தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 19, 2019

குயிலகம் (1)ந்த நடுத்தர வர்க்கமான வீடு சந்தோஷத்தில் குளிதித்துக் இருந்தது காரணம் ஜனனியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை முகிலனோடு முறையாக வந்து பந்துக்களோடு ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றார்கள். முகிலன் டி.சி..சி வங்கியில் மேலாளராக நல்லதொரு சம்பளத்தில் இருக்கிறான் அழகானவன் அவனுடைய மீசையை ஒரு சாயலில் பார்க்கும்போது வலைப்பதிவர் கில்லர்ஜியைப் போலவே இருப்பான்.

(அப்படீனாக்கா மறு சாயலில் யார் மாதிரி இருப்பான் ? என்று அதிரா போன்றவர்கள் குதர்க்கமாக கேள்வி கேட்ககூடாது காரணம் பிக்பாஸ் டீலர் போல தத்துவம் சொன்னால் ரசிக்கணும்)

ஜனனியும் ஒரு சாயலில் ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித் மாதிரி அழகாகவே இருப்பாள் பி.காம் படித்து விட்டு வீட்டில்தான் இருக்கிறாள் முகத்தில் மஞ்சள் பூசியதில் மஞ்சள் நிலவாக ஜொலித்தாள் குறிப்பாக உதட்டில் பெயிண்ட் அடிக்காமல் இயல்பாக ரோஜா நிறத்தில் வைத்து இருந்தாள் அதேபோல் கவரிங் நகைகளை போட்டுக் கொண்டு பிறர் கண்ணை உறுத்தாமல் இரண்டு தங்கச்சங்கிலிகளோடு, காதில் பழங்கால ராட்டிணம் போன்ற தோடு ஆடிக்கொண்டு இருந்தது ரசிக்க வைத்தது. சுடிதார் பாவையாக வராமல் சாதாரண நீல நிறத்தில் வானவில் போன்ற டிசைனில் அழகாகவே நேர்த்தியாகவே புடவை உடுத்தி இருந்தாள் கை வைத்த ஜாக்கெட்டில் பப்பு வைத்து தைத்து இருந்தது பின்புறத்தில் முதுகை முழுவதுமாக மறைத்து இருந்ததோடு உள்ளாடைகள் தெரியாத வகையில் கண்ணியமாக உடை உடுத்தி இருந்தாள் இத்தனையும் முகிலன் நுண்ணியமாக கவனிக்க காரணம் (கில்லர்ஜி அல்ல) இவனது ரசனையை ஒத்து இருந்தாள். முகத்தில் மகிழ்ச்சி இருந்தது அதேநேரம் அவளிடம் சற்று நாணமும் இருந்ததை முகிலன் கவனிக்க தவறவில்லை மனதில் 90% இவள் நமக்கு சரியானவள் என்று தீர்மானித்து விட்டான்.

காரணம் இக்கால பெண்களிடத்தில் காண இயலாத பல விசயங்கள் ஜனனியிடம் இருந்ததே... மேலும் கௌரவமான குடும்பம் என்பது பல வகையான விசாரிப்புகளில் ஏற்கனவே தீர்மானமாக தெரிந்த விசயம் பெண்ணுக்கு இரண்டு அண்ணன்கள் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி கூட்டுக் குடும்பமாகவே வசிக்கின்றனர் ஒரேயொரு தம்பியும் படித்துக் கொண்டு இருக்கிறான். பாவம் பேச்சுத்துணைக்கு கொழுந்தியாள்தான் இல்லை இவர்கள் இருவருமே நீண்ட இடைவெளி விட்டு பிறந்தவர்கள் மீதம் 10% இனிமேல் நடக்கும் பேச்சில்தான் உறுதியாகப் போகிறது
பெண் வீட்டாரில் பலரும் முகிலனை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டு இருந்தனர் கூட்டத்தில் வெள்ளி மீசையை முறுக்கியபடி அமர்ந்திருந்த பெருசுவின் காதில் ஜனனியின் அப்பா தேவநாதன் ஏதோ திவிட, பெருசு பேச்சை தொடங்கி வைத்தது.

