தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 12, 2022

பெருமையும், சிறுமையும்


01. பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக வாழ்ந்து பிள்ளைகளுக்காக இறந்தால் வாழ்க்கைக்கு பெருமை. பிள்ளைகளுக்காக வாழ்ந்து பிள்ளைகளால் இறந்தால் வாழ்க்கையே சிறுமை.
 
02. வாழும் போது கஷ்டம் வந்தால் அது இறைவன் நமக்கு வைக்கும் பரீட்சை சாகும் போது(ம்) கஷ்டம் வந்தால் அது பரீட்சையில் நீ செய்த தவறுக்கு இறைவன் கொடுக்கும் தண்டனை.
 
03. தோல்விகளையே கண்டவனின் மனம் வலிமை பெற்றிருக்கும், கிடைத்த முதல் வெற்றியை அகந்தையின்றி மகிழும். வெற்றிகளை மட்டுமே பெற்றவரின் முதல் தோல்வி அவனது முழு பலத்தையும் புதைத்து விடும்
 
04. வாழ்வு முழுவதும் வெற்றிகளையே கண்ட நாத்தித மனிதருக்கு தொடர் தோல்விகளை சந்திக்கும் போதுதான் பிரம்மா, கர்மா, ஆன்மா இவைகளில் நம்பிக்கை வருகிறது. அனுபவிக்க மட்டுமல்ல வாழ்க்கை அனுபவம் பெறுவதும் வாழ்க்கையே...
 
05. மனிதனுக்கு தாயே உயர்வானவள் என்பது பொதுவான நியதி இரண்டாவது நிலையே துணைவி என்றால் இறுதிவரை துணை வருவது யார் ? கணவனோடு உடன்கட்டை ஏறிய துணைவி உண்டு. மகனோடு உடன்கட்டை ஏறிய தாய் உண்டா ?
 
06. பழி சுமத்தப்பட்டவனின் தனிமைக் கண்ணீர் சுமத்தியவர்களை நிச்சயம் ஓர் தினம் பலி வாங்கும். ஏனென்றால் பெரிய அரசியல்வாதிகளின் குடும்பம் நலமாகவே நடமாடுகிறது ஆனால் இறுதியில் இறைவன் உணர்த்தியே தீர்த்து வருகிறான்.
 
07. ஆயிரம் நயவஞ்சக உறவுகளுடன் சேர்ந்து வாழ்வதைவிட, ஒரு சில உண்மையான வேற்று நாட்டு, வேற்று மாநில, வேற்று மொழி,  வேற்று மத, வேற்று ஜாதி, நட்போடு பழகி வாழ்வதே உயர்ந்தது.
 
08. முகம் பார்த்து இணைந்து வாழும் உறவுகள் தரும் கள்ள ஆறுதல் வார்த்தைகளை விட, இணையத்தில் முகமறியா நட்புகளின் தேறுதல் வார்த்தைகள் உயர்வானது.
 
09. உள் நாட்டில் அமுதத் தமிழில் உள்ளொன்று வைத்து பேசும் வம்பு மனிதர்களை விட, வெளிநாட்டில் அரைகுறையாய் பேசும் பிற மொழி மனிதர்களின் அன்பு அறமானது.
 
10. உழைத்த பணத்தால் உயிருக்கே உலை வைக்கும் உறவுகளுக்கு பயந்து வாழ்வதை விட, ஊதாரியாய் செலவு செய்து விட்டு ஊரில் பரதேசியாய் சுதந்திரமாய் வாழ்வதே மேலானது.
 
11. ஆயிரம் ரூயாய் நோட்டுக்கு ஆசைப்பட்டு அரசியல்வாதிகளுக்கு வாக்கு போடும் ஆண்மையற்ற மடையர்களை விட, பணத்தை வாங்காமல் நோட்டோவுக்கு வாக்கு போடும் வாக்காளர்கள் மேன்மையானவர்களே...
 
12. முப்பது வயதிலும் புத்தியின்றி திரைப்படக் கூத்தாடிகளின் பதாகைக்கு பாலூற்றி கீழே விழுந்து இறக்கும் ஈனப்பிறவிகளை விட, பிறந்து மூன்றே நொடிகளில் மரணித்து மனிதனுக்கு உணவாகும் ஈசலின் பிறவி மகத்தானது
 
Chivas Regal சிவசம்போ-
மங்களகரமாய் விளைந்து கார் டயருக்கு அடியில் நசுங்கி மண்ணில் வீணாகுவதை விட, ஊறுகாயாகி குவாட்டருக்கு தொட்டுக்கொள்ள உதவும் எலுமிச்சம்பழம் மேலானதே... 

