூங்குமா எனக் கேட்டிருக்கார் நண்பர். அது சாதாரணத் தூக்கம் இல்லை. நம்புகிறவர்களுக்குப் புரியும். ஸ்ரீரங்கத்தில் மதமாற்றம் செய்வோர் மக்களிடம் கேட்கும் முதல் கேள்வியே "உங்கள் அரங்கன் எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிறான்! அவனா வந்து உங்களைக் காப்பாற்றப் போகிறான்?" என்பதே! இதக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இதெல்லாம் அவரவர் நம்பிக்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுள் தூங்குவார் என்பது உங்கள் நம்பிக்கையானால் நான் அதில் தலையிடவில்லை.அது உங்கள் உரிமை.

   நம்புகிறவன் முட்டாள் என்று பொதுமக்களுக்குச் சொல்வது எனக்குள்ள உரிமை.

   எந்தவொரு நம்பிக்கையையும் விமர்சிக்கக் கூடாது என்றால் மனிதன் மீண்டும் காட்டுமிராண்டியாக மாறுவான்.

   நீக்கு
  2. கடவுள் தூங்குகிறார் என்பது அதுவும் மனிதரைப் போல் தூங்குகிறார் என்பதும் என் குறிப்பாகக் கடவுளை நம்புவோருக்கு நம்பிக்கை இல்லை. உண்மையில் அது வேறே தூக்கம். அதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது! நீங்கள் மனிதரைப் போல் தூங்குவதாகச் சொல்லுகிறீர்கள். அநேகமாக அனைவருமே மனிதரின் குணாதிசயங்களைக் கடவுளில் ஏற்றிப் பார்ப்பதால் தான் குழப்பமே! அதோடு உங்களை விமரிசிக்கக் கூடாது என எங்குமே நான் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் எங்கள் வீட்டிலேயே உறவினர்களில் சிலர் சடங்கு, சம்பிரதாயங்களையும் கடவுளைக் கேலி செய்வோரும் இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் அவர்களில் மாறியவர்களையும், மாறிக்கொண்டிருப்பவர்களையும் பார்த்து வருகிறேன். இருக்கிறார் என நீங்கள் நம்புவதால் தானே இல்லை என ஆணித்தரமாக மறுக்கிறீர்கள்? அது ஒன்றே போதுமே! இல்லாத ஒன்றை ஏன் மறுக்க வேண்டும்?

   நீக்கு
  3. கீசாக்கா, இந்த கடவுள் இருக்கிறாரா இல்லையா எனப் பேச வெளிக்கிட்டால் அதுக்கு முடிவே இருக்காது அதனால இது எதுக்கு?:).. இருக்கு என்கிறவர்களுக்கு இருக்கிறார், இல்லை என்கிறவர்களுக்கு இல்லை.. அவ்ளோதான்.. இதில் என்ன இருக்கு?... அது அவரவர் விருப்பம்.. உரிமை.

   தெய்வம் என்றால் அது தெய்வம்..
   வெறும் சிலை என்றால் அது சிலைதான்...

   நீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  தங்களின் மன ஆதங்கம் புரிகிறது. ஆனால் கடவுளின் பெயரால் சம்பாதிப்பவர்களுக்கு கண்டிப்பாக நஷ்டங்கள் சொல்லாமலே வரும் நேரத்தை உண்டு பண்ணும். எல்லாமே அவன் செயல்தானே! அவனின் விழிப் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது. அந்த ஒரு சக்திதான் நம்மை நம்ப வைக்கிறது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நான் மனிதர்களின் தவறான செயல்களையே கண்டிக்கிறேன். தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 23. அந்த அத்தி வரதனே அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்போது
  உங்களுக்கும் எனக்கும் என்ன வந்தது?...

  நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்களா.. இருங்கள்...
  நான் நல்லவனாக இருக்கின்றேனா... இருக்கின்றேன்!..

  தாமரைக் குளத்தில் லிடந்தாலும் தவளைகள் தாமரையின் தேனைப் பற்றி அறிந்ததேயில்லை...
  எங்கிருந்தோ வரும் வண்டுகள் தான் நுகர்கின்றன - என்று ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் அருளியிருக்கின்றார்..

  அத்தி வரதனுக்கு சேவை செய்த பட்டர்களுள் எத்தனை பேருக்கு அத்திவரதனின் அருள் கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?...

  கட்டுக் கட்டாக பணம்..
  மூட்டை மூட்டையாக தங்கம்!..

  இவையெல்லாம் செல்வம் தான் .. ஆனால்
  அவை மட்டுமே செல்வம் அல்ல..

  அத்தி வரதனை நாம் பார்த்தது வேறு...
  அத்தி வரதன் நம்மைப் பார்ப்பது வேறு!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி தங்களது விரிவான அழகிய கருத்துரையை தந்தமைக்கு நன்றி.

   மனிதர்களின் நிகழ்கால இறைபற்றிய நிகழ்வுகள் மிகவும் இழிவான செயலாக இருக்கிறது.

   இதன் தீர்ப்பு தினங்கள் ஒட்டு மொத்த மானிடர்களுக்கும் நெருங்கி விட்டதையே காட்டுகிறது.

   இறைபயம் இல்லாத இறைவணக்கம் தொகை நிரப்பப்பட்டு கையெழுத்து போடப்படாத காசோலை போன்றதே...
   மீண்டும் நன்றி ஜி

   நீக்கு
 24. அத்திவரதர்...தமிழகத்தில் அண்மைக்காலத்தில் பெரும்பாலோனாரால் உச்சரிக்கப்ப்டட சொல். இறைவனை வைத்து இங்கு ஏமாற்றும் வேலை தொடர்வது வேதனைக்குரியதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 25. சம்பவம் செய்தி தமிழ்நாடு
  தேவகோட்டையில் 140 சவரன் கொள்ளை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவகோட்டையில் கிலோக் கணக்கில் தங்கம் இருக்கிறது 140 சவரன் ஜுஜூபி ஐயா.

   நீக்கு
 26. ஆதங்கம்.... இங்கே மனிதர்களின் ஆசை அளவில்லாமல் இருக்கிறது - எல்லா மதம் சார்ந்த மனிதர்களும் பக்தியை வியாபாரமாகவே பார்க்கிறார்கள்.

  பணம் கிடைத்தால் எதையும் செய்யத் தயாராக இருக்கும் பலர் இங்கே இருக்கிறார்கள். அவற்றை நாம் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை கில்லர்ஜி. மாற்றம் அவர்களுக்காகத் தோன்றினால் தான் உண்டு.

  தமிழகம் வந்திருந்ததால் இணையம் பக்கம் வர இயலவில்லை. எனவே தான் இங்கே தாமதமான வருகை. தில்லி திரும்பி விட்டேன். இனிமேல் தொடர்ந்து வலைப்பக்கம் வருவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை அழகாக பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 27. உலகில் கடவுள் என்பதே ஒரு கற்பனை கதாபாத்திரம் .... இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்...

  பதிலளிநீக்கு