பொருத்தம் ஏற்கனவே பார்த்து பேசியாச்சு ஒன்பது பொருத்தம் இருக்குது மாப்பிள்ளையை எங்க எல்லோருக்கும் புடிச்சுப் போச்சு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சம்மதம் சொல்லிட்டா, அடுத்து பேச வேண்டியதை பேசிடலாம். பேத்தியா முகத்தை பார்த்தால் அதுக்கும் சந்தோஷமாத்தான் இருக்கும் போல... இருந்தாலும் ஒரு வார்த்தை பொதுவுல வச்சே கேட்போம் ஏத்தா ஜனனி உனக்கு முழு சம்மதம்தானே... ?
ஜனனி தலையை குனிந்து கொண்டு இருந்தாள் முகத்தில் வெட்கத்தின் பூமத்திய ரேகை பரவி இருந்தது தண்டட்டி போட்டிருந்த கிவி அதட்டிக் கேட்டது

சொல்லுடி இப்ப எல்லாம் சம்மதம் கேட்காமல் முடிவு சொல்ல முடியாது
ஜனனி தலை ஆட்டினாள் எல்லோருக்கும் மகிழ்ச்சி குறிப்பாக தேவநாதனின் மனைவி மரகதவள்ளிக்கு..
. வேற என்ன மாப்பிள்ளை கிட்டே ஒரு வார்த்தை கேட்ருங்க..

எல்லோரும் முகிலனின் அப்பா மந்திரமூர்த்தியையே பார்க்க... அவர் தனது மீசையை சற்றே நீவியவாறே... மனைவி மல்லிகாவை பார்த்தார் உடனே..
முகில் உன்னோட சம்மதம்தான் எங்களுக்கு முக்கியம் அப்பாவுக்கு புடிச்சு இருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம் சற்றே சன்னமான குரலில் சொன்னாள் பிறகு எல்லோரும் மாப்பிள்ளையை பார்க்க...

முகிலன் பேச ஆரம்பித்தான்...
எல்லோருக்கும் வணக்கம் எனக்கு பெண் கொடுக்குறதுல உங்கள் எல்லோருக்கும் விருப்பம் இருக்கு இந்தப் பெண்ணுக்கும், என்னைக் கல்யாணம் செய்துக்கிறதுல சம்மதம் ரொம்ப மகிழ்ச்சி அதோடு எனது அப்பா, அம்மாவுக்கும், இதோ எனது தம்பிக்கும் சந்தோஷம் இதோட எனக்கும் ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சி.

சட சட என்று கூடி இருந்தவர்கள் சற்றே பலமாக கை தட்டி தங்களது மகிழ்ச்சியை காட்டியது ஏதோ அரசியல் கூட்டம் நடப்பது போன்ற சூழலை காட்டியது

சற்று அமைதியாக இருந்த முகிலன் மீண்டும் ஆரம்பித்தான்
நான் உங்க பெண்ணிடம் கொஞ்சம் பேசணும், சில கேள்விகள் கேட்கணும்
கூட்டத்தில் எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் தேவநாதன் மௌனத்தை கலைத்தார்.

இல்லை தம்பி எங்க குடும்பத்துல பெண்ணை தனியாக பேச விட்டது கிடையாது அதான்....
தேவநாதா எந்தக் காலத்துல இருக்கே நீ ? காலம் மாறிப்போச்சப்பா நம்ம காலம் மாதிரி இல்லை ரெண்டு வார்த்தை போயி பேசிட்டு வரட்டுமே...

இருங்க அவசரப்படாதீங்க நான் உங்க பெண்ணுகிட்டே தனியா பேசணும்னு சொல்லலையே.. இதே இடத்தில் எல்லோரையும் வச்சுதான் பேசப்போறேன்

மீண்டும் எல்லோரும் பார்த்துக்கொள்ள ஜனனியும் சற்றே நிமிர்ந்து முகிலனை பார்த்தாள் முகிலன் தொடர்ந்தான்....
கல்யாணத்துக்கு முன்னாலயே ஒரு பெண்ணோட பேசுறதை இந்த இடத்தில் எங்க அம்மா, அப்பாவே ஏற்றுக்கொள்ள மாட்டாங்க உங்க பெண்ணை எனக்கு கட்டிக் கொடுக்க சம்மதித்தும் என்னோடு தனியாக பேச அனுமதிக்க தயங்குறீங்களே... இதனால நான் கோபப்படலை சந்தோஷம்தான் காரணம் உங்க பெண்ணை கண்ணியமாகத்தான் வளர்த்து இருங்கீங்க மகிழ்ச்சி நான் பேசலாமா ?
தேவநாதன் மரகதவள்ளியை பார்த்துக் கொண்டே மிரட்சியாய் தலையாட்டினார்...

