01.
மகனுக்கு மணம் முடித்து மருமகளுக்கு தந்தையாக
தயாரானார் தயாநிதி. சூழ்ச்சியில் மகனுக்கு தந்தையானான் சம்மந்தி விதியால் தயாநிதி
வீதியில்...
02.
பெயர்த்திகளின் வரவால் பெருமகிழ்ச்சி வருமென்று
பேராசை கொண்டவருக்கு பெயர்த்திகள் இடம் பெயர்ந்ததால் மனதால் தடம் புரண்டார் ஐயா ஐயாச்சாமி...
03.
மனைவி இல்லாமல் நடைபிணமாய் வாழ்ந்த நடராஜனை
மலைபோல் நம்பி இருந்த அவரது மக்கள் பிணமாக்கினார்கள் வார்த்தை ஜாலங்களால்...
04.
வாழ்வு முழுவதும் தியாகம் செய்து காலம் கடந்த பிறகு
உறவுகள் தன்னை கோமாளி ஆக்கியதை நினைத்து நொந்து செத்தார் செல்லத்துரை.
05.
இருபது வருடங்களாக பொய்முகம் காட்டி நம்ப வைத்த
உறவுகளின் உண்மை முகம் கண்டு இன்று தன்முகம் காண வெட்கி தலை குனிந்தார் சண்முகம்.
06.
வறுமையோடு வாழ்ந்தபோது உடனிருந்த மனைவி வளமை
வந்தபோது... வனம் சென்ற நன்றிக்காக தனது வளத்தை தகர்த்து வாழ்ந்தார் தண்டபாணி.
07.
ஆவணி வந்தால் அருமையான வாழ்வு வருமென்று அருள்வாக்கு
சாமியார் சொன்னதை நம்பிய அருள்நிதிக்கு ஆவணி பிறந்ததும் இருள் சூழ்ந்து
கொண்டது.
08.
பொன், பொருளோடு இருந்த பொன்னையாவை பந்துக்கள்
சொந்தம் கொண்டாடினர், பொருள் இழந்து போனதும் இருளோடு தள்ளியது அதே சொந்தங்கள்.
09.
மணவிழாவுக்கு மனைவியோடு போன மங்களநாதனுக்கு
மங்கலகரமான வரவேற்பு அன்று, மனையாள் மறைந்து போனதால் மதிப்பதே இல்லை இன்று.
10.
மனைவிக்கு சத்தியத்தை கொடுத்த சத்தியமூர்த்தி
சாத்தியப்படாத சூழலிலும் சத்தியமாய் வாழ்ந்தும் பிள்ளைகள் சாத்தியப்படவில்லை.
11.
பூகம்பத்தில் புதைந்து போகாமல், இடிதாக்கி இறந்து
போகாமல், சுனாமியில் சுருண்டு போகாமல், கொரோனா கொண்டு போகாமல் அழகிய மரணத்தை
இறையிடம் வேண்டினார் வேதநாயகம்.
12.
தான் இறந்த பிறகு தனது இறுதிச் சடங்கில் கலந்து
கொள்ளக் கூடாத இரத்த உறவுகளை பட்டியலிட்டார் பரமசிவம் பத்து நபர்கள்
கணக்கில் வந்தனர் வரிசையாக...
13.
தனது மரணத்துக்கு ஒப்புக்கு அழுபவர்களின் கண்ணீரை
ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வைத்தார் வைத்தியநாதன்.
14.
நம்பிய உறவும் நட்டாற்றில் விட்டது நம்பிராஜனை
நம்பாத ந்ட்புகளே நலமாய் முடித்து அனுப்பி வைத்தனர் அமரர் பூங்காவுக்கு...
15.
வாழும்போது மனதை காயப்படுத்தியே கொன்ற உறவுகள்
மறைந்தவுடன் நல்ல மனுசன் என்று சொல்லி ஆனந்தனின் ஆன்மாவை மீண்டும்
கொன்றார்கள்.
16.
மக்களிருவரும் ‘’அப்பா தப்பு செய்துட்டோம் மன்னிச்சுக்கோங்க’’ என்று கதறி அழுதனர், அப்பா அப்பாதுரை
சற்றும் சலனமின்றி அழகாக சிரித்துக் கொண்டு இருந்தார் புகைப்படத்தில்.
Chivas Regal சிவசம்போ-
செத்த
பிறகாவது நல்லவன்னு சொன்னாய்ங்களே... நாளைக்கு நமக்கு என்ன கதியோ... சம்போ
மஹாதேவா...
