தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 11, 2023

ரம், ரம்மி, ரம்பா


கூவல்
கரைந்தது காகம்
கூவியது குயில்
சத்தமா சந்தமா ?
 
வலி
சுழற்றியது அருவி
கொட்டியது தேள்
குளியா வலியா ?
 
குடி
குடித்தாள் பால்
குடித்தான் கள்
குடிகாரர்களா ?
 
முக்கியம்
ரேசன் வாங்க வரிசை
கிரிக்கெட்டில் வரிசை
அவசியமானது எது ?
 
விதி
நடந்தது திருமணம்
கலந்தது இருமனம்
இணைத்தது விதியா ?
 
சதி
மனைவியற்ற விதவன்
கணவனற்ற விதவை
விதியின் சதியா ?
 
நடுநிலை
உண்ட கிறக்கம்
பசியால் மயக்கம்
இது நடுநிலையா ?
 
குளிர்
குழந்தைக்கு முத்தம்
குமரிக்கும் முத்தம்
குளிர்ச்சி எதில் ?
 
விசா
விசாரணை கைதி
விசாரித்தது நீதி
விசா காலாவதியா ?
 
சாதி
கருணைக்கு நிதி
கருணாவுக்கு பாதி
சுருட்டும் சாதியா ?
 
ஜெயம்
முதலில் செல்வி
முடிவில் அம்மா
திருமதி ஜெயாவா ?
 
லாபம்
கந்தன் வீட்டில் சேவல்
நந்தன் வீட்டில் கோழி
தினம் லாபம் யாருக்கு ?
 
ChavasRegal சிவசம்போ-
ரம்மி விளையாடும் எமக்கு ரம் கொண்டு வருவது ரம்பாவா ?

Share this post with your FRIENDS…

32 கருத்துகள்:

 1. முதலில் செல்வி... முடிவில் அம்மா... கடைசியில் சும்மா... இதை சொல்ல மறந்துவிட்டீர்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   திருமதி ஜெயாவா ? என்று கேட்டு இருக்கிறேனே...

   நீக்கு
 2. குமரிக்கு கொடுக்கும் முத்தத்தில்தான் குளிர்ச்சி அதிகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தமிழரே...

   நீக்கு
  2. பார்றா.... நம்ம சின்னராசுவுக்கு இருக்கிற குசும்ப!!....

   நீக்கு
 3. மூன்றாவது வார்த்தையை இன்னும் கவனமாக அமைத்தால் நிறைய ஹைக்கூக்கள் கிடைத்திருக்கும்!  ஆனாலும் அனைத்தையும் ரசிக்க முடிந்தது.  தரமான கேள்விகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி மூன்றாவது வரிகளை கேள்வியாக தொடுத்தேன்.

   தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஜி

   நீக்கு
 4. இது இரவா? பகலா? - பாடல் ஞாபகம் வந்தது...!

  பதிலளிநீக்கு
 5. நடுநிலை படித்த உடன் எனக்கு நினைவுக்கு வந்த முதல் பாடல்.   

  பசி வர அங்கே மாத்திரைகள்...
  பட்டினியால் இங்கு யாத்திரைகள் 
  இரு வேறுலகம் இதுவென்றால் 
  இறைவன் என்பவன் எதற்காக?

  பதிலளிநீக்கு
 6. முதல் பாடல் நினைவுக்கு வந்ததும் இன்னொரு பாடலும் நினைவுக்கு வந்தது!

  அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி 
  அதன் அருகினில் ஓலை குடிசைகட்டி 
  பொன்னான உலகென்று பெயருமிட்டால் 
  இந்த பூமி சிரிக்கும் 
  அந்த சாமி சிரிக்கும்!

  பதிலளிநீக்கு
 7. வித்தியாசமான கேள்விகள். ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. வந்ததும் கனவு
  வாழ்வதும் கனவு..
  தேய்வதும் வளர்வதும்
  வானத்து நிலவு!..

  ஏதாவது புரிகிறதா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிந்தது போலவும் இருக்கிறது... புரியாதது போலவும் இருக்கிறது.... அதாவது நம்ம "கவுண்டபெல்" சொல்வாரே... "ஈயம் பூசியது போலவும் இருக்கணும், ஈயம் பூசாதது போலவும் இருக்கணும்" அதுதான் "பிலாசபி" என்று... அதுபோல!!!...

   நீக்கு
  2. வாங்க ஜி கனவில் தானே பலரும் காலத்தை ஓட்டுகின்றனர்.

   நீக்கு
  3. நாஞ்சில் சிவா - ஹாஹா விவேக் டயலாக் நினைவுக்கு வருது.

   துரை அண்ணா நிலவு வந்தாலே கனவுதானோ!!!!!

   கீதா

   நீக்கு
 9. //கருணைக்கு நிதி
  கருணாவுக்கு பாதி
  சுருட்டும் சதியா?//

  ஓகோ.... இது நம்ம "கட்டுமரம்" கருணாநிதியை குறிப்பிடுகிறீர்களோ?.... பேனா சிலையை பற்றியோ?.... இருக்கட்டும்... இருக்கட்டும்... நானு கொஞ்சம் "டியூப் லைட்" என்கிறதால கொஞ்சம் லேட்டாகத்தான் புரிய ஆரம்பிச்சது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எல்லா உத்தமர்கள் பற்றிய உண்ணதமான வரிகள்.

   மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. கில்லர்ஜி ஹைக்கூக்கள் முயற்சியை எல்லாவற்றையும் ரசித்தேன் கில்லர்ஜி....ஆனால் ஏதோ ஒரு சிறு குறை இருப்பது போல்....முதல் இரண்டையும் பிரதிபலிப்பதாக மூன்றாவது வரி இருந்தா இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோன்னு.....மெருகூட்டுங்க கில்லர்ஜி உங்களால் கண்டிப்பா முடியும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 11. குறுங்கவிதைகள் அனைத்தும் அருமை

  பதிலளிநீக்கு
 12. கவிதை அருமை.
  ரசனையான கேள்விகள்
  பதில் யார் கூறுவார்?
  கேள்விக்கு என்ன பதில்? பாடல் நினைவுக்கு வருது.
  முடிவில்லா கேள்விகள் நிறைய இருக்கு ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு