தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 14, 2020

மொழியின் அழகு


மொழிகளில் பல வகைகள் உண்டு அரபு மொழி எழுத பழகுவது மிகவும் கடினமானது என்று பலரும் நினைக்கின்றார்கள். உண்மையில் வெகு சுலபமானது அரபு மொழியை தமிழர்கள் எழுத பழகி விடலாம் ஆனால் தமிழ் மொழியை அரேபியர்கள் எழுத பழகுவதுதான் கடினம். நான் ஒரு சில அரபிகளிடம் எழுதச் சொல்லி சவால் விட்டு இருக்கிறேன். அவர்களால் அவ்வளவு சுலபமாக எழுத முடியவில்லை. இதற்கு நான் தமிழில் தேர்ந்தெடுத்த எழுத்து என்ன தெரியுமா ?


‘’’’
ஆம் இ-தான் தேர்ந்தெடுத்து எழுதச் சொன்னேன் நான் இ-ஐ வெகு சுலபமாக எழுதுவதை கண்டு பிரமித்து விட்டவர்கள் பலர் நாம் தமிழ் மொழியை இடமிருந்து தொடங்கி வலதில் முடிப்போம் உலகில் பெரும்பான்மையான மொழிகளை இப்படித்தான் மனிதர்கள் அமைத்து இருக்கின்றார்கள். ஆனால் அரபு மொழியை வலமிருந்து தொடங்கி இடதில் முடிப்பார்கள் அரபு மட்டுமல்ல உருது மொழியும் இதே வகைதான் உலகில் நானறிந்து இவை இரண்டும்தான் இந்த வகை என்று கருதுகிறேன். மேலிருந்து கீழாக எழுதும் மொழிகளும் உலகில் உண்டு என்பது வேறு விடயம்.

அரபு மொழியில் எழுதும்போது வார்த்தைகளை எழுதிக் கொண்டே இழுத்துச் செல்லலாம் இதுவொரு சிறப்பு அரபு மொழிக்கு உதாரணத்துக்கு இதோ கீழே பாருங்கள்...

இவைகள் இரண்டுமே எழுதியிருப்பது ஒன்றே... சரி என்ன எழுதி இருக்கிறேன் தெரியுமா ?

كرنتاي جياكومار
دكتور. جمبولينجم
البوار

01. கரந்தை ஜெயக்குமார்
02. தொக்தோர். ஜம்புலிங்கம்
03. அல் பவார்


இவைகளை எழுதி புகைப்படங்களாக போட்டு இருப்பதற்கு காரணம் எனது கணினியில் அரபு மொழியை சுருக்கியும், நீட்டித்தும் எழுதுகிறேன் ஆனால் பதிவில் வெளியான பிறகு இரண்டுமே ஒரே போல்தான் வருகிறது ஆனால் வேர்ட் ஃபைலில் நீட்டித்த எழுத்து இருக்கிறது உங்களுக்கு வித்தியாசத்தை சரியாக காட்டவேண்டும் என்பதற்காக புகைப்படமாக போட்டு இருக்கிறேன்.

இதில் எல்லா எழுத்துகளையும் நீட்டித்து செல்ல முடியாது என்றாலும் அதிலும் சில எழுத்துகளை நீட்டித்தால்தான் அவைகள் மொழியால் அழகு பெறும் அவைகளை கண்டு கொள்வது எப்படி ? கவிதை எழுதுபவர்கள் உண்டு கவிதையில் சந்தம் தெரிந்து எழுதுபவர்களும் உண்டல்லவா... அவைகளைப் போல்தான் இவைகளும். பழகப்பழக புலிக்கும் புளியைக் கரைத்து கொடுக்கலாம். நான் ஏற்கனவே சொல்லி இருந்ததுபோல் ஆயிஷா என்ற அரபிப்பெண் எழுதும்போது எழுதுவதையே பார்த்துக் கொண்டு இருப்பேன் காரணம் பொறாமையே.... நாமும் இதைபோல் எழுத வேண்டும் என்று.... அதைப் போலவே நானும் பிற்காலத்தில் நீட்டித்து எழுதுவதை பிறர் கண்டு ரசிக்கவும் வைத்தேன் ஆனால் ஆயிஷா அல்ல காரணம் அந்தப்பெண் வேலையை ராஜினாமா செய்து விட்டு போய் விட்டது.