முதல் வாக்கியத்தில் குறிப்பிட்ட தயாநிதி முன் ஒன்றிய மந்திரியா?
பதிலளிநீக்குஇதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வார்த்தை ஜாலங்களால் வாசகர்களை அறுத்துக் கொண்டிருக்கிறார் கில்லர்ஜீ
Jayakumar
வாங்க ஐயா முதல் கருத்தே அறுப்பதுபோல் வந்து இருப்பதில் மகிழ்ச்சியும், நன்றியும்.
நீக்குஒவ்வொன்றும் நடப்பவைகளே ம்ஹீம்... நடந்தவைகளே...
பதிலளிநீக்குவாங்க ஜி நடந்தவைகள் மட்டுமல்ல, இனியும் நடப்பவைகள்தானே... வருகைக்கு நன்றி ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பொருத்தமான பெயர்களுடன் ஒவ்வொன்றும் நடந்து கொண்டிருப்பவைதான். நீங்கள் சொல்வது போல் இனியும் நடப்பவையும் கூட...
உலகம் தோன்றியதிலிருந்து சுயநலங்கள் மனிதரின் உடன் பிறப்பாக எப்போது உதயமானதோ அப்போதிலிருந்தே இதெல்லாம் சகஜமான நிகழ்வுகளாகி விட்டன. என்ன....முன்பெல்லாம் சற்று இலை மறைவு காய்களாக இருந்த இவையெல்லாம், இலைகளின் மறைப்பை அலட்சியப்படுத்தி, தைரியமாக எட்டிப்பார்க்க துவங்கி விட்டது.
11ம்,16ம் மனதை நெகிழ்த்தி விட்டது. நன்றாக மனிதரின் உண்மை நிலையை எடுத்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை முழுமையாக உணர்ந்து படித்து கருத்திட்டமைக்கும், குறிப்பிட்டு இலக்கங்களை தந்தமைக்கும் நன்றிகள் பல...
நீக்குசுருங்கிய மனங்களின் எண்ண ஓட்டங்களே இந்நிலைக்கு காரணம்.
தனபாலன் திருக்குறளை வைத்து ஜாலம் பல புரிவதை போல நீங்கள் பெயரை வைத்து பல ஜாலம் புரிகிறீர்கள் கில்லர்ஜி
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகவிதை போலவும் இருக்கிறது. கதைச்சுருக்கம் போலவும் இருக்கிறது. ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு கதையை உருவாக்கலாம். ஒவ்வொன்றிலும் ஒரு அனுபவம் இருக்கிறது. ஆனால் ஏன் அந்தப் பெயர்கள் என்று புரியவில்லை. வார்த்தை ஜாலங்கள்!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி இவ்வளவு வேதனைகளும் எல்லா இடங்களிலும் ஒருவர் பட்டுக் கொண்டுதானே வாழ்கிறார் வருகைக்கு நன்றி ஜி.
நீக்குஒருவர் படும் துனபம் பலபேர்களின் துன்பமாக வந்து இருக்கிறது இந்த பதிவில்.
பதிலளிநீக்குநிறைய பேர் வாழ்க்கையில் வந்து இருக்கிறது இதில் சில.
அப்பா போட்டோ ஆனபிறகு மக்கள் வருந்தி பயன் என்ன? வாழும் போது அன்பு செய்து வாழ வேண்டும்.
அவர்கள் உணர்ந்து கொள்ள அவர்களை வாழ்த்தி கொண்டு இருப்போம்.
நாம் அவருக்கு அன்பும், ஆறுதலும் கிடைக்க வேண்டுவோம்.
வருக சகோ
நீக்கு//ஒருவர் படும் துன்பம் பல பேர்களின் துன்பமாக வந்து இருக்கிறது இந்த பதிவில்//
மிகச்சரியான கணிப்பு மற்றும் புரிதல் ஆம் இவர்கள் எல்லோருமே ஒருவரே ஒருவரை பலமுறை கொல்ல முடியாது என்ற காரணத்தால் பதினாறு மனிதர்களாக பிரித்து எழுதினேன்.
பலரும் தந்தையின் புகைப்படத்தில்தான் மன்னிப்பு கோருகின்றார்கள் கண் போன பின்னே சூரிய நமஸ்காரம் இதுதான் காலத்தின் நிலைப்பாடு வருகைக்கு நன்றி சகோ.
இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் இவ்வளவு சோதனைகளை ஒருவருக்கு கொடுக்காதே!