40 கருத்துகள்:

  1. ஒரு தாய் என்பவளுக்கு, கணவனைவிட, தன் குழந்தைகளே மிக மிக முக்கியம். கணவன் சார்பாக தன் குழந்தைகளிடம் பேசுவாளே தவிர அவளுக்குக் குழந்தைதான் முக்கியம். இப்போ நீங்களே யோசிச்சுக்கோங்க, தாயா தாரமா என்று.

    மற்றபடி சிந்தனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. உறவுகளைவிட நட்பு மிகப் பெரியது என்பது உண்மைதான். அவசரத்துக்கு அல்லது தேவையானபொழுது, யார் உதவுகிறார்களோ அதுவே ஆகச்சிறந்த உறவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது அனுபவத்தில் நட்பே உயர்வாக இருந்தது, இருக்கிறது, இருக்கவும் போகிறது.

      நீக்கு
  3. மூன்றும் நான்கும் சூப்பர்.

    ஐந்து - என்னால் ஏற்க முடியாத சிந்தனை.

    ஆறு -  நம்மை நாமே அப்படி ஏமாற்றிக் கொள்கிறோம்!

    பொதுவாக உறவா நட்பா என்பது அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது.  அந்த அனுபவங்களும் அவ்வப்போது மாறும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ஆம் இது சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு மாறலாம். வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  4. டஜன் சிந்தனைகளும் அருமை நண்பரே. இவற்றில் பெரும்பாலானாவை நீங்கள் சந்தித்த மனிதர்களின் பட்டறிவே என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எல்லாம் பட்டு அழுத்திய பிறகு கிடைத்த பட்டறிவுதான்.

      நீக்கு
  5. கை கூப்பி வணங்குகின்றேன் ஜி!...

    இன்னுமொரு சித்த புருஷர்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பெரிய வார்த்தைகள் எதற்கு ? தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. இப்படியான சிந்தனை எல்லாம் இதயத்தின் ஆழத்தில் இருந்து வரக் கூடியவை..

      காலம் நம்மை பக்குவப்படுத்துகின்றது..

      ஓம் நம சிவாய...

      நீக்கு
    3. வாங்க ஜி தங்களது மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. நல்ல பல எண்ணங்கள்...

    அவற்றில் சில மனதின் வலிகள்.. புரிந்து கொள்ள முடிகிறது... (இ)எதுவும் கடந்து போகட்டும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி மனதின் வலிகளே பதிவின் பிரசவம்.

      வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  7. //அனுபவிக்க மட்டும் வாழ்க்கை இல்லை அனுபவம் பெறுவதும் வாழ்க்கைதான்.//

    நன்றாக சொன்னீர்கள்.
    வாழ்க்கை நாள்தோறும் கற்று கொடுக்கிறது. நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்.
    "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்"" என்ற கண்ணதாசன் அவர்கள் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
    இறைவனிடம் நம்மை ஒப்படைத்து விட்டு இருப்போம்.
    அவன் பொறுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ஆறுதலான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  8. உங்கள் அனுபவங்களை வார்த்தைகளாக்கி வாக்கியங்களாக மாற்றி இருக்கிறீர்கள். பெரும்பாலும் உண்மையே. நாத்திகன் தோல்விகள் கிடைக்கையில் ஆத்திகனாகி விடுவதும் உண்மை. கண்களால் கண்டிருக்கேன். அவர்களுடன் பேசிப் பழகி இருக்கேன். மற்றபடி நல்லவர்கள் என்றென்றும் கஷ்டத்தைத் தான் அனுபவிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்களைத் துன்புறுத்துபவர்கள் சந்தோஷமாகவே வாழ்கின்றனர். :( இது தான் நடைமுறை.

