தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 01, 2019

சோமனூர், சோம்பேறி சோமுசோமு இவனொரு சோம்பேறி எப்படியோ டிகிரிவரை படித்து விட்டான் ஒரு வேலைக்கும் போகமாட்டான். முதலில் வேலை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளக்கூட முயன்றதில்லை இன்று வரையிலும். எல்லாவற்றுக்கும் சோம்பல் படுவான் அவனது அம்மா அலமேலு ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து பரம்பரை சொத்து ஏராளமாக இருப்பதை காரணம் சொல்லியே மகனை இந்நிலைக்கு கொண்டு வந்து விட்டாள்.

தேவகோட்டையில்கூட பல ஏக்கர் நிலங்கள் பாட்டனார் காலத்திலிருந்து அப்படியே கிடக்கிறது. அங்கு விமான நிலையம் அமைத்திட நிலம் கேட்டு பி.பி.எஸ். அரசு அலமேலு குடும்பத்தாரிடம் பேசிக்கொண்டு வருவதாக செவிவழிச்செய்தி. இவ்வளவு சொத்து இருந்தும் அலமேலுவின் கணவர் சுந்தரமூர்த்தி ஓடியாடி உழைத்துக் கொண்டுதான் இருப்பார். மகனை இப்படி சோம்பேறி ஆக்கி விட்டாளே... என்று வேதனைப்படுவார். இதனாலேயே கணவர் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். வயது இருபத்து ஐந்தை கடந்தும் இன்னும் சோறு ஊட்டி விடுவாள் இல்லையென்றால் வேண்டாமென்று உறங்கி விடுவான். சாதாரணமாக சோமு வாழைப்பழத்தை எடுத்து சாப்பிடுடா என்று அம்மா சொன்னால் உறித்துக்கொடு என்று சொல்வான் சரியென்று அவளும் உறித்துக் கொடுத்தால் ‘’ஆ...’’ என்று வாயைப் பிளப்பான்.

ஏண்டி இப்படி ஊட்டி விடுறியே... நாளைக்கு இவனுக்கு கல்யாணம் ஆனால் அதுக்கு சரியா வருவானாடீ... ?
ஏன் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலையா ? உங்க பிள்ளை உங்களை மாதிரித்தான் இருக்கும்.
ஏண்டி எனக்கும், இவனுக்கும் சரியா ?
நீங்க மட்டும் ரொம்ப ஒழுங்கு ஆறுவயசு வரைக்கும் பால் குடிச்சுக்கிட்டு நின்னது மறந்து போச்சோ... ?
இதெல்லாம் உனக்கு எப்படிடீ தெரியும் ?
எல்லாம் உங்க அம்மாக்காரவுக சொல்லிட்டாக விதை ஒன்னு போட்டா... சொரை ஒன்னா முளைக்கும் ?

இப்படியே சுந்தரமூர்த்தியின் வாயை அடைத்து விடுவாள் அலமேலு, அவரும் இருபது வருஷத்துக்கு முன்பே போய்ச்சேர்ந்த தனது தாயாரை மனதுக்குள் திட்டி விட்டு வெளியேறி விடுவார் காலம் உருண்டோட ஒருநாள் கணவனிடம் கேட்டாள் அலமேலு.

ஏங்க இப்படியே இருந்தால் என்ன அர்த்தம்... நம்ம சோமுவுக்கு கல்யாணம் செய்ய வேண்டாமா ?
இந்த சோம்பேறிக்கு எவன்டி பொண்ணு கொடுப்பான் ?
அதுக்காக இப்படியே கல்யாணம் செய்யாமல் இருக்கிறதா ?
இவன் எதுக்கும் லாயக்கில்லை, ஒரு பொண்ணு வாழ்க்கையை பாழாக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை. நாளைக்கு கல்யாணம் முடிச்சாலும் கூலிக்கு ஆளு விடுவான் போல... என்னை விடு ஆத்தா..
என்ன பேச்சு பேசுறீங்க கூறுகெட்டதனமா நீங்க கதைக்கு ஆக மாட்டீங்க நாளைக்கே பொண்ணு பார்க்க கிளம்புறேன்.

என்று கோதாவில் குதித்தாள் அலமேலு அனேகமாக உங்கள் ஊர்ப்பக்கமும் வந்தாலும் வரலாம் ஒரு(க்)கால் பொண்ணு இருந்தால் நீங்களும் அலமேலுவுக்கு உதவலாமே...

சாம்பசிவம்-
ஒரு கால் பெண்ணா... ?

Chivas Regal சிவசம்போ-
வாழைப்பழ சோம்பேறின்னு சொல்றது இப்படி ஆளுகளைத்தானா... ?