பதிலளிநீக்குவேதனைகளை மாற்று, மகிழ்ச்சியை மன நிறைவை கொடு என்று. பேரன் பேத்திகள் தன் பிஞ்சு கைகளால் தன் தாத்தாவின் கண்ணீரை துடைக்க வேண்டும்.தாத்தாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வர வேண்டும்.
நம்பிக்கைதான் வாழ்க்கை, நம்புவோம். வாழ்க வளமுடன்.
தங்களது பிரார்த்தனைகளுக்கு இந்த பதினாறு மனிதர்களின் சார்பாக நன்றி.
நீக்குதங்களது வாக்கு பலிக்க வேண்டுமென்பதே எமது அவா
காலங்கள் மாறட்டும். தீரா வேதனைகள் தீரட்டும்.
பதிலளிநீக்குநீங்கள் எழுதி இருக்கும் அத்தனையும் உண்மை.
எத்தனை நாட்கள் தனிமையில் சோகப்படுவது?
எல்லா சுற்றங்களும் மாற இறையருள் வேண்டும்.
யாரை நம்பி நான் பொறந்தேன் என்று
பாடவா முடியும். அன்பை நம்பித்தானே இதயம் இருக்கிறது.
இப்போது தந்தையை மறப்பவர்கள் தங்கள் மகனால் மகளால்
மறுக்கப் படுவார்கள்.
அப்போது உண்மை விளங்கினாலும் பலன் இருக்காது.
நலம் பெறுங்கள் அப்பா.
வாங்க அம்மா தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குஅனைத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது (10) தவிர. வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நடக்கட்டும்.
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது புரிதலுக்கு நன்றி
நீக்குபத்தாவதும் சத்தியமான (என்னைப் பொருத்தவரையில்) வார்த்தையே...
வாழ்ந்தும் வரை ஓகே... பிள்ளைகள் சாத்தியப்படவில்லை என்பது, பிள்ளைகளின் அன்பு சாத்தியப்படவில்லை என்று வந்திருக்கணுமா இல்லை பிள்ளைகள் புரிதல் சாத்தியப்படவில்லை என்று வந்திருக்கணுமா?
நீக்குவருக தமிழரே புரிதல் சாத்தியப்படவில்லை என்பதே நிதர்சனம். மீள் வருகைக்கு நன்றி.
நீக்குஉங்கள் புண்பட்ட மனம் இந்த எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. என்ன செய்வது? காலம் மாறட்டும்! மனம் ஆறுதல் அடையட்டும்.
பதிலளிநீக்குதங்களது புரிதலுக்கும், ஆறுதலுக்கும் மிக்க நன்றி சகோ.
நீக்குஇவர் உங்களுடைய சீடரா? அல்லது குருவா?
பதிலளிநீக்குhttps://thanimaramnesan.blogspot.com/2021/07/blog-post_28.html?zx=59e2af82b6c3a2c
Jayakumar
தனிமரம்நேசன் எனது சகோதரர் ஐயா. அவரது தளம் சில நேரங்களில் திறக்க மறுக்கிறது காரணம் தெரியவில்லை.
நீக்குவித்தியாசமான சிறந்த சிந்தனையாளர்.
நாலாவது கருத்து எனக்கு பொருத்தமாய் இருக்கிறது நண்பரே!
பதிலளிநீக்குவருக நண்பரே இதில் பலதும் பலருக்கும் பொருந்தும் சூழ்நிலை வாழ்க்கைதான்.
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குஇனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்.
வருக நண்பரே மிக்க நன்றி.
நீக்குநடப்பதும், நடந்து கொண்டிருப்பதும் வார்த்தைகளில்.
பதிலளிநீக்குநலமே விளையட்டும் கில்லர்ஜி.
வாங்க ஜி தங்களின் வருகைக்கு நன்றி
நீக்கு//ஆனந்தனின் ஆன்மாவை மீண்டும் கொன்றார்கள்//
பதிலளிநீக்குமனிதர்கள் எத்தனை அசிங்கமானவர்கள் என்பதை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.
வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குவித்தியாசமான வரிக் க(வி)தைகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி.
நீக்குகொண்ட மனையாளோடு அனைத்தும் போம் என்பது இந்தப் பதிவின் அடி நாதமோ? மனம் கனக்கிறது, துயருற்ற மனதிற்கு ஆறுதல் கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குவருக தங்களது ஆறுதல் மொழிக்கு நன்றி.
நீக்குஎனது சிறுகதைக்காக ஒன்றிரண்டைச் சுட்டுக் கொண்டேன்.
பதிலளிநீக்குமுனைவர் ஐயா அவர்களின் கருத்து கண்டு மகிழ்கிறேன்...
நீக்கு