தொடரும்...

63 கருத்துகள்:

 1. தொடருமா? நீண்ட தொடரா? ஜமாய்ங்க.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  கதை நன்றாகப் போகிறது. காலம் மாறி விட்டது. இப்போதெல்லாம் முன்பு போலில்லாமல், மாப்பிள்ளையும், பொண்ணும் பெண் பார்க்கும் நாளிலிருந்து பேச ஆரம்பித்து முடிவும் ஆகி விட்டால், திருமணம் வரை ஃபோனில் பேசிக் கொள்கின்றனர். இடையில் இருவரும் சேர்ந்து திருமண வைபவங்களுக்கு புடவை நகை எடுப்பது என்று வேறு சென்று வருகின்றனர். இப்படிப்பட்ட காலத்திலும் கதையில், தன் மகளை தனியாக பேச விட மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லுமிடம் கொஞ்சம் பழைய காலத்தை கண் முன்பு கொண்டு வந்து நிறைவை தருகிறது கதையில் மாப்பிள்ளைக்கும் அந்த கண்டிப்பு பிடித்து விட்டது. அப்படியும் மேலும் அவர் பெண்ணிடம் என்ன பேசப் போகிறார் என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். தொடருங்கள். தொடர்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது ழிரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
  2. //திருமணம் வரை பேசிக்கொண்டிருக்கின்றனர்// - அப்புறம் பெண் மட்டும்தான் பேசுவாள். கணவன் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் நடித்துக்கொண்டிருப்பான். இப்படி முடிப்பீங்கன்னு நினைத்தேன் க.ஹ மேடம்.

   நீக்கு
  3. ஹா. ஹா. ஹா. தாங்கள் சொல்வதும் உண்மைதான்..நெல்லைத் தமிழர் சகோதரரே..! மாதக்கணக்கில், (அதுவும் தினமும் தொடர்ந்து கைப்பேசியில்) கேட்டு, கேட்டு கேட்கும் திறன் சற்று குறைவான பின் கேட்பது போல் நடித்துதானே ஆக வேண்டும். வேறு வழி..?

   நீக்கு
 3. அப்படீனாக்கா மறு சாயலில் யார் மாதிரி இருப்பான் ? என்று அதிரா போன்றவர்கள் குதர்க்கமாக கேள்வி கேட்ககூடாது/////

  நேராகப் பார்த்தால் அவர் ஆரைப்போல இருப்பார் கில்லர்ஜி:).... இப்பூடிக் கேய்க்கலாம்தானே:)... பேரக்குழந்தை உங்களோடு வெளாடோணும் எனில் மீசையை எடுத்துத்தான் ஆகோணும்:).. அதைவிட்டுப்போட்டு இன்னும் மீசைப்புராணமே பாடிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீசை மீது கண் வைக்கிறவுங்க உலக அளவில் பெருகி விட்டார்கள் இப்பொழுதே இன்சூரன்ஸ் செய்யப் போகிறேன்.

   நீக்கு
 4. பேசலைனாத் தான் இந்தக் காலத்தில் நாகரிகம் இல்லை என்பார்கள். ஆனாலும் எல்லோர் எதிரிலும் பேசப் போகிறேன் என்று சொல்லி இருப்பதால் என்ன கேட்கப் போகிறார் என ஊகிக்கணும். நான் என்ன நினைக்கிறேன் என்றால் கல்யாணம் ஆனதும் தனிக்குடித்தனம் போக மாட்டேன் என்று சொல்லப் போகிறாரோ எனத் தான் நினைக்கிறேன். பார்க்கலாம். தொடராக் கொண்டு போயிட்டீங்க! இனி எப்போ வரும்னு காத்திருக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரை ஒப்பிடுகிறதா ? என்பதை விரைவில் காண்போம்.

   நீக்கு
 5. குயிலகம் பெயர் நல்லா இருக்கு. எனக்கு பாரதியாரின் குயில் பாட்டு நினைவில் வந்தது.

  பதிலளிநீக்கு
 6. இத்தனையும் முகிலன் நுண்ணியமாக கவனிக்க காரணம் (கில்லர்ஜி அல்ல////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... மொத்தத்தில ஒரு பெண்ணின் அழகையும், உடையையும், நகையையும் வச்சே முடிவெடுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)... அப்போ இத்தனையும் இருந்து, நல்ல குணம் இல்லாட்டில் ஓடிப்போய் உங்கட தேம்ஸ் ஊரணியில் குதிப்பீங்களோ:).....