    பதிலளிநீக்கு
  9. வருக சகோ

    //நல்லவர்கள் என்றென்றும் கஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது அவர்களைத் துன்புறுத்துபவர்கள் சந்தோஷமாகவே வாழ்கின்றனர்//

    ஆம் எனக்கும் இது புரியாத புதிராகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. அனுபவிக்க மட்டும் வாழ்க்கை அல்ல அனுபவம் பெறுவதும் வாழ்க்கைதான்//

    இது உங்கள் மன எண்ணங்களின் வழி தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. நல்ல சிந்தனைகள். சில உங்கள் அனுபவ மொழிகளாகத் தெரிகிறது கில்லர்ஜி. புரிகிறது.

    6 - கொஞ்சம் இடிக்கிறது கில்லர்ஜி.

    தொடர் வெற்றிகள் வந்து அதன் தோல்வியைச் சந்திப்பவன் பக்குவப்பட்ட மனதைக் கொண்டிருந்தால், அதுவரை வந்த வெற்றிகளைத் தன் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் இருந்தால் தோல்வி அவனைப் பாதிக்காது.

    வாழ்க்கை அனுபவங்கள் பெற்றாலும் அதிலிருந்து நாம் கற்கிறோமா என்பதுதான் அதைவிட முக்கியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் அனுபவமே வாழ்க்கை தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. பழியை ஏற்றுக்கொண்டவர்கள் என்றென்றும் பழியைச் சுமந்த வண்ணமே இருக்க நேரிடுகிறது கில்லர்ஜி.

      நீக்கு
    3. ஆம் அமைதியாக இருப்பது எல்லா இடங்களிலும் சரியாக இருக்காது.

      நீக்கு
  12. அன்பின் தேவகோட்டைஜி,
    என்றும் நலமுடன் இருங்கள்.
    அனைவருமே எதாவது ஒரு விதத்தில் அடிபடிகிறோம்.

    எதையும் தாங்கும் இதயம் கிடைப்பது கடினம்.
    உங்களுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு விதத்தில் நிம்மதி
    கிடைக்கும்.

    அரசியல்வாதிகளோ, நாத்திகவாதிகளோ
    சிரமப்படுவது போலத் தெரியவில்லை அப்பா.
    மேலும் மேலும் உயர்ந்து கொண்டே தான் போகிறார்கள்.
    உயர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. //அரசியல்வாதிகளோ, நாத்திகவாதிகளோ
      சிரமப்படுவது போலத் தெரியவில்லை அப்பா.
      மேலும் மேலும் உயர்ந்து கொண்டே தான் போகிறார்கள்.// அரசியல்வாதிகள் பற்றி வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் பல நாத்திகர்கள் சிரமங்களை எதிர்கொண்ட பின்னர் கடவுளைச் சரண் அடைந்திருக்கிறார்கள்.

      நீக்கு
    3. உண்மை நாத்திகருக்கு மரணத்தின் விளிம்பில் இறை நம்பிக்கை பிறக்கிறது.

      நீக்கு
    4. மரணம் வரை போகாமல் அதற்கு முன்னரே திருந்தி வாழ்ந்த உறவினர் எனக்கு உண்டு. என் அக்காவின் (பெரியப்பா பெண்) கணவர். தீவிர கம்யூனிஸ்ட். தீவிர நாத்திகவாதி. அவர் தன் அறுபது வயதில் தீவிர ஆத்திகராக மாறி குமுதம் பக்திப்புத்தகத்தில் பக்திச்சுற்றுலா பற்றி எழுதிப் பின்னர் 80 வயதில் மரணம் அடைந்தார்.

      நீக்கு
    5. ஆம் நானும் இப்படி பல மனிதர்களை கண்டு இருக்கிறேன்.

      ஏன்... என்னையே நான் உணர்ந்து இருக்கிறேன்.

      நீக்கு
  13. அனுபவ மொழிகள் .
    அவரவரும் தானே கற்றுக்கொள்ளனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மேடம் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. பட்டினத்தார் பாடல்களைப் படித்ததைப் போல உள்ளது. அனுபவங்களே தத்துவங்களாகின்றன என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  15. சுப கிருது வருகவே..
    சுகங்கள் எல்லாம் தருகவே..
    அறங்கள் எங்கும் பெருகவே..
    அமுதத் தமிழ் நிறைகவே!..

    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  16. அனுபவ மொழிகள் நன்று. இதுவும் கடந்து போகும்.....

    பதிலளிநீக்கு