காணொளி

58 கருத்துகள்:

 1. தேவகோட்டைக்காரர் இவ்வளவு சோம்பேறியா? அவருக்கு பொண் வெளி இடத்திலிருந்துதான் வரணுமா? இது டூ மச் ஆசையாவுல இருக்கு. அதுக்குப் பேசாம 'வீட்டுக்கு வேலைக்காரி தேவை' னு விளம்பரம் கொடுத்திருக்கலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே இவன் சோமனூர்க்காரன், தேவகோட்டையில் பரம்பரை சொத்து கிடக்கிறது. தேவகோட்டையர்கள் தேனீ போன்றவர்கள் (பெரியகுளம் ஏரியாவுக்கு போயிடாதீங்க)

   நீக்கு
  2. நோஓஓஓஓஓஓஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெல்லைத்தமிழன். இப்போதெல்லாம் அதிராவால மீ த 1ஸ்ட்டாக வரமுடியாமலே போய் விட்டது.. எல்லாப் புகழும் கில்லர்ஜிக்கே:))

   நீக்கு
 2. குழந்தைகளை தாய்தான் வளர்க்கிறா. அதுல அப்பாவுக்கு ஒரு வேலையும் இல்லை.

  அதுனால, நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னா, ஒரு பையனோ பெண்ணோ சரியா நடந்துக்கலை, சுறுசுறுப்பா இல்லை, நல்லா மத்தவங்கள்ட பிஹேவ் பண்ணலை என்றெல்லாம் இருந்தால், அவன்/அவளோட தாயைத்தான் குறைசொல்லணும். அப்பாவி அப்பாவை இல்லை என்று சொல்றீங்க.

  இது ஒத்துக்கொள்ளக்கூடிய கருத்து தான். ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...
   அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே...

   சாதித்து வந்தால் என் பிள்ளையை பாரு... என்றும், தவறு செய்து வந்தால் உன் பிள்ளையை பார்த்தியா... என்றும் மனைவியை கேட்பவர் பலர் உண்டு நண்பரே...

   நீக்கு
  2. இல்லை, நல்லா மத்தவங்கள்ட பிஹேவ் பண்ணலை என்றெல்லாம் இருந்தால், அவன்/அவளோட தாயைத்தான் குறைசொல்லணும். அப்பாவி அப்பாவை இல்லை என்று சொல்றீங்க.///////

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... நெல்லைத்தமிழன் உடனடியாக கொஞ்சம் தேம்ஸ்கரைக்கு வரவும்:))

   நீக்கு
  3. ஜேம்ஸ் ஊரணிக்கு கேட் போடணும்.

   நீக்கு
 3. இது என்ன ஜி கதையா?

  வேலைக்கு போகாட்டி என்ன இவ்வளவு சொத்து இருக்குல்ல? பொண்ணு இருந்தா கொடுத்துடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஹா.. ஹா.. அலமேலுவிடம் சொல்கிறேன்.

   நீக்கு
  2. சிவகங்கை மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிடும் குடும்பங்கள் எனக்குத் தெரிந்து பலரும் இருக்கின்றார்கள். இந்தத் தலைப்பு ரொம்ப கிளுகிளுப்பாக இருக்கிறது நண்பா. படம் நீங்க ஒரு அர்த்தத்தில் போட்டு இருக்கீங்க. எனக்கு வேறுவிதமாக தெரிகின்றது. ஹாஹா

   நீக்கு
  3. வருக நண்பரே ப.சி. குடும்பத்தை சொல்லலையே...
   ஹா.. ஹா.. ஹா.. வாழைப்பழம் ஒரே அர்த்தமாக இருக்கட்டும்.

   நீக்கு
 4. ஹா ஹா ஹா கடசி வசனத்தில் பொருட்பிழை இருக்கிறது கில்லர்ஜி:)).

  ஒருக்கால் பொண்ணு இருந்தால் என வரக்கூடா:)).. பொண்ணு இருந்தால் ஒருக்கால் சொல்லி அனுப்புங்கோ இப்பூடி வரோணும்:)) இருப்பினும் இந்த ஒருக்கால்:)) க்கு எனக்கு ரோயல்டி டேவைஐஐஐஐஐஐஐஐ:)) அது என் கொப்பி ரைட் ஆக்கும்ம்ம்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு(க்)கால் இதில் இரண்டு அர்த்தம் தந்து இருக்கிறேன்.

   நீக்கு
 5. பொண்ணு பார்க்கும் படலம் தொடருமோ?:).. வேணுமெண்டால் ஸ்ரீ சிவசம்போ அங்கிளைக்கூட்டிப் போங்கோ:).

