வணக்கம் நண்பர்களே... ‘’விண்ணோடும்
முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’ என்ற கவிஞர் ஆத்மநாதனின்
பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும்
கொடுத்துள்ளேன்.
இதோ எனது பாடல்...
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே
உன்னோடு நஞ்சும் விலை அழுக்கே
வசை இழுக்கே வசை இழுக்கே
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே
புழை சாயும் கரையோரம்
பல மீன்கள் கீழே
வினை தேடி
வசை பாடி
பழியாலே களவாடி
துன்பம் பேணலாம்
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே
உன்னோடு நஞ்சும் விலை அழுக்கே
வசை இழுக்கே வசை இழுக்கே
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே ...
பாடாத கள்வ தாகம்
தேனாக தந்தது போல்
தேடோடி தந்த நரக பாகமே...
தேடோடி தந்த நரக பாகமே...
பேணாத துன்ப வலை
திண்டாடும் நஞ்சினிலே...
மானிந்த பேதையூட்டும்
துரோகமே சாவிலே...
வினை தேடி
வசை பாடி
பழியாலே களவாடி
துன்பம் பேணலாம்
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே
சந்தேக வட்டத்திலே
கதியோடும் பூச்செடியே
சங்கீதம் பேண உள்ளம் தேடுதே
சங்கீதம் பேண உள்ளம் தேடுதே
மக்காத பங்கமிது
தேறாத பாரமிது
நன்றாகி துன்ப சோகம்
வாடுதே சாவிலே
வினை தேடி
வசை பாடி
பழியாலே களவாடி
துன்பம் பேணலாம்
ஹா... ஆ.. ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ...
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே
உன்னோடு நஞ்சும் விலை அழுக்கே
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
படம்: புதையல்
பாடலாசிரியர்: கவிஞர் ஆத்மநாதன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: சி. எஸ். ஜெயராமன் - பி. சுசீலா
விண்ணோடும்
முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே..
இசை அமுதே..
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே..
இசை அமுதே..
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
அலை பாயும் கடலோரம்
இள மான்கள் போலே
விளையாடி
இசை பாடி
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே
இசை அமுதே..
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே
ஓடோடி வந்த சொர்க்க போகமே
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி
இசை பாடி
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
சங்கீத தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது
மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி
இசை பாடி
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
ஹா... ஆ.. ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ...
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்கலை அழகே
இன்றைய பொழுது நல்ல பொழுதாக விளங்கட்டும்...
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஹா.. ஹா.. ஹா... பொருந்தி வருகிறது.
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஹாஹாஹா "ஆச்சி" ரியர் கில்லர்ஜிக்கு வாழ்த்துகள். என்ன ஒரு திறமை! அருமை! பாராட்ட வார்த்தைகளே இல்லை.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குநல்ல பாடலில் உங்கள் கைவரிசையைக் காட்டிவிட்டீர்களே
பதிலளிநீக்குவருக தமிழரே வார்த்தைகள் கோர்வையாக இல்லையா ?
நீக்குஹா... ஹா... அருமை ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குபாடல் எழுதிய ஆச்சி.ரியர் - கில்லர்ஜி
பதிலளிநீக்குநன்றாக எழுதி இருக்கிறார்.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குவார்த்தைகள் நன்றாகப் பொருந்தி வந்திருக்கிறது. நல்ல பாடல் கில்லர்ஜி!!விண்ணொடும் மண்ணொடும்..
பதிலளிநீக்குகில்லர்ஜி முன்னமே சொன்னது போல அர்த்தமே இல்லாத பாடல்களை அர்த்தமாக்குங்களேன் உங்களுக்கு இருக்கும் திறமையைப் பயன்படுத்தி!!
கீதா
வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குஏற்கனவே நீங்கள் சொன்னபோது புதிய பாடல்களை தேடினேன் அனைத்துமே ஆங்கில வார்த்தைகளாகவே இருக்கிறது.
"ஒய் திஸ் கொலவெறி" இதையும் கூட ஆலோசித்தேன் "மூடியல" இருப்பினும் முயல்கிறேன் மீண்டும் நன்றி
விண்ணோடும் முகிலோடும் மிக இனிமையான
பதிலளிநீக்குபழம்பாடல்.
உங்கள் கற்பனை வளத்துக்கும் தமிழ் வளத்துக்கும்
ஆச்சரிய வணக்கங்கள்.
அன்பின் தேவகோட்டைஜி,
வாழ்த்துகள்.
தங்கப் பதுமைப் பாடல் 'சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி' கேட்டிருக்கிறீர்களா:)
அதை மகிழ்ச்சிப் பாடலாக மாற்றுங்கள்.
ஆசிகளுடன்.
வாழ்க வளமுடன்.
வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குதங்கப்பதுமை சிறப்பான பாடலே முயல்கிறேன் அம்மா.
நேற்றுதான் "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்" என்ற எஸ்.ஏ.அசோகன் பாடிய சோகப் பாடலை மகிழ்ச்சியாக மாற்றி எழுதினேன்.
தொடரட்டும் தங்களின் புலமை ......
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி
நீக்குஹாஹாஹா. யாரங்கே
பதிலளிநீக்குநல்ல விதமாய் "Remaking" செய்யும் நண்பருக்கு "Remake King" என்று பட்டம் கொடுங்கள் உடனே....
வருக நண்பரே பட்டம் காற்றில் பறந்து விடாமல்...
நீக்குவிண்ணோடும் முகிலோடும் மிகவும் இனிமையான பாடல்.... அதே பாடலை உங்கள் வார்த்தைகளில் மாற்றி எழுதியது நன்று. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி.
நீக்கு