மதுரை
வைகை ஆற்றைப்பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே... நிறைய பாலங்கள் கட்டி விட்டார்கள்
மேலும் கட்டவும் போகின்றார்கள் என்பதும் உண்மையே... மக்கள் தொகை பெருக்கத்தால் இவைகளும்
அவசியம்தான். குறுக்கு பாலங்கள் போதாதென்று கரையோரப் பாலங்கலும் கட்டுகின்றார்கள்.
வைகை ஆறு
அழகாக இருக்கிறதா ? அதன் தண்ணீர் ஓட்டம் தெளிவாக இருக்கிறதா ? சென்னை கூவம் ஆற்றைப் போல்தான் மாறிக்கொண்டு
வருகிறது இதனால் புதிய வியாதிகள் பெருகுமே என்பதைப்பற்றி எமக்கு கவலையில்லை அதற்குத்தான்
விஞ்ஞான வளர்ச்சி இருக்கிறதே அதனை வைத்து புதிய பெயர் சூட்டி மருந்தோ, ஊசியோ போட்டுக் கொல்ல’’லாம்.
பிறகென்ன
பிரச்சனை ?
கால்நடைகள்
ஆம் மாடு, ஆடு, கழுதை, குதிரை, எருமை, பன்றி இவைகளின் வாழ்வாதாரத்துக்கு பிரச்சனை வந்து விட்டது இவைகளைக் குறித்து இந்த மத்திய, மாநில அரசுகள் கவலை கொள்கிறதா ? ஆற்றின் இருபுறமும் கரையோரத்தில் நகரத்தின் முழு அளவிலும் தடுப்புச்சுவர் எழுப்பி இருக்கின்றார்கள். பிறகு இவைகள் எப்படி உள்ளே செல்ல முடியும் ? இவைகளின் உணவுகளுக்கு வழிமுறைகள் என்ன ? இதன் காரணமாகத்தான் நகரெங்கும் இப்பொழுது கால்நடைகள் கால்நடையாகவே அலைகின்றது.
மனிதன்
இந்த உலகத்தை இறைவன் தனக்கு மட்டுமே படைத்ததாக கருதிக்கொண்டு பிற உயிரினங்களை, அவைகளின் வாழ்வாதாரங்களுக்கு இடையூறு செய்கின்றான். அவைகள் வாய்
திறந்து பேசாது என்ற அகம்பாவப்போக்குதான் காரணம். காடுகளுக்குள் மனிதன் ஊடுறுவி வருவதால்தான்
மிருகங்களும் காட்டை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் இடங்களை நாடி வருகிறது. இதன்
போக்கு தொடருமானால் நகரங்களில்தான் சுவையான மனிதக்கறி சுலபமாக கிடைக்கின்றது என்பதை
எல்லா வகையான மிருகங்களும் உணர்ந்து விட்டால் ? மனிதன் நகரத்தில் வாழ்வதுகூட நரகமாகும்
என்பதே நிகழப்போகும் உண்மை. ஏற்கனவே இதுதான் நிலைப்பாடு.
மனிதன்
இயற்கையை மாற்ற முயலும்போது காட்சிகளும் மாறியே தீரும் ஆனால் அதன் விளைவுகளையும் ஒரு
பாவமும் செய்யாத மனிதர்களும் இணைந்தே அனுபவிக்க வேண்டும். என்றுமே நான் சொல்வது விஞ்ஞான
வளர்ச்சி மனித வாழ்வுக்கு வீழ்ச்சியே.... பணத்தின் ஆசையே இன்று உருவாக்கி உலக மக்களை
ஆட்டி வைக்கும் கொரோனா என்ற கொடூரன்.
சிவாதாமல்அலி-
நாட்டு மக்கள் உயிரை காக்கின்ற இராணுவவீரர்கள் நாற்பது பேரையே காவு கொடுத்துட்டாங்கே... –இதுல ஆடு, மாட்டையா நினைக்கப் போறாங்கே... காலக்கெரகமடா கந்தசாமி
சாம்பசிவம்-
பதவி மோகம் வரும்போது பாவமும் மறந்து சாகும்னு ஞானி ஸ்ரீபூவு சும்மாவா சொன்னாரு...
Chivas Regal சிவசம்போ-
பன்றிக்கே நன்றி சொல்ற பரம்பரை போலயே... ?
கால்நடைகள்
ஆம் மாடு, ஆடு, கழுதை, குதிரை, எருமை, பன்றி இவைகளின் வாழ்வாதாரத்துக்கு பிரச்சனை வந்து விட்டது இவைகளைக் குறித்து இந்த மத்திய, மாநில அரசுகள் கவலை கொள்கிறதா ? ஆற்றின் இருபுறமும் கரையோரத்தில் நகரத்தின் முழு அளவிலும் தடுப்புச்சுவர் எழுப்பி இருக்கின்றார்கள். பிறகு இவைகள் எப்படி உள்ளே செல்ல முடியும் ? இவைகளின் உணவுகளுக்கு வழிமுறைகள் என்ன ? இதன் காரணமாகத்தான் நகரெங்கும் இப்பொழுது கால்நடைகள் கால்நடையாகவே அலைகின்றது.
நாட்டு மக்கள் உயிரை காக்கின்ற இராணுவவீரர்கள் நாற்பது பேரையே காவு கொடுத்துட்டாங்கே... –இதுல ஆடு, மாட்டையா நினைக்கப் போறாங்கே... காலக்கெரகமடா கந்தசாமி
பதவி மோகம் வரும்போது பாவமும் மறந்து சாகும்னு ஞானி ஸ்ரீபூவு சும்மாவா சொன்னாரு...
பன்றிக்கே நன்றி சொல்ற பரம்பரை போலயே... ?
காணொளி
முதல் வணக்கமாக...
பதிலளிநீக்குவாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..
வாங்க ஜி நன்றி
நீக்குமனிதன் இந்த உலகம் தனக்கு மட்டுமே சொந்தம் என்று மற்ற உயிர்களைக் கண்டு கொள்ளாமல் சுயநலமாய் நடந்து கொள்வது தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் ஆப்பில்லாமல் வேறென்ன? எல்லா உயிர்களும் அதனதன் கடமையைச் செய்தாலே உலகம் நல்லபடி இயங்கும். ஒரு உயிரினத்தைஅழித்து, ஒரு உயிரினத்தை மடக்கி, முடக்கி என்றெல்லாம் செய்தால்...?
பதிலளிநீக்குஆம் இதை மனிதன் உணர மறுக்கின்றான். எல்லா வகையிலும் இடையூறு செய்கின்றான் பிற உயிரினங்களுக்கு...
நீக்குவிழுந்து விழுந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் பாவம், அதன் ஒரே இழுப்பில் விழுந்து விட்டார். பயங்கரம். எங்கே நடந்தது அது?
பதிலளிநீக்குவெகு நாட்களுக்கு முன் இணையத்தில் கிடைத்தது ஜி
நீக்குவைகை மட்டுமல்ல பல நதிகளை பாழ்படுத்தி விட்டோம். ஏன் கடல்களை கூட விட்டு வைக்கவில்லை. மனிதனைப் போல ஒரு சுயநலமியை பார்க்க முடியாது.
பதிலளிநீக்குவாங்க மேடம் தாங்கள் சொல்வது உண்மைதான்.
நீக்குவீடியோ...சீண்டிவிட்டால் சிக்கல்தான்.
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே ஆம் தேவையில்லாத ஆணியை பிடிக்கிறது போல்தான்...
நீக்குகாணொளியைப் பின்னர் பார்க்கிறேன். நான் திருமணம் ஆன புதுசிலே வைகை ஆற்றைப் பற்றி என் புக்ககத்தார் கேலி செய்யும்போது எனக்கு ரோசமாக வரும். கோபமாகவும் வரும். ஆனால் திருவேடகம் அருகே (சமயநல்லூருக்கு முன்னிருந்தே) ஆறு அழகான பாதியில் சந்தோஷமாகக் குதித்துக் கொண்டு செல்லும். அதிலும் திருவேடகம் கோயிலுக்கு எதிரே! கண்கொள்ளாக் கட்சி. சம்பந்தர் காலத்தில் இங்கே ஏடுகள் ஒதுங்கினப்போ எப்படி இருந்திருக்கும் எனக் கற்பனை செய்துப்பேன். என்ன இருந்தாலும் நம்ம ஊரு/நம்ம ஊரில் ஓடும் ஆறு/கடலில் கலக்காத ஒரே நதி/விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?
பதிலளிநீக்குவருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!
நீக்குநீங்க எழுதி இருக்கும் பதிவும் சரி, கேட்டிருக்கும் கேள்விகளும் சரி/ உண்மையைச் சொல்லுவதால் அவற்றுக்கு யாரும் மதிப்புக் கொடுக்கப் போவதில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.
பதிலளிநீக்குஇயன்றவரை ஊதுவோம் பிறகு இறையின் வழி...
நீக்குமனிதன் சுயநலமிதான் கில்லர்ஜி. எல்லா ஆறுகளுமே மோசமாகிக் கொண்டிருக்கின்றன. காடுகள் உட்பட. மனிதன் தனக்குத்தானே மரணக் குழியை வெட்டிக் கொள்கிறான்.
பதிலளிநீக்குகீதா
வருக ஆம் தாங்கள் சொல்வது உண்மைதான்...
நீக்குபடம் நல்லாருக்கு கில்லர்ஜி
பதிலளிநீக்குகாணொளி முன்பே வாட்சப்பில் வந்திருந்தது. பார்த்திருக்கிறேன். இதான் மனிதனின் அறிவீனம். இப்படிப் புலி அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்து உடனே வன இலாகாவிற்கு அறிவிப்பதை விட்டு இப்படிப் புகைப்படம் எடுக்கப் போனா இதான் வம்பு. பாவம் அது மயங்கிக் கிடக்கிறது. என்ன மனிதக் கூட்டமோ.
என்ன எழுதினாலும் யாரும் மாறப்போவதில்லை ஜி. நாம் உட்பட. நாமும் இயற்கைக்குத் துரோகம் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.