  எனக்கு பிபி ஏறுது:)... எதுக்கும் மிகுதியைப் படிப்போம்ம்... பெல் வேறு அடிக்கப்போகுதே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை சொன்னேன்.
   படிச்சுட்டு வாங்க...

   நீக்கு
 7. இல்லை தம்பி எங்க குடும்பத்துல பெண்ணை தனியாக பேச விட்டது கிடையாது அதான்..../////

  சூப்பர் இப்பூடித்தான் ஜொள்ளோணும்:) பெண் மட்டும் ஆதிகால ஸ்டைல்ல சாறி எல்லாம் உடுத்து வேணுமாம் ஆனா இந்தக் காலத்து ஸ்டைலில் தனியாப் பேசோணுமாம் கர்ர்ர்ர்ர்ர் விடுவமோ நாங்க:)... அதெல்லாம் தனியாப் பேச முடியாது:).... ஹா ஹா

  இப்பூடித்தான் என் கணவரின் நண்பருக்கும் நடந்தது... நிறைய சீதனம் அள்ளிக் கொடுத்து( அவரும் டொக்டர்) பெண் பார்க்க ஓகேயா இருந்தா, ஆனா தனியே பேச விடவில்லை:)... திருமணமாகி 3 ம் நாள் அவருக்கு தோளில் பலத்த கடி கடிச்சுப் போட்டா.... அவவுக்கு முற்றியநிலை மனநோயாம்.... டொக்டர்தானே தாலி கட்டிட்டால் பார்த்துக் கொள்வார் என நினைச்சிருக்கினம்.. 3,4 அண்ணனாட்களுக்கு ஒரே தங்கையாம் இவ.... மிகுதிக்கு பின்பு வாறேன்ன்ன்ன்ன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கணவரது நண்பர் பாவம்தான்.

   நீக்கு
  2. என் அலுவலக நண்பருக்கு (எனக்குக் கீழே வேலை பார்த்துக்கொண்டிருந்த மலையாளி, எனக்கு நல்ல நண்பன்) நடந்த கதை இன்னும் விநோதம். மனநிலை சரியில்லாத பெண்ணை (அவள் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறாள். அதனால் வித்தியாசம் தெரியலை), அந்த ஊருக்கு திருமணத்துக்குப் பின் கூட்டிவந்து, கணவனுக்குத் தெரியக்கூடாதே என்றோ இல்லை மருந்து ஸ்டாக் இல்லையோ என்ன காரணம்னு தெரியலை... சில நாட்கள் மருந்து எடுத்துக்கொள்ளாமல், நடு இரவு, மேல் மாடிக்குப் போய் அங்கிருந்து கீழே குதித்துவிட்டாள் (ரோமன் கேதலிக்). இடுப்பு எலும்பு பொடியாகி, மயக்கமாயிட்டா. இவனுக்கு என்ன நடந்தது என்றே தெரியலை. போலீஸ் வந்து இவனை அரெஸ்ட் பண்ணி (அன்று இரவே) உள்ள வச்சிடுச்சு. அந்தப் பெண் அரசு ஹாஸ்பிடலில் சேர்த்து, இவனது நல்ல காலம் 8-10 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து (இடுப்பு எலும்புகள் போனதுபோனதுதான்.. படுக்கைலதான் இருந்தாள்), கணவன் காரணம் இல்லைனு சொல்லிட்டாள். நானோ இவனைக் காணோமே என்று நினைத்தால், மதியம் எனக்கு போன் பண்ணி, உடனே ஒரு இடத்துக்கு வரச் சொல்லி, எல்லாவற்றையும் சொன்னான். அவள் உண்மையைச் சொன்னது அவனது நல்ல நேரம். அவள் ஒருவேளை இறந்திருந்தால், இவன் ஆயுளுக்கும் ஜெயில்லதான் இருக்கணும். அப்புறம் நல்லதனமா இவன் நல்ல முகத்தோடு அவள்ட இருந்து, அவள் மூவ் பண்ணும் நிலைக்கோ இல்லை அப்படியே படுத்த படுக்கையாவோ இந்தியாவுக்குக் கூட்டிச் சென்று அவளை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, தப்பித்தோம்னு ஓடி வந்துவிட்டான். ஆர்.சி. என்பதால் 6 மாதங்கள், அவர்கள் பக்க ஒத்துழைப்புடன் நிறைய நடைமுறைகளைத் தாண்டி, இவனுக்கு விவாகரத்து ஆனது