சரி இதன் நீட்டிப்பு எவ்வளவு தூரம் செல்லலாம் அது அடுத்த தெருவில் இருக்கும் டாஸ்மாக் கடைவரை கொண்டு செல்லலாம் தவறே இல்லை ஆனால் கடைக்குள் செல்வது தவறே... மேலே அல் பவார் என்று எழுதி இருக்கிறேன் அல்லவா அது எனது கற்பனை மட்டுமல்ல அபுதாபியில் நான் அடிக்கடி செல்லும் எஜிப்தியன் உணவகத்தின் பெயர்தான் அது அந்த கட்டடத்தின் தொடக்கம் முதல் முடிவுப்பகுதி வரை இப்படித்தான் எழுதி இருந்தார்கள் புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன் ஆனால் எந்தக் கோப்பில் இருக்கிறது என்று தெரியவில்லை ஆகவே நானே எழுதி புகைப்படம் கொடுத்துள்ளேன்.

சரி மேலே முதல் புகைப்படம் இருக்கிறதல்லவா... அதில் முதலில் இருப்பது
7up
இரண்டாவது இருப்பதும் அதேபோல் தோன்றுகிறது அல்லவா இரண்டும் ஒன்றல்ல... ஆங்கிலத்தில் இடமிருந்து வலமாக எழுதி இருப்பது 7up அடுத்து அரபு மொழியில் வலமிருந்து இடமாக எழுதி இருப்பதும் (ஸெவன்) அப் ஆம் சிவப்பு வட்டத்தில் எழுதி இருப்பது ஸெவன் தொடர்ந்து வெள்ளை நிறத்தில் ஏழாம் எண் போலவே தெரிவது ஏழு அல்ல அது அப் ஆம் இதோ...

سفن أب

ஏழாம் எண்போல் தெரிவதில் இரண்டு அரபு எழுத்துகள் உள்ளது அதுதான் அப் என்ற அரபு வார்த்தை. இப்படித்தான் அரபு மொழியில் சில அழகுகளை காணலாம் நான் கண்டு வியந்ததுண்டு அண்ணா சொன்ன மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொல்ல ஒரு துணிவும், ரசனையும் வேண்டும். அவை எமக்கு இறுதிவரை உண்டாகணும். நான் எதிரியின் நல்ல செயலை பாராட்டியதில்லை ஆனால் மனதுக்குள் வாழ்த்தியதுண்டு.

சரி இதில் ஸெவன் என்பதின் இரண்டாவது எழுத்தின் மேலே மூன்று புள்ளிகளும், அப் என்பதின் கடைசி எழுத்தின் கீழே மூன்று புள்ளிகளும் வரவில்லையே என்று நெல்லைத்தமிழர் போன்றவர்கள் குறுக்கு வினா எழுப்பக்கூடும் அவர்களுக்கான விளக்கம் இந்த இரண்டு எழுத்துகளுமே அரபு எழுதுவதில் அதிகம் உபயோகப்படாதவை அதன் காரணமாகவோ, என்னவோ அந்தப்புள்ளி எழுத்துகள் பெரும்பாலான கணினியில் இல்லை. எனது கணினியிலும் இல்லை. நான் அரேபியர்களிடம் ஸெவன் அப் என்பதை ஸஃபா போக் என்றே சொல்வேன் அதாவது ஸஃபா என்றால் ஏழு, போக் என்றால் மேலே இப்படி உல்டாவாக பேசுவது எம்மை கடைசிவரை விடவேயில்லை.


அதேபோல் இதோ மேலிருக்கும் புகைப்படத்தில் நீலநிறத்தில் எழுதி இருப்பது DUBAI என்பது தாங்கள் அறிந்ததே... அதன் உள்ளேயே சிவப்பு நிறத்தில் உள்ளது என்ன ? அதுவும் துபாய்தான் ஆம் அரபு மொழியையும் ஆங்கில மொழியையும் ஒருங்கிணைத்து அழகு படுத்தி இருப்பது Dubai Transport இப்படி உங்கள் அழகான கில்லர்ஜியின் பெயரைக்கூட மேலும் அழகு படுத்தி ஓவியம் போலவே எழுதலாம். இதோ கீழே அரபு மொழியில் துபாய்.

دبي

மீண்டும் சந்திக்கலாம் நன்றி வணக்கம் கில்லர்ஜி

60 கருத்துகள்:

 1. அரபு மொழி அழகு.