கீதா
அனைவருமே தவறுகள் செய்வது உண்மை ஆனால் அரசுதான் இவைகளை கட்டமைத்து மாற்ற வேண்டும். தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குஉண்மைதான் விலங்குகளின் வாயில் நாம் அகப்படப் போவது வெகு தொலைவில் இல்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது, இப்போது விலங்குகளை மிருகக்காட்சி சாலைக்குள் அடைப்பது அலல்து இயற்கையாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் உலாவ விடுவது போல நமக்கும் நிகழலாம். இப்போதே கொரோனா என்று கண்ணுக்குத் தெரியாத ஒன்றினால் நாம் முடக்கப்பட்டோம்.
பதிலளிநீக்குநான் மதுரையில் இருந்த போது இருந்த வைகை அல்ல வைகை கெட்டிருப்பதை இரு வருடங்கள் முன் பார்த்தேன்.
துளசிதரன்
வருக தங்களது கருத்தையும், அனுபவத்தையும் பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!
நீக்குவருங்காலம் துயரம் தான் ஜி...
பதிலளிநீக்குஆமாம் ஜி சோறு கிடைக்காது ஆனால் மற்றவை எல்லாமே கிடைக்கும்.
நீக்குமனிதன் ஆகச் சிறந்த சுயநலம் கொண்ட ஜந்து! :( பல ஆறுகளையும் நதிகளையும் இழந்து கொண்டே வருகிறோம் என்பது நிதர்சனம்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகரை போடாவிட்டால் மனிதன் ஆக்கிரமிக்கிறான், திருடுகிறான். ஆனால் கரை போட்டவர்களுக்கு விலங்குகள் நினைப்பு வரவில்லையே
பதிலளிநீக்குஅது சரி.. விலங்குகளை வளர்த்து அதனால் பயன் பெறுபவர்கள், அந்த விலங்குகளுக்குத் தேவையானதைக் கொடுக்க வேண்டாமா? தெருவில் அலையவிடுவது முறையா?
வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குவைகை ஆறு பார்க்கும்படியே இல்லை.
பதிலளிநீக்குஆம் அப்படித்தான் இருக்கிறது.
நீக்குநெல்லை, நீங்க மேற்கே ஆரம்பிக்கும் இடத்திலிருந்து வந்து பார்த்துக்கொண்டே வரணும். திருவேடகம் தாண்டி மதுரைக்குள் நுழைந்தால் சகிக்காது. அதன் பின்னர் மானாமதுரைக்குப் பின்னர் கொஞ்சம் நன்றாக இருக்கும். அந்த மானாமதுரை மண்ணில் செய்யப்படும் கடத்தின் நாதம் பிரமாதமாய் இருக்கும் என்பார்கள். அதே போல் குடிநீருக்கான மண்பானையும். எங்களிடம் இருக்கும் மண்பானை வாங்கி ஏழு வருடங்கள் ஆகப் போகின்றன. தண்ணீர் இன்னமும் சில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!
நீக்குஇதில் இப்படி ஓர் சமாச்சாரம் இருக்கிறதா ? தங்களது மீள் வருகைக்கு நன்றி.
நீக்குபதிவு அருமை.
பதிலளிநீக்குவகை ஆற்றின் நிலையை சொன்னது உணமை. நானும் முன்பு இந்த கருத்தை படங்களுடன் பதிவு செய்து இருக்கிறேன். மாட்டை வீட்டில் கட்டி வளர்க்க வசதி இல்லாதவர்கள் எல்லாம் ஆற்றுஇ கரையில் தான் மாட்டை கட்டி வைத்து இருந்தார்கள். அவைகள் அங்கே இறங்கி நீர் அருந்தும், குதிரைகள், நீர் அருந்தும். இப்போது அவைகளுக்கு கஷ்டம் தான்.
கழிவு நீரை ஆற்றில் கலக்க விட்டதால் இப்படி தடுப்பு சுவர்கள் கட்டி வைத்து இருப்பதாய் சொல்கிறார்கள்.
வருக சகோ கழிவு நீரை ஆற்றில் கலக்கிறது என்பதால்.
நீக்குஇப்பொழுது துளையிட்டு சேர்க்கின்றனர். தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
அன்பின் தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குஎன்றும் நலமுடன் இருங்கள்.
வைகையின் நிலை வருத்தமாக இருக்கிறது.
எதற்காக இந்த அடாவடித்தனம் செய்கிறார்கள்.
கீதா சாம்பசிவம் சொல்வது போல ஒருகாட்சியை நினைத்துப் பார்க்கிறேன்.
மனிதர்களுக்கும் புத்தி இல்லை. அரசுகளுக்கும் புத்தி இல்லை.
வாங்க அம்மா அரசுக்கு புத்தி இல்லாமல் செய்தது மனிதர்களே...
நீக்குவைகையின் நிலை காலக் கொடுமைதான் நண்பரே!!
பதிலளிநீக்குஆம் நண்பரே தங்களுக்கும் அனுபவம் இருக்கிறது.
நீக்கு