   நீக்கு
  3. ஹலோ மியாவ் ..அப்புறம் அந்த டாக்டருக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க அதுவும் முதல் நாள் கடிக்காம மூணாவது நாள் கடிச்சதேன் ????
   சேசே இந்த இலக்கிய கம்மல் கூட சேர்ந்து நமக்கும் டவுட்டா வருதே :))))))))

   நீக்கு
  4. நெல்லைத்தமிழருக்கு...
   உங்களது நண்பரது மனைவி வீட்டில் உள்ளவர்கள் உண்மைகளை மறைத்து திருமணம் செய்தது மிகத்தவறு.

   அவள் இறந்திருந்தால் அவரது நிலை என்னாகும் ? நம்மைப் போன்று வெளிநாட்டில் வாழ்ந்தவர்களுக்கு புரியும்.

   அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தது அதைவிடத் பெரிய தவறு.

   நீக்கு
  5. ஏஞ்சல் நீங்கள் சொன்ன "இலக்கிய தும்மல்" ஹா... ஹா... ரசித்தேன்.

   நீக்கு
  6. அஞ்சு, அவர்களின் திருமணத்துக்கு நாங்க போயிருந்தோம், மணவறையிலேயே எனக்கு டவுட் வந்து என் ஹஸ் ஐக் கேட்டேன், என்ன பொம்பிளை ஒரு மாதிரி சிரிக்கிறாவே என, அதாவது தேவை இல்லா இடங்களில் சிரிச்சா, அது அப்நோர்மலாக இருந்துது.

   அது என்ன வெனில், மேலே நெ.தமிழன் சொன்ன கேஸ் எவ்வளவோ பெட்டர், இது, அவவால மருந்தை எடுத்துப் போடக்கூட மனநிலை இல்லைப்போல் தெரியுது.

   அதனால திருமணத்தன்றுவரை அண்ணனாட்கள் மருந்து குடுத்திருக்கலாம், பின்பு எப்படி மருந்து குடுப்பது?, அன்று நைட்டே ஒரு பெரிய ஹோட்டேலில் ஹனிமூன் ஒழுங்குபண்ணியாச்சு, நம் வழக்கம், திருமணம் முடிச்சபின் அன்றே ஹனிமூன் போனால், அல்லது உடனே போகாவிட்டால், அப்படியே மாப்பிள்ளை வீட்டுக்குப் போவோம்..

   அந்த வகையில் 3ம் நாள் ஹனிமூனை முடிச்சுக் கொண்டு, மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கினம், 2 நாள் மருந்து இல்லாமையால பெண்ணுக்கு வருத்தம் கூடியிருக்கு, அதனால இரவு ஒரு மாதிரி தூங்காமல் இருந்திருக்கிறா, இவர் என்னவோ கேட்க ஓடிவந்து தோளில் கடிச்சுப் போட்டாவாம், இவருக்கு உடனே புரிஞ்சுவிட்டது, சுதாகரிச்சுக் கொண்டு இருக்க, 2ம் தடவை கடிக்க வந்தாவாம், இவர் சுவருடன் தள்ளி விட்டு விட்டார்... ப்ன்பு ஒரு மூலையில் போய் பேசாமல் இருந்திட்டாவாம், இவரும் நைட் நித்திரை கொள்ளவில்லை பயத்தில், அத்தோடு வீட்டில் ஆரையும் எழுப்பவுமில்லை, நைட் என்பதால், அவருக்கு மொத்தம் 10 சகோதரங்கள் அதில் பாதி எஞ்சினியர்ஸ், கொஞ்சம் டொக்டேர்ஸ் மிகுதி அனைத்தும் பட்டதாரிகள்.. அப்படி இருந்தும் சீதன ஆசையால் இப்படி ஆகியிருக்கோ என்னமோ..

   அடுத்தநாள் மாப்பிள்ளை வீட்டில் ரிஷப்சன் வைக்க பந்தல் எல்லாம் போட்டு கார்ட் அடிச்சு அதுக்கும் பெரிய ஆரவாரம் நடந்ததாம், விடிய 4 மணிபோல வீட்டில் பெற்றோரை எழுப்பி உண்மையைச் சொல்லி, உடனே பெண்ணின் அண்ணனாட்களுக்குப் போன் பண்ணி கூட்டிப் போகச் சொல்லியாச்சு.