  வாழைப்பழம் என்றதும் எனக்கு நினைவுக்கு வருது.. என் கணவரின் சித்தப்பா வீட்டுக்கு அடிக்கடி போய்த் தங்குவோம் ஊரில்.. அப்போ சித்தப்பாவின் மகள்.. கணவருக்கு தங்கை.. எப்பவுமே சாப்பிடும் போது வாழைப்பழத்தை எடுத்து உரிச்சே தருவார் கணவருக்கும் கொடுத்து எனக்கும் அண்ணி சாப்பிடுங்கோ என உரிச்சுத்தருவா.. அது நினைவு வந்தது.. அப்போ அதிரா சோம்பேறியா கர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க அங்கிள் அவர் விலாவிட்டு போயிருவாரே...

   //அப்போ அதிரா சோம்பேறி//
   உண்மையை ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
  2. //அப்போ அதிரா சோம்பேறியா?// - அப்போ மட்டும் இல்லை என்று சொல்லிக்கறேன். அடுத்த இடுகை இன்னும் வரலை (அரியதரம்)

   நீக்கு
  3. நான் எப்போ சொன்னேன் இப்படி சொன்னால் சரியா இருக்கும் என்றுதான் சொன்னேன்.

   நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன நடக்குது இங்கின:)... ஒராளுக்கு இனிப்பு தேவைப்படுதுபோல:)... நில்லுங்கோ அதிரா சோம்பேறியா இல்லையா என்பது நாளை தெரியவரும்:)... நாளைக்குப் பாரணை எல்லோ:).... அதிரா நாளைக்கு சாப்பிடப்போறேன்ன்ன்ன் டும் டும் டும்:)

   நீக்கு
  5. ஹலோ நான் சொல்லவில்லை நெல்லையார்தான் சொல்லி இருக்கிறார்.

   நீக்கு
 6. கதை தொடருமா? சோமனூர் சோம்பேறிக்குக் கல்யாணம் வரை போகுமா? அம்மாக்காரியை மருமகள் வந்து, "இப்படி வளர்த்திருக்கியே பிள்ளையை!" எனக் கேள்வி கேட்டுக் கணவனை மாத்துவாளா? நம்பிக்கையுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நான் எப்போ தொடரும்'னு சொன்னேன் ?

   வேண்டுமானால் குவைத் ஜி தொடரட்டும்...

   நீக்கு
 7. வாழைப்பழ சோம்பேறி என்று சொல்வதா?
  அம்மாவை அன்பாய் பழத்தை உரித்து ஊட்டி விட சொன்னால்.

  காணொளி அம்மாவும் குழந்தைக்கு பழத்தை உரித்து தருகிறாரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ காணொளியில் ஊட்டுவது தவறில்லையே... அது குழந்தை.

   நீக்கு
 8. காணொளியில் சின்னக்குழந்தை , அலமேலு அவர்கள் மகன் வளர்ந்த குழந்தை அந்த அம்மாவுக்கு.

  பதிலளிநீக்கு
 9. சோம்பல் ஆபத்தானது உணர்த்தி விட்டீர்கள் https://ennathuli.blogspot.com/?m=1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோம்பல் ஆபத்து மட்டுமல்ல வாழ்க்கைப்பாதையை மாற்றி விடும் வல்லமை வாய்ந்தது நண்பரே...

   நீக்கு
 10. என்ன..........  இப்படி பொசுக்குன்னு கதைய நிறுத்திப் போட்டீக...   சோமுவுக்கு கண்ணாலம் ஆச்சாமா இல்லையாமா? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலமேலு பெண் பார்க்கத் தொடங்கியாச்சு ஜி.

   நீக்கு
 11. கல்யாணம் முடிச்சாலும் கூலிக்கு ஆள் விடுவாள்....மிகவும் குறும்பு உங்களுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது சுந்தரமூர்த்தி சொன்னது நான் பொருப்பாளி அல்ல!

   நீக்கு
 12. உரிச்சிக் கொடுக்கப் பக்கத்தில் யாரும் இல்லேன்னா தோலோடு ஒரு சீப்புப் பழத்தை விழுங்குற ஒரு குண்டுப் பொண்ணு இருக்கு. அலமேலுகிட்ட என் போன் நம்பரைக் குடுத்து வைங்க கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நண்பரே வாட்ஸ்-ஆப்'பில் அனுப்பி விட்டேன் அலமேலு விரைவில் நாமக்கல் வரலாம்.