  ஆனா பாருங்க கில்லர்ஜி... நீங்க என்ன சொன்னாலும், அது சரிதான் என்று கேட்டுக்க வேண்டிய நிலைமை. எனக்கு அரபிக் தெரியாது (என்று வருத்தத்துடன் சொல்றேன். எவ்வளவு வாய்ப்பு இருந்தும் மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நீங்க என்ன சொன்னாலும். அது சரிதான் என்று கேட்டுக்க வேண்டிய நிலைமை//

   ஹா.. ஹா.. இது ஏதோ வேற மாதிரி சொல்வது போல் தெரிகிறதே...?

   நீக்கு
 2. தமிழ்மொழி சுலபம் என்று சொன்னாலும், நம்மிடம் ஏகப்பட்ட எழுத்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே ஆனாலும் இவ்வகை எண்ணிக்கை கூடுதல்களை மலையாளத்தில் சுறுக்கெழுத்து என்ற வகையில் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டது பாராட்டத்தக்கது.

   இதோ உதாரணங்கள் தமிழும், மலையாளமும் -

   மம்முட்டி - മംമുട്ടി
   மஞ்சுளா - മഞ്ഞൂള
   ஆர்ப்பாட்டம் - ആർപ്പാട്ടം
   தத்துபுத்து - തത്തുപുത്തു
   தேவகோட்டை - ദേവകോട്ട
   கட்டிடம் - കട്ടിടം

   இப்படி சுறுக்கி வார்த்தைகளின் அளவைக் குறைத்துக் கொண்டனர்.

   நீக்கு
  2. மலையாள மொழியில், வாக்கிய அமைப்பையும் சுருக்கிவிட்டதாகச் சொல்வார்கள்.

   தெரிந்ததை மட்டும் சொல்கிறேன்[இரண்டு ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் இருந்தேன். கடைகள், உணவு விடுதிகள் என்று எல்லா இடங்களிலும் தமிழில் பேசினால் புரிந்துகொள்வார்கள்; தமிழிலும் பேசுவார்கள் என்பதால் கற்றுக்கொள்ளவில்லை].

   அவன் வந்நு, அவள் வந்நு, அது வந்நு...இப்படி எல்லாமே வந்நுதான். இல்லையா?

   ‘இந்த’ , ‘அந்த’வெல்லாம்...இ, அ என்று சுருங்கியது. இவ்விடம்...இவிட. அவ்விடம்...அவிட...

   அயல் மொழி குறித்த அறிமுகம் சுவையானது. நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  3. //தமிழில் பேசினால் புரிந்து கொள்வார்கள், தமிழிலும் பேசுவார்கள்//

   இதுதான் நண்பரே மலையாளிகளிடம் எனக்கு பிடித்த விசயம், அவர்கள் எந்த மொழியையும் பேசுவார்கள். ஆகவேதான் தமிழ்த் திரையுலகத்தை ஆள்கிறார்கள்.

   வருகைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 3. மொழிகள் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது ஜி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தாங்கள் ஹிந்தி மொழியில் கலக்குகின்றீர்களே... அதை விடவா...

   நீக்கு
 4. உங்களின் ஈடுபாடு வியக்க வைக்கிறது ஜி...

  ஆமாம் உங்களுக்குள் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்...? அதாவது எத்தனை மொழிகள் தெரியும் ஜி...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எனக்குள் நானும், எனது மனசாட்சியும் வாழ்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தனது மனசாட்சியுடன் பேசினால் நல்லதும், கெட்டதும் பிரித்தறியும் பக்குவம் வ(ள)ரும்.

   நீக்கு
 5. பல் மொழி பல் மொழி ஆய்ந்துமே
   நல்மொழி நல்பொருள் கல்.

  எழுதியது ஆரோ 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 6. உங்களுக்கு ஒரு உண்மை சொல்ல வேண்டுமே எனக்குத்தலையும்புரியவில்லை வாலும்புரியவிலை பன்மொழி வித்தகரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நான் சொல்லிய விதம் குழப்பி விட்டதோ...?

   நீக்கு
 7. நிறைய திறமைகள் உள்ளது உங்களிடம்.

  நிறைய மொழி தெரிகிறது.

  கற்கும் ஆசை இருந்தால் கற்றுக் கொள்ளலாம் இல்லையா?

  உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 8. மொழி அழகு எனில்
  அந்த அழகை அழகுடன்
  சொல்வது பேரழகு...

  நல்லதொரு பதிவு..
  நலம் வாழ்க!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  நல்ல திறமை உங்களிடம். மொழிகள் பயில்வது சுலபமென நீங்கள் சொன்னாலும், வேலை, அதன் கடமைகள், பிற (அ)செளகரியங்களுக்கிடையே ஒவ்வொரு மொழியையும் எழுத படிக்க கற்றுக் கொள்ள நேரமும், கவனமும், ஆர்வமும், திறமையும் வேண்டும்.இவை நான்கிற்கும் நீங்கள் மதிப்பு தந்து மொழிகளை கற்று தேர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள், பாராட்டுக்கள். உங்கள் திறமைக்கு என் பணிவான வணக்கங்களும் கூட...பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது மனப்பூர்வமான வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 10. வியக்க வைக்கிறீர்கள்.  அரபு மொழியை எழுதும் அளவு கற்றீர்கள் என்பதைவிட அதன் நுணுக்கங்களோடு எழுதவும் கற்றீர்கள் என்பது சிறப்பு.  மலையாளமும் எழுதப்படிக்க வருமா?  எத்தனை மொழிகள் அறிவீர்கள் நீங்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.
   1996-டிசம்பர் முதல் டைரி மலையாளத்தில்தான் எழுதினேன், 2001 முதல் அரபு மொழியில் எழுதினேன்.

   பிறகு தட்டச்சு செய்து பென் டிரைவில் சேமிக்க ஆரம்பித்தேன்.

   மொழிகள் பழகுவதை ஓர் வேலையாகவே கருதிய காலம் அது.

   நீக்கு
  2. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.  நானெல்லாம் சோம்பேறி.

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 11. எந்த அளவிற்கு பிற மொழி தெரிந்து வைத்துள்ளோமோ அந்த அளவு மிகவும் பயன்.
  உங்களின் ஆர்வமும், தேடலும் போற்றத்தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவர் அவர்களே...
   மொழிகள் பழகியது பயன் என்று வெற்று வார்த்தைகளை சொல்லி விட்டீர்கள்.

   அபுதாபியில், என்னை வாழ வைத்ததே மொழிகள்தான். நான் இவ்வளவு பணம் சம்பாரித்ததும் இவைகளின் வழியே...

   இதை நான் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

   நீக்கு
 12. பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருப்பதில்லை. ஆனால் தங்களிடம் அது அபரிதமாக இருக்கிறது என்பதை அறிவேன். அரபு மற்றும் உருது எழுதுவது கடினம் என்று நினைத்ததுண்டு. ஆனால் தங்களின் பதிவைப் பார்த்தபின் முயன்றால் முடியாதது இல்லை என்றே தோன்றுகிறது. பன்மொழி வித்தகரே! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   நான் China மொழியை பழகி விட்டுத்தான் இந்தியா போவேன். என்று முன்பு நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன்.

   அது முடியாமல் போனதில் இன்னும் மனதில் பாரமுண்டு.

   பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 13. முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியை தாங்கள் துவங்கிவிட்டது போல எழுதியுள்ளீர்கள். மிகவும் அருமை.
  ஆமாம் அது என்ன இடைச்செருகல் ..??

  // உங்கள் அழாக கில்லர்ஜியின் பெயரை கூட // - பெயரே பயமுறுத்துதே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி.

   எதையும் கனிவாக பார்த்து பழகுங்கள் கள்ளிகூட கனியாக தெரியும்.

   நீக்கு
 14. உங்கள் திறமைக்கு என் வாழ்த்துகள் அண்ணா ஜீ.மொழியை கற்றதுமல்லாமல் அதன் நுணுக்களையும் தெரிந்து வைத்திருக்கிறீங்க.சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 15. பன்மொழிப்புலவர். உங்கள் திறமையும் எதையும் கற்கும் ஆர்வமும் எனக்கும் கொஞ்சமானும் கொடுக்கும்படி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். கொடுத்துட்டா மட்டும் என்ன ஆகப் போகிறது! ஒன்றும் முயற்சிக்காமல் உட்கார்ந்து இருப்பேன். அருமையான திறமையான பன்மொழிப் புலவர் நீங்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது டூட்டூமச் பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நல்லதுக்கே காலமில்லை! :))))))

   நீக்கு
  3. இந்த ''கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருக்கு'' அதிரா இராயல்டி வாங்கி இருப்பதாக செவிவழிச்செய்தி.
   வார்த்தைகளை கவனமாக உபயோகப்படுத்துங்கள்.