   அனைத்துப் புரோகிராமும் கான்சல்ட். அண்ணனாட்கள் வந்து கூட்டிப் போனார்கள் ஆனா பெண்ணுக்கு எந்த வருத்தமும் இல்லை, இது ஏதோ பயந்திட்டா எனப் போராடினார்களாம்.

   ஆனாக் கஸ்ட காலம் பாருங்கோ, எல்லாம் பிளான் பண்ணியே நடந்திருக்கு, பெண்ணுக்கு எப்போ 1ஸ்ட் நைட் நடந்தால் குழந்தை தங்குமெனப் பார்த்தே திருமண நாள் வச்சிருக்கினம், அதனால மாப்பிள்ளை தனக்கு டிவோஸ் வேணுமெனக் கேட்டபோது, வன் மந்தில் சொன்னார்கள், பெண் பிரக்னெண்ட் என... அப்போ என்ன பண்ண முடியும், இழுபட்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது, ஆனா கடசிவரை டிவோஸ் குடுக்க மறுத்து விட்டனர், பின்னர் இவர் டிவொஸ் இல்லாமல் சொந்த மச்சாளைத்திருமணம் முடிச்சதாக அறிஞ்சோம்.. பின்பு தெரியாது.

   நீக்கு
  7. எப்பொழுதுமே திருமண விசயங்களில் எதையும் மறைப்பது தவறுதான். பாவம் மாப்பிள்ளையின் நிலைப்பாடு.

   நீக்கு
 8. சுவையான தொடக்கம். தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காத்திருப்புக்கு மிக்க நன்றி நண்பரே...

   நீக்கு
 9. ஆகா...

  இப்போது குயிலகம்...
  இனியொரு மயிலகம்!....
  அருமை....அருமை...

  தொடரட்டும்ம்ம் ...

  பதிலளிநீக்கு
 10. மாப்பிள்ளையின் பேச்சைக் கேட்கக் காத்திருக்கிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் காத்திருப்புக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 11. எல்லாம் கூடி வரும் நேரம் இந்த இளையவர்கள் ஏதாவது பேசியோ, செய்தோ தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விடுவார்களோ என்று பெரியவர்களுக்கு பயமாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி யாரு கண்டா... எல்லாம் விதிப்படி நடக்கும்.

   நீக்கு
 12. கதை என்று நினைத்துப் படிக்க ஆரம்பித்தால்...... கடைசியில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... தொடருமாமே. இதை நான் எப்படி நினைவில் வைத்திருந்து ஐந்து நாட்கள் கழித்தி இன்னொரு பகுதியைப் படிப்பது?

  ஆனால் கதை நல்லாத்தான் ஆரம்பித்திருக்கிறது. மாப்பிள்ளையின் எதிர்பார்ப்பைப் பார்த்தால், கதை 25-30 வருடங்களுக்கு முன்பு நடந்திருக்கணும் என்று தோன்றுகிறது. இப்போ பொண்ணு கிடைப்பதே கஷ்டமாக இருக்கு. இதுல மாப்பிள்ளை 'தனியாப் பேசணும்... பொண்ணோட பேசணும்' என்றெல்லாம் ஆரம்பித்தால்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   இது இக்காலத்திலும் நடப்பது அதிசயம்தானே...

   நீக்கு
 13. மாப்பிள்ளைப்பையனின் பேச்சைப் பார்த்தால் (அவர் கில்லர்ஜி மனதில் உள்ள கருத்துகளைச் சொல்வதாகத்தான் எனக்குப் படுகிறது), கூட்டுக் குடும்பமா இருக்கணும், இல்லை எங்க பெற்றோரை எங்களோட வச்சுக்கணும், பெண்ணோட பெற்றோரும் எங்களோட இருக்க நினைத்தால் ஆட்சேபணையில்லை என்றெல்லாம் சொல்லுவாரோ?

  எல்லா ஆப்ஷன்களையும் கருத்துரை என்ற பேரில் நாங்கள் தாளித்துவிட்டால், பிறகு நீங்க எழுதி வச்சிருக்கும் கதையை மாத்தவேண்டியிருக்கும். ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விட்டால் கில்லர்ஜிதான் முகிலன் என்று சொல்லி விடுவீர்களோ...