   நீக்கு
 13. அலமேலுக்கு இனிமேல் தான் சனிப்பெயர்ச்சி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சோமுவுக்கு வியாழநோக்கமும் வந்தால் சரிதான்.

   நீக்கு
 14. /நாளைக்கு கல்யாணம் முடிச்சாலும் கூலிக்கு ஆள் விடுவான்போலிருக்கே/ஸ்ரீராம்சொல்வது போல் அபுரி

  பதிலளிநீக்கு
 15. ஹாஹா... இப்படி நிறைய சோம்பேறிகள் இப்பொழுது....

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  சோம்பேறி சோமு கதை நன்றாக இருக்கிறது ஏதோ ஒரு படத்தில் நாகேஷ் சொல்கிற மாதிரி "எந்தெந்த பாகத்திலே என்ன விட்டமின் இருக்கோ.. யாரு கண்டா?" என்றபடி வாழைப்பழத்தை தோலோடு சாப்பிடுவார். அப்போதே அந்த கண்டுபிடிப்பு வந்திருந்த போது இப்போது கேட்கவே வேண்டாம்...! சோம்பேறிகளுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.

  அலமேலு தேடி கண்டு பிடிப்பதற்குள் சோமு தானே ஒருகால் பெண்ணைத் தேடி சுறுசுறுப்பாய் கல்யாணத்திற்கு தயாராகி விட்டால்... அப்படியும் நடக்கட்டுமே..! இல்லையா?
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்துரை இட்டீர்கள் சரி....

   இந்த சோம்பேறியா... காதலித்து ஒருத்தியை கைப்பிடிக்கப் போகிறது ? அதற்கும் யாராவது உதவினால் (ஒரு(க்)கால்) நடக்கலாம்.

   நீக்கு
 17. எத்தனை வயதானாலும் அம்மாவுக்கு பிள்ளைதானே. இங்கிருந்து எங்களுக்கு தெரிந்த ஒருவர் ஊருக்கு போய்வருவார். அம்மாவுக்கு(அவரின்) வயது 75 இப்பவும் ஊட்டிவிடுவா தன் கையால்.(சமைத்ததை) திருமணம் ஆன பின் சோம்பேறியானவர்களை என்ன செய்வது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 18. விதை ஒன்னு போட்டா..சொரை ஒன்னா முளைக்கும்...அப்படீன்னா....???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த விதையை விதைத்தோமோ
   அந்த விதை தான் முளைக்கும் என்பது...

   அவரைக் கொடியில்
   அகத்திக் கீரை தழைக்குமா!....

   நீக்கு
  2. எப்படியோ சீக்கிரம் நிச்சயம் ஆகட்டும்...
   கல்யாண சாப்பாடும் போடட்டும்....

   நீக்கு
  3. வாங்க நண்பரே இது தெரிந்தால் நான் ஏன் மோடியை பிரதமராக்கப் போறேன்.

   நீக்கு
  4. வாங்க ஜி கல்யாணம் நடந்தால் 18 வகை கூட்டுகளுடன் விருந்து உண்டு.

   நீக்கு
 19. வாழைப்பழ சோம்பேறியாக இருப்பவர்கள். எப்போதும் சோம்பேறிகளாக இருக்கமாட்டார்கள். அவர்கள் காரிய சோம்பேறிகள். எனவே சோமுவைப்பற்றி கவலை வேண்டாம். அலமேலுவிடம் சொல்லி மணமகள் தேவை என விளம்பரம் தர சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆம் காரியவாதிகளும் உண்டுதான்.

   நீக்கு
 20. அன்பின் ஜி..
  தங்களது பதிவுக்குக் கைத்தொலைபேசி வழியாக இடும் கருத்துரைகள் எங்கே செல்கின்றன?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பிள்ளையார்பட்டி சென்றிருந்தேன் இப்பொழுதுதான் திறந்தேன்.

   நீக்கு
 21. நீங்கள் கதை தொடரும் என்று போடவில்லை ஆனால் முடித்த விதம் என்னவோ அடுத்த பாகம் வரும் போல தோனுகிறதே .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அலமேலுவின் தேடுதல் தொடங்கி விட்டது இதுவே முடிவு.

   நீக்கு
 22. இப்படிப்பட்ட ஆட்களுக்கு 'பன்' னு கேட்டா கொடுக்கலாம் 'பெண்'ணு கேட்டா எப்படி கொடுக்குறது. அப்புறமா வாழைப்பழத்தை உரிக்கிற வேலையையும் நமக்கே தந்துடப் போறாங்க!!... I am எஸ்கேப் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே பன் கொடுத்தாலும் பிய்த்து கேட்பானோ ?

   நீக்கு