   நீக்கு
  4. என்னாது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதிரா ராயல்டி வாங்கி இருக்காங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவங்களே எனக்குக் கொடுக்கணுமாக்கும். பழைய பதிவுகளில் போய்ப் பாருங்க. 2006 ஆம் ஆண்டிலிருந்து உபயோகப்படுத்த "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"ருக்கு அதிராவுக்கு ராயல்டியா? எனக்குத் தான் அவங்களும் இன்னமும் யாரெல்லாம் பயன்படுத்தறாங்களோ அவங்களும் தரணும். 15 வருஷமாப் பயன்படுத்திட்டு இருக்கேன்! ராயல்டியா ராயல்டி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்கே வரட்டும் பார்க்கலாம்! நிஜம்மாவே தேம்ஸில் பிடிச்சுத் தள்ளிட மாட்டேன்? :)))))

   நீக்கு
  5. இதற்கு விழாக்கமிட்டியிலிருந்து அதிரா வந்து பதில் தருவார்கள்.
   நான் சிவனே'னு எனது (கர்)-க்குள்) வீட்டுக்குள் இருக்கிறேன்.

   நீக்கு
  6. அதிராவுக்கு நாங்க எத்தனையோ வருஷம் சீனியர்! அதனால் எங்களுக்குத் தான் ராயல்டி தரணும். இது தான் உச்சநீதிமன்றத்தின் ஒரே முடிவு/கடைசி முடிவு/ அப்பீல் எல்லாம் இல்லை. :)

   நீக்கு
  7. இந்த வம்புக்கு நான் ஆளில்லை எனக்கு நீதி மன்றம் என்றாலே கையில் சிரங்கு வந்தது போன்ற அலர்ஜி.... நான் எஸ்கேப்.

   நீக்கு
 16. அருமையான பதிவு சார். ஆனா எனக்கும் அரபுமொழி புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அபிநயா அரபு மொழிதானே புரியவில்லை. பதிவு புரிகிறதே... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 17. ஒன்றுக்குள் ஒன்று துபாய் ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் சேர்ந்து அழகா இருக்கே ..
  என்னது// இ // எழுத சொன்னிங்களா :)) நான் அழுது புரண்டு சிரிக்கிறேன் காரணம் என் மகளுக்கு  தமிழ் எழுத சொல்லிக்கொடுத்தப்போ தெரியாம நம்மூர் வழக்கத்தில் அ ஆ இ னு ஆரம்பிச்சேன் .மூன்றாம் எழுத்துக்கு குய்யோ முறையோன்னு கதறல் தமிழ்    எழுத்து அன்றோடு போச்சு :( குழந்தைகளுக்கு ட ம ப ய வில் தான் ஆரம்பிக்கணும்னு ஒரு இலங்கை தமிழர் சொன்னார் பிறகுதான் நானா செய்த தவறு புரிந்தது .அது சரி அந்த அரபி எழுதினாரா   ...இ :)  :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ?
   அ ஆ இ ஈ என்றுதானே ஆரம்பிக்கணும்.

   இ-தானே... சிக்கலானது எந்த அரபியும் எழுத முடியவில்லை.

   முடிவில் யாருமே எனது சவாலை முறியடிக்கவில்லை.

   நீக்கு
 18. எத்தனை அருமையாகக் கற்றிருக்கிறீர்கள.! அன்பு தேவகோட்டைஜி தங்கள் மொழி ஆர்வம் அதிசயிக்க வைக்கிறது. அரபு மொழி அழகாக இருக்கிறது. நீங்கள் விளக்கியிருக்கும் அருமை கற்றுக் கொள்ளலாமே என்ற ஆர்வம் வரவழைக்கிறது. இன்னும் ஒரு மொழி கற்பதில் எத்தனை செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் ,,
  !அறிவுக் கூர்மை உங்களிடம் நிறைவாக உள்ளதும்மா.. வாழ்த்துகள்.மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 19. அரபு மொழியின் சில தனித்துவம் பற்றி அறிந்து கொண்டேன் .
  இதே போல ஜப்பானிய மொழியிலும் அவர்களின் கதைப் புத்தகங்கள் காமிக்ஸ் குழந்தைக் கதைப் புத்தகங்கள் எல்லாம் அப்படித்தான் .இடமிருந்து வலமாக .எழுதுவார்கள்
  ஆனால் மேலிருந்து கீழாக எழுதுவார்கள் .
  நாங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் நம்ப தமிழ்ப் புத்தகங்கள் மாதிரித் தான் இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது தளம் வழியாக ஜப்பானிய மொழி படிக்கலாம் என்றால் முயல்கிறேன்.

   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 20. வணக்கம் கில்லர்ஜி, இந்தப் பதிவில் அரபு மொழி பற்றிய அருமையான தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள். ஆமாம், நீங்கள் அரபு நாட்டில் பணி செய்கிறீர்களா? நான் அரபு நாடு ஒன்றில் ஒரு வருடமாய் வேலை செய்கிறேன். அந்த மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்ததில்லை. இந்தப்பதிவைப் பார்த்ததும் ஆர்வம் துளிர்விட்டிருக்கிறது. கற்றுக்கொள்ள வழிமுறைகள் என்ன என்பதைத் தெரிவிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு.எம்.ஞானசேகரன் அவர்களின் முதல் வருகையை வரவேற்கிறேன்.

   தங்களது மொழி பழகும் ஆர்வத்துக்கு பாராட்டுகள்.

   நான் அபுதாபியில் இருபது வருடங்கள் வேலை செய்தேன். தற்போது தேவகோட்டையில் இருக்கிறேன்.

   தங்களுக்கு வேண்டிய உதவியை என்னால் இயன்றவரை உதவுகிறேன்.

   தொடர்பு கொள்ளலாம்.

   நீக்கு
 21. அரபுமொழி கற்றுக்கொள்வது எளிது என்பதை ஒப்புக்குறேன். ஆனா, இங்க என்ன எழுதி இருக்குன்னு புரில. முறுக்கை பிச்சி போட்ட மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அதுதான் கீழே தமிழாக்கமும் கொடுத்து இருக்கிறேனே...

   ஜிலேபி மாதிரி இருப்பது நமது கன்னடமும், தெலுகும்தான். வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 22. படத்தை பார்த்ததும் மொழியின் அழகு “செவன் அப்” என்று சட்டென்று ஓடியது... படித்த பின்புதான் மெதுவாக புரிந்து மொழியின் அழகு எதுவென்று..........என்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே புரிந்து, தெரிந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 23. மொழிகளின் மீதான தங்களின் காதல் போற்றுதலுக்கு உரியது நண்பரே
  என் பெயரினை அரபு மொழியில் கண்டு மகிழ்ந்துதோன் போனேன்
  பன்மொழி வித்தகருக்கு ஜெ

  பதிலளிநீக்கு
 24. உங்களது அரபுமொழிக் காதல் சுவையானது! இருந்தாலும் தமிழ் ‘இ’-ஐக் காண்பித்து அரபிகளை பயமுறுத்தியிருக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்கு அரபு டூரிஸ்ட்டுகள் வரத்து ஏன் குறைந்துவிட்டது என்பதின் காரணம் தெரிந்துவிட்டது! இன்னும் சில நாடுகளில் நீங்கள் வாழ்ந்திருந்தால் மேலும் மொழிகள் வசப்பட்டிருக்கும்தான்.
  நான் சிலநாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். அந்நிய மொழி இலக்கியங்களில் ஆர்வம் காட்டியிருக்கிறேன். முறையாக மொழிப் பயிற்சி எடுத்துக்கொள்ள நேரம் வாய்த்ததில்லை. ஓரளவு ஸ்பேனிஷ் தெரியும். புரியும். நான்கு வருட வாழ்க்கை, பணிக்குப்பிறகு க்யூபாவின் தலைநகரிலிருந்து புறப்படுகையில், க்யூப நண்ப, நண்பிகளிடமிருந்து ஸ்பேனிஷ் புத்தகங்கள் சில எனக்கும், மகளுக்கும் பரிசாகக் கிடைத்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி

   எனக்கு இப்பொழுதுதான் இன்னும் பல நாடுகள் செல்ல வேண்டும், மேலும் மொழிகள் பயில வேண்டுமென்ற ஆசை பிறக்கிறது.

   வருகைக்கு நன்றி.

   நீக்கு