   எனது குடும்பத்தில் குழப்பமாகிடும்.

   நீக்கு
 14. சுவையாக நகருகிறது
  தொடருங்கள்.
  தொடருகிறேன்

  பதிலளிநீக்கு
 15. ஹாஹா :) குதர்க்கமா யார் கேப்பா :)) எல்லாம் அந்த இலக்கிய தும்மலுக்கே இவ்ளோ சந்தேகம் வரும் .
  மாதுரி டீத்ஷிட் மஞ்சள் முகம் குடை ராட்டினம் தோடு  ..வர்ணனை நல்லா இருக்கே .அடடா என்ன பேசப்போறார் முகிலன் ..தொடர்கிறேன் 

  பதிலளிநீக்கு
 16. அப்படி என்னதான் பெண்ணிடம் கேட்கப்போறாரோ?:) சமைக்கத் தெரியுமோ என்றோ.... மீ வெயிட்டிங்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பொழுது எந்தப் பெண்ணுக்கு சமையல் தெரிகிறது ?

   நீக்கு
 17. கதை நன்றாக இருக்கிறது.பெண்பார்க்கும் படலம், பெண்ணின் உடை அலங்காரம், அவரின் உடன் பிறந்தவர்கள், பேச்சு துணைக்கு கொழுந்தியாள் இல்லா குறை விவரிப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

  கதை பேர் குயிலகம் என்பதை படிக்கும் போதுதான் கொஞ்சம் நெருடுகிறது.
  குயிலுக்கு சொந்த வீடு கிடையாதே! என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை அடுத்த பதிவில் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   கதையை அழகாக கூர்ந்து படித்தமைக்கு நன்றி.

   சில வீடுகளில் குயில் போல கூவிக்கொண்டு அழகாக, இனிமையாக, அன்பாக பேசுவார்கள்.

   இதேபோல சேரி வீடுகளில் காண இயலுமா ?

   நான் இரண்டையும் கவனித்து இருக்கிறேன். தொடர்பவமைக்கு நன்றி.

   நீக்கு
 18. இப்பதிவோடு முடிந்துவிடும் என நினைத்தால், தொடர்கதை... நல்ல சுவாரஸ்யமா இருக்கு. பெண்ணை வர்ணித்த விதம் அருமை. அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுங்கள். குயிலகம் பெயர் நல்லாயிருக்கு. வீடு(படம்) அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து தொடர்பவமைக்கு நன்றி.

   நீக்கு
 19. சுவாரஸ்யமாக இருக்கிறது. என்ன பேசப் போகிறார் என்று பார்ப்போம்

  பதிலளிநீக்கு
 20. குயிலகம் --1 என்று பார்த்ததும் தொடர் என்று தெரிந்ததுகதை எழுதுபவரின் சாய்ஸ் முடிவு தெரியாமல் கருத்து சொல்ல இயலவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 21. ஆரம்பமே விறுவிறுப்பாக களை கட்டுகிறதே. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மேடம் காத்திருப்புக்கு நன்றி.

   நீக்கு
 22. மிரட்சியாய் நானும் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...!

  தாமதத்திற்கு மன்னிக்கவும் ஜி... அது என்னவென்று உங்களுக்கு தெரியும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 23. ஆரம்பம் அருமையாக உள்ளது. முகிலன் என்ன கேட்கப்போகிறார் என அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
 24. புடவை பப் கை..அழகு...கில்லர்ஜி..அப்படியே கதை எந்த வருஷம் நடந்ததுனு சொல்லிடுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏன் இப்படிப்பட்ட ஆண்மகன் 2020-ல் இருக்ககூடாதா ?

   நீக்கு
 25. புதிய தொடரோ? மகிழ்ச்சி.
  தமிழ் விக்கிபீடியா நவம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் முயற்சி வெற்றி பெற எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

   நீக்கு
 26. மாப்பிள்ளை நம்ம கில்லர் ஜி சார் சாயலில் இருந்ததால மாதுரி தீட்சித்க்கு மாப்பிள்ளைய உடனே புடிசிப்போச்சு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதில் என்னை எதற்காக இணைக்கின்றீர்கள் ?

   நீக்கு
 27. அப்படி என்னதான் மாப்பிளை சார் கேட்டார் ...

  பதிலளிநீக்கு